மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

22.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.115: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!!!


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.115: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!!!

22-8-2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! என்று எல்லோராலும் இருக்க முடியுமா? அதுவும் ஒரு நிரந்தர வேலை இல்லாத போது. கையில் போதிய அளவு வருமானம் இல்லாதபோது. 99% நிம்மதியாக இருக்கமுடியாது.  ஒரு ஜாதகருக்கு நிரந்தமான நல்ல வேலை கிடைக்கவில்லை. வருமானமும் போதவில்லை. என்ன செய்வார் பாவம்! கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்.


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் - அதாவது க்ளிக்கினால் படம் முழுமையாகத் தெரியும்!

ஜாதகத்தைப் பாருங்கள்:

ஜாதகத்தை அலசி என்ன காரணம் என்பதையும் - தீர்வு உண்டா இல்லையா என்பதையும் எழுதுங்கள்

சரியான விடையை நாளை 24-8-2016 புதன்கிழமை மாலை 6 மணிக்குள் எழுதுங்கள். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23 comments:

Ramanathan said...

birth during lagna lord dasa - very good childhood

10th house occupied by debilitated moon of 6th house
10th house lord in 3rd house aspecting 10th house, 6th house and 6th house lord
would have gone to job, but meager salary. tussle with co workers indicated.

2nd house lord in its 12th house. i.e., lagna. Income does not hold
Mandhi in 2nd house.
11th house lord is same as 2nd house lord

9th house lord Sukran in 12th house - not good?

Lagna lord and 5th house lord - parivarthanai. Due poorva punya, native should have managed to live
with income from ancestral property
May also be due to wife's(assuming native is male) income, since Guru in lagna with 7th house lord sun
and 5th house lord Budhan

Srinivasa Rajulu.M said...

வணக்கம் அய்யா!

15-02-1974, காலை சுமார் 7:30 மணிக்குப் பிறந்த ஜாதகரின் வேலை பற்றி 27-03-2016 அன்று தாங்கள் அலசி விட்டீர்கள். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தவுடன் பரிச்சயமானதாகத் தெரிந்தது. (முன்பு நவாம்சம் வேறாகக் கொடுக்கப் பட்டிருந்தது. அதன்படி, பிறந்த தேதி 14-03-1974 என்று வரும்)

அன்புடன்,
ஸ்ரீனிவாஸ ராஜுலு

C Jeevanantham said...

Dear Sir,

The given horosocope is having mandhi in second place. 2nd lord Guru lost its power due to 12th place from its own place. 2nd lord is responsible for getting proper income. Also 2nd rashi is hemmed between malefics which caused papakarthari yogam. Hence the person could not get enough income for his life. Also lagna lord with kethu in 5th place did not help. 9th lord in 12 also did not help the native.

Thanking you.,

C Jeevanantham said...

Dear Sir,

The placement of Rahu in 11th place will bring him wealth during its dasa, antar dasha. Also 10th lord Mars is in 3rd place aspects 10th place and keeping in his own view. This will help him the native to get work and income during mars dasa and mars antar dasha.

Thanking you,

daya nidhi said...

பண வரவு சரியாக இருக்காது

1) இரண்டாமிடத்தில் மாந்தி
2) இரண்டாம் வீடு பாபக்கத்தாரி யோகத்தில் ( சூரியன்-செவ்வாய்)
3) தன காரகன் குரு தன ஸ்தானத்திற்கு 12 ல்
4) தன ஸ்நானத்தை 12 க்குரிய சனி பார்த்தது
5) சந்திர ராசிக்கு 2 ஆம் இடத்தில் ராகு
இரண்டாம் வீடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது

1) சுக ஸ்தானம் பாவகர்தாரி யோகத்தில் ( செவ்வாய்-சனி கேது)
2 ) yogakaaragan சுக்ரன் லக்கினத்திற்கு 12 ல் மறைவு
3) சுக ஸ்தானத்திற்கு நீச சந்திரன் பார்வை
நான்காம் வீடும் பாதிக்கப்பட்டுள்ளது

1) 6 ஆம் வேலைக்கு செல்வதை குறிக்கும், அதிபதி சந்திரன் ராசியிலும், அம்சத்திலும் நீசம்
2) 6 ஆம் வீட்டை 10 க்குரிய செவ்வாய் பார்ப்பது தீமை மற்றும் நன்மை
3) 6 ஆம் வீட்டை யோக காரகன் சுக்ரன் 12 ஆம் இடத்திலிருந்து பார்ப்பது நல்லதல்ல .

