மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.8.14

வேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்?


வேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்?

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முருகப் பெருமானின் புகழ்பாடும் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ...)

நீரணிந்த நெற்றியுடன் ... நீங்காத பக்தியுடன்
காவடிகள் தூக்கி வர வேண்டும்
முருகன் சேவடியில் மாலையிட வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

ஏறுமயில் ஏறிவரும் ... வீரமகன் திருப்புகழை
காலமெல்லாம் பாடும் நிலை வேண்டும் 
பழநி கந்தன் அவன் கருணை செய்ய வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

எப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே
என்னை அவன் பார்த்திருக்கவேண்டும்
என் அன்னையென காத்திருக்க வேண்டும்
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... ).

பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன். 
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.8.14

Astrology: Popcorn Post: கேடு செய்யும் கேது மகா திசை!


Astrology: Popcorn Post: கேடு செய்யும் கேது மகா திசை!

Popcorn Post 51

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

மற்ற மகா திசைகளை விட, சனி, ராகு & கேது ஆகிய இயற்கையான தீய கிரகங்களின் மகா திசை மோசமானதாக இருக்கும். சனி 19 ஆண்டுகளும் ராகு 18 ஆண்டுகளும் தீயதாக இருக்கும் என்றாலும் அவற்றைவிட குறைந்த காலமே, அதாவது 7 ஆண்டுகளே உள்ள கேதுவின் திசை அதி மோசமானதாகும். 7 ஆண்டுகளில் போட்டுப் பார்த்துவிடுவார். எச்சரிக்கயாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குக் கேது மகாதிசை அநேகமாக வராது. சுமார் 93 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் கேது புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 2,520 நாட்கள் (7 ஆண்டுகள்) வரும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி கேது திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் சுக்கிர புத்தி, குரு புத்தி, புதன் புத்தி (மொத்தம் 3 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

கேது மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!


உதாரணத்திற்கு கேது மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கான பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

ஆமென்ற கேது திசை வருஷம் ஏழு
   அதனுடைய புத்தி நாள் நூற்றி நாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனை புகழக் கேளு
   புகழான அரசர்படை ஆய்தத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதி காணும்
   தனச் சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்கள் உண்டாம்
   நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================

27.8.14

Astrology: quiz 68: Answer: காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே


Astrology: quiz 68: Answer: காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே!

புதிர் எண் 68ற்கான விடை

27.8.2014
--------------------------------------
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால

பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
(கொடியிலே)

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

நல்ல பாடல்: அதற்காகப் பதிவிட்டுள்ளேன்!
----------------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. கல்வி நிலை பற்றி அலசி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவாரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை?
2. ஜாதகரின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகர் கஷ்டப்பட்டு பள்ளி இறுதியாண்டுவரை படித்தவர். அதாவது அந்தக் காலத்து SSLC
1. ஜாதகருக்கு அவருடைய  திருமணம் அவருடைய 28ஆவது வயதில் நடைபெற்றது. 

ஜாதகப்படி, அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.


ஜாதகம்

1. தனுசு லக்கின ஜாதகம். லக்கினாதிபதி நீசம். பயனில்லாத அமைப்பு
2. ஆனாலும் லக்கினாதிபதி 2ல் 11ஆம் அதிபதி (லாபாதிபதி) உடன் சேர்ந்திருப்பது ஆறுதல்
3. பாக்கிய ஸ்தானத்தில் சனி மற்றும் விரையாதிபதி (12th Lord) செவ்வாய் கூட்டாக சேர்ந்து உள்ளார்கள். கேடான அமைப்பு
4. ஆனால் அதே செவ்வாய் ஐந்தாம் இடத்திற்கும் அதிபதி. அவர் சிறந்த கோண வீட்டில் அமர்ந்துள்ளது நன்மையளிக்கும்.
5. நான்காம் வீட்டில் அஷ்டமாதிபதி சந்திரன் (8th Lord) அமர்ந்துள்ளார். கூடவே ராகுவும் உள்ளார். இருவராலும் அந்த வீடு பாழ்பட்டுள்ளது.
அத்துடன் அந்த வீட்டின் மேல் செவ்வாயின் பார்வையும் உள்ளது. சுகக் கேடு. கல்வித்தடை என்று எல்லாக் கோளாறுகளுக்கும் இடமளிக்கும் அமைப்பு. ஆனால் அந்த வீட்டுக்காரன் குரு, அந்த வீட்டுக்குப் பதினொன்றில் அமர்ந்துள்ளது நன்மையானது.
6. வித்யாகாரகன் புதன் 12ல் அமர்ந்துவிட்டான். அத்தோடு அஸ்தமனம் வேறு.
7. ஆனாலும் சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூவரும் அம்சத்தில் வலுவாக உள்ளார்கள்.
8. அம்சத்தில் குரு ஆட்சி பலத்துடன் தனது சொந்த வீட்டில் இருக்கிறார். ஆகவே அவர் ஜாதகனுக்கு உதவி செய்து பள்ளிப் படிப்பை முடிக்க வைத்தார்
10. அதேபோல சந்திரனும் ராகுவை உதறிவிட்டு நவாம்சத்தில் தனித்து இருக்கிறார். சுக்கிரனும் அம்சத்தில் அம்ச லக்கினத்தில் இருந்து 7ஆம் வீட்டைப் பார்க்கிறார்
6. 7ஆம் அதிபதி புதனும், பாக்கியாதிபதி சூரியனும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். அதே போல லக்கினாதிபதியும், களத்திரகாரகனும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஆகவே திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இல்லை இது. திருமணம் நடக்க வேண்டும். நடந்தது. சுக்கிர  திசை புதன் புத்தியில் திருமணம் நடந்தது.

நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம் (Magnified version of a rasi) ஒரு கிரகம் ராசியில் நீசம் பெற்று இருந்தாலும், அம்சத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் அதைத்தான் அந்தக் கிரகத்தின் உண்மையான நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
----------------------------------------
போட்டியில் மொத்தம் 31 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அவர்களில் 18 பேர்கள் மட்டும் இரண்டு கேள்விகளுக்கும் உரிய பதில்களை எழுதியுள்ளார்கள். அதில் சில ஒட்டி எழுதப்பட்டுள்ளது. ஆனால் உறுதியாக எழுதப்படவில்லை.
எழுதும்போது திருமணம் ஆனாவர் அல்லது ஆகாதவர் என்று தெளிவாக எழுத வேண்டாமா? இருக்கலாம் என்று ஏன் எழுதுகிறீர்கள்?
அதுபோல படிப்பைக் குறிப்பிடும்போது ஆரம்பக் கல்வி என்று சிலர் எழுதியுள்ளார்கள்.
ஆரம்பக் கல்வி என்றால் 5 ஆம் வகுப்பு வரை (Elementary school level)
பத்தாம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு என்றால் பள்ளி இறுதியாண்டு வரை(higher secondary school)
இனிமேல் அவ்வாறு குறிப்பிட்டு எழுதினால் மட்டுமே விடைகள் தேர்வாகும்
சரியாக எழுதியவர்களுக்கும் ஒட்டி எழுதியவர்களுக்கும் எனது மனம்  பாராட்டுக்கள்.
பாராட்டுப் பெற்றவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.
மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
1
//////Blogger rm srithar said...
    Respected Sir,
    Education:-
    He not complete his education, only Lower Basic level.
    Reason:- 4th house In charge Ju is in Neecham.
    Marriage:- He got married in between Year of 1967 to 1968.
    But marriage life is not success may be separation or widow.
    Reson:- 7th House Me is in 12th House.
    Regards
    Rm.srithar
    Tuesday, August 26, 2014 8:12:00 AM/////

what is meant by lower basic level?
----------------------------------------------------------
2
////Blogger Prakash Kumar said...
    Respected Sir,
    Jagathakar DOB:Dec 1 1949 7.50 AM (chennai).Meena Rasi, Danusu laganam.
    Education: 6 to 8th vathu varai padithirupar.
    Kalvikaragan bhudhan 12il, viraijaythi chevvai in parvai 4il athudan 4il ragahu veru. guru or bhudhan not aspecting 4th house.
    4il amarngatha chandran- Kemadurma (avayogam).Poor. (Kutti sukuran padikka vidathu -vathiyyar lesssons)
    padipu thadai pettru irukalam, 12il ulla bhu-aditya yogam+ Laganthiruku iruppakamum subarkal, jagathakaruku ethaiyum elithail kattrukollum arivai koduthirparkal. vivasayam seipavaraga irupar.
    Marriage: 24th vayathil or missing that change will be marrried at the age of 31 (marriage nadanthirukalam)
    Kalathirakaran sukaran, laganathipathi guru 2il, 7th house owner antha vettriuku 6il amaranthanlum, jagatharuku nadai pettra sukura dasa guru bhudhi il (71/2 sani vidaipettra pothu -Kudampathi pathi yum avera. so may be) or bhudhan bhudhi il marriage might have happpened (Kochara guru 7il irukumpothu).
    7th house owner getting aspect of Chevvai may delay the marriage.
    Puthisali manaivi kidaithirupar.
    Manaivi sollupechu kettu kalam thalli kondurupar.
    Tuesday, August 26, 2014 9:04:00 AM//////

