மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.13

Astrology: என் கேள்விக்கென்ன பதில்? உன் பார்வைக்கென்ன பொருள்?

 
Astrology: என் கேள்விக்கென்ன பதில்? உன் பார்வைக்கென்ன பொருள்?

Quiz No.33: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி முப்பத்திமூன்று.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (ஆண்டின் கடைசி நாள். அதனால் உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு நடுத்தர வயது ஆண்மகனின்  ஜாதகம். ஒரே ஒரு கேள்விதான்: ஜாதகர் படித்தவரா? அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் எதோடு படிப்பை விட்டவர்? ஜாதகப்படி என்ன காரணம்? அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

37 comments:

  1. Respected Sir
    He should have completed at least a degree.
    4th lord and laknathipathi Budha in 11th house that gives anything easily. Also 4 th house has Sukra's parvai. Sukran is ucham and he is the 5th house lord.

    Budha athitya yogam is also there.

    ReplyDelete
  2. இவர் படித்தவர் கன்டிப்பாக மேற்படிப்புக்கான பட்டம் பெற்று இருப்பார்(டாக்டர்)

    ReplyDelete
  3. அரிவு மிக்கவர் ஆனால் படிப்பு வராது .4ஆம் அதிபதி புதன் 4க்கு எட்டாம் இடதிலும் புத ஆதித்ய யோகம் பெட்ராலும் எட்டாம் அதிபதி சனி கூட்டு சரி வராது அதொடு அல்லாமல் நீச்ச சனி செவ்வாய் பரிவர்தனை மட்ரும் பார்வை அவர்கல் முரையே எட்டுக்கும் ஆருக்கும் அதிபதி.9பதாம் இடதுக்கும் அதெ நிலமை தான்.படித்திருந்தால் +2 வரை படிதிருகலாம்.

    ReplyDelete
  4. இவர் படித்தவர் கன்டிப்பாக மேற்படிப்புக்கான பட்டம் பெற்று இருப்பார்(டாக்டர்)

    ReplyDelete
  5. புதிர் பகுதியில்.. நாங்கள் விரும்பும்
    பலரின் ஜாதகம் வர

    என்ன செய்யவேண்டும்
    எடுத்துச் சொன்னால் மகிழ்ச்சி

    ReplyDelete
  6. இந்த ஜாதகர் பட்டப் படிப்பு வரை படித்தவர். வித்யாகரகனும், 4ம் இட அதிபதியுமான புதன் இரண்டு பாப கிரகங்களுடன் 11ல் இருந்தாலும் அது பாப கிரகங்களுக்கு நல்ல அமைப்புதான். அத்துடன் 4ம் இடத்தை உச்ச சுக்கிரன் பார்வையிடுகிறார்.

    ReplyDelete
  7. Dear Sir,
    As per Horoscope, He Completes higher education with struggling.But job not related to his education.

    4th place for education & Mercury is in 11th house with Sun & Saturn.
    Regards
    rmsrithar

    ReplyDelete
  8. Sir

    ஜாதகர் 7 அல்லது 8ம் வகுப்புவறை தான் படித்திருப்பார் (12 வயது வரை அவர் ஜாதகம் பலன் அவருக்கு இல்லை)

    3ம் அதிபதி 11ல் உச்சம் உடன் சனி உச்சம் பெற்ற செவ்வாய் பரிவர்தனை (நல்லவர்கள் ஆன குரு சந்திர யோகத்துடன் 6ல் மறைவு)லக்னாதி 4ம் இட அதிபதி இவர்களுடன்

    ஜாதகர் பெரிய தாதா வெட்டு குத்துக்கு அஞ்சாதவர்

    நன்றி
    ஜவஹர்

    ReplyDelete
  9. The native has finished upto schooling because Mercury vidhya karaka is in close association with malefics and hence got affected. The second house recieves gurus aspect hence he could have completed schooling with help of guru's aspect. There is a possibility of late speech or thikkuvai in native.

    ReplyDelete
  10. மதிப்பிற்குற்ய ஐயா,
    புதிர் தொடர் - பகுதி முப்பத்திமூன்றுக்கான பதில்

    லக்கனாதிபதி மற்றும் 4ஆம் அதிபதி லாபாஸதானத்தில் இருப்பதாலும்,
    புத ஆதித்ய யோகம் மற்றும் புதன் சுயவர்கத்தில் 6 பரல்களை பெற்று இருப்பதால்
    மேல் கல்வி பெற்றவராக தான் இருப்பார்.
    என் பதில் தவறாக இருதால் மன்னிக்கவும்.