6aam வீடும் கெட்டுள்ளதால் நிரந்தர வேலை இல்லை


1) 10 ல் , தொழில் ஸ்தானத்தில் நீச சந்திரன் , அதுவும் வர்கோத்தமம்
2) 10 ஆம் அதிபதி செவ்வாய் 10 க்கு 6 ல் மறைவு பெற்றுள்ளார்
3)10 ஆம் வீட்டை அத அதிபதி பார்ப்பது கொஞ்சம் ஆறுதல்

15.2.74 காலை 7.28 ல் பிறந்த ஜாதகம்
சுக்கிரதசை முடிந்து 47 ஆம் வயதில் சூரியதசையில் கொஞ்சம் தீர்வு கிடைக்கும்.
வாய்ப்புக்கு நன்றி , வாத்தியார் அவர்களே ,

ச.தயாநிதி , அவியனுர்.

kmr.krishnan said...

ஜாதகர் 15 நவம்பர் 1974 காலை 7 மணி 30 நிமிடம் 50 வினாடிக்குப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

ஜாதகருக்கு வேலை சரியாக இல்லாத‌தற்குக் காரணங்கள்:

1.பத்தாம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் வந்து அமர்ந்து நீசம் அடைந்தது.
2.பத்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் தன் வீட்டுக்கு ஆறில் அமர்ந்தது.
ல‌க்கினத்திற்கு மூன்றில் இருந்தது.
3.கர்ம காரகன் சனைச்சரன் கேதுவுடன் கூடி நின்ற‌து.
4.கர்ம காரகன் சனைச்சரன் வக்கிரம் அடைந்தது.
5.தன ஸ்தானத்தில் மாந்தி நின்றது.அதற்கு சனியின் பார்வை.
6.தன ஸ்தானாதிபதி குரு சூரியனால் எரிக்கப்பட்டது.
7.எட்டாம் அதிபதி புதன் லக்கினத்தில் அமர்ந்தது.
8.ஜாதகரின் 20 வயதுவரை எட்டாம் அதிபன் புதனின் தசா நடந்தது.
9. அதன் பின்னர் 7 ஆண்டுகள் கேதுதசா நடந்தது. எனவே 27 வயது வரை வேலை இலாமல் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டார்.
10. யோககார்கனான் சுக்ரனின் தசாவில் 30 வயதுக்குப் பின்னர் சிறிது நிம்மதி கிடைத்த‌து.
11.தற்சமயம் பொங்கு சனி நடை பெறுவதால் சிறிது முன்னேற்றமும் இருக்கும்.

kmr.krishnan said...

மேலும் சில குறிப்புக்கள்.

பத்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் பத்தாம் வீட்டை பார்ப்பதும், கர்மகாரகன் சனியை குரு பார்ப்பதும் ஜாதகருக்கு வேலை தாமதித்துக் கிடைக்க வழி செய்தது.

BDO KADAYAMPATTY said...

லக்கினாதிபதி திரிகோணத்தில் கேதுவோடு ராகு பார்வையோடு // ஐந்தில் கேது ராஜயோகம் அல்லது சந்நியாசி யோகம் // இரண்டாம் இடத்தில மாந்தி மற்றும் சனீஸ்வரன் பார்வை // இரண்டாம் இடம் பாபகர்தரி யோகத்தில் // இரண்டாம் இடத்து அதிபதி குரு அதற்கு 12ம் இடத்தில // 11ம் இடத்தில ராகு // 10ம் இடத்து அதிபதி 10க்கு 6ல் // இவை அனைத்தும் ஜாதகருக்கு நிரந்தமான நல்ல வேலை கிடைக்கவில்லை, வருமானமும் போதவில்லை என்ற நிலைக்கு காரணங்கள்
சந்தானம் சேலம்

Prakash Kumar said...

