மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.15

இனி இது உங்கள் கையில்!


இனி இது உங்கள் கையில்!

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையாளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...

👉சொத்து
👉ஸ்திரி
👉உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்
👉தந்தை
👉குரு

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..

மது நாட்டுக்கு  வீட்டுக்கு கேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று மக்களின் மீது அன்பை பொழியும் அரசு அவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம் தட்டி கேட்காது.

குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும் கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம் தட்டி கேட்காது.

ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவது போல் நீதிமன்றம் இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.

மக்கள் மீது அககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?

இக்கருத்தை வரவேற்போர் இப்பதிவை குறைந்தது 5 பேர்களிடமாவது பகிரவும்

அவ்வாறு செய்தால் விரைவில் தங்களுக்கு டாஸ்க் மார்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி கிடைக்கும்

சும்மா கடவுள் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்

இனி உங்கள் கையில்

அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. வணக்கம் அய்யா !!!!!!!!!!
    இந்த வலைத்தளம் ஆரம்பித்த நாள் முதல் நான் வாசகன் மற்றும் மாணவன். ஆனால் இன்றுதான் தங்களின் சமூக கோவத்தை பார்க்கிறேன். ஆசிரியரின் ஆணைகிணங்க எனது நண்பர்களுக்கு தங்களது பொன்னான பதிவினை உடனே அனுப்பிவிட்டேன். நமது வலைத்தளம் சமூக பொறுப்பும் கொண்டது.
    நன்றி அய்யா !!!!!!!!
    சந்தானம் சேலம்.

    ReplyDelete
  2. அய்யா வண்ணக்கம்,

    அருமை அருமை செய்தி.... நன்றிகள் கோடான கோடி உமக்கு. சிறுவயதில் தெரியாத செய்திகள் இப்ப வருது உமது எழுத்தூக்கலாலும் எமது ஆனுபவதில் அவைகள் உண்மை தான்.

    நன்றி,
    அன்புடன் சா.குமணன்

    ReplyDelete
  3. அய்யா..,
    தங்கள் உத்தரவை உடனே நிறைவேற்றிவிட்டேன். தலைப்பு
    இப்படி இருந்திருக்கலாமோ?!...
    'இனியது' உங்கள் கைகளில்....

    ReplyDelete
  4. அய்யா..,
    தங்கள் உத்தரவை உடனே நிறைவேற்றிவிட்டேன். தலைப்பு
    இப்படி இருந்திருக்கலாமோ?!...
    'இனியது' உங்கள் கைகளில்....

    ReplyDelete
  5. தங்களின் சமூகத்தின் மீதான கோப வெளிப்பாடு நன்று ஐயா...
    மக்கள் மீதான அன்பிருந்தால் இந்த அரசு இந்நேரம் மதுக் கடைகளை மூடியிருக்குமே...
    நானும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா...
    நன்றி.

    ReplyDelete
  6. மன்னிக்க மூன்று என பட்டியலிட்டதில்
    மாறுபடுகின்றனே .... பல இடங்களில்....

    பட்டியலிட்டு சொன்னால் ஒரு
    பதிவே வேண்டும்...

    டாஸ்மாக் மூடுவது பற்றி
    டமால் என சமூக செய்தி...

    டாஸ்மாக்கில் இருந்து 70 ரூபாவிற்கு வாங்கி
    டாப் கிளாஸ் ஹோட்டல் களில் 300 ரூபாவிற்கு

    விற்கின்றனர்... சாதாரண மக்களை விட அதிக
    விலை கொடுத்து வாங்கி குடிப்பவர்களே அதிகம்

    நீதி மன்றம் மக்களை பாதுகாப்பது அரசின்
    "நிதி"க்காக தான். மக்கள் உயிருடன் இருந்தால் தானே

    வரி கட்ட முடியும்... எங்கள் வீட்டை சுத்தம் செய்ய அரசுக்கு
    வரி அரசுக்கு கட்ட வேண்டும்...

    கடன் (கடன் அட்டையில்)வாங்கினால் செலுத்தும் வட்டிக்கு
    கட்டாயம் வரி கட்ட வேண்டும்.

    பசிக்குதுன்னு ஓட்டலுக்கு போய் சாப்பிட்டால் வரி என
    பகுதியை தொகையாக வாங்கிடுவாங்க...