இருக்கலாம் என்ற ஈரெட்டான பதில் எதற்கு?
உறுதியான பதிலை எழுத வேண்டாமா?
--------------------------------------------------------------
3
//////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    ஜாதகர் பள்ளி படிப்பு வரை முடிதிருக்கவே வாய்ப்பு உள்ளது. காரணம் நான்கிற்குடைய குரு நீச்சம், கல்விகாரகன் புதன் அஸ்தமனம், கல்விகாரகனுக்கும் நான்காமிடதிற்கும் செவ்வாய் பார்வை, நான்கில் ரகு சந்திரன் கூட்டணி அதனால் மனக்காரகன் கெட்டான், சந்திரன் அட்டமாதியனதால் நான்கில் அமர்ந்தது சரியல்ல மற்றும் தனுசு லக்ன வில்லன் சுக்கிரன் குருவோடு இணைந்ததும் சரியல்ல.
    திருமணம் சற்று தாமதமாக 31 வயதில் நடந்திருக்கும். காரணங்கள் ஏழாம் அதிபதி புதன் லக்னதிர்க்கு12இல் அத்துடன் அஸ்தமனம், பாக்கியாதிபதி சூரியனும் 12இல் மறைவு, குடும்பாதிபதி சனி செவ்வாயோடு சேர்கை, சுக ஸ்தானத்தில் ராகு.
    நன்றி
    செல்வம்
    Tuesday, August 26, 2014 9:11:00 AM/////
-----------------------------------------------------------------
 
5  
/////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    1.) Lagnadhipathy & 4-m adhipathy Guru Neecham + Maandhi.
    2.) Asthamadhibathy chandran 4-il + Raghu and Kedhu Paarvai.
    3.) 12-m adhipathy chevvai paarvai 4-il.
    4.) 12 vayadhil Sukhra Dhasa (Kutti sukhran kootti kedukkum)
    Jadhagar 6 - 8-m vaguppu padhithirundhal periya visayam. Degree kalvi karkkum amaippu illai.
    5.) 7-m adhipathy Budhan 12-il and avaradhu veetirku 6-il Mosamana amaippu.
    6.) 5-m adhipathy chevvai 7-m adhipathy budhanai than special paarvai 4-m paarvayaga parkiraar. Guru + Sukhran kootani adhanal Jadhagar Love marriage seidhiruppar. Sukhra dhasavil thirumanam nadadhirukkum. 12-m adhipathy and 9-m adhibathy parivardhanai (Indha parivardhanai nalla parivardhanai illai.) Neenda kaalam nilaitha thirumana valkai illai. Thirumana vaalkai konja kalamdhan. soorya dhasa guru bukthi-il jadhagarin manaivi irandhiruppar.
    Thank You.
    Tuesday, August 26, 2014 9:38:00 AM/////
------------------------------------------------------
 6  
//////Blogger bg said...
    Date of birth : Dec 1 1949
    App time : 8.50 a.m.
    Education
    4 th house occupied by Moon and Rahu, 4 th lord JU in debility
    Both are not favourable positions.
    Karaka ME in 12 th house also not good for education.
    Less chance for higher education.
    Marriage
    7 th lord associate with Sun in the 12 th house.
    Marriage may take place during Sun disha.
    Tuesday, August 26, 2014 10:42:00 AM///////
--------------------------------------------------------
7
///////Blogger sundar said...
    since chandran(8thlord)+Raghu in 4 th place and guru neecham+sukran+
    manthi in 2 nd place and puthan in 12 th place..he cannot continue his studies in school itself...but sooriyan+puthan combination he is talent or legend in some areas beyond education..
    2.7 th lord in 12th place along sooriyan reveals ..he will get marry very late..(sukran+manthi+neecha guru) also reveals this.
    Tuesday, August 26, 2014 10:46:00 AM/////
--------------------------------------------------------
8
////////Blogger amuthavel murugesan said...
    மதிப்பிற்குற்ய ஐயா,
    புதிர் தொடர் - பகுதி அறுபத்தியெட்டுக்கான பதில்
    1.புடிப்பு - படிப்பைப் பாதியில் விட்டவர்- 4ல் ராகு மற்றும் செவ்வாயின்
    5 ஆம் பார்வை 4 ஆம் வீட்டின் மீது.5 ஆம் இடத்து அதிபதி 12ல்
    சிறு வயது சுக்கிரதிசை
    2.ஜாதகருக்கு திருமணம் :திருமணம் நடைபெற்று இருக்கும்.
    சுக்கிரன் வர்கோத்மம் பெற்று உள்ளது.
    சுக்கிரனும் குருவும் 2ல் இருப்பது.
    இப்படிக்கு
    மு.சாந்தி
    Tuesday, August 26, 2014 11:51:00 AM///////

