மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.1.15

Quiz.no.74 Answer: சொர்க்கமே மறந்து விட்டேன் உன்னால் இன்று!

Quiz.no.74 Answer: சொர்க்கமே மறந்து விட்டேன் உன்னால் இன்று!

புதிர் எண் 74 ற்கான விடை

13.1.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 3 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?

சரியான பதில்கள்:

1. ஜாதகிக்குத் அவருடைய இளம் வயதிலேயே திருமணம் நடந்தது.
2. அதாவது 23வது வயதில் திருமணம் நடந்தது.
3. ஜாதகிக்கு அவருடைய 25வது வயதில் குழந்தை பிறந்தது.

ஜாதகப்படி என்ன காரணம்?


வாருங்கள், பார்ப்போம்!

1. ஜாதகி சிம்ம லக்கினக்காரர். லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் உள்ளார். நல்ல அமைப்பு.
2. ஏழாம் வீட்டில் சுபக்கிரகமான சந்திரன். அவர் 12ஆம் வீட்டு அதிபதி என்றாலும் யோககாரகன் செவ்வாயுடன் சேர்ந்ததால் நன்மை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
3. ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் முக்கிய கேந்திரத்தில். அத்துடன் அவர் தன்னுடிய வீட்டிற்கு 4ல் நல்ல நிலைமையில் உள்ளார்.
4. மேலும் அவர் மீது குரு பகவானின் பரிபூரண பார்வை. நேரடிப் பார்வை.
5. களத்திரகாரகன் சுக்கிரன் திரிகோணம் பெற்றுள்ளார்
6. அத்துடன் லாபாதியான புதனின் கூட்டில் உள்ளார்.
ஆகவே மேற்கூஉரிய காரணங்களால், ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் நடைபெற்றது. குரு மகா திசையில் சுக்கிர புத்தி துவங்கியவுடன் திருமணம் (23வது வயதில்) நடைபெற்றது.

அடுத்து குழந்தை பாக்கியத்தைப் பார்ப்போம்:
1. ஐந்தாம் வீட்டு அதிபதி குரு அந்த வீட்டிற்குப் 12ல்
2. லக்கினாதிபதி சூரியனுடன் சேர்க்கை.
3.ஆனால் ஐந்தாம் வீட்டுக்காரரின் மேல் சனீஷ்வரனின் பார்வை. குழந்தைப் பேறு தாமதப்படும் என்பது விதி (Rule)
4. ஐந்தாம் வீட்டில் சுபகிரகமான சுக்கிரனும், லாபாதிபதி புதனும் வலுவாக அமர்ந்துள்ளார்கள்.
5. சந்திர லக்கினத்தில் இருந்து ஐந்தாம் வீட்டின் மேல், அந்த வீட்டுக்காரன் புதனின் பார்வை. அத்துடன் சுபக்கிரகமான சுக்கிரனின் பார்வை
இது நல்ல அமைப்பாகும்
ஜாதகிக்குக் குரு திசை சுக்கிர புத்தி முடியும் தருவாயில் குழந்தை பாக்கியம் கிட்டியது. அவருடைய 25வது வயதில்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டில் 27 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 18 பேர்கள் மட்டுமே சரியான
பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்! அந்த  18 பேர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள், திருமணமாகியிருக்கும், குழந்தை பிறந்திருக்கும் என்று எழுதியுள்ளார்களே தவிர கால நேரத்தைச் சரியாகக் குறிப்பிடாமல் லேசாகக் குழப்பியிருக்கிறார்கள்

லால்குடி திரு.KMRK மட்டும் பதிலை சிறப்பாக எழுதியுள்ளார்.
அவருக்கு எனது விஷேசமான பாராட்டுக்கள். அவரின் பதில்களுக்கு
நட்சத்திரக்குறியிடு (ஸ்டார்) போட்டிருக்கிறேன்.

