மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.9.14

Humour: நகைச்சுவை: துப்பாக்கியை வைத்து நடந்த திருமணம்!


Humour: நகைச்சுவை: துப்பாக்கியை வைத்து நடந்த திருமணம்!

சிரிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரலாம். மற்றவர்களுக்கான
பதிவு நாளை வெளியாகும்!

இன்று பதிவிடப்பெற்றுள்ள இரண்டு துணுக்குக் கதைகளுமே நகைச்சுவைக்காகப் பதிவிடப் பெற்றுள்ளது. அவற்றை நகைச்சுவைக்
கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
1. துப்பாக்கியை வைத்து நடந்த திருமணம்!

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்,

அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில்
சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே
கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப்
பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக
அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால்
உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில்
சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து
“மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?”
என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!!!!!

அதுக்கு அப்புறம் விழுந்த அடிகளைக் கேட்கவா வேணும்...!

------------------------------------------------------------------
2
சரியான சவுக்கடி !

ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும்
மது அருந்திய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

மூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை நிறை
வேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

முதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க
வேண்டும் என்று கோரினார். அதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது.

இரண்டாவதாகத் தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட
வேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.
ஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்..
பலமான காயத்துக்கு ஆளானார்.

அடுத்து சீனர்.

“எனக்கும் 50 சவுக்கடிகளைப் பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார். ஒப்புக்கொள்ளப்பட்டது.

இரண்டாவதாகத் தன் முதுகில் 2  தலையணைகளைக் கட்டச்
சொன்னார். அவ்வாறே செய்யப்பட்டது.

15 சவுக்கடிகளில் தலையணைகள் கிழிந்து அவரது முதுகு பிளந்தது.

அடுத்து இந்தியர்.

“எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த்துங்கள்..!” என்றார்.

அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அதற்கு

ஒப்புக்கொண்டனர்.

இரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது.

“எனக்குத் தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கிக்
கட்டுங்கள்” என்றார்.

=====================================================================
மின்னஞ்சலில் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

  1. இப்போது தான் தெரிகிறது
    இன்றைய நாளில் ஏன்

    இந்தியாவில் பலர்
    இப்படி நீதிபதியாவதையே

    விரும்புவதில்லை என்று..
    விவரம் தெரிந்தவர்கள்

    கவர்னர்களாகிவிடுகின்றனர்
    கவர்ன்மென்ட் முயற்சியில்...

    ReplyDelete
  2. இரண்டாவது.
    இந்த சிந்தனை தான் இந்தியரின் பரம்பரை சொத்து.
    நகைசுவைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. Respected Sir
    Could not control my laughter...
    Good jokes to relax my long day
    thanks a lot

    ReplyDelete
  4. the 2nd one is so fine, & it shows the basic brain trend of our Indians.

    ReplyDelete
  5. அய்யா,
    எனக்கு பிடித்தது முதல் நகைச்சுவை.என்னுடைய Project Manager அடிக்கடி சொல்வது 'கல்யாணம் என்பது ஒரு மாய வலை.அந்த வலைக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே வர ஆசைபடுவர்கள்.உள்ளே இருப்பவர்கள் வெளியே போக ஆசைபடுவர்கள்'.

    உங்கள் மாணவன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  6. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .ரெண்டாவது சிரிப்பு ..என்ன இருந்தாலும் நமது நாட்டுக்காரன் புத்திசாலிதனதிற்கு ஈடு இணை இவனே ....

    ReplyDelete
  7. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!

    இரண்டுமே நன்றாக உள்ளது.நன்றி ஐயா!

    ReplyDelete
  8. சார் வணக்கம்,
    இரண்டும் நல்லாயிருந்தது, ஆனால் இந்தியருக்கு உயர்ந்த இடம் கொடுத்திருக்கிறது. அந்த இந்தியருக்கு புதன் குரு அது உச்சபெற்று கேந்திரம் பெற்றிருகிறதா இதில் எனக்கு சிரிப்புவரவில்லை. பாவம் என்ற எண்ணம்தான் தோன்றியது அந்த பெண்மணி அவரை ஆட்டி படைக்கிறார். வாத்தியாரு கடைசி வரி குத்து வரி சிரிப்பு வருது.ம் பொம்பளை போயி ஆம்பளையை அடிக்கலாம்மா. பாவம் அவரு.

    ReplyDelete
  9. இரண்டும் ஏற்கனவே படித்ததுதான். முக நூலில் பகிரப்பட்டது. இரண்டாவது நன்றாக உள்ளது

    ReplyDelete
  10. Dear subbiah veerappan sir,
    ha...ha...ha..thats funny. but 2nd one is more humorous than 1st one.