    என்ன கொடுமையடா சாமீ ...?!!
    எப்படியும் வரி கொடுக்கும் இந்த

    மனிதன் சாலை விபத்தில்
    மரணத்தை சந்திக்கலாமா?

    சாகாமல் இருந்தால் தானே விபத்து காப்பீடு
    சேமிப்பாக இருக்கும் அரசுக்கு...

    குடிப்பவர்களால் அரசுக்கு வருமானம் வராது என
    குட்டி பாருங்கள்... மதுக்கடைகள் மூடப்படும்..

    இந்தியாவில் வாழ
    இன்னமும் ப்ரியபடுகிறீர்களா ...?

    ReplyDelete
  7. குருவே வணக்கம்
    எப்பேர்ப்பட்ட ஒரு பதிவு! சங்கள் எழுத்துக்கள் அனைத்துமே மனதில் ஆழப்பதிந்துள்ளது.
    முத்து முத்தான வார்த்தைகள், அத்தனையும்
    சத்தானவை! அவற்றின் வேகம் உஷ்ணம் நிறைந்தது.தாங்கள் கூறியுள்ளது போல் இவற்றின் தாக்கம் அரசை ஆட்டிவைக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் எனது அத்துனை near & dearக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
    இப் பதிவுக்காக எங்களன்பு குருவுக்கு ஒரு "சபாஷ்".;

    ReplyDelete
  8. அடிமை இந்தியாவின்
    அவலங்களில் இதுவும் ஒன்று..

    திறமை இல்லாத பிரதமர்
    தகுதி நிறைந்த தமிழக முதல்வர்

    இப்படி பல கலவைகளில்
    இ வா (இந்தியா வக்காளனால்)

    சட்டத்தை மாற்ற முடியவில்லை
    சட்டமன்ற பாராளுமன்ற த்திற்கு

    தேர்வு செய்தவரை பதவியில் இருந்து
    தேர்வு நீக்கம் செய்ய முடியவில்லை.

    அரசியல் அமைப்பு சட்டத்தை
    அப்படி என்ன செய்ய..

    சத்தம் போட்டு கேட்டால்
    சகிப்பு தன்மை வேண்டும் என

    ஆளாளுக்கு
    அட்வைஸ் பண்ண வந்துடுவாங்க

    கட்டபொம்மா நீ
    கட்டாயம் எழுந்து வர வேண்டும்...

    ReplyDelete
  9. Unnmaigu vegam athigam ungal seithiku unarvukal athigam Ethan ethirparpukkal thannalmatra korrigaigal Ethan vetri vegu seekkarathil kidaikkum vazhaga nalamudan