மீதமுள்ளவர்கள் இரண்டில் ஒன்றிற்குத்தான் சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அல்லது இரண்டிற்கும் சரியான பதிலை எழுதவில்லை. அவர்களை விட்டுவிட்டேன். அவர்கள் அடுத்த முறை சரியான பதிலை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
//////Blogger selvaspk said...
1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
Married, Lately. 
Delay due to
1. Simma lagnam 
2. Sevvai dosam (some say Simma lagnam doesnt have)
3. Mandi in 2nd house of family
4. Saturn special view on 7th house.
Married due to
1. Bagyathipathi in 7th, looking Lagnam and 2nd house 
2. Guru, lagnathipathi, sukran havent gone bad. 
They will give married life, but it will not sustain.
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
She may married around 33
3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?
She will have kids
2nd house lord sitting in 5th with Subha graham in subha house. Karahan Guru with Ravi with Saturn conjuction.
-- Though it looked like Marriage denial horoscope (Kethu in 12 with Saturn 12th lord in 7th) but I believe she got late married due to family issues 
and her marriage life will not be happy and may be broke post children birth.
Monday, January 12, 2015 7:11:00 AM//////
-------------------------------------------
2
/////Blogger Ravi Sankar said...
Good Morning Sir, She definitely got married and has the children (might be 2 girls). 4th, 7th and 10th rasis are in mukona parivarthanani. Venus 
also with Lagna.
Monday, January 12, 2015 7:39:00 AM////
------------------------------------------
3
****** /////Blogger kmr.krishnan said...
1. ஏழாம் வீட்டு அதிபதி சனைச்சரனுக்கு குருவின் பார்வை.ஏழாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய் இருந்து ஏழாம் வீட்டுக்காரனை நான்காம்
பார்வையாகப் பார்ப்பது.எழாம் அதிபதி தன் வீட்டுக்கு நான்காம் இட்ம் ஏறி நட்பு வீட்டில் இருப்பது.லக்னாதிபதி சூரியனும் ஏழாம் அதிபனைப்
பார்ப்பது. இவையெல்லாம் ஜாதகிக்குத் திருமணம் ஆனதைக் குறிக்கிறது.
2. குருதசா சுக்ரபுக்தியில் 1995ல் 24 வயதில் திருமணம் நடந்தது.
3.ஐந்தாம் அதிபதி குரு 4ல் லக்கினாதிபதி சூரியனுடன் கூடியிருப்பதாலும்,
ஐந்தில் 2,11 அதிபதி புதனும்,3,10 அதிபதிசுக்ரனும் கூடி நின்றது,கஜகேசரியோகம், சசிமங்கள யோகம் ஆகியவைஉடைய ஜாதகிக்கு
இரண்டு குழந்தைகள் உண்டு.
Monday, January 12, 2015 7:51:00 AM/////
-----------------------------------------------
4
///////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!!!
Quiz 74ற்கான பதில்.
1. ஜாதகிக்கு திருமணம் ஆனது.
2. அவரது 18 வயதில்,
3. குழந்தைகள் உண்டு
1. ஜாதகிக்கு திருமணம் ஆனது.
சிம்ம லக்கினதிற்க்கு யோகாதிபதியான செவ்வாய் 7ல், மேலும் வளர்பிறை சந்திரனுடன் கூட்டு, ஆகவே திருமணம் இனிதே இளம் வயதிலேயே
நடந்தது. 7ம் இடத்தை வக்கிர சனி பார்த்தாலும், வக்கிர சனியின் மீது சூரியனுடன் கூடிய குரு பார்வை, வக்கிர சனியால் திருமணத்தை
தாமதப்படுத்த முடியவில்லை..
2. அவரது 18 வயதில்,
குரு திசையில் வந்த புத புத்தியில் திருமணம் நடந்தது.
3. குழந்தைகள் உண்டு 
5ல் புதன் மற்றும் சுக்கிரன் கூட்டு. மேலும் 4ல் சூரியன், 6ல் ராகு என 5ம் இடம் பாவ கர்த்தாரி யோகத்தில். எனவே தாமதமான குழந்தை பாக்கியம்.
சில வருடம் காக்க வைத்து 23 வயதிற்கு முன்பே குழந்தை பாக்கியத்தை கொடுத்தான்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Monday, January 12, 2015 9:44:00 AM/////
--------------------------------------------
5
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்...
1.அம்மனிக்கு திருமணம் நடந்திருக்கும்
குருதிசையில் நடந்திருக்கும்!
2. 7ஆம் இடத்தில் பாக்யாதிபதி செவ்வாய் இருப்பதாலும்.
7ஆம்அதிபதி சனி10ல்.குருபார்வையில்
இருப்பதும்.சுக்கிரன் 5ல் இருப்பதும்
திருமணயோகத்தை தரும் !!!
3. 5ல் புத+சுக் இருப்பதும்
