மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

28.7.15

எது நடக்காது?


எது நடக்காது?

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிப் பரவசப் படுத்திய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------
பழநிக்குச் சென்று ... அழகனைப் பார்த்து
உருகிய மேனி உலகிலே
தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?

தணிகைக்கு வந்து ... தலைவனைக் கண்டு
வணங்கியப் பின்னால் வாழ்விலே 
அன்பில் ... கும்பிட்ட கைகள் விலகுமா?
பொன் கோடி தந்தாலும் தீண்டுமா?
(பழநிக்குச் சென்று ... )

அறுபடை வீடும் ... அடியவரோடு
நடந்திடும் கால்கள் புவியிலே 
இனி ... வேரொருப் பாதையில் செல்லுமா?
வடிவேலவன் உறவைத் தள்ளுமா?
(பழநிக்குச் சென்று ... )

காவடிக் கொள்ளும் ... பூவடி நிழலில்
கலந்தப்பின் உள்ளம் கனவிலும் 
நாம் ... வாவென அழைத்தால் திரும்புமா?
அது வானுலகாயினும் விரும்புமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
 --------------பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் 
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments: