மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.3.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணதிற்கு ஜாதகப் பொருத்தம்


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணதிற்கு ஜாதகப் பொருத்தம்

ஒரு பெண்ணிற்கும் ஒரு ஆடவனுக்கும் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, ஜாதகங்களை வைத்து, தினப் பொருத்தம் (நட்சத்திரப்பொருத்தம்) கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம்,
ஸ்த்ரி தீர்க்கப் பொருத்தம், யோனிப்பொருத்தம், ராசிப்பொருத்தம்,
ராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம்,ரஜ்ஜுப் பொருத்தம்,
வேதைப் பொருத்தம் என்று பத்துப் பொருத்தங்களில் எத்தனை
பொருத்தங்கள் இருவருக்கும் பொருந்தி வருகிறது என்று பார்ப்பார்கள்.

இப் பத்தில் தினம், கணம், யோனி, ராசி, ரச்சு ஆகிய ஐந்தும்
முக்கியமானது என்று இவ்வைந்தும் பொருந்தினால் போதும்
என்று சொல்லி இருவருக்கும் மணம் செய்துவிடுவார்கள். சிலர்
ரச்சு தட்டக்கூடாது. ரச்சுப் பொருத்தத்துடன் வேறு ஏதாவது ஐந்து பொருந்தினால் போதும் என்று  மணத்தை முடித்து வைத்து விடுவார்கள்

சிலர் செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்றும் பார்ப்பார்கள்.

ஆனால் வேறு ஒன்றும் இருக்கிறது. ஆமாம், இருவருடைய
ஜாதகத்தையும் சேர்க்கும் முன்பாக நன்றாக அலச வேண்டும்.

உடல் காரகன், மனகாரகன், ஏழாம் அதிபதி ஆகியவர்களும் நன்றாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்க்காமல், வெறும் 10 பொருத்தத்தை மட்டும் செய்யப்படும் திருமணங்களில் சில  ஊற்றிக் கொண்டுவிடும்.

ஊற்றிக்கொண்ட பிறகு, ஏன் இப்படியாகிவிட்டது என்று தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார்கள்

என்ன காரணம்? ஏன் அப்படியாகிறது?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமாக இப்பொது ஒரு தம்பதியரின் ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------



-------------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகங்களைப் பாருங்கள். ஒரு தம்பதியரின் ஜாதகம்.

மனைவியின் ஜாதகம்:

1.சிம்ம லக்கினம். லக்கினத்தில் ஆறு & ஏழுக்குரிய சனி.
2.எட்டாம் அதிபதி குரு 11ல்
3.யோககாரகன் செவ்வாய் மறைவிடமான 12ல்
4.லக்கினாதிபதியும், உடல்காரகனுமான சூரியன் எட்டில்
5.புதன் (குடும்பநாதன்) சுக்கிரன் (சுக அதிபதி) ஆகிய இருவரும் சூரியன், கேதுவுடன் எட்டில்
6.அந்த நால்வரும் இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார்கள்.
7.மனகாரகன் சந்திரன், இந்த லக்கினத்திற்கு அவன் விரைய அதிபதியும் ஆவான். அவன் இரண்டில் ராகுவுடன் சேர்ந்து அடிபட்டுப்போய்விட்டான்.
மனமகிழ்ச்சியைக் கொடுக்கும் கிரகம் சந்திரன். அவன் ராகு அல்லது கேது அல்லது சனியுடன் சேர்ந்து  அடிபட்டுக்கிடந்தால் ஜாதகன் அல்லது
ஜாதகிக்கு மனமகிழ்ச்சி என்பது சுத்தமாக இருக்காது.

இந்த ஜாதகிக்குப் பன்னிரெண்டாம் அதிபதியான சந்திரன் இரண்டாம்
இடமான குடும்ப ஸ்தனத்தில் அமர்ந்தது, அதுவும் ராகுவுடன் கூட்டாக
அமர்ந்தது குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. குணக்கேடு அல்லது
மனக்கேடு.. அத்துடன் இரண்டாம் வீடு மாரக ஸ்தானம். அங்கே அமர்ந்த
சந்திரன் + ராகுவால் ஜாதகிக்கு எப்போதும் தற்கொலை செய்து
கொள்ளும் எண்ணம் மேலோங்கி இருக்கும்.