குரு4ல் லக்னாதிபதி சூரியனுடன்
நட்பு வீட்டில் இருப்பதும்.
குழந்தைபாக்கியம் உண்டு,உண்டு...
Monday, January 12, 2015 10:28:00 AM/////
----------------------------------------------
6
/////Blogger sundari said...
சார் வணக்கம்
1.ஜாதகிக்கு திருமணமாயிற்று 7ஆம் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 4ல் சனி குருவின்,யோககிரகம் செவ்வாயின் பார்வையை பெற்றிருக்கிறார் மேலும்
செவ்வாய் 7ல் இருகிறார். குருதிசையில் திறுமணமாகியிருக்கும் ஜாதகிக்கு ராகு 6ல் இருகிறது அப்புறம் 4ல் சூரியன் பாபகத்தரி குரு 5ந்துக்கு 12ல்
இருந்தாலும் 5ல் புதன் சுக்கிரன் இருக்கிறது அதனால் இவருக்கு பெண்குழந்தையிருக்கும்
Monday, January 12, 2015 12:24:00 PM//////
---------------------------------------------------
7
////Blogger bg said...
அய்யா,
வணக்கம்.
7 இல் சந்ந்திரன் ( விரையாதிபதி) மற்றும் உடன் யோகாதிபதி செவ்வாய்.
7 ஆம் அதிபதி சனி பத்தில் இருந்து 10 ஆம் பார்வையாக தன் வீட்டை பார்க்கிறார்.
காரகன் சுக்கிரன் 5 ஆம் இடத்தில் திரிகோணத்தில் உள்ளார்.
ஆகவே திருமணம் நடைபெறும்.
குரு திசையில் நடைபெறும்.
காதல் திருமணமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.
5 ஆம் அதிபதியும் 7 ஆம் அதிபதியும் பரஸ்பர பார்வை பெறுகிறார்கள்.
5 ஆம் அதிபதி மற்றும் குழந்தை பாக்கிய காரகன் குரு லக்கினாதிபதி சூரியன் உடன் கூட்டணி சேர்ந்து கேந்திர இடத்தில் நல்ல வலுவான
நிலையில் உள்ளார்.
ஆகவே குழந்தை பாக்கியம் உண்டு.
இப்படிக்கு
பாலமுருகன்
Monday, January 12, 2015 12:58:00 PM/////
---------------------------------------------
8
/////OpenID guest2015 said...
SATURN ASPECTS MOON- PUNARPHOO DOSHA
LEO ASCENDANT ALSO SUN IN KENDRA TO MOON AND SATURN- SO THIS DOSHA GOT CANCELLED.
LAGNATHIPATHI SUN in KENDRA IN MAR'S HOUSE- friendly sign
JUPITER 5TH AND 8TH LORD IN 4TH HOUSE -KENDRA. also with lagna lord. this will reduce the saturn's 7th aspect evil effects
YOGAKARAKA MARS IN 7TH HOUSE - KENDRA
also with 12th lord Moon
7TH LORD SATURN IN TAURUS (FRIENDLY SIGN) ALSO IN KENDRA
MOON AND JUPITER IN KENRA GIVES GAJAKESARI YOGA
SATURN AND VENUS ARE POSITIONED 6 - 8 FROM 5TH HOUSE SAME WITH MERCURY. WHICH IS NOT GOOD.
Also 3rd lord venus in 5th house.
maandhi in 2nd house.
marriage might have happened in saturn dasha or jupiter dasha guru bhukti.
there will be some delay for child birth till saturn dasha - jupiter bhukti.
thanks 
sree
Monday, January 12, 2015 1:27:00 PM/////
-------------------------------------------------
9
/////Blogger venkatesh r said...
புதிர் எண் : 74 க்கான அலசல் :
சிம்ம லக்கினம், கும்ப ராசி, புனர்பூ தோஷமுள்ள ஜாதகம். அவருக்கு,
1. 26 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும்
2. குழந்தை பேற்றில் தாமதம்.
காரணங்கள் :
1. லக்னாதிபதி சூரியன் 4ல் வலுவுடன் உள்ளார்.
2. 7ல் யோகாதிபதி செவ்வாய் மற்றும் சந்திரன் உள்ளனர்.
3. 7க்கு அதிபதி சனி ரிஷபத்தில் லக்கினாதிபதி சூரியன் குரு பார்வையுடன் உள்ளார். யோகாதிபதியின் 4ம் தனிப் பார்வையும் உள்ளது.
4. களத்திரகாரகர் சுக்கிரன் 5மிடமான தனுசில்.
26 வயதில் குரு தசை, சந்திரன் (அ) செவ்வாய் புத்தியில் திருமணம் ஆகியிருக்கும்.
5. 5ம் அதிபதி மற்றும் புத்திர காரகன் 5க்கு 12ல் நான்கில் மறைவு. அவர் மேல் 6ம் அதிபதி வில்லன் சனியின் பார்வை. குரு அம்சத்தில் நீசமாகி
வலுவிழந்துள்ளார்.
6. 5மிடத்தில் இரண்டு சுப கிரகங்கள் இருந்தாலும் அந்த பாவம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது. காரகன் குருவும் அந்த பிடியிலுள்ளார்.
7. வில்லன் சனியின் 10ம் பார்வை சந்திரன் மேல். புனர்பூ தோசம்.
இவை எல்லாம் சேர்ந்து ஜாதகிக்கு தாம்பத்தியத்திலும், குழந்தை பேற்றிலும் சற்றே தாமதம் ஏற்படித்தியிருக்கும். 30 வயதிற்கு மேல் பெண்
குழந்தைக்கு தாயாகியிருப்பார்.
Monday, January 12, 2015 4:41:00 PM/////
-----------------------------------------------------
10