பாதியில் என்றால் எந்த வகுப்பு வரை?
----------------------------------------------------------------
9
///////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    1).ஜாதகர் பள்ளி இறுதி வகுப்பை தாண்டி இருக்க மாட்டார்.
    2).திருமணம் நடந்து இருக்கும்.27 வயதிற்க்கு மேல் சுக்கிரன் தசையில் புதன் புக்தியில் நடந்திருக்கும்.
    அலசல்:
    லக்கினம், நான்காம் அதிபதி குரு 2ல் நீச்சம்.6,11 க்குடைய சுக்கிரனுடனும் மாந்தியுடனும் சேர்க்கை.வித்யா காரகன் புதன் 12ல் மறைவு.பக்கியாதிபதியான சூரியனின் சேர்க்கை.9ல் இருக்கும் செவ்வாயின் பார்வை.
    குரு அமர்ந்த வீட்டதிபதி சனி லக்கினத்திற்க்கு 9ல் அமர்வு,நீச்சபங்கமடந்துள்ளது.
    குரு,சுக்கிரன் சேர்க்கை 2ல் நிபுணத்துவத்தை தந்தாலும் உடன் இருக்கும் மாந்தியின் சேர்க்கை யோகத்தை கெடுத்து விட்டது.
    நாலில் அமர்ந்த சந்திரனும் ராகுவின் சேர்க்கை மற்றும் கேதுவின் பார்வையும் பள்ளி இறுதி வகுப்பையும் தாண்ட முடியாதவாறு செய்துள்ளது.
    2).களத்திராதிபதி புதன் 12ல் மறைந்து பாக்கியாதிபதி சூரியனுடன் சேர்க்கை.கூடவே 9ல் இருக்கும் செவ்வாயின் பார்வை.சூரியன் வர்க்கோத்தமம்.
    களத்திரகாரகன் சுக்கிரன் வர்க்கோத்தமும் பெற்று, நவாம்சத்தில் களத்திராதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றதும் ஜாதகருக்கு திருமணத்தை நடத்திவைத்துள்ளது.
    3).லக்னாதிபதி குரு, குடும்பஸ்தானத்தில் அமர்ந்து, நீச்ச பங்கம் அடைந்ததுடன்,குடும்ப காரகனாகவும் உள்ளார். களத்திரகாரகனுடன் சேர்க்கை பலம் திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும்.
    =பொன்னுசாமி.
    Tuesday, August 26, 2014 1:16:00 PM///////
---------------------------------------------------------
10
//////Blogger murali krishna g said...
    ஜாதகர் மீன ராசி . ரேவதி நட்சத்திரம். தனுசு லக்னம். ராசி மற்றும் லக்னாதிபதி குரு 2-ல் நீசம். மாந்தி மற்றும் அசுர குரு சுக்கிரனுடன் கூட்டணி. 9-ல் சனி செவ்வாய்.
    1) ஜாதகர் பள்ளி படிப்பை முடித்து இருந்தால் ஆச்சரியம் தான். பள்ளி படிப்போடு கல்வி தடை. கல்லூரி சென்று இருக்க மாட்டார் !.
    காரணங்கள் : (1) கல்வி காரகன் குரு நீசம்.
    (2) குரு மாந்தியோடும் சுக்கிரனோடும் கூட்டணி !
    (3) நான்காம் அதிபதியும் குருவே !. அவர் நீசம் !
    (4) நான்காம் இடத்தில் சந்திரனும் ராகுவும் கூட்டணி !. சர்ப்ப தோஷம் ! நான்காம் வீடு
    கெட்டு விட்டது !
    (5) புத ஆதித்ய யோகம் இருந்தாலும் அது விரய ஸ்தானத்தில் ! பலன் அளிக்கவில்லை !
    2) ஜாதகருக்கு திருமணம் நிச்சயம் உண்டு ! காதல் கலப்பு திருமணம் ! .
    காரணங்கள் : 1) சனி செவ்வாய் 9-ல் கூட்டணி.
    2) ராகுவுக்கு செவ்வாய் பார்வை !
    3) சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் குருவுடன் கூட்டணி !
    4) ஏழாம் இட பரல்கள் 31.
    5) புதன் விரய ஸ்தானத்தில் அஸ்தமனம் ஆகி இருந்தாலும் அவர் நட்சத்திர அதிபதி . அதனால் திருமணத்தை களத்தீரக்கார்கன் சுக்கிர தசையில் புதன் புக்தியில் நடத்தி முடித்தான் !.
    Tuesday, August 26, 2014 1:18:00 PM///////
--------------------------------------------------------------
11
///////Blogger S.Namasu said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா:
    ஜோதிட புதிர் போட்டி எண் 68ற்கான எனது கணிப்பு:-
    1.ஜாதகர் பள்ளி படிப்பு வரை பயின்று இருப்பார்.
    *தனுசு லக்கனம், மீன ராசி, லக்கன மற்றும் 4மிட (கல்வி ஸ்தானம்)அதிபதி "குரு" 2மிடத்தில் "நீசம்"[ஆனால் நவாம்சத்தில் ஆட்சி]உடன் 6&11 மிட அதிபதி "சுக்கிரன்" மற்றும் "மாந்தி" உள்ளனர்.
    *கல்வி ஸ்தானத்தில் 8மிட அதிபதி "சந்திரன்" மற்றும் "ராகு" உள்ளனர்.மேலும் செவ்வாயின் 8ம் பார்வையையும், கேதுவின் 7ம் பார்வையையும் பெறுகின்றது.
    *கல்வி காரகன் "புதன்" 12மறைந்துள்ளார். உடன் "சூரியன்" இருப்பதனால் "புதஆதித்திய" யோகமாகிறது. புத்திசாலியாக இருப்பார்.
    *11வ:11மா:29நா வயதிற்கு மேல் சுக்கிர தசையினால் (குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும்) படிப்பு பள்ளியோடு முடிந்திருக்கும்.
    2.ஜாதகருக்கு (27வ:11மா:29நா - 30வ:09மா:29நா வயதில்) திருமணம் நடந்திருக்கும்.
    *7மிட அதிபதி "புதன்" 12ல் 9மிட அதிபதி "சூரியனுடன்" இனைந்து மறைந்துள்ளார். (9&10 ம் ஆவதால் "தர்மகர்மதிபதி யோகம்)
    *7ம் மிடம் எந்த கிரக பார்வையையும் பெறவில்லை.
    *களத்திர காரகன் "சுக்கிரன்" 2ம்மிடத்தில் மாந்தி& லக்கன அதிபதி குருவுடன் சேர்ந்துள்ளார்.
    *சுக்கிரன் வர்தகோமம் (ராசி மற்றும் அம்சத்தில் ஒரே வீடு)ஆகியுள்ளார்.
    * எனவே ஜாதகரின் சுக்கிர தசை புதன் புத்தியில்(27வ:11மா:29நா - 30வ:09மா:29நா வயதில்)திருமணம் நடந்திருக்கும்.
    உபரிகை
    *2மிடத்தில் மாந்தி உள்ளதனால் குடும்ப வாழ்க்கை சுமாராகத்தான் இருக்கும்.
    *2,6,10 மிடத்தின் ஆதிக்கத்தால் இது தன ஜாதகம்.
    சுபம்.
    Tuesday, August 26, 2014 1:39:00 PM//////
----------------------------------------------------------------------
12
//////Blogger valli rajan said...
    Guruji,
    1. Wanning moon in 4 house good but with rahu not favorable.
    2.4 lord in 2nd house with mandi.
    3. mercury in 12 house.
    4. mars aspect in 4 house.
    5. 5th lord in 9th house.
    He is moderately educated but will have keen intelligence.
    Marraige life.
    1. 7 lord and 9 lord in 12 house.
    2. 2nd lord in 9th house.
    3. Guru and venus in 2nd house good but mandi in 2 house will give in fight in family.
    4. mercury in 12th house is not good as per your recent posting.
    5. venus in vargothamam. Jupiter in good poistion in navamsa.
    There is marraige in sukara dasa and mercury sub period.
    Tuesday, August 26, 2014 2:53:00 PM//////
--------------------------------------------------------
13
/////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!!
    புதிர் எண்: 68 இற்கான பதில்
    அன்பர்: தனுசு லக்கினம், லக்கினாதிபதி குரு 2இல் நீசம், உடன் ஆறாம்அதிபதி சுக்கரன், மாந்தி. குரு நீச்சமாக இருந்தாலும் அம்சத்தில் ஆட்சி. கல்விஸ்தானத்தில் எட்டாம்அதிபதி சந்திரன், மற்றும் ராகு. கல்விகாரகன் புதன் சூரியனுடன் இணைந்து நிபுணத்துவம் தந்தாலும் இவர்கள் இருப்பதோ 12இல் ( மறைவுஸ்தானத்தில்). ஆகவே இந்த ஜாதகர் மிகுந்த சிரமத்துடன் பள்ளிப்படிப்பை முடிக்கலாம். அதற்கு மேல் படிக்க வந்த கேது, சுக்கர திசைகள் கைகொடுக்காது. தடைபட்ட கல்வி. உயர்கல்வி பெறவில்லை.
    களத்திரகாரகன் சுக்கரன் சனி வீட்டில் ( நட்பு வீட்டில்). உடன் லக்கினாதிபதி குரு. ஏழாம்அதிபதி புதன் 12 இல் மறைவு. இருந்தாலும் ஜாதருக்கு சுக்கர திசை புதன் புத்தி 28 ஆம் வயதில் தொடங்கி 31 ஆம் வயது வரை உள்ளது. அன்றைய கோள்சார ரீதியில் பார்த்தால் 29 - 30 ஆம் வயதில் திருமணம் நடை பெற அதிக வாய்ப்புள்ளது.
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, August 26, 2014 5:40:00 PM//////
-------------------------------------------------------
14
//////Blogger Srinivas said...
    The native is born on 1/Dec/1949 at around 8:58am, considering chennai as birth place.
    1. Lagnathipathi Guru is in 2nd house along with 6th and 11th house lord Sukran and also maandhi.
    Lagnathipathi is neecham.
    2. Bagyathipathi Sun is in 12th house along with 7th and 10th house lord Budhan. 5th lord Chevvai and 9th lord Sun are in
    parivathanai. 5th lord Chevvai is aspecting Sun and Budhan.
    3. Saturn and Chevvai combination in 9th house which will lead to intermittent issues in native's life.
    Education:
    a. 4th house lord Jupiter is neecham and is in 2nd house along with 6th house lord Sukran and maandhi.
    b. Budhan is in 12th house along with Sun and is combust. Budhan is aspected by 5th house lord chevvai.
    c. Valarpirai chandran is in 4th house along with rahu and this will lead to confused state of mind.
    Chandran is the 8th house lord.
    d. 5th lord chevvai (functionally benefic) is aspecting the 4th house.
    Considering all the above aspects, the native wouldn't have studied very well. He would have struggled to complete
    the degree itself.
    Marriage:
    1. Sukran is the 6th house lord and is in 2nd house along with neecha lagnathipathi and maandhi. So second house is also
    affected.
    2. 7th lord is budhan and it is combust and is in 12th house along with Sun.Though the the combination of
    9th house lord and 7th/10th lord forms a raja yoga, the native will not receive its benefit fully as the combination
    is in 12th house.
    3. 2nd house lord Sani is in 9th house along with 5th lord Chevvai.
    Considering all the above aspects, the native would have delay in getting married. The native would have got married in the end of the
    sukra dasa (in budhan budhi possibly) or in the surya dasa. The marriage would have been problematic.
    Regards,
    Srinivasan.
    Tuesday, August 26, 2014 5:52:00 PM/////
-------------------------------------------------------------
15  
//////Blogger kmr.krishnan said...
    ஜாதகர் 1 டிசம்பர் 1949 அன்று காலை 9மணி 0 நிமிடம் 15 வினாடிக்குப்பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    நானும் 1949ல் பிறந்தவன் ஆனதால், சனி, குரு ராகு கேது இருக்கும் இடங்களைப் பார்த்தவுடனேயே 1949ல் பிறந்தவர் என்பது புரிந்துவிட்டது. அதன் பின்னர் ஜாதகத்தை தசாஇருப்புக்கு ஏற்ப ஃபைன் ட்யூனிங் செய்ய 5 நிமிடமே ஆனது.
    4ம் இடத்து அதிபதி குரு ஆனதால் ஜாதகர் படிக்க வேண்டும். ஆனால் அவர் 2ல் நீசம் அடைந்து மாந்தியுடன் கூட இருக்கிறார். மேலும் சுக்கிரன் ஆறாம் வீட்டு அதிபதி. அவருடன் 4ம் அதிபதி நிற்பதும் கல்வியினை பாதித்துவிட்டது.
    படிப்புக்கான காரகன் புதன் தன் விட்டுக்கு ஆறிலும்,சூரியனால் அஸ்தங்கதம் அடைந்ததும் 12ல் மறைந்ததும் படிப்புக்கு உதவியாக இருக்காது.
    எட்டாம் வீட்டு அதிபதி சந்திரன் 4ல் சென்று அமர்ந்ததும் அவரோடுகூட ராகு அமர்ந்ததும் படிப்புக்கு உதவவில்லை.
    5வயதுமுதல் 12 வயது வரை கேதுதசா. எல்லாவகையிலும் தடங்கல்தான்.
    பள்ளிப்படிப்பை முடிப்பதே கடினம்தான். ஆரம்பப்பள்ளிப் படிப்பை முடித்திருப்பார்.அவ்வளவுதான்.
    திருமணம்: ஏழாம் வீட்டு அதிபதி புதன் 12ல் மறைந்து சூரியனால் எரிக்கப்பட்டு விட்டார்.களத்திரகாரகன் சுக்கிரன் இரண்டில் மாந்தியுடன் கூட்டணி.எனவே தாமதத் திருமணம். சுக்ரதசா புத புக்தியில்31,32 வயதில் திருமணம்.
    Tuesday, August 26, 2014 9:18:00 PM//////

ஆரம்பப்பள்ளி என்றால் எதுவரை சுவாமி?
-----------------------------------------------------------
16
//////Blogger Narayanan V said...
    வணக்கம் ஜயா
    புதிர் எண் 68 கான விடை
    கல்வி நிலை
    1) லக்னாதிபதியான குரு(கல்விகாரகனும் கூட) 2ல் மாந்தி யுடன் சேர்க்கை, லக்னாத்தின் பாபகர்த்தாரி யோகம், 4ல் ராகு எல்லாம் சேர்ந்து பள்ளி படிப்புடன் கண்டிப்பாக காலி ஆகி இருக்கும்.
    கல்யாணம்
    2) 7ம் வீட்டு காரன் 12 ல் மறைவு, காரகன் சுக்கிரன் மாந்தி சேர்க்கை, இருந்தாலும் நவாம்சத்தில் சுக்கிரன் வர்கோத்தம் ஆகியிருப்பதால் கண்டிப்பாக சுக்கிரதிசையில் கல்யாணம் ஆகி இருக்கும்
    நாராயணன், புதுச்சேரி
    Tuesday, August 26, 2014 9:28:00 PM/////