    மு.சாந்தி

    ReplyDelete
  11. நான்காம் வீட்டுக்காரரும் கல்விகாரகனுமான புதன் 4ம் வீட்டிற்கு எட்டாம் வீட்டில். கூடவே உச்ச சூரியனும் நீச சனியும். செவ்வாயின் பார்வையும் புதன் மேல். செவ்வாய் இந்த இலக்கினத்திற்கு 6 (வில்லன்) மற்றும் 11ம் அதிபதி. வேறு எந்த சுப கிரக பார்வையும் இல்லை. குருவும் புதனும் அஷ்டக சஷ்டக நிலையில் உள்ளனர். ஆதலால் ஜாதகரின் படிப்பு பள்ளியோடு முடிந்திருக்கும். பள்ளிப் படிப்பை கூட முடித்திருக்க மாட்டார்.

    ஆனால் ஜாதகத்தில் பல சிறப்புகள் உள்ளன. மிதுன இலக்கினக்காரர்கள் பொதுவாக அழகானவர்கள். சுக்கிரன் மிதுன இலக்கினத்திற்கு 5ம் வீட்டுக்காரர். 10ம் வீட்டில் சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார். அதனால் திரைத்துறையில் பிரகாசித்திருப்பார். குரு சந்திர யோகம் உண்டு. 11ம் வீட்டில் நீச பங்க இராஜ யோகம் உண்டு. மிகவும் பிரபலமானவராகவும் இருப்பார்.

    இது நடிகர் அஜித் குமார் அவர்களின் ஜாதகமோ என்று சந்தேகம் இருந்தது. ஆனால் விக்கி மகாராஜா இவர் பிறந்ததாக குறிப்பிடும் தேதி ஜாதகத்தோடு ஒத்து வரவில்லை. விக்கி மகாராஜா குறிப்பிடும் நாளை மறந்து விட்டு, சித்திரை 1971 என்று மட்டும் எடுத்துக் கொண்டால், இது அஜித் அவர்களின் ஜாதகமாக கூட இருக்கலாம்.

    ReplyDelete
  12. வாத்தியார் அவர்களுக்கும், நமது வகுப்பறை மாணவர்களுக்கும், என் இனிய புத்தாண்டு நல் வாழ்துக்கள்.

    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் உயர் கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.

    4ஆம் அதிபதி புதன் தன்னுடைய இருப்பிடத்துக்கு 8இல் பகை வீட்டில் உள்ளார்.அத்துடன் செவ்வாயின் பார்வையில் உள்ளார்.உடன் சனியின் கூட்டனி வேறு.

    இரண்டாம் அதிபதி சந்திரன் நீசமாகி 6இல் உள்ளார்.

    2இல் கேது,பாக்கியாதிபதி சனி நீசம்.போன்ற அமைப்புகளால் ஜாதகருக்கு உயர் கல்வி மறுக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  13. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 33 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

    ஆரம்ப கல்வி ஸ்தானமாகிய 2ம் வீட்டின் அதிபதி சந்திரன் 6இல் நீச்சம். கூடவே இருக்கும் குருவும், குருவின் பார்வையில் 2இல் இருக்கும் கேதுவும் ஆரம்ப கல்வியை கொடுத்திருப்பார்கள். லக்னாதிபதியும், கல்வி ஸ்தானமாகிய 4ம் வீட்டுக்கு அதிபதியுமான புதன், உச்சம் பெற்ற சூரியனோடு உயர்கல்வி ஸ்தானமான 9ம் அதிபதியான சனியுடன் லாப ஸ்தானத்தில் இருப்பது உயர்கல்வியைக் கொடுக்கும். பரிவர்த்தனை ஆன சனி நீச்சபங்கம் பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பதுவும் ஒரு காரணம். லாப ஸ்தானத்தை ராகுவுடன் சேர்ந்த உச்சம் பெற்ற செவ்வாய் நான்காம் பார்வையாக தன்னுடைய வீட்டையே பார்ப்பதாலும், வாக்கு ஸ்தானத்தை 7ம் பார்வையில் வைத்திருப்பதாலும், சட்டத்துறையில் பட்டப் படிப்பை முடிக்க உதவியிருக்கும். பத்தாம் இடத்தில் நுண்ணறிவு ஸ்தானமான 5ம் ஸ்தான அதிபதி சுக்கிரன், குருவின் பார்வை பெற்று உச்சமாக இருப்பது புகழ் பெற்ற வக்கீலாக இருப்பதைக் குறிக்கிறது.