    ReplyDelete
  10. தங்களின் வகுப்பறை பதிவுகளை தொடர்ந்து ஆர்வமுடன் வசித்து வருகிறேன். 30-11-2015 பதிவில், “இனி இது உங்கள் கையில்” என்ற தலைப்பில் மதுவிலக்குவிற்கு ஆதரவாக மிக அற்புதமான பொன்மொழிகளுடன் மதுவிலக்கிர்கான தேவையை பதிவிட்டு மேற்படி மதுவிலகிற்கான ஆணையை நீதிமன்றம் தானாக முன்வந்து வழங்கவேண்டும் என்கின்ற விருப்பத்தோடு தங்கள் பதிவினை குறைந்தது ஐந்து பேர்களிடமாவது பகிரவும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளிர்கள்.
    மதுவில்லா தமிழகம் வேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் (மது அருந்துபவர்கள் உட்பட) விருப்பம். ஆனால் பிரச்சனை மதுக்கடைகளை மூடுவதிலேயே முடுடிந்து விட வில்லை என்பதில் தான் சிக்கல் தொடங்குகிறது. மதுகடைகளினால் தமிழகம் சீரழிந்து வருகிறது என்று பல நண்பர்களிடம் விவாதிக்கையில், ஒரு சிலர் எடுத்துவைக்கும் வாதமும் கவனிக்கப்பட வேண்டியதாகிறது என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக நமக்கு மிக அருகில் உள்ள நமது மொழி மற்றும் பண்பாடுகளை பின்பற்றி வருகின்ற புதுவை மாநிலத்தில் தொடர்ந்து பல தலைமுறைகளாக வீதிக்கு இரண்டு மூன்று கடைகளில் மது விற்பனை நடைபெற்று கொண்டிருகிறது. அங்கு ஏற்படாத சீரழிவு தமிழகத்தில் மட்டும் ஏன் ஏற்படுகிறது? அதலால் மதுவையும் தாண்டி வேறு ஒரு மறைமுக காரணி மக்களை மதுக்கடைகளை நோக்கி ஓடவைக்கிறது என்கின்ற வாதத்தை நாம் புறம் தள்ளிவிடமுடுடியாது, புரந்தள்ளவும்கூடது என்பதே எனது வேண்டுகோள்.
    மதுவிலக்கு அமலில் இருந்த காலம், பொது ஏலம்! மூலம் தனியார் மதுக்கடைகள் நடத்திய காலம் மற்றும் கடந்த பதினைத்து ஆண்டுகளாக அரசே மதுக்கடைகளை நடத்துகின்ற காலம் என அனைத்து வகையான அனுபவங்களும் கிடைக்கபெற்றுள்ளன. இதில் எந்தெந்த காலங்களில் எவ்வகையான தீமைகள் ஏற்பட்டுள்ளன என பட்டியலிட்டு அந்த தீமைகளை கலைவதர்க்கான செயல் திட்டத்தை வரையறை செய்யாமல் இன்றைய சூழ்நிலையை மட்டுமே கணக்கில் கொண்டு ஒரு அவசரகதியில் மதுவிலக்கை அமல் படுத்த நிர்பந்திப்பது, பிள்ளயார் பிடிக்கபோய் குரங்கு பிடித்த கதையாகத்தான் முடியும் என்பதே எமது பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
  11. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!,
    மிகவும் அருமயான ஆதங்கம் மிகுந்த பதிவு! ஒருதுளி மை பல லட்சம் மக்களை சென்றடையும், தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்ற உண்மை புலப்படுகின்றதல்லவா? இதை உடனே நடைமுறைப் படுத்துவோம்! நமது பங்களிப்பாக குருவுக்கு தோள் கொடுப்போம். அந்த வகையில் இதை உடனடியாக நமது சகாக்களுடன் பகிர்ந்தாயிற்று!!!.
    சமீபத்திய அண்மையில், ஒரு பொதுநல வாதியின் தரப்பிலிருந்து,”மது விலக்கு” உடன் அமல் படுத்தக் கோரி தொடுத்த பொதுநல வழக்கில், உயர் நீதி மன்றம் “இது மாநில அரசின் வரம்புக்குட்பட்டது” என்ற காரணத்தைக் காட்டி தடை விதிக்க மறுத்துவிட்டது.
    எனது கருத்துப்படி, கிட்டத்தட்ட கடந்த 40 வருடங்களாக அரசால்,ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப் பட்ட இந்த மதுபான சீரழிவை, இப்போதையா தேர்தல் யுக்திக்காக விளம்பரமாக சில பல ”தலெ” கள் ஒரு ஆயுதமாகவே கையில் எடுத்துள்ளனரே தவிர - இது நடை முறைக்கு சாத்தியமா?- 80களின் முன்பாதியில் மது விலக்கு அமல் படுத்துகிறோம் எனக் கூறி கள்ளச் சாராயத்தை ஊக்குவித்த காரணிக்கு எத்தனை உயிர்கள் பலியாயின? அத்தனை உயிர்களும் அரசியல்வாதிகளின் கைகளில் காசாக மாறியதை காலம் இன்னும் மறந்திருக்காது. குடிக்க, சாராயம் வாங்க முடியாமல் வார்னீஷை குடித்தும், விஷச் சாராயத்தைக் குடித்தும் எத்தனை உயிர்கள் பலியாயின.இன்று மழை,வெள்ளம்,புயல்,இயற்கைச் சீற்றம் இவற்றால் பாதிக்கப்பட்டு துயரத்தை சந்திக்கும் இதே கடலூர் மாவட்டம் தான் அன்றைய நாட்களிலும் கள்ள சாராயம், விஷச் சாராயம் பலியில் முதலிடம் வகித்தது.
    மதுவிலக்கில், குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கின்றது.அங்கும் மக்கள் குடிக்காமல் இல்லை.ஆனால் அரசின் கட்டுப்பாடு திறமையாக நிர்வகிக்கின்றது!!!!
    ஆனால் அய்யா ஒன்று மட்டும் உறுதி - மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டால்,பல உயிர்களும்,குடும்பங்களும்,நடப்பு சீரழிவுகளும் கட்டுப்படுத்தப் படலாம்!!!(கவனிக்கவும்: கட்டுப்படுத்தலாம்)!!!
    ஒரே வழி - ஒரு துளி மை சொல்லும் செய்தி, திரும்பத் திரும்ப மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்!(தற்கொலைப் படையினருக்கு ப்ரெயின் வாஷ் செய்வது போன்று!!!
    அந்த செய்தியே மந்திரமாக வேண்டும்!!!!
    கட்டுப்படுத்தலாம்!!!! ஆனால், நிறுத்தமுடியுமா???? சிந்திக்க வேண்டுகிறேன்!!!!!!!!!
    குடிகாரன் திருந்திவிடுவான்!!! ஆனால் குடிக்க வைப்பவனைத் திருத்த முடியுமா????????
    சிந்தியுங்கள் ஆசிரியரே!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  12. மதுவினால் தீங்கு
    மக்களுக்கு இல்லை..

