மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.12.16

சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!


சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா  அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன  பிரியும், பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. உயர் திரு ஐயா,

    காலை வணக்கம். ஆறும் அருமை அருமை. நினைவில் நிறுத்த வேண்டியவை. சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம். வாழ்க்கைக்கு உகந்த பொன்மொழிகள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    அன்புடன்,

    விசுவநாதன்

    ReplyDelete
  2. 500,1000 எப்போ கிடைக்கும்

    ReplyDelete
  3. சிவ சிவா.அண்ணாமலையாருக்கு அரோகரா

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,சூப்பர்ப்.ஆறு தத்துவங்களில் வாழ்கையை சொல்லிவிட்டார்.பதிவிற்க்கு நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    அப்பப்பா உலக நியதி!

    ReplyDelete
  6. /////Blogger Visvanathan N said...
    உயர் திரு ஐயா,
    காலை வணக்கம். ஆறும் அருமை அருமை. நினைவில் நிறுத்த வேண்டியவை. சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம். வாழ்க்கைக்கு உகந்த பொன்மொழிகள். பகிர்ந்தமைக்கு நன்றி.
    அன்புடன்,
    விசுவநாதன்//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    500,1000 எப்போ கிடைக்கும்/////

    கண்டிப்பாகக் கிடைக்கும் சுவாமி. பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  8. ////Blogger SELVARAJ said...
    சிவ சிவா.அண்ணாமலையாருக்கு அரோகரா/////

    அண்ணாமலையாருக்கு அரோகரா!

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    very nice Sir.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சூப்பர்ப்.ஆறு தத்துவங்களில் வாழ்கையை சொல்லிவிட்டார்.பதிவிற்கு நன்றி./////

    உண்மைதான். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  11. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அப்பப்பா உலக நியதி!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com