மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.9.16

நாடிழந்த பாண்டவர்கள் என்ன கேட்டார்கள்?

தர்மம்: புராணச் சிறுகதை: நாடிழந்த பாண்டவர்கள் என்ன கேட்டார்கள்?

முடியாதவனை மன்னித்துவிடு, விரும்பாதவனைத் தண்டித்துவிடு” என்பது சமுதாயக் கோட்பாடு.

தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி. ஆனால் அதே காரியத்தைச் செய்ய விரும்பியும் செய்ய முடியாதவன் அனுதாபத்துக்குரியவன்.

நாடிழந்த பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்டது என்ன? ’குறைந்தபட்சம் வாழ ஊர்களாவது, வீடுகளாவது கொடுங்கள்’ என்று தான். செய்ய முடியாதா துரியோதனனால்? முடியும். ஆனால் விரும்பவில்லை. அதன் விளைவே பாரதப்போர்.

அனுமானும், விபீஷணனும் கூறியபடி சீதையைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்க முடியாதா ராவணனால்? முடியும்.. ஆனால் விரும்பவில்லை. அதன் விளைவே ராம-ராவண யுத்தம்.

’அறஞ்செய விரும்பு’ என்றார் ஒளவைப் பாட்டி. ’செய்’ என்று அவர் வற்புறுத்தவில்லை. ’விரும்பு’ என்றுதான் சொன்னார். காரணம் செய்ய முடியாதவர்கள் கூட விரும்பினால் போதும். அதுவே கருணையின் பரப்பளவாக விரிந்துவிடும்.

யூதர்களை ஹிட்லரால் மன்னித்திருக்க முடியாதா? போரின் நாசத்தை அவன் தடுத்திருக் முடியாதா? எல்லாவற்றையும் தவிர்க்கக் கூடியதாக இருந்த போதிலும், அவன் அதை விரும்பவில்லை. விளைவு…. மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ, அப்படியே இறைவன் அவனை நடத்தினான்.

வண்டி மாட்டை நீ ஒரு அடி அடித்தால், அதற்குப் பதிலடி உனக்குக் கிடைக்கும். ஆனால் அதற்கு நீ வைக்கோல் போட்டால்கூட, அதற்குக் கைமாறாக ஒரு கவளம் சோறு உனக்குக் கிடைக்க இறைவன் வழிவகுப்பான். எனவே விரும்பு, முடிந்தால் செய். முடியாவிட்டால் விரும்பிக்கொண்டே இரு.

 ’விரும்பு’ என்றதுமே விபரீதமாக நினைத்துவிடாதீர்கள், அதன் பெயர் ’விருப்பம்’ அல்ல ’ஆசை’. விரும்புவது என்ற வார்த்தை நல்லனவற்றை விரும்புவதையே குறிக்கும். (நற்சிந்தனை)

மண்ணுலகத்திலிருந்து நாம் விண்ணுலகத்து சொர்க்கத்திற்குச் செல்வது சாதனையல்ல. மண்ணுலகத்தையும் சொர்க்கமாக மாற்றுவதே சாதனை. (தர்ம சாஸ்திரம்)

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
=========================================================

18 comments:

  1. "'அறஞ்செய விரும்பு' என்றார் ஒளவைப் பாட்டி. ’செய்’ என்று அவர் வற்புறுத்தவில்லை. ’விரும்பு’ என்றுதான் சொன்னார். காரணம் செய்ய முடியாதவர்கள் கூட விரும்பினால் போதும். அதுவே கருணையின் பரப்பளவாக விரிந்துவிடும்"
    Wonderful. 2 வரிகளுக்குள் இவ்வளவு அர்த்தமா? திருக்குறள்தான் பெஸ்ட் என்று நினைத்திருந்தேன். ஆத்திசூடி அதை தூக்கி சாப்பிட்டு விடும் போல இருக்கே? ஏன் கோனார் உரையில் இந்த மாதிரி விளக்கம் இல்லை? நான் படிக்கிற காலத்தில் இது மாதிரி யாராவது விளக்கி சொல்லி கொடுத்திருந்தால் எவ்வளவு ரசித்து படித்திருப்பேன். சரி, வகுப்பறையில் பாக்கி ஆத்திசூடி எப்ப வரும் என்று ஆவலோட எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா, சொர்கத்திற்கும். நரகத்திற்கும். ஆறுவித்தி யாசங்கள். சொல்லத்தான். அப்படியும் இப்படியும். சிலர் நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    மிக சுருக்கத்தில் நல்லனவற்றைத் தெரியப்படுத்துவதில் வல்லவர், நீர்!
    நீடூழி வாழ்க!

    ReplyDelete
  4. Respected sir,

    Thank q for your message. Below mentioned lines are very good and who are try to achieve something in life.