பள்ளிப் படிப்பு என்றால் எந்த வகுப்பு வரை என்பதை எழுத வேண்டாமா?
------------------------------------------------------------
17
//////Blogger sivaradjane said...
    1. ஜாதகரின் 4 ம் வீட்டில் 8ம் அதிபதி சந்திரன்,உடன் ராகு.4 ம் அதிபர் குரு நீசன்,உடன் 6 ம் அதிபர் சுக்கிரன் சேர்க்கை.4 ம் வீட்டிற்கு செவ்வாயின் பார்வை. எனவே ஜாதகர் ஆரம்ப கல்வியோடு படிப்பை நிறுத்தியிருப்பார்.
    2.7 அதிபதியும் ,பாக்யாதிபதி சூரியனும் 12 ல் மறைவு.7ம் அதிபதி புதனுக்கு செவ்வாயின் 4ம் பார்வை.
    லக்னாதிபதி குரு 2ல் நீசம் ,உடன் களத்திரகாரனும் 6 ம் அதிபதியுமாகிய சுக்கிரன்.
    ஆனால் அம்சத்தில் களத்திரகாரகன் சுக்கிரனுடன் 7ம் அதிபன் ’புதன் சேர்க்கை.சுக்கிரன் வர்கோத்தமமாகி வலுவில் உள்ளார். குருவும் அம்சத்தில் ஆட்சியில் உள்ளார். சனி,செவ்வாய் சேர்க்கை உள்ளதால் தாமத திருமணம். 32 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும். ஆனால் குடும்ப வாழ்க்கை மகிழ்சியாய் இருந்திருக்காது. பிரிந்திருக்கக் கூடும்.
    Sivarajan
    (pondicherry)
    Wednesday, August 27, 2014 1:19:00 AM///////

ஆரம்பக்கல்வி என்றால் எந்த வகுப்பு வரை?
-------------------------------------------------------------
18
////// Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதியும் 4ம் வீட்டு அதிபதியுமான குரு 2ம் வீட்டில். ஆனால் உடன் மாந்தி. கல்விகாரகர் புதன் இலக்கினத்திற்கு 12ல், ஆனால் 4ம் வீட்டிற்கு 9ல். நவாம்சத்தில் 4ம் வீட்டு குரு ஆட்சி. 4ல் இராகு இருப்பது சிறப்பல்ல. பட்டப்படிப்பிற்கு வாய்ப்பில்லை. பள்ளிப் படிப்போடு கல்வி முடிந்திருக்கும்.

    குடும்ப ஸ்தானத்தில் மாந்தி இருப்பது சிறப்பில்லை. களத்திரகாரகரும் மாந்தியுடன் இருக்கிறார். 7ம் வீட்டு புதன் இலக்கினத்திற்கு 12ல், 7ம் வீட்டிற்கு 6ல். உடன் பாக்கியாதிபதி சூரியன் இருப்பது நல்லதே. ஆனால் அவரும் இலக்கினத்திற்கு 12ல் மறைந்து விட்டார். செவ்வாயின் பார்வை 7ம் வீட்டு அதிபதியின் மேல் படுகிறது. மன காரகர் சந்திரனும் இராகுவுடன் கூட்டணியில் இருக்கிறார். மன வேதனைகளும் குழப்பங்களும் நிறைந்திருக்கும். திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் என்றே தோன்றுகிறது. குடும்பகாரகரும் களத்திரகாரகரும் 2ம் வீட்டில் இருப்பதால், சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கலாம், ஆனால் நிலைத்திருக்காது.
    Wednesday, August 27, 2014 2:54:00 AM///////

எதற்காக 2 விதமான பதில்கள்? தோன்றுகிறது, நடந்திருக்கலாம் என்றெல்லாம்  எழுதாமல் உறுதியான பதிலை எழுதுங்கள் பாண்டியரே!
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.8.14

Astrology: quiz.68: மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்?


Astrology: quiz.68: மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்?

Quiz No.68: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தியெட்டு

26.8.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு ஒரு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.



1. கல்வி நிலை பற்றி அலசி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை? போன்றவற்றை அலசி எழுதுங்கள்!

2. ஜாதகரின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.8.14

Humour: நகைச்சுவை: காதலிக்கு ஓர் கடிதம்!


Humour: நகைச்சுவை: காதலிக்கு ஓர் கடிதம்!

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பாருங்கள். லாஜிக் பார்க்காதீர்கள்
-------------------------------------------------------------------------------
1
விமான நிலையத்துக்கு பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.
       
"ஸார்...! பாராசூட்டுகளை வாங்கிட்டு போங்க விமானம் திடீரென விபத்தில சிக்கும் போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்....!"

ஓரு பயணி நின்றார்.

"பாராசூட் என்ன விலை?"

"இரண்டாயிரம் ரூபாய் ஸார்."

"சரி ... வாங்கிக்கிறேன்... விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து குதிக்கும் போது அது ஓரு வேளை விரியலைன்னா..?"

"``பணம் வாபஸ் ஸார்"

ஹி ஹி ஹி புத்திசாலி வியாபாரி...
---------------------------------------------------------------
2
கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார், ''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''

வாலி சொன்னார், ''ராமாயணத்திலே,வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்"

அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார், ''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?''

வாலி சிரித்துக் கொண்டே, ''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.
---------------------------------------------------------------
3
இன்டர்வியூக்களை எப்படி சமாளிப்பது?

நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா... நீங்க என்ன பண்ணுவீங்க?

"தெரியாதுன்னு " சொல்வீங்க..! அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம அதை சமாளிக்கறது எப்படின்னு தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..

அது Very Simple..

" If You can't Convince them..Then.. Try to Confuse Them..! "

இப்ப உதாரணத்துக்கு.

Question No.1 :

" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

" அலக்சாண்டர் குதிரை பேரா..?

”அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?! கருப்பா., வால் குட்டையா இருந்ததே அதுவா..?
வெள்ளை கலர்ல மூக்குல மட்டும் கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..? இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

"பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல கண்டுபிடிச்சவர் யாரு..? "

”அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி சொன்னவரு கிரேக்க மேதை "ஆல்பர்டோ பெர்ணாண்டஸ். Unfortunately அவரு பூமி Clock Wise-ல சுத்துதுன்னு சொல்லிட்டாரு..”

??!!?

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "

( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

இப்படிதான் இன்டர்வியூல கேக்கற கேள்விக்கு.. டக் டக்னு பதில் சொல்லணும்.. புரியுதுங்களா.?!
பின்ன.., அவங்க மட்டும் நமக்கு தெரியாத கேள்வியை கேக்கலாம்.. நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத பதிலை சொல்ல கூடாதா..?! —
---------------------------------------------------------------
4
காதலிக்கு ஓர் கடிதம்!

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்றமுடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.

மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்.

வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.

கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல்
இறையருளால் தப்பித்த உன்னுடைய,
முன்னாள் காதலன்
===============================================================
எல்லாம் சொந்த சரக்கல்ல. இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். இந்த 4ல் எது மிகவும் நன்றாக உள்ளது என்பதைச் சொல்லுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.8.14

எதை எதை அவன் கொடுத்தான்!


எதை எதை அவன் கொடுத்தான்!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகன் பாடலொன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------
ஞானம் கொடுத்தான் ... மிக நல்லதெல்லாம் கொடுத்தான்
ஞானம் கொடுத்தான் ... மிக நல்லதெல்லாம் கொடுத்தான்
கானம் தொடுக்க எந்தன் ... கவிதைக்கு உயிர் கொடுத்தான் 

குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
ஆவினன்குடியில் வீற்றிருக்கும் அழகனவன் 
(ஞானம் கொடுத்தான் ... )

பானம் கொடுத்தான் ... அதில் பாலொடுதேன் மடுத்தான்
அமுத ... பானம் கொடுத்தான் ... அதில் பாலொடுதேன் மடுத்தான்
பஞ்சாமிருதம் கொடுத்தான் ... நெஞ்சாரவே நிலைத்தான் 

குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
பேரன்பு வடிவாக வந்த அமரனவன்
(ஞானம் கொடுத்தான் ... )

மோனம் கொடுத்தான் ... என்னை முற்றும் நான் உணர
முன்னே வேல் விடுத்தான் ... பின்னே மயில் தொடர
ஆனமட்டும் எனக்கு ... அறிவுறைகள் கொடுத்தான் - குமரன்
ஆனமட்டும் எனக்கு ... அறிவுறைகள் கொடுத்தான்
ஆறெழுத்தை ஓதி ... ஆறுதலைக் கொடுத்தான் 

குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
என்னை சந்ததமும் காத்து நிற்கும் கந்தன் குகன் 
(ஞானம் கொடுத்தான் ... )

கானம் தொடுக்க ... எந்தன் கவிதைக்கு உயிர் கொடுத்தான்
(ஞானம் கொடுத்தான் ... ).

பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்.
------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

21.8.14

நகைச்சுவை: ராதா ராதாதான்!


நகைச்சுவை: ராதா ராதாதான்!

அனைவருக்கும் காலை வணக்கம்!

நடிகவேள். M.R ராதா அவர்களின் குரல் வளம். வார்த்தைகளை ஏற்றி இறக்கிப் பேசும் திறமை, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை அனைவரும் அறிவோம்.