/////Blogger Regunathan Srinivasan said...
வணக்கம் அய்யா,
ஜாதகிக்கு சிம்ம லக்னம்.7ஆம் அதிபதி சனி 10 ஆம் வீட்டில் உள்ளார்.7 ஆம் அதிபதிக்கு குருவின் 7 ஆம் பார்வை உள்ளது.குரு பார்க்க கோடி
நன்மை என்று சொல்வார்கள்.கண்டிப்பாக திருமணம் நடை பெற்று இருக்கும்.சனி தசை சனி புத்தியில் ஆதாவது 29 வயதிற்கு மேல் நடந்து
இருக்கும்.குழந்தை பேறும் உள்ளது.5 ஆம் அதிபதி குரு லக்னாதிபதியுடன் 4 ஆம் வீட்டில் உள்ளார்.மேலும் 5 ஆம் வீட்டில் இரண்டு சுபர்கள்
உள்ளனர்..அதனால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு.மேலும் 6 ஆம் வீடு ராகு ஜாதகிக்கு நல்ல துணிச்சலை கொடுப்பார்.எதிரிகளை
பந்தாடும் குணத்தை கொடுத்திருப்பர்.
உங்கள் மாணவன்,
S . ரகுநாதன்
Monday, January 12, 2015 5:38:00 PM/////
--------------------------------------------
11
////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
1. ஜாதகி சிம்ம லக்னம். லக்னாதிபதி சூரியன் 4ல் குருவுடன் சேர்ந்து 7ம் அதிபதி சனியின் பார்வையைப் பெறுகிறார். ரிஷபத்தில் சனி இருப்பதாலும்,
களத்திரகாரகன் சுக்கிரன் 5ல் இருப்பதாலும் நிச்சயம் திருமணம் நடந்திருக்கும்.
2. ஆனால் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி இருக்கிறார். மேலும் செவ்வாய் 7ல் அமர்ந்து 7ம் அதிபதி சனியைப் பார்க்கிறார். இந்த
அமைப்பு திருமணத்தை தாமதப் படுத்தும். அதனால் தாமதமாக ஜாதகியின் 33 வது வயதில் திருமணம் ஆகியிருக்கும்.
3. லக்னாதிபதி சூரியனும், புத்திரகாரகனும், புத்திர ஸ்தான அதிபதியுமான குருவும் சேர்ந்து 4ல் இருப்பதாலும், புத்திர ஸ்தானத்தில்
சுபக்கிரகங்களான சுக்கிரனும், புதனும் சேர்ந்து இருப்பதாலும் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் உண்டு.
Monday, January 12, 2015 7:10:00 PM/////
------------------------------------------------
12
Blogger lrk said...
ஐயா வணக்கம் .
புதிர்.74க்கு விடை
1) ஜாதகிக்கு உரிய வயதில் 21 to. 26 திருமணம் நடந்தது .
காரணம்
லக்கினாதிபதியும்( சூரியன் கேந்திரத்தில் குரு சேர்கை. ) 7ம். அதிபதி யும் ( சனி கேந்திரத்தில், மற்றும் குரு பார்வை. ) நல்ல நிலை யில் உள்ளதால்
திருமணயோகம் உண்டு.
களத்திரகாரகன் 5 ல் கோணத்திலும் சந்திர ராசி க்கு லாப ஸ்தானத்திலும் நன்றாக உள்ளார் .
2 ஆம் அதிபதி திரிகோணத்தில் உள்ளார் .
2 ல் மாந்தி இருந்தாலும் , சிம்ம லக்கின யோக்காரகன் செவ்வாய் பார்வை பட்டு நீங்கி விட்டது.
லக்கினத்தை யோக்காரகன் தன் பார்வையில் வைத்து உள்ளார் .
2) குழந்தை பாக்கியம் உண்டு. பெண் குழந்தை உண்டு .
காரணம்
5ஆம் வீட்டுக்கு அதிபதி மற்றும் புத்திரகாரகன் 4ல் உள்ளார் .
5ஆம் வீட்டில் புத சுக்கிரன் நிபுணத்துவ யோகம் உள்ளன.
5ஆம் வீட்டு அதிபதி மீது சனி பார்வை மற்றும் சூரியனின் சேர்க்கையால் பெண் குழந்தை யாக உள்ளது .
புத்திரகாரகன் குரு 5ஆம் வீட்டுக்கு 12ல் , மறைந்து உள்ளார் . அதனால் குழந்தை தாமதமாக பிறக்கும் .
கண்ணன்
Monday, January 12, 2015 9:12:00 PM/////
------------------------------------------
13
////Blogger Sundaravadivel K said...
குரு திருவடி சரணம்.....
அம்மணியின் ஜாதகத்தில் அலசியதில்...
(*) 7-ம் வீட்டு அதிபதி கேந்திரத்தில் இருந்து அவரின் பார்வை முறையே
லக்கினம்,4ம் வீடு மற்றும் களத்திரஸ்தானத்தில்....
(**) 7-ம் வீட்டில் சசிமங்கள யோகம்... 7-ம் வீட்டு அதிபதியின் விசேஷ பார்வையும் விழுகிறது...
(***) லக்கனாதிபதி, பஞ்சமஸ்தானாதிபதி சேர்க்கை 4ல் 7-ம் வீட்டு அதிபதியின் நேரடி பார்வையும் விழுகிறது...
(****) 5-ல் புதன் மற்றும் சுக்கிரன் கூட்டனி..
என்னுடய பதில்கள்...
1. அம்மணிக்கு அவரின் 25 வது வயதில் அதாவது குரு திசை சந்திர புத்தியில் திருமணம் இனிதே நடைபெற்றது... ஆனால்
2.7ல் இனைந்த சந்திரனும் செவ்வாயும் தன் பங்கிற்கு சில வயிற்று உபாதைகளை கொடுத்து புத்திர பாக்கியதை தாமதபடுத்தினர்..இருப்பினும்
3.சனி மகா தசையில் புதனின் புத்தியில் கரு உருவானது.
4.அம்மணிக்கு 2 ஆண் குழந்தைகள்
நன்றி குருவே....
Monday, January 12, 2015 9:17:00 PM/////
-----------------------------------------
14
////Blogger Ravichandran said...
Ayya,