Narthunaiyavathu Namashivayame

Vankkam Ayya,

Answer:
1.Kalasarpa dhosam ulla jathagam.
2.puthikaragan puthan amasathil neesam, 5th house sani+kethu, 4th house papakarthi yogam which spoiled the kalvi+arivu for jathagar. padikkavendiya kalathil puthan dasa veru.
3. manakaragan chandran neesam, manam oru nilayai irukathu, he might have tried to all business or expected quick revenue which caused closing of its.
4.2nd house has mandhi.. dhanagaran guru is 12th house from 2nd house.
5. tholil karagan sani is 8th house from 10th house and 10th house owner is 6th house from 10th house.
6.Chevvai and Sukuran helped this native during their puthi period to survive.

Sorry for thanglish and if there is any thing said wrong.

Prakash.K

amuthavel murugesan said...

ஜோதிடப் புதிர் எண்.115: பதில்:

ஐயா வணக்கம்,

1. கேது கொடிபிடித்து செல்லும் காலசர்பதோஷம் உள்ள ஜாதகம் .

2. 2 ல் மாதி மற்றும் 2 ஆம் அதிபதி 2க்கு 12ல் மற்றும் சுபரின் பார்வை இல்லை அதனால் காசு தங்காது.

3. தொழில் ஸ்தானமான் 10ல் 6 ஆம் அதிபதி சந்திரன் நீச்சம் மற்றும் 10க்குறிய செவ்வாய் 10க்கு 6ல்

4. 10ஆம் இடத்திற்கு செவ்வாயின் பார்வை இருப்பதால் வேலை கிடைக்கும் சுக்கிர திசையில் சுக்கிரனும் 12ல் அமர்த்து இருப்பதால் சுமாரக வாழ்த்து இருப்பார்.

இபடிக்கு தங்கள் மாணவி,

மு.சாந்தி

Sathish Kumar said...

ஜாதகர் பிறந்த தேதி : 15 – 02 – 1974
கும்ப லக்னம். லக்கினாதிபதி சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நல்ல அமைப்பு.
லக்கினாதிபதி சனியும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதனும் பரிவர்த்தனை பெற்றிருக்கும் நல்ல அமைப்பு.
கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம்.
லக்கினாதிபதி சனி வக்கிரம். லக்கினாதிபதி சனியுடன் கேது.
கேது திசை நிரந்தரமான வேலை இல்லாத நிலையை ஜாதகருக்கு உருவாக்கியது.
தனஸ்தானம் பாவகத்திரியால் பாதிக்கப்பட்டதால் வருமானம் போதவில்லை.
தனஸ்தானத்தில் மாந்தி
தனக்காரன் குருவும் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் ஆகிவிட்டார்.
சுக்கிரனும் பாவகத்திரியில்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்த கேது தன் திசையில் ஜாதகருக்கு மன நிம்மதி இல்லாமல் செய்துவிட்டார். நீச்சம் பெற்ற சந்திரனும் ஜாதகரின் நிம்மதிக்கு வேட்டு வைத்துவிட்டார்.
ஆறாம் வீட்டு அதிபதி சந்திரன் வர்கோத்தமம் பெற்று அதிபலத்துடன் பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பல்ல.
பன்னிரெண்டில் சுக்கிரன் மறைந்திருப்பதும் சிறப்பல்ல.
செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பத்தாம் வீட்டை பார்க்கிறார்.
பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரனின் திசையில் ஜாதகருக்கு நிலையான நல்ல வேலை கிடைத்தது.
சுக்கிரன் பன்னிரெண்டில் மறைந்திருந்தாலும் அவர் வர்கோத்தமம் பெற்று தன் திசையில் ஜாதகருக்கு நிரந்தரமான நல்ல வேலையில் அமர்த்தினார்.
பத்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் உள்ளார். செவ்வாயின் சுய வர்க்க பரல்கள் : 6.
பத்தாம் வீட்டில் 35 பரல்கள் உள்ள நல்ல அமைப்பு.
காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். இளமையில் சிரமப்பட்டு வாலிப வயதில் முன்னுக்கு வரும் அமைப்பு.

asbvsri said...

Quiz No 115 – Answer:

ஜாதகர் 15/02/1974 அன்று காலை 7 மணி 24 நிமிடதில் பிறந்தவர்.
கும்ப லக்னம். லக்னாதிபதி சனி 5ல் திரிகோணஸ்தானத்தில் கேதுவுடன். 5ஆம் அதிபதி புதன் லக்னத்தில் – பரிமாற்றம். குருவின் பார்வை லக்னாதிபதி சனியின் மேல்.