நீங்கள் பார்த்து ரசிக்க இன்று அவருடைய இரண்டு காணொளிகளை இத்துடன் இணைத்துள்ளேன். ஒவ்வொன்றும் சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடியதுதான்.

அனைவரையும் பார்த்து ரசிக்க வேண்டுகிறேன்

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------------
1

2

========================================================================
உபரி: நகைச்சுவை காட்சிகள்!
1


2

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

20.8.14

Astrology: Popcorn Post No.50: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?


Astrology: Popcorn Post No.50: புத்தியுள்ள மனிதரெல்லாம் என்ன செய்வார்கள்?

பாப்கார்ன் போஸ்ட் எண்: 50

”புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை”

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் அசத்தலாகச் சொல்லிவிட்டுப் போனார். முழுப்பாடலையும், உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். பிறகு படித்துப் பாருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்!

வெற்றி, தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள். எல்லோரும், எல்லா நேரத்திலும் வெற்றி பெறமுடியாது. அதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ஒத்து வரவேண்டும். ஆகவே புத்தியை வெற்றி தோல்விக் கண்ணோட்டத்தில் மறந்துவிட்டுப் பாருங்கள். புத்தி அவசியம். புத்தி இல்லாத மனிதனை யார்தான் விரும்புவார்கள்? அதைச் சொல்லுங்கள்.

ஜாதகத்தில் குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களும் எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமான கிரகமாகும். புதன் தனித்து, அதாவது தீயகிரகங்கள் எதுவுடனும் சேராமல், அல்லது தீயகிரகங்களின் பார்வை பெறாமல் தனித்து இருந்தால் அது சுபக்கிரகமாகும். அத்துடன் அது கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.

புதன், சுக்கிரனுடன் சேர்ந்தால், அது ஜாதகனுக்கு நிபுனத்துவத்தைக் கொடுக்கும். ஜாதகன் ஆக்க வழியில் செயல்பட்டுப் பேரும் புகழும் அடைவான். அதே புதன், சனியுடன் சேர்ந்திருந்தால் ஜாதகனின் புத்தி எதிர்மறையான வேலைகளைச் செய்யும். அந்த மேட்டர்களில் ஜாதகன் கெட்டிக்காரனாக இருப்பான்.

லக்கினம் அல்லது 7ம் வீட்டில் இருக்கும் புதன் ஜாதகனுக்கு நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். ஆழ்ந்து படிப்பதெல்லாம் நினைவில் நிற்கும் சாமிகளா!

சரி நம்ம முனிசாமி, அதாவது நமது முனிவர்கள் புதனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்?

சொல்லுகிறேன் இருமூன்று ஈராறெட்டும்
   சுகமில்லை ஜென்மனுக்கு குய்யரோகம்
சொல்லுகிறேன் செம்பொன்னும் கணைக்கால்துன்பம்
   சுற்றத்தார் மனமுறிவர் அரிட்டஞ்செப்பு
சொல்லுகிறேன் கேந்திரமும் கோணம் நன்று
   சுகமாக வாழ்ந்திருப்பான் காடியுள்ளோன்
சொல்லுகிறேன் சுயகவிதை மாமன்விருத்தி
   சொர்ண நிலமுள்ளவனாம் கூறே!
- புலிப்பாணி

இருமூன்று ஈராறெட்டும் = 6, 12, & 8 ஆம் இடங்கள் சுகமில்லை என்கிறார். Not useful என்கிறார்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை
(புத்தியுள்ள) 

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

(புத்தியுள்ள) 

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

(புத்தியுள்ள) 

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : R சுதர்சனம்
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.8.14

Astrology: quiz 67: Answer: தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு


Astrology: quiz 67: Answer: தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

புதிர் எண் 67ற்கான விடை

19.8.2014

நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. கல்வி நிலை பற்றி அலசி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவாரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை?
2. ஜாதகரின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகர் பட்டப் படிப்பு படித்தவர்.
2. ஜாதகருக்கு அவருடைய  திருமணம் தாமதமாக அவருடைய 32ஆவது வயதில் நடைபெற்றது. 

ஜாதகப்படி, அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.



கன்னி லக்கினம். லக்கினத்தில் குரு பகவான். லக்கினத்தில் குரு பகவான் இருந்தாலே அது ஆசீர்வதிக்கப்பெற்ற ஜாதகம்  (Blessed Horoscope) என்று நான் அடிக்கடி சொல்வதைபோல ஜாதகருக்கு எல்லாம் கிடைத்தது. படிப்பு, நல்ல வேலை. திருமணம், நல்ல மனைவி, இரண்டு குழந்தைகள் என்று எல்லாம் அமைந்தது. லக்கினாதிபதி விரையத்தில் அமர்ந்தாலும், லக்கினத்தில் வந்து அமர்ந்த குரு பகவான் அந்த நஷ்டத்தை ஈடு கட்டினார்.

கஜகேசரி யோகம் உள்ளதைப் பாருங்கள். அதுபோல ஆதி யோகம், பேரி யோகம், விபரீத ராஜ யோகம் போன்ற மொத்தம் 15 யோகங்கள் ஜாதகத்தில் உள்ளன. அவைகளும் வேலை செய்தன.
----------------------------------------------
1. நான்காம் அதிபதி குரு திரிகோணம் ஏறியதால், அவர் ஜாதகரின் படிப்பிற்கு உதவி செய்தார். வித்யாகாரகன் 12ல் மறைந்தாலும், குரு பகவான் தனது அதிகாரத்தில் அதைச் செய்தார்.

2. களத்திரகாரகன் 12ல் மறைந்ததாலும், 2ல் இருக்கும் ராகு மற்றும் மாந்தியின் அமைப்பால், ஜாதகருக்குக் குடும்பவாழ்க்கை தாமதமானது. 13 வயதில் இருந்து 30 வயதுவரை நடைபெற்ற புதன் மகா திசையும் ஆதரவாக இல்லை. 7ஆம் அதிபதி திரிகோணத்தில் அமர்ந்து 7ஆம் வீட்டைத் தன்னுடைய நேர் பார்வையில் வைத்திருப்பதால், இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இல்லை. கோள்சாரக் குரு மிதுனத்திற்கு வந்தவுடன் பாதிப்புக்கள், தடைகளை விலக்கிக் கொண்டு ஜாதகனின் திருமணத்தை நடத்திவைத்தார். அவருடன் சேர்ந்து அப்போது நடைபெற்ற சுக்கிரபுத்தியில், புத்தி நாதன் சுக்கிரனும் அதற்கு உதவி செய்தார்.

