மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.3.17

எதற்காக குளிக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?


எதற்காக  குளிக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?

*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*
------------------- ------------------
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக  குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*

*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*

*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*

*குளியல் = குளிர்வித்தல்*

*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*

*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*

*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*

*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக  குளிந்தநீரில் குளிக்கிறோம்.*

*வெந்நீரில் குளிக்க கூடாது.*

*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*

*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*

*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு,  நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*

*எதற்கு இப்படி?*

*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக  வெளியேறும்.*

*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*

*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*

*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில்  இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு  வெளியேறிவிடும்.*

*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*

*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு  இறங்குவார்கள்.*

*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*

*எனவே உச்சியில் சிறிது  நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*

*வியக்கவைக்கிறதா... !*

*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*

*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*

*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*

*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*

*குளியலில்  இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு  குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*

*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*

*குளிக்க மிகச் சிறந்த நீர்  - பச்சை தண்ணீர்.*

*குளித்தல் = குளிர்வித்தல்*

*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*

*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு  அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*

இதை நீங்கள் விரும்பினால் தயவு செய்து முடிந்தவரை நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் ஷேர்  செய்யுங்கள் (பகிர்ந்து கொள்ளவும் ) அது பலரை சென்றடையும். நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கான நன்மையையும் உங்களுக்குக்  கிடைக்கும்.
நன்றி...........
---------------------------------------
படித்ததில் சிறந்தது. பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. சரி அதற்காக அழுக்கைத் தேய்த்து குளிக்காமல் இருந்துவிடலாமா?

    குளிப்பது என்பது அழுக்குப்போகவும், உடலைக் குளிர்விக்கவும் என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  2. /////Blogger kmr.krishnan said...
    சரி அதற்காக அழுக்கைத் தேய்த்து குளிக்காமல் இருந்துவிடலாமா?
    குளிப்பது என்பது அழுக்குப்போகவும், உடலைக் குளிர்விக்கவும் என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்////

    நீங்கள் சொல்வது சரிதான். குளிப்பது. உடல் அழுக்குப் போவதற்கு மட்டும் அல்ல என்று வாசித்துக்கொள்வோம். உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    குளியல் பற்றிய விரிவான தொகுப்பு
    பாராட்டுக்கு உரியது!
    பச்சைத் தண்ணீரில் குளிப்பது தான்
    சாலச் சிறந்தது என்ற வரிகள் மனதில்
    குடி கொண்டது!
    நன்றி வாத்தியாரையா!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.

    ReplyDelete
  5. Respected Sir,

    Pleasant morning... Nice article...

    Thanks for sharing.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. Dear Sir,

    Thank you for the great information.

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    குளியல் பற்றிய விரிவான தொகுப்பு
    பாராட்டுக்கு உரியது!
    பச்சைத் தண்ணீரில் குளிப்பது தான்
    சாலச் சிறந்தது என்ற வரிகள் மனதில்
    குடி கொண்டது!
    நன்றி வாத்தியாரையா!//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  9. //////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning... Nice article...
    Thanks for sharing.
    Thanks & Regards,
    Ravi-avn//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  10. /////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    Thank you for the great information.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com