    மண்ணுலகத்திலிருந்து நாம் விண்ணுலகத்து சொர்க்கத்திற்குச் செல்வது சாதனையல்ல. மண்ணுலகத்தையும் சொர்க்கமாக மாற்றுவதே சாதனை. (தர்ம சாஸ்திரம்)

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  5. Ayya vanakkam nalla pathivu . eppoluthum pol ippoluthum
    regards kttuswamy

    ReplyDelete
  6. அருமை வாத்தியார் அய்யா

    செவ்வாய் வழக்கத்திற்கு மாறாக விருச்சிகத்தில் 7 மாதங்கள் தங்கி விட்டார். நேற்று தான் மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு தனுசு இராசிக்கு கிளம்பினார். இந்த 7 மாதங்கள் அவர் சனியுடன் சேர்ந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கி விட்டார். நான் கடக இராசிக்காரன். இராகு 2லும் கேது 8லும் வேறு. கேட்கவே வேண்டாம். இங்குள்ள ஒரு கோவில் அர்ச்சகரிடம் இந்த செவ்வாய் சனி சேர்க்கை பற்றி வினவ அவர் கூறிய பதில் "லோகத்திற்கே இது நல்லதில்லை" என்பதே.

    செவ்வாய் இது போல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இராசியில் 7 மாதங்கள் தங்கும். இம்முறை அவர் சனியுடன் சேர்ந்து தங்கியது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது பற்றி ஒரு கட்டுரை எழுதுவீர்களா?

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    Best article. Thank you/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger venkatesh r said...
    "'அறஞ்செய விரும்பு' என்றார் ஒளவைப் பாட்டி. ’செய்’ என்று அவர் வற்புறுத்தவில்லை. ’விரும்பு’ என்றுதான் சொன்னார். காரணம் செய்ய முடியாதவர்கள் கூட விரும்பினால் போதும். அதுவே கருணையின் பரப்பளவாக விரிந்துவிடும்"
    Wonderful. 2 வரிகளுக்குள் இவ்வளவு அர்த்தமா? திருக்குறள்தான் பெஸ்ட் என்று நினைத்திருந்தேன். ஆத்திசூடி அதை தூக்கி சாப்பிட்டு விடும் போல இருக்கே? ஏன் கோனார் உரையில் இந்த மாதிரி விளக்கம் இல்லை? நான் படிக்கிற காலத்தில் இது மாதிரி யாராவது விளக்கி சொல்லி கொடுத்திருந்தால் எவ்வளவு ரசித்து படித்திருப்பேன். சரி, வகுப்பறையில் பாக்கி ஆத்திசூடி எப்ப வரும் என்று ஆவலோட எதிர்பார்க்கிறேன்.///////

    ஆத்திச்சூடிதானே? இணையத்தில் கிடைக்கும். தேடிப்படியுங்கள். எனக்கு நேரம் கிடைக்கும்போது, விளக்கத்துடன் பதிவிடுகிறேன். நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    வருகை பதிவு/////

    நல்லது. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா, சொர்கத்திற்கும். நரகத்திற்கும். ஆறுவித்தி யாசங்கள். சொல்லத்தான். அப்படியும் இப்படியும். சிலர் நன்றி.
    /////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிக சுருக்கத்தில் நல்லனவற்றைத் தெரியப்படுத்துவதில் வல்லவர், நீர்!
    நீடூழி வாழ்க!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  12. ////Blogger பரிவை சே.குமார் said...
    நல்ல பகிர்வு ஐயா...////

    நல்லது. நன்றி குமார்!

    ReplyDelete
  13. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank q for your message. Below mentioned lines are very good and who are try to achieve something in life.
    மண்ணுலகத்திலிருந்து நாம் விண்ணுலகத்து சொர்க்கத்திற்குச் செல்வது சாதனையல்ல. மண்ணுலகத்தையும் சொர்க்கமாக மாற்றுவதே சாதனை. (தர்ம சாஸ்திரம்)
    with kind regards,
    Visvanathan N///////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  14. /////Blogger Prasanna Venkatesh said...
    அருமை அருமை....///////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. //////Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam nalla pathivu . eppoluthum pol ippoluthum
    regards kttuswamy//////

    நல்லது. நன்றி கிட்டுஸ்வாமி!

    ReplyDelete
  16. ///////Blogger thozhar pandian said...
    அருமை வாத்தியார் அய்யா
    செவ்வாய் வழக்கத்திற்கு மாறாக விருச்சிகத்தில் 7 மாதங்கள் தங்கி விட்டார். நேற்று தான் மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு தனுசு இராசிக்கு கிளம்பினார். இந்த 7 மாதங்கள் அவர் சனியுடன் சேர்ந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கி விட்டார். நான் கடக இராசிக்காரன். இராகு 2லும் கேது 8லும் வேறு. கேட்கவே வேண்டாம். இங்குள்ள ஒரு கோவில் அர்ச்சகரிடம் இந்த செவ்வாய் சனி சேர்க்கை பற்றி வினவ அவர் கூறிய பதில் "லோகத்திற்கே இது நல்லதில்லை" என்பதே.
    செவ்வாய் இது போல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இராசியில் 7 மாதங்கள் தங்கும். இம்முறை அவர் சனியுடன் சேர்ந்து தங்கியது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது பற்றி ஒரு கட்டுரை எழுதுவீர்களா?//////

    சனி, செவ்வாய் சேர்க்கை பற்றி முன்பு எழுதியுள்ளேன் நண்பரே! நேரம் கிடைக்கும்போது, உடல் நலம் முற்றிலும் சரியான பின் மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன் பாண்டியரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com