குரு பகவான் வலுவாக இருந்தால், ஜாதகருக்கு எல்லாம் கிடைக்க அவர் உதவுவார் என்பதற்கு உதாரண ஜாதகம் இது.
----------------------------------------
போட்டியில் மொத்தம் 26 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அவர்களில் 11 பேர்கள் மட்டும் இரண்டு கேள்விகளுக்கும் உரிய பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்.
பாராட்டுப் பெற்றவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
1
/////Blogger ramesh kumar said...
படிப்பு:
ஆரம்ப திசை சனி திசை,படிப்பில் தடங்கல் வர வாய்ப்பு எனினும்,அவர் UG படித்திருக்க வாய்ப்பு உண்டு.ஏன் எனில் 2 ம் இடம் கல்வி,அங்கு இரு பாவிகள்,கல்வித்தடை,4 ம் அதிபதி குரு 1 ல் ,கேந்திர அதிபதிய தோஷம் எனினும்,சந்திரன் பார்வை.ஆக தோஷம் அடிபட்டு டிகிரி படித்திருக்க வாய்ப்பு உண்டு.....
திருமணம்:
25 முதல் 27 க்குள் திருமணம் நடந்திருக்கும்.புதன் திசை குரு புத்தியில்.உபய ராசி லக்னம்,திருமணம் வாழ்க்கை இனிப்பது கடினம்
Monday, August 18, 2014 9:59:00 AM/////
---------------------------------------------
2
/////Blogger BLAKNAR said...
லக்னாதிபதி 12ல், தன் வாழ்க்கை தனக்கு அல்ல.
பட்ட படிப்பு (குரு சந்திர பார்வை) மற்றும் ஆராய்ச்சி அறிவு உண்டு(செவ்வாய், புதன் சேர்க்கை).
4,7க்கு உரிய குரு லக்கினத்தில் மேலும் தேய்பிறை சந்திரன் பார்வை, குரு சந்திர யோகம் நிச்சயம் பட்ட படிப்பு படித்தவர். லக்கினத்தில் குரு இருந்தாலே கவலை வேண்டாம்.(வாத்தியாரின் பழைய பாடம்).
செவ்வாய், புதன் சேர்க்கை எல்லா துறையிலும், குறிப்பாக ஆராய்ச்சி துறையில் வல்லமையை தந்தனர்.
திருமணம் உண்டு. 
திருமணம் புதன் திசையில், இனிதே நடந்து இல்லற சுகத்தையும் அன்யோன்யதையும் கொடுத்தனர்.
கன்னி லக்கினதிற்கு யோக காரகனாகிய புதன் 12ல், தனது திசை முடிந்ததும் ஜாதகரை கை விட்டு விட்டான். கேது திசை சுழற்றி அடித்திருக்கும். பிள்ளைகளால் சுகம் இல்லை.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்
தூத்துக்குடி
Monday, August 18, 2014 11:05:00 AM//////
--------------------------------------------
3
/////Blogger Regunathan Srinivasan said...
Dear sir,
jadhagakarar kanni lagnam.4th and 7th house lord jupiter is placed in 1st house.4th house is for education and 7th house is for marriage.from 1st house jupiter looks at 5th ,7th and 9th house.9th house signifies higher learning.so person should be minimum master degree holder and should have been married as well.
Regards,
S.Regunathan
Monday, August 18, 2014 12:28:00 PM///// 
---------------------------------------------
4
//////Blogger Prakash Kumar said...
DOB-August 14,1957 9.00 AM -Chennai (approxi)
Jathagar Meena Rasi Kanni laganthil piranthavar. Laganathipathi Budhan 12il ooruku ulaigum jathagar.
1.Eduction:4th house owner guru in laganam.it his friend's house and looking 5th place. eventhough pudhikaragan budhan in 12th house, (9th house from 4th house good position)
live started with sani dasa and then budhan (12il amarthavar)dasa,
Guru in lagana might have allowed jagathakar to get atleast one degree.
2.Marriage: 7th house owner in lagna and 7il amartha moon looking directly to lagnam. Marriage might have happened lately, at the age of 33 to 35, during Kethu dasa -sun or moon bhudhi when Kochaara guru in his 11th position. alagana manaivi kidaithirukum but aduthu vantha Chevvai or Raghu bhuddhil manmurivu nadaipetruirukkam.
2il raghu+mandhi, kalthirakaran+bhakkiya isthanathipathi+Kudampathi sukuran in 12th place is worst placement (udan 8th house owner Chevvai). kudumpa valkai nadathavidamatterkkal.
Note: After Kethu dasa, 12il amartha sukaran dasa. generally 12il amarntha kirakkathin dasa mosamaga irukum.
Ore Aruthalana vishyam , Guru in Lagnam and looking direcltly to manakaran Moon. Jathagaruku nall mana valimai kuduthirparkkal (ethaiyum thangum ithayaum).
Monday, August 18, 2014 2:06:00 PM//////// 
---------------------------------------------------
5
///////Blogger vanikumaran said...
ஜாதகர் உயர் கல்வி வரை படித்தவர். உயர் கல்விக்கான 5ம் அதிபதி சனி மூன்றாம் பார்வையால் 5ல் வைத்துள்ளார். 5ம் வீட்டை குரு பார்க்கிறார். வித்யாதிபதி புதனை பாக்யாதிபதி சுக்கிரன் பார்க்கிறார்
7ம் வீட்டில் லாபாதிபதி சந்திரன். உடன் குரு பார்வை காரகன் சுக்கிரன் விரையத்தில் உடன் அஸ்டமாதிபதி லக்கினாதிபதி. அஸ்டமாதிபதி செவ்வாய் பார்வை 7ம் வீட்டில்
குரு பார்வை 7ம் வீட்டில் இருப்பதால் காலம் கடந்து தாய் வழி உறவில் திருமணம் நட்ந்திருக்கும். இரண்டாம் வீட்டில் raagu மாந்தி அதிபதி சுக்கிரன் 12ல் காரகன் குரு 2க்கு 12ல் சுபர் பார்வை இல்லாததால் குடும்பம் இல்லாதிருக்கும். அல்லது பிரிந்திருக்கும்
Monday, August 18, 2014 2:44:00 PM//////
---------------------------------------------------------
6
///////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 7th Lord in Lagna
2. Gaja kesari yogam and 11th lord in 7th House.
3. 3 and 8 lord mars aspects 7th place.
4. Rahu and mandi in 2nd house, bad for family life.
5. Jupiter in good position and But Venus in 12th house.
There will be marriage but marred with difficulties. Marriage period Mercury dasa in Guru sub period.
Education.
1.Mecury in 12th house.
2.4th lord in 1st house, good 
position.
3. Guru aspect in 5th house.
He is educated but don't have higher education.
Monday, August 18, 2014 2:46:00 PM/////
---------------------------------------------
7
/////Blogger kmr.krishnan said...
4ம் வீட்டு அதிபதி குரு 11ம் வீட்டு அதிபதி சந்திரனால் பார்க்கப்படுவதால் படிப்பு உண்டு. படிப்புக் கார‌கன் புதன் பாக்கியாதிபதி சுக்ரனுடன் இருப்பதாலும் படிப்பு உண்டு.ஆனால் இவர்களை 6ம் வீட்டு அதிபன் சனி பார்ப்பதாலும், 8ம் வீட்டு அதிபதி செவ்வாயுடன் இணைந்ததாலும், இவர்கள் மூவரும் 12ல் மறைந்ததாலும் தடை தாமதங்களுடனான படிப்பு. 10 வயதுவரை சனிதசா வேறு. உடல் நிலையிலும் சிரமங்கள். எனவே பள்ளிப்படிப்பை தட்டுத்
தாடுமாறி முடிக்க வாய்ப்பு.5ம் வீட்டுக்கு குருபார்வை இருப்பதால் ஆன்மீகக் கல்வி சுயமாக கற்று குருவாக விளங்க‌ வாய்ப்பு.4,8,12 படிப்பு,
ஞானத்துக்க்கான இடங்கள். 4ம் அதிபதி கேந்திரம், 8ல் கேது, 12ல் சுக்ரன் புதன் இவர் ஒரு ஆன்மீக குருவாக இருக்க வாய்ப்பு.
கஜகேசரியோகம் உள்ளது. புததசா, குருபுக்தியில் 27/28 வயதில் ஏற்கனவே தெரிந்த பெண்ணுடன் திருமணம்.
4,8,12 படிப்பு, ஞானத்துக்க்கான இடங்கள். 4ம் அதிபதி கேந்திரம், 8ல் கேது, 12ல் சுக்ரன் புதன் இவர் ஒரு ஆன்மீக குருவாக இருக்க வாய்ப்பு.
Monday, August 18, 2014 3:24:00 PM/////
------------------------------------------------------
8
//////Blogger Ravichandran said...
Ayya,
Please find my answers:
1. He must be studied good. Because during his study time, he has undergone Bhudhan Dasa which is lagna for him & Guru is sitting in lagna. one more reason: Bhudhan & Sukran combination gives Nupunathuva Yogam.
2. He must be married twice. Because first marriage would have got, because of Guru is aspecting 7th house and Chandran is aspecting in lagna. i.e. Gaja Kesari Yogam. But due to following reasons be must be undergone second marriage. a) Sukran is in 12 th house b) second house occupied by Rahu and MAndhi c) 8th house occupied by ketu. There is no good planet is aspecting 2nd and 8th house. 
Your Student,
Trichy Ravi
Monday, August 18, 2014 5:53:00 PM///// 
------------------------------------------------
9
/////Blogger Selvam Velusamy said...
வணக்கம் குரு,
ஜாதகர் கல்லூரி படிப்பு படித்தவர். காரணம் 4குடைய குரு லக்னத்தில், நிபுணத்துவ யோகம் மற்றும் 4ம் இடத்திற்கு எந்த பாவகிரக சேர்க்கை & பார்வையும் இல்லை. இளமையில் சனி தசை நடந்தாலும் கன்னி லக்னத்திற்கு திரிகோனமாகிய 5மிடதிர்க்கு அதிபதி ஆகவே கெடுபலன் சற்று குறைவாகவே இருந்திருக்கும்.
இவருக்கு 27வயதில் கண்டிப்பாக திருமணம் நடந்திருக்கும். காரணம் 7குடைய குரு லக்னத்தில் மற்றும் 7ம் இடத்திற்கு எந்த பாவகிரக சேர்க்கை & பார்வையும் இல்லை. இவருக்கு இருதார யோகம் உள்ளது. காரணம் லாபாதிபதி சந்திரன் 7இல். எனவே கண்டிப்பாக ஒரு திருமணமாவது நடந்திருக்கும்.
நன்றி
செல்வம்
Monday, August 18, 2014 8:01:00 PM//////
-----------------------------------------------------------
10
////Blogger thozhar pandian said...
இலக்கினத்தில் குரு. 4ம் வீடு மற்றும் 7ம் வீடு அதிபதியும் குருவே. அவர் இலக்கினத்தில் இருப்பது மிகச் சிறந்த அமைப்பு. கல்வி காரகரும் இலக்கினாதிபதியுமான புதன் இலக்கினத்திற்கு 12ல் மறைந்ததால் எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய ஜாதகம். புதனுக்கும் சுக்கிரனுக்கும் சனி பார்வை உண்டு. சனிக்கு செவ்வாயின் பார்வை உண்டு. இது அவ்வளவு சிறந்த அமைப்பாக தெரியவில்லை. ஆனால் குரு இலக்கினத்தில் இருப்பதாலும், குரு சந்திர யோகம் இருப்பதாலும், தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். கல்வி காரகர் புதனும் 4ம் வீட்டிற்கு 9ம் வீடான 12ம் வீட்டில் இருப்பதால், கல்வி கிடைத்திருக்கும். பட்டப் படிப்பு முடித்திருப்பார். முதுநிலை கல்வி கிடைத்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. களத்திரகாரகர் சுக்கிரன் 7ம் வீட்டிற்கு 6ல். ஆனால் 7ம் வீட்டு அதிபதி குரு இலக்கினத்தில். இந்த காரணத்தால் ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். ஆனால் தாமதமாக நடந்திருக்கும். சுக்கிர தசை தொடங்கியவுடன், அதாவது 36 வயதிற்கு மேல் திருமணம் உண்டு. குரு பலம் இந்த ஜாதகருக்கு கை கொடுக்கும்.
Monday, August 18, 2014 9:58:00 PM/////
---------------------------------------------------------
11
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO. 67 வணக்கம்
14/08/1957 ஆம் ஆண்டு காலை 10.00 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கன்னி ராசியில் ஜாதகர் பிறந்தார்.
லக்கினம் (5 பரல்) கன்னி ராசி யோககாரன் சுக்கிரன்,
லக்கினாதிபதி புதன் 12ம் வீட்டில் செவ்வாயுடன் கூட்டு. மேலும் யோககாரன் சுக்கிரனுடனும் கூட்டு.
கல்வி:
4ம் வீடு தனுசு ராசி, 27 ப‌ரல்கள், 4ம் வீட்டு அதிபதி குரு (7 பரல்) லக்கினத்தில், மீனத்திலிருக்கும் சந்திரனின் 7ம் பார்வை லக்கினதில் இருக்கும் குருவின் மீது பார்ப்பதால் பாபகர்த்தாரி தோஷத்தினால் பாதிப்பு எற்படாது. கஜகேசரி யோகமும் உள்ளது.
5ம் வீடு நுண்ணறிவு, 5ம் விட்டு அதிபதி சனி 3ல் அமர்ந்து 3ம் பார்வையால் 5ம் வீட்டை பார்க்கிறார். குருவின் 5ம் பார்வையால் அந்த தோஷதையும் நிவர்த்தி செய்து விடுகிறார்.
பிரச்சனைக்குரியவன் கல்விகார‌கன் புதன். 12ல் தீய கிரகத்துடன் செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து, சனியின் 10ம் பார்வை அவர் மேல் விழுவதாலும், 4ம் வீட்டு அதிபதி குருவும், காரகன் புதனும் 2/12 என்னும் பாதக நிலமையில் உள்ளனர்.கல்விக்கு கஷ்ட்டத்தை உண்டாக்கினார். அடுத்து வந்த புத தசையில் குரு புக்தியிலிருந்து.அதாவது 25 வயதிலிருந்து கல்விக்கு தட‌ங்கல்.
ஜாதகர் இலக்கியத்தில் பட்ட படிப்பு வரை படித்து இருப்பார்.
திருமணம்;
7ம் வீட்டு அதிபதி குரு லக்கினதில் (7 பரல்)
7ம் வீட்டில் சந்திரன் (4 ப‌ரல்) இருப்பதால் அழகான மனைவி அமைவார்.
குருவும், சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் 7ம் பார்வையில் உள்ளனர். கஜகேசரி யோகத்தினால் பலம் பொருந்தியுள்ளது. 25 வயதில் குரு புக்தியில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.
2ம் வீட்டு அதிபதி களத்திரகாரகன் சுக்கிரன் 12ம் வீட்டில் செவ்வாயுடன் கூட்டு.
2ம் வீட்டில் மாந்தி இருப்ப‌தால் குடும்பம் பிரிவு எற்பட வாய்ப்புள்ளது.
2ம் வீட்டில் 22 பரல்கள்.குடும்ப ஸ்தானம் பல‌வீனமாக‌ உள்ளது.
குருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தானமான சுக்கிரன் வீட்டில் பார்ப்பதாலும், சில பிரச்சினைகளுக்கு பிறகு குடும்பம் அமைய வாய்ப்புள்ள‌து.
5ம் வீட்டின் மீது சனியின் 3ம் பார்வை உள்ள‌தால் குழந்தை தாமதமாக பிறக்க வாய்ப்புள்ளது.
மேலும், சூரியனின் 7ம் பார்வை 5ம் வீட்டின் மீது பார்ப்பதாலும், குருவின் 5ம் பார்வை 5ம் வீட்டின் மீது பார்ப்பதாலும், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
சந்திர‌சேகரன் சூரியநாராயணன்
Tuesday, August 19, 2014 1:43:00 AM///////
======================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.8.14