லக்னத்தில் சூரியன் மற்றும் குரு புதனுடன் கூடியுள்ளார்கள். 2க்கும் 11க்கும்
அதிபதியான குரு லக்னத்தில் சூரியனுடன் அஸ்த்தங்கம்.

இரண்டாம் வீட்டில் மாந்தி. 12ஆம் வீட்டில் யோககாரகன் சுக்ரன்.

ஆறாம் அதிபதி சந்த்ரன் நீச்சம்.

ஏழாம் அதிபதி சூரியன் நவாம்சத்தில் நீச்சம்.

பதினோராம் வீட்டில் ராஹு – சனியின் பார்வையில்.

புதன் நவாம்சத்தில் நீச்சம்.

ஜாதகருக்கு 26 வயது வரை (9/02/2001) கேது தசை. பின்னர் யோக காரகன் சுக்கிர தசை பிறந்திருக்கும். அதுவரை நிலையான வேலையில்லாமலிருந்திருப்பார்.

பத்தாம் அதிபதி செவ்வாய் மூன்றாம் வீட்டில் ஆட்சி. ஆதலால் சுக்ர தசை செவ்வாய் புக்தியில் நல்ல வேலை கிடைத்திருக்கும். வருமானமும் இருக்கும்.

இரண்டாம் வீட்டில் பரல் – 20, பன்னிரண்டாம் வீட்டில் – 26, பதினோராம் வீட்டில் - 40

ஆனால் இரண்டாம் வீட்டிலிருக்கும் மாந்தியும், 11ல் இருக்கும் ராஹுவும், 12ல் இருக்கும் சுக்ரனும் நல்ல வருவாயிருந்தாலும் அவருக்கு பணத்தட்டுப்பாட்டை கொடுத்திருபார்கள்.

நன்றியுடன்,

க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை

venkatesh r said...

புதிர் எண் : 115க்கான அலசல்.

மகர லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர். லக்கினாதிபதி சனி 5ல் வக்கிர கதியுடன் கேது பகவானின் கூடி அமர்ந்துள்ளார். 10மிடத்தில் 6ம் அதிபதி சந்திரன் நீசமடைந்து அமர்ந்துள்ளார். வருமானத்திற்கு வேறு வழி இருக்கிறதா என்று பார்த்தால் தனகாரகனும், தனாதிபதியுமான குரு லக்கினத்தில் அமர்ந்து அஸ்தங்கமடைந்து விட்டார். 2மிடத்தில் மாந்தி வேறு. இது தவிர 2மிடமான தனஸ்தானம் கத்திரியின் பிடியில். யோகாதிபதி சுக்கிரன் தன் திசையில் ஏதாவது மாயம் செய்து ஜாதகரை கரையேற்றுவாரா என்று பார்த்தால், அவரும் விரயத்தில் அமர்ந்து மறைந்துவிட்டார். கோச்சார ஜன்ம சனியின் நடப்பு தற்சமயம் இருப்பதால் ஜாதகருக்கு அடி மேல் அடி விழுந்தபடி இருக்கிறது.

மேற்கண்ட காரணங்களால், ஜாதகருக்கு நிரந்தர வேலை இல்லாமல் வருமானத்திற்கும் வழி இல்லாமல் வாய்க்கும் கைக்குமாக கஷ்ட‌ ஜீவனம் நடத்தி வருகிறார். தீர்வு இருப்பதாக தெரியவில்லை.

mohan said...

ஆசிரியர் ஐயா வணக்கம்.

1. சாதகர் 15.2.1974, காலை மணி 7.30 க்கு, விருச்சிக ராசி, அனுச நட்சத்திரம், கும்ப லக்கினத்தில் பிறந்தவர்.

2. தொழில் ஸ்தானமான 10 வீட்டில் சந்திரன் நீசம்...

3. அதன் அதிபதி அவ்வீட்டிற்கு     6 ல் மறைவு.

4. கும்ப லக்கினத்திற்கு. யோக காரகன் ஆன சுக்கிரன் 12 ல் மறைவு.

5. தனகாரகன் ஆன குரு அஸ்தமனம்.

6. தன ஸ்தானமான 2 ஆம் வீட்டில். மாந்தி.