1. She must be marriaed.
2. Marriage would have happened during age of 29(ie Shani mahadesai starting period). Because 7th house owner shani aspecting his house from 
10th house and due to Shasi Mangala yogam as well.
3. First kid would have expired or aborted. There is chance of getting second kid. The reason for first kid expire is 5th house owner sitting in 12th 
house from his house.
Your Student,
Trichy Ravi
Monday, January 12, 2015 9:40:00 PM/////
---------------------------------------------
15
////Blogger Udhayaganesh said...
She is married may be after age 30.
she has children but late, the reason is 5th god house is guru and it is in 12 house.
Monday, January 12, 2015 10:06:00 PM/////
-------------------------------------------
16
////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
இந்த ஜாதகிக்கு தனது 27வது வயதில் திருமணம் நடந்திருக்கும். அதாவது குரு தசை செவ்வாய் புக்தி கோட்சார குரு ராசிக்கு லாப ஸ்தானத்தில்
சஞ்சாரித்தபோது நடந்திருக்கும். அந்த வருடமே அவர் கர்ப்பம் தரித்திருப்பார். காரணங்கள் 7க்குடைய சனி பகவான் 10இல் அது 7ம் வீட்டிற்க்கு
கேந்திரம் அத்துடன் பூர்வ புண்ணியாதிபதி குரு மற்றும் லக்னாதிபதி சூரியன் பார்வையை அவர் பெற்றுள்ளார். களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும்
குடும்பாதியும் லாபதிபதியுமாகிய புதனும் பஞ்சம ஸ்தானத்தில் உள்ளார்கள். பெண்களுக்கு புத்திர ஸ்தானமாகிய பாக்கிய ஸ்தான அதிபதி செவ்வாய்
7இல். அந்த இடம் பாக்கிய ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமாகும் மற்றும் இயற்க்கை சுப கிரகமாகிய சந்திரனுடன் இணைவு. அத்துடன் புத்திர காரகன்
குருவும் கேந்திரதிளுமுள்ளார் சசி மங்கள, குரு சந்திர, நிபுனதுவா போன்ற யோகங்களும் உள்ளன.
நன்றி
செல்வம்
Monday, January 12, 2015 11:22:00 PM//////
-------------------------------------------
17
/////Blogger Chandrasekharan said...
Respected sir,
1.) She got married in her 26 th age. Gurudhasa, chevvai bukthi.
2.) She has child.. baby would born in her 33rd age. Sani dhasa, budhan bukthi.
Thank you.
Monday, January 12, 2015 11:50:00 PM/////
-----------------------------------------------
18
/////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz no.74:
1. She has married.
2. She married at her age of 23 to 25.
3. She got child after delay.
REASONS:
I) MARRIAGE:
i)Seventh lord in kendra and aspecting lagna lord (Mutual aspect) and guru.
ii) In seventh house, Yogathipathi Mars is sitting and aspects lagna.
iii). Kalathrakaraga also sitting in kendra. 
Hence, Marriage has not denied.
II) Age of married:
i) Saturn aspects Jupiter,Sun and Vice versa. 
Therefore, In jupiter dasa, Sun puthi period, Marriage has happened.
III) Child:
i) Fifth house is in babha kathri yoga and fifth house lord Jupiter is in 12th place from his own house.
ii) Saturn aspects Jupiter. So. it indicates there will be delay in getting child. In Navamsha, there is possibility to get child even asta varga too.
iii) But, as per moon rasi, fifth house lord is in good position.
So, she got child after delay for certain period of time from marriage.
With kind regards,
Ravichandran M
Tuesday, January 13, 2015 1:12:00 AM//////
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. மிக்க நன்றி ஐயா! வகுப்பறைக்குத் தவறாமல் நாள்தோறும் வருவதன் ப‌யனாக‌
    இந்தச் சிறப்பினை இன்று பெற்றுள்ளேன்.இதுவரை நடந்துள்ள 74 புதிர்களில் 72 ல் கலந்து கொண்டுள்ளேன்.பதில் முற்றிலும் தவறானவை விரல் விட்டு எண்ணக் கூடியவையே.புதிருக்கான பதிலை எழுதி அனுப்பிவிட்டு, தேர்வு முடிவை எதிர்நோக்கும் மாணவனின் மனநிலையில் அடுத்த 24 மணிநேரமும் இருப்பேன்.தங்களுடைய அலசலைப் பார்க்கும் வரை மனதில் ஒரு படபட‌ப்பு இருக்கும்.