    ReplyDelete
  14. இன்னொன்றை குறிப்பிட மறந்து விட்டேன். உச்ச செவ்வாயும் நீச சனியும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளனர். சனி பாக்யாதிபதி, செவ்வாய் இலாபாதிபதி. மூன்று கிரகங்கள் உச்ச நிலையில் உள்ளன. இரண்டு கிரகங்கள் நீசம். ஆனால் அவை முறையே 11ல் நீச பங்க இராஜ யோகம் மற்றும் 6ல் குரு சந்திர யோகத்தில் உள்ளன. படிப்பில்லை என்றால் என்ன, பல நல்ல அமைப்புகள் உள்ளன. ஜாதகர் யோகக்காரர்.

    வாத்தியார் அய்யாவுக்கு ஒரு கேள்வி: இரண்டாம் அதிபதி நீசம், இரண்டாம் வீட்டில் கேது, இரண்டாம் வீட்டுக்கு செவ்வாயின் பார்வை என்ற இந்த அமைப்பினால் இரண்டாம் வீடு பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது. நீங்கள் நடிகர் இரஜினிகாந்த் அவர்கள் ஜாதகத்தை அலசும் போது 2ம் வீட்டில் சனி, கேது என்று இரண்டு தீய கிரகங்கள் இருந்தாலும், இரண்டாம் வீட்டு புதன் நவாம்சத்தில் உச்சம் பெற்றதால் அவருக்கு குடும்பம், செல்வம் இரண்டும் நன்றாக இருந்தது என்று குறிப்பிட்டீர்கள். இந்த ஜாதகத்தில் எப்படி? நவாம்சம் கொடுக்கப் படவில்லை. நீங்கள் கேட்ட கேள்விக்கு அது தேவையில்லை என்றாலும் ஒரு ஆர்வம். அதனாலேயே இந்த கேள்வி.

    ReplyDelete

  15. வணக்கம் அய்யா !

    இந்த ஜாதகத்தில் 4 இம் அதிபதியான புதன் 11இல்

    நீச்சம் பெற்ற சனி மற்றும் உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்ந்து நீச்ச பங்க ராஜா யோகம் பெறுகிறார்கள் மேலும் புதன் ஆதாதித்ய யோகம் , இவர்களோடு சேர்ந்த புதன் கட்டயமாக சிறந்த கல்வி கொடுப்பர்

    எனவே இவர் சிறந்த கல்வியாளர் ஆக இருப்பர்

    ReplyDelete
  16. லக்னாபதியும், கல்வி ஸ்தானதிபதியுமான புதன் 11ல் நின்றாலும், எட்டாம் அதிபதி சனி, மூன்றாம் அதிபதி சூரியனுடன் இருப்பதாலும், சூரியன் சனி
    கிரஹயுத்தத்தில் இருப்பதாலும், புதன் சூரியனால் அஸ்தங்கதம் அடைந்திருக்க வாய்ப்பு இருப்பதாலும் ஜாதகருக்கு படிப்பு கட்டைதான்.வாக்கு ஸ்தானதிபதியும் மனோகாரகனுமான சந்திரன் நீச மடைந்து ஆறாம் விட்டுக்காரனான குருவுடன் நின்றதால் பேச்சு பாதிப்போ, அல்லது மாற்றுத்திறனாளியாக இருக்க வாய்ப்புள்ளது. சகோதரர்கள் தயவில் வாழும் நபராக இருப்பார்.

    அதிக பட்ச படிப்பு எட்டாவதுவரைதான் இருக்கும்.

    ReplyDelete
  17. 42 வயது நிரம்பிய இந்த ஆண், ஒரு முதுநிலை பட்டத்தை பெற்று இருப்பார்.(கேள்விக்கு என்ன‌ பதில்?)