சந்திரன், ராகுவுடன் இருப்பதோடு, மேலும் இரண்டு தீய கிரகங்களின் பார்வையைப் பெறுவதாலும் நிலைமை மோசமாக உள்ளது. சந்திரனும் புதனும், சந்திரனும் சுக்கிரனும் எதிர் எதிராக இருப்பதும் மகிழ்ச்சியைத்
தராது.

என்ன ஆயிற்று?

கணவன் பிரிந்து போய்விட்டான். ஜாதகி தனிப்பட்டுப் போய்விட்டாள்

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. நிறைவான அலசல் ஐயா

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    தங்களின் ஆழ்ந்த அலசல் விளக்கங்கள்
    அந்தக்கால "இடையர் தெரு பணிக்கர்"
    பற்றித் தாங்கள் பழைய பதிலில் எழுதி
    இருந்ததை நினைவுபடுத்துகிறது!
    தங்கள் அனுபவம் நிறைந்தவர்!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா.

    சந்திரன் ராகு சேர்ந்து இருந்தால் மனக்கஷ்டம் மனத்தடுமாற்றம் உண்டாகுமா

    ReplyDelete
  4. Hello sir I am new to your blog and started learning lessons. Pls forgive me if my doubt is wrong. According to the postI understand the woman cannot marry anyone in her life. Is my understanding correct?

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,ஒரு விசயம் பிடிபடவில்லை.பெண் ஜாதகத்தில் குறைகள் உண்டென்றால்,ஆண்ஜாதகத்திலும் குறைகள் உள்ளனவே!.அதில் 2ம் இடத்திற்க்கு,8ம் அதிபதி பார்வை.லக்னாதிபதி நீச்சமாகி பாக்கிய ஸதானத்தில்.7ம் அதிபதி 6 ல்.சந்தேகம் என்னவெனில் குறை+குறை சேர்தால் நிறையாகாதா?(தோசம்+தோசம்=தோச நிவர்த்தி போல).நன்றி.

    ReplyDelete
  6. ////Blogger siva kumar said...
    நிறைவான அலசல் ஐயா/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ///Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    தங்களின் ஆழ்ந்த அலசல் விளக்கங்கள்
    அந்தக்கால "இடையர் தெரு பணிக்கர்"
    பற்றித் தாங்கள் பழைய பதிலில் எழுதி
    இருந்ததை நினைவுபடுத்துகிறது!
    தங்கள் அனுபவம் நிறைந்தவர்!////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  8. ////Blogger prasanna venkatraman said...
    வணக்கம் ஐயா.
    சந்திரன் ராகு சேர்ந்து இருந்தால் மனக்கஷ்டம் மனத்தடுமாற்றம் உண்டாகுமா/////

    மனக் குழப்பங்கள் உண்டாகும். மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். லக்கினாதிபதி வலுவாக இருந்தால் அவர் உதவி செய்வார்!

    ReplyDelete
  9. //////Blogger User said...
    Hello sir I am new to your blog and started learning lessons. Pls forgive me if my doubt is wrong. According to the postI understand the woman cannot marry anyone in her life. Is my understanding correct?////

    கரெக்ட். திருமண வாழ்வு மறுக்கெப்பெற்ற ஜாதகம் என்று கொள்ளலாம்!!!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஒரு விசயம் பிடிபடவில்லை.பெண் ஜாதகத்தில் குறைகள் உண்டென்றால்,ஆண்ஜாதகத்திலும் குறைகள் உள்ளனவே!.அதில் 2ம் இடத்திற்க்கு,8ம் அதிபதி பார்வை.லக்னாதிபதி நீச்சமாகி பாக்கிய ஸதானத்தில்.7ம் அதிபதி 6 ல்.சந்தேகம் என்னவெனில் குறை+குறை சேர்தால் நிறையாகாதா?(தோசம்+தோசம்=தோச நிவர்த்தி போல).நன்றி.//////

    குறை+குறை சேர்தால் நிறையாகும் என்பதெல்லாம் ஜாதகத்தில் கிடையாது. மன நோய் உடையவரையும் இன்னும் ஒரு மன நோய் உடையவரையும் ஒன்று சேர்த்தால் என்ன ஆகும்? (அதாவது இரண்டு பைத்தியங்களை ஒன்று சேர்த்தால் என்று கொள்ளுங்கள்) வீட்டை மருத்துவமனையாக்க வேண்டியதுதான்!!!!

    ReplyDelete
  11. /////Blogger Data Tech said...
    இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?
    https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com