மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

17.4.15

மனதில் என்றும் நிலைத்து இருப்பது எது?


மனதில் என்றும் நிலைத்து இருப்பது எது?

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன்  அவர்கள்
பாடிய “உயிர் கொடுத்த நாள் முதலாய்....” என்ற பாடல் வரிகள் நிலைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
==================================
உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை 
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை 

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை

பயிர் வளர்க்கும் மழையது போல் ... அருளவந்தனை
நான் பட்ட துன்பம் எட்ட ஓட ... பார்வை தந்தனை 

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

பழநி மலையில் வீற்றிருக்கும் ... தண்டபாணியே
ஞானப் பழமாக இனித்திருக்கும் ... அழகு தெய்வமே 

மழலையாக தவழ்ந்து வந்த ... குழந்தை வேலனே 
என் மனத்திலென்றும் நிலைத்து நின்ற ... சுவாமிநாதனே 

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

காட்டுகின்றக் காட்சியெல்லாம் ... கண்டுகொள்கிறேன்
உன் கருணை ஒன்றை நம்பியன்றோ ... காத்திருக்கிறேன் 

ஆட்டுகின்றக் கோலை நோக்கி ... ஆடிவருகிறேன் 
உன் அன்பு என்னும் கோயில் நோக்கி ... ஓடி வருகிறேன் 

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை

முருகா ... முருகா ... முருகா ... முருகா ... .
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

kmr.krishnan said...

அருமையான பாடல்! பகிர்வுக்கு நன்றி ஐயா!

gayathri devi said...

உயிர் கொடுத்த நாள் முதலாய் முருகா நீயே எனக்கு எல்லாம்

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
அருமையான பாடல்! பகிர்வுக்கு நன்றி ஐயா!////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger gayathri devi said...
உயிர் கொடுத்த நாள் முதலாய் முருகா நீயே எனக்கு எல்லாம்////

நல்லது. நன்றி சகோதரி!