    அதற்கான காரணங்கள் :

    1. கல்விஅறிவுக்கான 4ம் இடத்து அதிபதி புதன் 11ல் வலுத்து உள்ளார்.
    2. 5ம் இடம், நுண்ணறிவுக்கானது. அதன் அதிபதி சுக்கிரன் 10ல் உச்சமாக‌ இருந்து 4ம் இடத்தை பார்ப்பதால், ஜாதகர் தன்னுடைய பாடப்பிரிவில் முதுனிலை பட்டம் வென்று இருப்பார்.(பார்வைக்கென்ன பொருள்?)

    சரிதானே ஐயா!


    பின்குறிப்பு : கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் சனியின் நிலை, ஜகன்னாத ஹோரா வில் ரிஷப ராசியில் காண்பிக்கிறது.தவறு உள்ளதோ?

    ReplyDelete
  18. The native should be a Post Graduate. As Lagna itself in Bhudhan house and that too is in 11th house.

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா,

    ஜாதகர் உயர் கல்வி முடித்திருக்கலாம், ஆனால் மேல் நிலை படிப்பு படித்திருக்கமாட்டார்,
    1.5ம் வீடு சனியின் பார்வையில் உள்ளது.
    2.9ம் வீட்டு அதிபதி 11ல் நீசம்

    ஐயா,1968,69,70ல் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சனி நீசமாக உள்ள‌து, நான் 7 ஜாதகங்களை சேகரித்து வைத்துள்ளேன்,சனி(2,3,5,7,8,10,11)ஆகியவீடுகளில் இருந்தது, 7 ஜாதகரின் வாழ்க்கையும் சரியாக அமையவில்லை.

    இந்த ஜாதகத்தில் 8,11ல்பரிவர்த்தனை,பரிவர்த்தனையான சனி நீசம்,செவ்வாய் உச்சம்.
    11ல் சனி நீசபங்க ராஜயோகம்,12ம் அதிபதி 10ல்,10ம் அதிபதி 6ல்,11ம் அதிபதி 8ல் ராகுவுடன் சேர்ந்து உச்சம்,
    இந்த ஜாதகத்தை அலசி எழுத வேண்டுகிறேன். நன்றி ஐயா

    ReplyDelete
  20. dear sir,
    in this chart the second house chandran is neecha, and in the second house kethu was present.so he can,t cross his lower level studies.
    4th house is budha, but budha present in mesha, it is the 8th place from the kanni, so we can sure that he can't crossed his lower studies, kethu represnts the long time duration,

    ReplyDelete
  21. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    இந்த ஜாதகர் பட்டமேற்படிப்பு அல்லது இரண்டு பட்டம் பெற்றவர்.
    இரண்டாம் இடத்து அதிபதி சந்திரன் நீசம் பெற்றாலும் குருவுடன் சேர்ந்து
    நீசபங்கம் பெற்றுள்ளார். மேலும் மிதுன லக்கினத்துக்கு ஐந்தாம் அதிபதி
    சுக்கிரன் கேந்திரத்தில் உச்சம் பெற்று நான்காம் இடத்தைப்பார்வையில் வைத்து
    இருக்கிறார். லக்கின அதிபதியும் கல்விஸ்தானாதிபதியும் கல்வி காரகருமான புதன் பதினோறாம் இடத்தில் புதஆதித்ய யோகத்துடன் இருப்பது இரண்டு
    பட்டம் பெற்றதை காட்டுகிறது.
    இரண்டில் கேது நிற்பது கல்வியில் தடங்கல் ஏற்பட்டு குருவின் ஒன்பதாம்
    பார்வையால் தடங்கல் நீங்கி படிப்பு தொடரப்பட்டிருப்பதை குறிக்கிறது.
    அன்புடன்
    அரசு.