    சென்ற ஒரு முறை 6ம் இடத்தினைப் பற்றிய‌ என்னுடைய பதிலை மட்டுமே சரியானது என்று வெளியிட்டபோதும், இன்றும் மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்தது.மீண்டும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்களது அன்னதானப் பணி சிறப்பாக நடந்து வருகிறது.20 ஜனவரி 2015 அனறு எமது அறக்கட்டளை ஓராண்டுப் பணியினை நிறைவு செய்கின்றது அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை (பதிவு),தஞ்சாவூர் நாள் தோறும் 60=70 நலிவுற்றோருக்கும், 104 பள்ளி மாணவிகளுக்கும் காலை உணவு அளித்துவருகின்றது. மாதச் செலவு இப்போது ரூ 75000/‍= வரை ஆகிறது.

    ஜாதகப்பலன் கேட்போருக்கு எனக்குத் தெரிந்த அளவு பலன் சொல்லி, தகுதியிருப்போரிடம் அன்னதானத்திற்காக மடியேந்துகிறேன்.பத்துக்கு ஒருவர்
    முன் வந்து தானம் அளிக்கிறார்.

    என் வகையாக அறக்கட்டளைக்கு, உணவையும் தானமளிப்போரையும் அழைத்துச் செல்ல புதிய‌ மாருதி ஆம்னி வேன் ஒன்று வாங்கி அளித்துள்ளேன். 25 டிசம்பர் 2014 முதல் இந்த வேனில்தான் உணவு எடுத்துச் செல்லப்படுகிறது.
    இதற்காக தஞ்சாவூர் சிண்டிகேட் வங்கியில் ரூ 294000/‍= கடன் பெற்று அடுத்த 55 மாதங்களுக்கு மாதம் ரூ7000/= செலுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளேன்.