Astrology: quiz.67: உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்!


Astrology: quiz.67:  உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்!

Quiz No.67: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தி ஏழு

18.8.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு ஒரு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.


1. கல்வி நிலை பற்றி அலசி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை? போன்றவற்றை அலசி எழுதுங்கள்!

2. ஜாதகரின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.8.14

சுதந்திரதின வாழ்த்துக்கள்!


சுதந்திரதின வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகள், வாசகர்கள், பதிவிற்கு எப்போதாவது வந்து செல்கின்றவர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் சுதந்திரதின வாழத்துக்கள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வகுப்பறைக்கு விடுமுறை!

அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.8.14

Short story: சிறுகதை: அதிரடிக் கதை: காத்திருந்த சிக்கல்!


Short story: சிறுகதை: அதிரடிக் கதை: காத்திருந்த சிக்கல்!

இந்தக் கதையை கடைசி வரி வரை விடாமல் படியுங்கள் ஒரு அதிர்ச்சியும், ஒரு ஆச்சரியமும் ஒருசேரக் காத்திருக்கிறது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனைவி ஊரில் இல்லை. மேல் பயிற்சி வகுப்பிற்காக புதுதில்லி சென்றிருக்கிறாள். திரும்பி வர 15 தினங்களாகும். அவள் வேலை பார்க்கும் தனியார் நிறுவனம் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்திருந்தது.

அவளைச் செம்பட்டு விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டுத் திரும்பிய அவளுடைய கணவன் கனகராஜன் ஒரு குறுகுறுப்போடு இருந்தான்.

ஒருவருடமாக அடக்கி வைத்திருந்த தன்னுடைய ஆசையை இன்று நிறைவேற்றிக் கொள்வது என்று முடிவு செய்திருந்தான்.

என்ன ஆசை?

வேறு என்ன? ஆசை தீரத் தண்ணியடிக்க வேண்டும், அவ்வளவுதான்!

திருமணத்திற்கு முன்பு விளையாட்டாக எல்லாத் தப்புக்களையும் செய்து கொண்டிருந்தவனை பெண்போலீஸ் போல மிரட்டிக் களை எடுத்து வைத்திருந்தாள் அவன் மனைவி சாரதா!

அவளுக்குத் தெரிந்தால் கண்ணை நோண்டி விடுவாள்

இப்போதுதான் அவள் இல்லையே!

வீட்டிற்கு வந்தவன் நன்றாக ஒரு குளியல் போட்டான். பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு புறப்பட்டான். அலமாரியில் இருந்த நூறு ரூபாய்க் கட்டில் பத்து நோட்டுக்களை உருவி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.மணி இரவு 8.30ஐத் தொட்டிருந்தது.

வீட்டைப் பூட்டும் போதுதான் யோசித்தான்.

காரை எடுத்துக் கொண்டு போகலாமா? வேண்டாம் என்று முடிவு செய்தான்.

திரும்பி வரும்போது வழியில் காக்கிகள் நின்று, வாயை ஊதிக்காட்டு என்றால் வம்பாகிவிடும்!

சரி வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து அடித்தால்? அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பக்கத்துவீட்டு டாபர்மேன் பெரிசு எப்போது வேண்டு மென்றாலும் வுந்து கதவைத் தட்டி ”இந்த சி.டியைப் பாருங்கள். பானா ஸீரிசில் வந்த படம் - சூப்பராக இருக்கும்” என்று சொல்லி மோப்பம் பிடித்துப் பற்ற வைத்துவிடும் அபாயம் உண்டு!

அதனால் போனோமா, அடித்தோமா, வந்து கவுந்தடித்துப் படுத்தோமா என்று இருப்பதே நல்லது!

புறப்பட்டான், காத்திருக்கும் சிக்கலை அறியாமல்!

                                    ***************************

கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் ரோட்டில் அவனுடைய வீடு. ஒரு பர்லாங் தூரம் நடந்து வந்தால் பிரதான சாலை குறுக்கிடும். ஆட்டோ வைத்துப் போய்க் கொள்ளலாம் என்று நடந்தான்.

பிரதான சாலைக்கு வந்த பிறகுதான் முடிவு மாறியது.

எதற்கு ரெம்ப தூரம் போக வேண்டும். பேருந்து நிலையம் அருகில்தான். அந்தப் பகுதியில் இல்லாதா பார்களா?

ராஜாளி ஹோட்டல் அருகில் ஒரு பாரைத் தேர்ந்தெடுத்து உள்ளே போனான். சற்று இருட்டாக இருந்த டேபிளைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான்.

அவனுடைய பேஃவரைட் ஸ்காட்ச் விஸ்கிதான். மெதுவாக ரசித்துக் குடித்தான். சைட் டிஷ் வறுத்த முந்திரி. சிக்கன் கபாப்.

மூன்று லார்ஜ்கள் முடிந்து, ஒரு ஸ்மாலுக்கு ஆர்டர் கொடுக்கும்போதுதான் பியரெர் சொன்னார்.” சார், எங்கள் பார் ஆரம்பித்து, இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது!”

"அதெற்கென்ன?”

“இன்று இங்கே வரும் கஸ்டமர்கள் அனைவருக்கும் ஒரு லார்ஜ் ஃப்ரீ!”

“அடப்பாவி, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை, கொண்டு வா!” என்றவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து முழுதாக ஊதி முடிப்பதற்குள் அடுத்த லார்ஜ் வந்துவிட்டது. அதையும் குடித்து முடித்தான். மணி 10.30ஐத் தொட்டிருந்தது.

இனியும் உட்கார்ந்திருக்கக் கூடாது என்று நினைத்தவன் எழுந்தான். அதற்குள் அங்கே ரெஸ்டாரென்ட்டில் ஆர்டர் கொடுத்திருந்த உணவுப் பொட்டலங்கள் நீட்டாக பேக் செய்யப்பட்டு அவன் கைக்கு வந்து சேர்ந்தது. பில்லை செட்டில் பண்ணிவிட்டு, அதைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே காற்று இதமாக இருந்தது. மழை வரும்போல இருந்தது வந்தால் வரட்டும்.