7. தொழில் காரகன் சனி பகவான் கேதுவுடன் சேர்ந்து பலம் இழந்துள்ளார்.

இக்காரணங்களால்  சாதகருக்கு பண வருமானம் குறைவு.

ஆனால், தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் 35 பரல்களும், லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் அபிரிமிதமாக 41 பரல்களும், சந்திரனுக்கு 7ம், குருவிற்கு 6 சுயபரல்கள் அமைந்து நல்ல நிலையில் உள்ளது.

எனவே, இன்னும் பத்தாண்டுகள். மிதமான நிலை இருந்தாலும், 2027 ல் வரும் சந்திர மகா திசையில் இருந்து பணம் சம்பாத்தியம். பிரமாதமாக இருக்கும்.. சந்திரன் பத்தில் உள்ளதால் கப்பல், துறைமுகம் சம்பந்தமான வேலை கிடைக்கலாம்.

நன்றி ஐயா.

( குறிப்பு: விஷேச ராசிச்சக்கரம் என்று உள்ளதே, அப்படி என்றால் என்ன ஐயா )

KJ said...

Sir,

Tenth house is affected by Neesa Chandran. Also Authority of work Sanibagavan sits with Kethu.
Maandhi in Second house and also Second house owner sits in 12th from that house. So no proper earning for the native.
Native would have come out of his financial troubles and Professional problems in Kethu dasa as Guru aspects Kethu.
Sukra dasa could be good for native.

Thanks,
Sathishkumar GS

adithan said...

வணக்கம் ஐயா,6ம் அதிபதி சந்திரன் 10ல் அமர்ந்து நீச்சம்,மற்றும் வர்கோத்தம்.நீச்சம் பங்கமானாலும் 6ம் அதிபதி கர்ம ஸ்தானத்தில் வந்து அமர்ந்த்தால் நல்ல வேலை அமையவில்லை.10ம் அதிபதி செவ்வாயும் ஆட்சி பெற்றாலும்,3ல் அமர்வு,சனி பார்வையுடன்.2ல் மாந்தி.யோகாதிபதி சுக்கிரனும் 12ல் மறைவு மற்றும் வர்கோத்தம். தொடர்ந்து வந்த சனி,புதன்,கேது,சுக்ர தசைகளும் சாதகமாக இல்லை.எனவே தீர்வு இல்லை.நன்றி.

Gajapathi Sha said...

Vanakam ayya kumba lagnam viruchga rasi 2m edam manthi erupathin karanamaga kudumbam Panakastam 10m athipathi 3el maraivu 10el chandran Needham enavey this oil nastam sukkara dasai guru pukthiel thuzhil amainthu nastam neengum Vazhga valamudan

siva kumar said...

வணக்கம் ஐயா
ஜோதிடப் புதிர் எண்.115 கான பதில்

தீர்வு இல்லை ஐயா.
காரணம்:
ஜாதகர் கும்ப லக்கினம்,
விருச்சக ராசி,
அனுசம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் காலை 7:20 கு சென்னையில் பிரந்ததாக எடுத்துக்கொன்டேன் ஐயா.
ஜாதகர் கஷ்டங்களை அனுபவிக்க பிறந்தவர் ஐயா.
நிரந்தர வேலை இல்லமைக்கு காரனம்.
தொழில் ஷ்தானமாகிய 10ம் வீட்டில் 6ம் வீட்டு அதிபதி சந்திரன் நீச்சம் பெற்று அமர்ந்துல்லார்.மேலும் 10ம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு 6ல்உள்ளார். தொழிலுக்கு காரணமாகிய சனிபகவான் தொழில் ஷ்தானத்திற்கு 8ல் கேதுவின் பிடியில் உள்ளார். இவற்றின் காரணமாக ஜாதகருக்கு நிரந்தர தொழில் அமையவில்லை ஐயா.
மேலும் 2ல் மாந்தி அமர்ந்து, ஜாதகரின் நிதிநிலையை கெடுத்தது. தனகாரர் குருவும் சூரியனிடம் சேர்ந்து அஸ்தமனாகி உள்ளார். கும்ப லக்கின காரர்களுக்கு யோககாரனாகிய சுக்கிரனும் லக்கினத்திற்கு 12அமர்ந்துள்ளார். இவை அனைத்தும் சேர்ந்து ஜாதகரின் நிதிநிலமைக்கு பங்கம் செய்தன. மேலும் அம்சத்தில் புதன், சூரியன், சந்திரன் ஆகியோர் நீச்சம் பெற்று வலுவில்லாத நிலையில் உள்ளனர்.
ஜாதகருக்கு அடுத்தடுத்த வந்த தாசாபுத்திகளும் ஜாதகருக்கு கைகொடுக்கவில்லை ஐயா.
வகுப்பறை மாணவன் சிவக்குமார்

Chandrasekaran Suryanarayana said...