    வாத்தியாருக்கும், சக தோழர்களுக்கும் பொங்கல் வாழ்த்தினை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ அந்த சூரிய நாராயண சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    எடுத்து பார்த்தவுடன் முதலில் அலசினேன் . திருமணம் என்று பின்னர் தீவீர அலசலில் இப்படி வாய்ப்பில்லை என் ஆகி விட்டது .
    அருமையான [சிக்கலான] கேள்விகள் எங்களை மேலும் ஆழ்ந்து சிந்திக்க தூடுகிறது நன்றி

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம் KMRK .சார்
    உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல தஞ்சை பிரகதீஸ்வரர் துணை வேண்டுகிறேன் ...சமயம் வரும்போது அடியேனின் பங்களிப்பும் இருக்கும்.

    ReplyDelete
  4. ஐயா வணக்கம் .
    தாங்கள் புதிர் அடிக்கடி பதிவில் ஏற்றுவதால் பாடங்களை திருப்பி படிக்கவும் , நினைவு கூறவும் முடிகிறது .
    மிக்க நன்றி ஐயா .
    கண்ணன் .

    ReplyDelete
  5. Blogger kmr.krishnan said...
    மிக்க நன்றி ஐயா! வகுப்பறைக்குத் தவறாமல் நாள்தோறும் வருவதன் ப‌யனாக‌
    இந்தச் சிறப்பினை இன்று பெற்றுள்ளேன்.இதுவரை நடந்துள்ள 74 புதிர்களில் 72 ல் கலந்து கொண்டுள்ளேன்.பதில் முற்றிலும் தவறானவை விரல் விட்டு எண்ணக் கூடியவையே.புதிருக்கான பதிலை எழுதி அனுப்பிவிட்டு, தேர்வு முடிவை எதிர்நோக்கும் மாணவனின் மனநிலையில் அடுத்த 24 மணிநேரமும் இருப்பேன்.தங்களுடைய அலசலைப் பார்க்கும் வரை மனதில் ஒரு படபட‌ப்பு இருக்கும்.