எதிரே ஒரு டாஸ்மாக் கடையைப் பார்த்தவன், எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு குவாட்டர் பேக்பைப்பர் விஸ்கியை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டான்.

அதற்குள் ஊர் அடங்கிப் போயிருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை! வலது பக்கம் உள்ள சாலையில் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்தால் வில்லியம்ஸ் சாலை வந்து விடும்

உடம்பெல்லாம் முறுக்கேறி ஜிவ்வென்றிருந்தது. நடந்தவன் வில்லியம்ஸ் சாலை கிராஸிற்கு வந்து விட்டான்.

இரண்டு பக்கமும் சாலையை அடைத்துக்கொண்டு ஏராளமான மரங்கள்.

கருங்'கும்மென்றிருந்தது.

அப்போதுதான் அது நடந்தது.

ஒரு மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி இரண்டு அடிகள் முன்னே வைத்து, இவனை நோக்கித் திரும்பி உற்றுப் பார்த்தாள். இவனும் அப்போது தான் அவளைக் கண்டவன் உற்று நோக்கினான்.

பெண் சூப்பராக இருந்தாள். செக்கச் செவேல் என்று சிவந்த நிறம். திரைப்பட நடிகையின் தோற்றத்தில் இருந்தாள். வயது 23 அல்லது 24 இருக்கலாம். காற்றில் அவளுடைய ஷிபான் சேலை படபடத்துக் கொண்டிருந்தது. மிதமான மேக்கப்பில் இருந்தாள்.உதட்டுச் சாயம் அசத்தலாக இருந்தது. கையில் லெதர் ஹாண்ட்பேக் வைத்திருந்தாள். பெரிய இடத்துப் பெண்னைப் போன்றும் தோன்றினாள். நெறிகெட்ட பெண்னைப் போன்றும் தோன்றினாள்.

சரக்கு உள்ளே போன முறுக்கில், அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே உடம்பும் மனதும் கனகராஜனைப் படுத்த ஆரம்பித்தன!.

பழைய வாலிப நினைப்பில் அவனையும் அறியாமல் சட்டென்று கேட்டுவிட்டான்:

“வர்றியா?”

அவள் மறு பேச்சில்லாமல் ‘ம்' என்று சொன்னதுதான் அதைவிடப் பெரிய அதிர்ச்சி.

கனகராஜனுக்கு நம்ப முடியாத அதிர்ச்சியாக அது இருந்தது

வீட்டில் ஒன்பதாயிரம் ரூபாய் பாக்கி வைத்து விட்டு வந்தது நினைவிற்கு வர, சும்மா கேட்டு வைத்தான்.

“எவ்வளவு பணம் வேண்டும்?”

“பணமெல்லாம் வேண்டாம். நன்றாகக் கம்பெனி கொடுத்தால் போதும்”

“படு குஷியாகி விட்ட கனகராஜன், கேட்டான்,“சாப்பிட்டாயா?”

“இல்லை, இனிமேல்தான்!”

“என்னிடம் இருக்கிறது, வீடு அருகில் தான், வா முதலில் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு மற்றதைப் பேசுவோம்”

தழையத் தழைய அவனைத் தொட்டவாறு அவள் நடக்க, தன் மனதிற்குள் ஆயிரம் நிலவுகள் கண் சிமிட்ட கனராஜனும் அவளுடன் சேர்ந்து நடந்தான்.

ஆமாம், எதிர் கொள்ளப் போகும் ஆபத்தை அறியாதவனாக நடந்தான் கனகராஜன்!
   
      **************************
வீடெங்கும் மல்லிகை வாசம் ஆளைக் கிறங்கடித்தது.

அவள் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 11.30ஐத் தொட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் எல்லோருமே off ஆகியிருந்தார்கள். இருந்தாலும் கனகராஜன் முன்னெச்சரிக்கையாக பூனையைப்போல சத்தமின்றி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தான்.

அவள் சாப்பிட்டு முடிப்பதற்குள், சமையலறைக்குச் சென்று, கையில் இருந்த குவாட்டரை வைத்து மேலும் ஒரு சுற்று சுருதி ஏற்றிக் கொண்டான்.

தன் மனைவியின் நைட்டியொன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் சமையலறைக்குச் சென்று திரும்புவதற்குள், அவள் நைட்டிக்கு மாறியிருந்தாள்

நைட்டியில் அவள் இன்னமும் அழகாக இருந்தாள். தேவதைபோல இருந்தாள்.

இன்னும் சற்று நேரத்தில் சொர்க்கமே தன் வசப்படப் போகும் மகிழ்ச்சியில் இருந்த கனகராஜன், அடுத்த காட்சிக்குப் போகும் முனைப்பில் செயல்பட்டான்.

தன்னுடைய படுக்கையறைக்கு அவளை அழைத்துச் சென்றவன் கட்டிலைக் காட்டி உட்கார் என்றான்.

படுக்கை அறை 11 x 15 பெரிய அறை. ஸ்பிளிட் ஏர்கண்டிஷனாரால் குளிரூட்டப் பட்டிருந்தது.

உட்கார்ந்தவள் அருகில் அவனும் சென்று அமர்ந்தான்.

அவள் முகம் இன்னும் சிவந்திருந்தது. கூச்சமாக இருக்கும் என்று நினைத்தவன் கேட்டான்:

”விளக்கை அனைத்து விடட்டுமா?”

“ம்” என்றாள்

எழுந்தவனைத் தடுத்து உட்கார வைத்துவிட்டு “நான் அனைக்கிறேன்!” என்று சொன்னவள், அதை இருந்த இடத்தில் இருந்தே செயல் படுத்தினாள்.

அவளுடைய வலது கை பதினைந்தடி நீளம் நீண்ண்ண்ண்ண்டு... அறையின் குறுக்காகச் சென்று, கோடியில் இருந்த ஸ்விட்சை அனைத்தது!

(முற்றும்)
--------------------------------------------------------------------
35 ஆண்டுகளுக்கு முன்பு என் இனிய நண்பர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு பக்கப் பேய்க் கதை இது. ஸ்டோரி ஒன் லைனராக என் மனதில் இருந்தது. அதை உங்களுக்காக எனது நடையில் விவரித்து எழுதியுள்ளேன்.

இது எனது Star Posting வாரத்தில் வந்திருக்க வேண்டியது. அப்போது நேரமின்மையால் எழுதவில்லை. 15.6.2008 அன்று இதை எழுதி எனது பல்சுவைப் பதிவில் வெளியிட்டேன். இப்போது உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!

எப்படி உள்ளது?

ஒரு வரி பின்னூட்டத்தில் எழுதுங்கள்!

அன்புடன்
SP.VR.சுப்பையா
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Astrology: quiz.66: போனால் போகட்டும் போடா...இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

This post has been removed  as requested by a senior reader of our blog. I respect his feelings and words

Sorry for the inconvenience to others


With regards

Vaaththiyaar



12.8.14

நகைச்சுவை: இதுவல்லவா அற்புதமான விளக்கம்

 

நகைச்சுவை: இதுவல்லவா அற்புதமான விளக்கம்

SOME WONDERFUL DEFINITIONS

CIGARETTE: A pinch of tobacco rolled in paper with fire at one end and a fool at the other!
MARRIAGE:It's an agreement wherein a man loses his bachelor degree and a woman gains her master
LECTURE: An art of transmitting Information from the notes of the lecturer to the notes of students
without passing through the minds of either
CONFERENCE: The confusion of one man multiplied by the number present
COMPROMISE: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece
TEARS: The hydraulic force by which masculine will power is defeated by feminine water-power!
DICTIONARY: A place where divorce comes before marriage
CONFERENCE ROOM: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on
ECSTASY: A feeling when you feel you are going to feel a feeling you have never felt before
cl-assIC: A book which people praise, but never read
SMILE: A curve that can set a lot of things straight!
OFFICE: A place where you can relax after your strenuous home life
YAWN: The only time when some married men ever get to open their mouth
ETC: A sign to make others believe that you know more than you actually do
COMMITTEE: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together
EXPERIENCE: The name men give to their Mistakes
ATOM BOMB: An invention to bring an end to all inventions
PHILOSOPHER: A fool who torments himself during life, to be spoken of when dead
DIPLOMAT: A person who tells you to go to hell in such a way that you actually look forward
to the trip
OPPORTUNIST: A person who starts taking bath if he accidentally falls into a river
OPTIMIST: A person who while falling from EIFFEL TOWER says in midway "SEE I AM NOT INJURED YET!"
PESSIMIST: A person who says that O is the last letter in ZERO, Instead of the first letter
in OPPORTUNITY
MISER: A person who lives poor so that he can die RICH!
FATHER: A banker provided by nature
CRIMINAL: A guy no different from the other, unless he gets caught
BOSS: Someone who is early when you are late and late when you are early
POLITICIAN: One who shakes your hand before elections and your Confidence Later
DOCTOR: A person who kills your ills by pills, and kills you by his bills!
==================================================
2
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
****
என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
இதுதான் வாழ்க்கை .
****
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!
****
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
****
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
****
தத்துவம் 2:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
(என்ன கொடுமை சார் இது !?!)
****
தத்துவம் 3:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
****
தத்துவம் 4:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)
****
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.
****
கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?
****
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்
****
T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
****
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .
****
இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..
****
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
****
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .
****
வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
(இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)
****
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
****
புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது
****
"Tea" / "Cofee"    எது  சுகாதாரம் இல்லாதது ??........ "Tea"ல ஒரு "ஈ " இருக்கும்.
"Coffee"ல    2 "ஈ " இருக்கும்.
===================================
-----------------------------------------------------
உபரிகள்:


--------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------
==============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!