    ReplyDelete
  22. ஐயா,
    ஐயா,
    இந்த புதிரின் கேள்வியின் தொனி ஜாதகர் படிக்கதவர் அல்லது
    படிப்பை இடை நிறுத்தியவர் என்று காட்டுகிறது. பார்க்கலாம்.
    மிதுன லக்ன ஜாதகம். லக்னதிபதியும் நான்காம் இடத்து அதிபதியுமான புதன் லக்னதுக்கு பதினொராம் இடத்தில் உள்ளார்.
    அது நான்காம் இடத்துக்கு எட்டாம் இடம். ஆனால், மறைந்த புதன்
    நிறைந்த கல்வி. ஆகவே படித்தவர். ஐந்துக்கு உரிய சுக்கிரன் உச்சம்.
    ஆகவே நுண்ணறிவு படைத்தவர். பதினொராம் இடத்தில் சூரியன் புதன்
    சேர்க்கை மிதுன லக்கினத்துக்கு அறிவையும் புகழையும் குறிக்கும்.
    ஒன்பதாம் இடத்து சனி பதினொன்றில் சூரியன், புதனுடன் சேர்ந்து
    பட்டபடிப்பை அளித்திருப்பார். பட்ட மேற்படிப்பை இரண்டாம் இடத்து
    கேது தடை செய்திருப்பார். ஆகவே ஜாதகர் பட்டதாரி.
    அனைவருக்கும் “Happy New Year “
    A.NATARAJAN

    ReplyDelete
  23. Dear Sir,

    1. The given horoscope person's mercury is joint with sun. So he must be having good knowledge naturally. But closeness of saturn and neecha saturn does not allow him to study well.
    2. The 4th lord for studies is in placed 11th place along with sun and saturn. Saturn made him not to study proper.
    3. Exalted sukran aspect 4th place. So he is rich and spent his life by material enjoyment. Not got interest in studies. He enjoyed the wealthy life.
    4. Guru does not aspect 4th lord or 4th place. So he had studied only upto the basic level. may be upto 8th or 9th standard.
    5. Also guru placed in 6th place,not favorable.

    ReplyDelete
  24. 1. laknathipathi - bhuthan in 11thplace - GOOD POSITION
    2nd lord suriyan 11th place - WITH bhu- adithya yoga - A WELL EDUCATED
    2. 6th lord chevai in 8th place with raghu - GOOD MEDICAL KNOWLEDGE
    3. 5th sukran lord in 10th place - RICH MAN
    4. 10th lord guru in 6th place with 2nd lord chandran - A FAMOUS DOCTOR

    RAMESHRAJA

    ReplyDelete
  25. Respected Sir,

    My answer for our today's Quiz No.33:-

    Education is denied to this Native.

    Even he has not completed his schooling.

    Reasons for not getting education are as follows:

    1. Fourth house authority (Mercury) is sitting eighth house from its own house. It's bad.

    2. The authority for education (Mercury) is associated with Saturn. It's worse.

    3. Vidyakaraga (Mercury) is getting sixth house authority (Mars) aspects. It's worst.

    Hence, The native wasn't blessed to study according to his horoscope.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  26. Respected Sir
    My observations of this horoscope are as follows:
    I) PLANETS POSITION:
    a) Lagnathipathi & 4th LordMERCURY at 11th House in association with Saturn which is deblitated.
    b) Lagnum is Aspected by Saturn which is deblitated
    c) Mars at 8th Position is aspecting lagnathipathi
    d) Mercury in association with Sun ( combusted)
    Lagnum is made weak by Saturn and also lagathipahi because of Mars
    Moon is debilitated & Mars exalted
    PLANETARY ASSOCIATION:
    a) Association of Sun+Mercury –Budha Aditya yoghum
    b) Exchange of house between two malefic – Saturn & Mars
    c) Sun + Saturn – Neesa bangaum yogum
    d) Jupiter and Moon - 6 th house – bad position
    e) Jupiter aspecting Venus
    f) Venus aspecting 4th house
    Fourth house
    The lord of fourth house is at 8th Position from it along with Saturn and aspected by Mars. But the Fourth house is aspected by Venus which is at Kendra position but has Kendrathipathya doshum
    Results:
    1) Since the fourth lord is weak the person would have done School study and lost the opportunity to go to college.
    2) But he will be a skilful and intelligent man. His analytical capacity will be excellent.
    3) He will have easy gain and money in his life as the Lagnathipathi is at 11th house
    4) He will be interested in fine arts – May be Movie placback singer or Artist.
    5) Since the Karaga – Jupiter is at 6 th house he would have lost the opportunity to go for higher studies though he is very intelligent.
    6) All the yogas will give him fame and money – May be a politician also

    Dr.Mohan
    Brunei

    ReplyDelete
  27. ஐயா அவர்களுக்கு

    ஜாதகர் பள்ளிபடிப்பை பாதியில் விட்டவராக இருப்பார். 2மிடம் கேது இதனை செய்திருப்பார்.

