மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

26.5.15

வேறு துணை எனக்கெதற்கு வேண்டும்?


வேறு துணை எனக்கெதற்கு வேண்டும்?

பக்தி மலர்

26.5.2015

செவ்வாய்க் கிழமை முருகனுக்கு உகந்த நாள். இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமானின்
பாடல் வரிகள் நிறைக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்

ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
(ஆறுமுகம் இருக்க ... )

நீரணிந்த நெற்றியுடன் ... நீங்காத பக்தியுடன்
காவடிகள் தூக்கி வர வேண்டும்
முருகன் சேவடியில் மாலையிட வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

ஏறுமயில் ஏறிவரும் ... வீரமகன் திருப்புகழை
காலமெல்லாம் பாடும் நிலை வேண்டும் 
பழநி கந்தன் அவன் கருணை செய்ய வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

எப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே
என்னை அவன் பார்த்திருக்கவேண்டும்
என் அன்னையென காத்திருக்க வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... ).
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

வேப்பிலை said...

உண்மை தான்
உள்ளபடியே இது பற்றி

சிந்திக்கொண்டிருந்தேன் இன்று
சிந்தனைக்கேற்றார் போல்

இன்றைய பதிவும்
இதில் பறந்த பாடலும்

அமைதியையும்
ஆனந்தத்தையும் தந்தது.. உறவென

யாருமில்லலா எமக்கு
யாமிருக்க பயமேன் என

சொல்வது போல் உணர்ந்தேன்
சொல்ல வார்த்தையின்றி நன்றிகள்

முருகன் அருள்
முன் நிற்கும்

மனதை கவர்ந்த
மதிக்க தக்க வரிகள் இது

எப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே
என்னை அவன் பார்த்திருக்கவேண்டும்
என் அன்னையென காத்திருக்க வேண்டும்

SELVARAJ said...

முருகா முருகா சரணம்.

kannan Seetha Raman said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

குரு பலம் வேண்டி குரு ஸ்தலத்திற்கு அதிபதி ஆகிய திருச்செந்தூர் முருகனை வேண்டி இன்று செவ்வாய் கிழமை விரதம் இருக்கின்றேன்.

இது நீண்ட நாள்களுக்கு பின்னர் மேற்கொள்ளும் விரதம் ஆகும்.

இந்த விரதத்திற்கு காரணம் தங்களுடைய இன்றைய படைப்பு ஆகும் .

நன்றி. வணக்கம்.வந்தனம்.