    ReplyDelete
  11. வணக்கம் குரு

    சவுக்கடி கதை நன்றாக இருந்தது. தெனாலிராமன் புத்திசாலிதனத்தை நினைவூட்டும் விதமாக உள்ளது.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  12. வணக்கம் சார்....
    1. மனைவியின் டார்சரை
    நாசூக்காக சொல்கிறார் !!
    2.சமயோசித புத்தி (புதன்வலிமையோ)
    2ம் சூப்பர் நகைச்சுவை !!!
    K.சக்திவேல்

    ReplyDelete
  13. ஐயா வணக்கம் தங்களுடைய சோதிட நுால்கள் மதுரையில் எங்கு கிடைக்கும் commentல தொிவியுங்கள் ஐயா உதவியாக இருக்கம் உங்களுடைய mail கும் அனுப்பி உள்ளேன் ஐயா உங்களுக்கு நேரம் போதாது அணைத்து mail கும் பதில் அளிக்க என்பதும் தொியும் இடம் சொன்னால் சென்று வாங்கிவிடுவேன் :-D

    ReplyDelete
  14. //////Blogger வேப்பிலை said...
    இப்போது தான் தெரிகிறது
    இன்றைய நாளில் ஏன்
    இந்தியாவில் பலர்
    இப்படி நீதிபதியாவதையே
    விரும்புவதில்லை என்று..
    விவரம் தெரிந்தவர்கள்
    கவர்னர்களாகிவிடுகின்றனர்
    கவர்ன்மென்ட் முயற்சியில்.../////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  15. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    இரண்டாவது.
    இந்த சிந்தனை தான் இந்தியரின் பரம்பரை சொத்து.
    நகைசுவைக்கு மிக்க நன்றி./////

    உண்மைதான். சகிப்புத்தன்மையும், நகைச்சுவை உணர்வும் இந்தியர்களின் பரம்பரை சொத்து!

    ReplyDelete
  16. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Could not control my laughter...
    Good jokes to relax my long day
    thanks a lot/////

    அப்படியா? நன்றி டல்லாஸ்காரரே!

    ReplyDelete
  17. //////Blogger Rajah M E said...
    the 2nd one is so fine, & it shows the basic brain trend of our Indians./////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. //////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    எனக்கு பிடித்தது முதல் நகைச்சுவை.என்னுடைய Project Manager அடிக்கடி சொல்வது 'கல்யாணம் என்பது ஒரு மாய வலை.அந்த வலைக்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே வர ஆசைபடுவர்கள்.உள்ளே இருப்பவர்கள் வெளியே போக ஆசைபடுவர்கள்'.
    உங்கள் மாணவன்,
    S .ரகுநாதன்/////

    ஆனாலும் தவிர்க்க முடியாதது. விதி விடாதே! விதி என்பது விதிக்கப்பட்டது!

    ReplyDelete
  19. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .ரெண்டாவது சிரிப்பு ..என்ன இருந்தாலும் நமது நாட்டுக்காரன் புத்திசாலிதனதிற்கு ஈடு இணை இவனே ..../////

    நல்லது. நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  20. /////Blogger kmr.krishnan said...
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
    இரண்டுமே நன்றாக உள்ளது.நன்றி ஐயா!/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  21. /////Blogger sundari said...
    சார் வணக்கம்,
    இரண்டும் நல்லாயிருந்தது, ஆனால் இந்தியருக்கு உயர்ந்த இடம் கொடுத்திருக்கிறது. அந்த இந்தியருக்கு புதன் குரு அது உச்சபெற்று கேந்திரம் பெற்றிருகிறதா இதில் எனக்கு சிரிப்புவரவில்லை. பாவம் என்ற எண்ணம்தான் தோன்றியது அந்த பெண்மணி அவரை ஆட்டி படைக்கிறார். வாத்தியாரு கடைசி வரி குத்து வரி சிரிப்பு வருது.ம் பொம்பளை போயி ஆம்பளையை அடிக்கலாம்மா. பாவம் அவரு./////

    ஆண்கள் அடிவாங்குவது அங்கங்கே இன்று நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் பாவப்பட ஒன்றும் இல்லை சகோதரி!

    ReplyDelete
  22. ////Blogger Kirupanandan A said...
    இரண்டும் ஏற்கனவே படித்ததுதான். முக நூலில் பகிரப்பட்டது. இரண்டாவது நன்றாக உள்ளது/////

    நான் என்னுடைய வாட்ஸ்அப் க்ரூப்பில் படித்தேன்.

    ReplyDelete
  23. /////Blogger Hari Haran said...
    Dear subbiah veerappan sir,
    ha...ha...ha..thats funny. but 2nd one is more humorous than 1st one.////

    ஆமாம். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஹரிஹரன்!

    ReplyDelete
  24. ////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு
    சவுக்கடி கதை நன்றாக இருந்தது. தெனாலிராமன் புத்திசாலிதனத்தை நினைவூட்டும் விதமாக உள்ளது.
    நன்றி
    செல்வம்////

    ஆமாம். புத்திசாலித்தனம் என்றால் நமக்குக் கண் முன்னே வந்து நிற்பது இருவர்:
    1. தெனாலி ராமன்
    2. பீர்பால்

    ReplyDelete
  25. ///Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்....
    1. மனைவியின் டார்சரை
    நாசூக்காக சொல்கிறார் !!
    2.சமயோசித புத்தி (புதன்வலிமையோ)
    2ம் சூப்பர் நகைச்சுவை !!!
    K.சக்திவேல்/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சக்திவேல்!

    ReplyDelete
  26. ////Blogger ravanan sanjay said...
    ஐயா வணக்கம் தங்களுடைய சோதிட நுால்கள் மதுரையில் எங்கு கிடைக்கும் commentல தொிவியுங்கள் ஐயா உதவியாக இருக்கம் உங்களுடைய mail கும் அனுப்பி உள்ளேன் ஐயா உங்களுக்கு நேரம் போதாது அணைத்து mail கும் பதில் அளிக்க என்பதும் தொியும் இடம் சொன்னால் சென்று வாங்கிவிடுவேன் :-D/////

    என்னுடைய ஜோதிடப் புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன. பொறுத்திருங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com