QUIZ NO: 115 : வணக்கம்
15.02.1974 ஆம் தேதி வெள்ளி கிழமை காலை 7.31.00 மணிக்கு விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரத்தில் 4ம் பாதம் பிறந்த ஜாதகருக்கு கும்ப லக்கினம் (29 பரல்).(இடம்:சென்னை).யோகக்காரர் :சுக்கிரன், சனி: வக்கிரம், குரு : அஸ்தங்கம் , சந்திரன் : நீசம்
------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி சனி (3 பரல்) 5ம் வீட்டில் கேதுவுடன் கூட்டு. புதனும் சனியும் பரிவர்த்தனை. 1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான். அஸ்தங்கமான குருவின் 5ம் பார்வை வக்கிரமான சனியின் மீது.

10ம் வீடு விருச்சிக ராசி. பத்தாம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்கு ஆறில். அதனால்தான் நல்ல வேலை கிடைக்கவில்லை. அமையவில்லை.

மேலும் 6ம் வீட்டு அதிபதி சந்திரன் 10ம் வீட்டில் அமர்ந்து நீச ஆகிவிட்டார். ஜாதகனுக்கு எப்போதும் அமைதியற்ற மனநிலை இருக்கும். மன வருத்தத்துடன் இருப்பார்.

நவாம்சத்தில் விருச்சிக ராசியில் சந்திரனும் சனியும் கூட்டு. புணர்ப்பு தோஷம் வேளையில் நிரந்திரமான பிரிவு .

தொழிலுக்கு சந்திரனும் சூரியனும் நன்றாக இருக்க வேண்டும் நவாம்சத்தில் சந்திரன் விருச்சிகத்தில் நீசம் சூரியன் துலா ராசியில் நீசம்.

2ம் வீடு (19 பரல்) பலவீனம். 2ம் வீட்டு அதிபதி குரு அந்த வீட்டிற்கு 12ல். 2/12 நிலைமை. 2ல் மாந்தி இருப்பதால் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. கரைந்துவிடும். 2ம் வீடு பாபகார்த்தாரி தோஷம் ஒரு பக்கம் சூரியன் மறு பக்கம் செவ்வாய். பாதிக்கப்பெற்றிருப்பதால் ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும்.

4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல். பாபகர்த்தாரி தோஷத்தில் அமர்ந்து ஜாதகருக்கு செல்வம், சொத்து சுகம் இல்லாமல் செய்து விட்டார். 9ம் வீட்டு பாக்கியஸ்தான அதிபதியும் அவரே.

இந்த ஜாதகத்தில் பலமான ஒரே வீடு 11 ம் வீடு (41 பரல்) இது தான் ஜாதகரின் வாழ்க்கையை வாழ வைக்கிறது. சுப கர்த்தாரி யோகம் (ஒரு பக்கம் சுக்கிரன் மறுபக்கம் சந்திரன்)

11ல் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும் விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பார். வளம் உடைய வாழ்க்கை அவருக்குக் கிடைக்கும்.

கேது தசை 19 வயது முதல் 26 வயது வரை ( 1994 - 2001)
சுக்கிர தசை 26 வயது முதல் 46 வயது வரை ( 2001 - 2021) லக்கினத்திற்கு 12ல் சுக்கிரன் இருப்பதால் எந்த பலனும் கிடைக்காது.
சூரிய தசை, சந்திர மகா தசையில் எந்த பலனும் கிடைக்காது ஏன்னென்றால் சந்திரன், சூரியன் நீசம்.