    சென்ற ஒரு முறை 6ம் இடத்தினைப் பற்றிய‌ என்னுடைய பதிலை மட்டுமே சரியானது என்று வெளியிட்டபோதும், இன்றும் மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்தது.மீண்டும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்களது அன்னதானப் பணி சிறப்பாக நடந்து வருகிறது.20 ஜனவரி 2015 அனறு எமது அறக்கட்டளை ஓராண்டுப் பணியினை நிறைவு செய்கின்றது அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை (பதிவு),தஞ்சாவூர் நாள் தோறும் 60=70 நலிவுற்றோருக்கும், 104 பள்ளி மாணவிகளுக்கும் காலை உணவு அளித்துவருகின்றது. மாதச் செலவு இப்போது ரூ 75000/‍= வரை ஆகிறது.

    ஜாதகப்பலன் கேட்போருக்கு எனக்குத் தெரிந்த அளவு பலன் சொல்லி, தகுதியிருப்போரிடம் அன்னதானத்திற்காக மடியேந்துகிறேன்.பத்துக்கு ஒருவர்
    முன் வந்து தானம் அளிக்கிறார்.

    என் வகையாக அறக்கட்டளைக்கு, உணவையும் தானமளிப்போரையும் அழைத்துச் செல்ல புதிய‌ மாருதி ஆம்னி வேன் ஒன்று வாங்கி அளித்துள்ளேன். 25 டிசம்பர் 2014 முதல் இந்த வேனில்தான் உணவு எடுத்துச் செல்லப்படுகிறது.இதற்காக தஞ்சாவூர் சிண்டிகேட் வங்கியில் ரூ 294000/‍= கடன் பெற்று அடுத்த 55 மாதங்களுக்கு மாதம் ரூ7000/= செலுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளேன்.

    வாத்தியாருக்கும், சக தோழர்களுக்கும் பொங்கல் வாழ்த்தினை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ அந்த சூரிய நாராயண சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்.//////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களின் தொண்டுகள் சிறக்க பழநிஅப்பனைப் பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  6. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    எடுத்து பார்த்தவுடன் முதலில் அலசினேன் . திருமணம் என்று பின்னர் தீவீர அலசலில் இப்படி வாய்ப்பில்லை என் ஆகி விட்டது .
    அருமையான [சிக்கலான] கேள்விகள் எங்களை மேலும் ஆழ்ந்து சிந்திக்க தூடுகிறது நன்றி////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள். படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம் .
    தாங்கள் புதிர் அடிக்கடி பதிவில் ஏற்றுவதால் பாடங்களை திருப்பி படிக்கவும் , நினைவு கூறவும் முடிகிறது .
    மிக்க நன்றி ஐயா .
    கண்ணன் ./////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள். நன்றி!

    ReplyDelete
  8. இந்த பதிவை அலுவலகத்தில் இருக்கும் போது படித்து விட்டு பதிலை வீட்டிற்கு சென்று எழுதிக் கொள்ளலாம் என்று இருந்தேன். வெளியில் இருக்கும் வரைதான் என் விருப்பம் போல் நடக்கும். வீட்டிற்குள் சென்றால் எதுவுமே என் கையில் இல்லை. அது என் புதல்வி அனுமதிப்பதைப் பொருத்தது. கடந்த 7ம் தேதியன்றுதான் அவரின் முதல் பிறந்த நாள்.

    நிற்க, ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே திருமணம் ஆகியிருக்கும், குழந்தைப் பாக்கியம் இருக்கிறது என்றே தொன்றியது. குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்லவில்லையே. அநேகமாக பெண் குழந்தை என்பது என் கணிப்பு.

    என் ஜாதகத்தில் ராகு, செவ்வாய் இருவரும் ஐந்தில் இருக்கிறார்கள். சுப கிரக பார்வை இல்லை. ஆனால் 5ம் அதிபதி சனிக்கு குரு பார்வை இருக்கிறது. குரு புத்திரகாரகன். சனி அவரைப் பார்க்கிறார். (பரஸ்பர பார்வை). அவர் பார்வையால் இவர் நன்மை செய்வாரா இல்லை இவர் பார்வையால் அவர் கெடு பலன்களைத் தருவாரா என்று கணிப்பதில்தான் சிக்கலை எதிர் நோக்கினேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com