    பண ஆசையின் காரணமாக (வரிக்காக)
    பதவியில் இருப்பவர்களின் நாடகம்

    மதுவை தயாரிக்க அனுமதி தந்து
    மது இறக்குமதிக்கும் அனுமதி தந்து

    மத்திய அரசு செயல்படும் போது
    மாநில அரசை குற்றம் சொல்வது சரியல்ல

    துபாயில் கூட மதுக்கடைகள் உண்டு
    துப்புரவாக மதுவை ஒழிக்க வேண்டாம்

    ஆரோக்கியமான உணவே கிடைக்காத
    அப்படி ஒரு சூழலில் மதுவால் ஒன்றும்

    பெரிய தீங்கு வந்து விடாது
    பெரிதாக சொல்ல வேண்டுமானால்

    இரவில் பணி புரிவது உடலுக்கு தீங்கானது
    இளைஞர் பலர் night shift இல் தான்

    இந்த ஐடி மற்றும் பி பி ஓ நிறுவனங்களை
    இவர்களால் (மதுவிலக்கு வேண்டுபவர்கள்) மூட முடியுமா

    இனி உங்கள் கையில் என்றதும்
    இந்த வகுப்பில் உள்ளவர்களுக்கு

    ஒரு கோப்பையை தருவீர்கள் என
    ஒரு கற்பனை செய்தேன்..

    அந்த காலி கோப்பையில் மாணவர்கள்
    அவரவர் எண்ணைகளை நிரப்பி விட்டனர்..

    இதை குடிக்க வேண்டியவர்கள்
    இன்றைய அரசின் பொறுப்பில் உள்ளவர்கள்..

    "அம்மா" எது செய்தாலும் சரியே... என்று
    அச்சம் இன்றி சொல்வோமே

    ReplyDelete
  13. எல்லாமே முத்துககள். Already gone around the world once.
    God Bless you, sir

    ReplyDelete
  14. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    பொதுவாக சொல்லப் போனால் வந்ததுகள்,வந்தவைகள்,வரப்போகின்றவைகள் எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிக் கொண்டிருக்கும் மட்டைகள் தானே!!!- ஒரு குவாட்டெர், ஒரு பொட்டலம் பிரியாணி,200 ரூபாய் காசு மற்றும் இலவச போக்குவரத்து - இது ஒரு ஓட்டுக்கான விலை. இன்று தண்ணீரில் சிக்கி சீரழியும் பாமரன் நாளை தேர்தல் சமயம் இந்த அவல நிலையை எல்லாம் மறந்து, “தண்ணியில் மிதந்து” ஒட்டை குத்திவிட்டு வந்து விடுவான்!. நாட்டுக்காக உழைத்து உயர்ந்தவர் ஒருவரையாவது அடையாளம் காட்டமுடியு மானால் அதுதான் சந்தோஷம்.
    ”யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமிலேயே யாரும் வஞ்சம்”!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com