தீர்வு உண்டு.
10ம் வீட்டில் (35 பரல்). 10ம் வீட்டு அதிபதி செவ்வாய் 3ல் அமர்ந்தால் ஒரு கவிஞ்ஞர் /ஓவியர் ஆக இருப்பார். அவர் புத்தகம் /ஓவியம் எழுதி அது பிரசுரமாகி அதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கலாம். செவ்வாய் மகா தசை செவ்வாய் புக்தியில் பணம் கொட்டோ என்று கொட்டும் 62 வயதில் .
காரணம் :
10ம் வீட்டு அதிபதி 3ல் அமர்ந்து செவ்வாயின் 8ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது. அவருடைய 7ம் பார்வை பாக்கியஸ்தானமான 9ம் வீட்டின் மீதும் உள்ளது. நவாம்சத்தில் மேஷ ராசியில் ராகு 3ம் வீட்டில் உள்ளார். அது ராசியில் மேஷத்தின் செவ்வாயின் 3ம் வீடு .
சந்திரசேகரன் சூரியநாராயணன்

seenivasan said...

Dear sir,

Due to the following reason the man has not got permanent job till the period

1. Tenth house lord Mars is in sixth house from 10 th house
2. Sixth lord moon is sitting in 10 th house
3. Important planet Saturn is placed in eighth house from 10 th house and also with Kethu
4. Mandi also sitting in second house from lagna which is also one of the reason for money problem.
5.he must have got some relief after start of Sun period
seenivasan
Bharuch
gujarat

Ravichandran said...

Ayya,

Overall Chandran neecham in Rasi and Navamsam. Suriyan & Bhudhan neecham in Navamsam. This horoscope looks like partial Kala Sarpa Dosam except Chandran all planets placed between Rahu and Ketu. Moreover Ketu is leading them.
Shani and Bhudhan Parivarthanai as well. Chandran has good paral(7) and Vargothamam as well, eventhough he is neecham.

He should have recoverd after Sukran Suya Bhuthi, means Sukra Dasa/Suriya Bhuthi. Because Sukran is sitting in 12th house in Rasi. But in Navamsam, he is sitting in 11th house. Moreover Vargothamam.

Best Regards,
Trichy Ravi

Rajam Anand said...


அன்புள்ள வாத்தியாரிற்கு, வணக்கங்கள்
ஜாதகர் 18-9-1975ல், அனுச நட்சத்திரத்திலும் விருச்சிய ராசியிலும் பிறந்தார்.
1. லக்கினத்தில் – 7ம் அதிபதி சூரியன்; 2ம்,11ம் அதிபதி குரு ஆனால் அவர் 2ம் வீட்டிற்கு 12ல் அமர்ந்திருக்கின்றார்; 5ம், 8ம் வீட்டதிபதியான புதனுடன்.
2. 2ம் வீட்டில் மாந்தி.
3. 9ம் வீட்டதிபதியான (பூர்வபுண்ணியஸ்தானம்) சுக்கிரன் 12ம் இடமாகிய விரயஸ்தானத்தில்.
4. 10ம் வீட்டில் சந்திரன் நீசம்.
5. 11ம் வீடான லாபஸ்தானத்தில் ராகு – கேட்கவும் வேணுமா
6. கேது திசை 11-1993 தொங்கி 11-2000ல் முடிந்தது. அதன் பின் விரயஸ்தானத்திலுள்ள சுக்கிர திசை 11-2020ல்முடியும்.
7. ஏழரை சனி 8-2012ல தொடங்கி 1-2020ல் முடியும்.

தீர்வு உண்டா இல்லையா?
உண்டு, 45வயதில் விடிவு பிறக்கும்

அன்புடன்
ராஜம் ஆனந்த்

Kondal Vannan said...

vanakkam Ayya. Answer to quiz no 115, mandhi in second place dhanasthanam. ragu in leventh place, dhanakaragan guru in lagna that is virayasthanam to dhanasthanam. sixth lord in tenth from lagna that is known as business. There is no subhagraha parvai to sugasthanam , laknam and dhanasthanam .Sukran who is yogaharagan and pakiyasthanaathipathi to kumba lakna sitting in twelth place.Lagna lord is in fifth place with kethu without subhagraka parvai.sixth lord chandran views sugasthanam. so the person who is reserved for this horeshope struggle in life.he will earn money in guru dasa because he is second and eleventh lord . Thankyou for your coaching, Yours obediently, Thirumamagal.