    (தைன்ய பரிவர்த்தனை) 8மிடம் மற்றும் 11மிடம்.

    (3 கிரகம் உச்சம் 2 கிரகம் நீசம் )(உச்சமான செவ்வாய் பார்வை உச்சமான சுரியனி்ன் மேல்) சரியான குழப்பம்.

    பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. Respected Sir,

    Midhuna Lagnam, Lagnadipathy Budhan avarey 4-m adhibathiyagavum varugirar and avar 11-m veetil uccham petra Sooriyanudan ullar (Budha Adhithya Yogam.)

    Uccham petra chevvayin paarvai 4-m adhibathi-ku iruppadhal, ivar Maruthuva padippu padithiruppar.

    Thank You.

    ReplyDelete
  29. சந்திரன் இருக்குமிடம் வைத்துப் பார்த்தால், சிறு வயதிலேயே சனி மற்றும் புத திசை வந்திருக்கும். நாலாம் அதிபன் புதன் நாலுக்கு எட்டில் (11-ல்), எட்டாம் அதிபன் சனி மற்றும் மூன்றாம் அதிபன் சூரியனுடன் இருப்பதால் கஷ்டப்பட்டு பள்ளிப் படிப்பை முடித்திருப்பார். பட்டப் படிப்பு பாதி கிணறு. (புதனே லக்னதிபதியும் ஆனதாலும் சனி பாக்கியஸ்தானாதிபதியாகவும் இருப்பதால் இவ்வளவு தூரம் வர முடிந்தது)

    ஆனாலும் ஜாதகர் தன்னுடைய நுட்பமான அறிவினாலும் (ஐந்தாம் அதிபன் பத்தில் உச்சம்) நிபுணத்துவத்தினாலும் (புதாதித்திய யோகம்) தொழிலில் சிறந்து விளங்குவார் (தந்தை வழியில் வந்த தொழிலில் சிறந்து விளங்குவார். தந்தை காரகன் சூரியன், நீச்ச பங்கம் ஆன 9-ஆம் ஸ்தானாதிபதி சனியுடன் - லாபஸ்தானத்தில் இருப்பதால்)

    ReplyDelete
  30. மதிப்பிற்குரிய ஐயா,
    லக்னத்திற்கு இரண்டில் கேது 2ம் அதிபதி சந்திரன் நீசம் ஆனால் நீசபங்க ராஜயோகத்தில் ஜாதகரின் ஆரம்ப கல்வியில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் பள்ளி படிப்பை முடித்து இருப்பார். 4ம் விட்டின் அதிபதி புதன், நீசபங்கம் அடைந்த சனியுடன்(9th lord) அத்துடன் புதாதித்திய யோகத்தில் ஆதலால் ஜாதகர் பட்டப் படிப்பும் மேல்நிலை படிப்பையும் முடித்து இருப்பார்.
    இவர் படிப்பில் சிறு சிறு தடங்கல் ஏற்பட்டாலும் மேல்நிலை பட்ட படிப்பு வரை நிச்சயம் முடித்து இருப்பார்.

    ReplyDelete
  31. The native couldn't study beyond middle school level. The reasons are as below.
    1) For education, we should see the lagna lord, 2nd lord, 4th lord and 5th lord (higher education), mercury and guru's positions. Here both lagna lord and 4th lord is mercury, also he is karaga for education. Mercury is in 11th house with 8th lord saturn. This is 8th house from 4th house. Also mercury is aspected badly by mars. So he is very weak.
    2) Guru is in 6th house.
    3) 2nd lord moon is neecham in 6th house.

    5th lord sukran is ucham. So the native will settle in life using his intelligence during his sukra dhasa period.

    Thanks,
    Ramasamy.

    ReplyDelete
  32. அய்யா, வணக்கம்.
    தங்கள் கொடுத்துள்ள ஜாதகம் மிகவும் ராஜயோகம் உள்ள ஜாதகம்.
    மிதுன லக்கனம்
    1.மேஷத்தில் சூரியன் சனி - நீசபங்க ராஜயோகம்
    2. விருச்சிகத்தில் குருசந்திர யோகம்
    3. செவ்வாய் மகரத்தில் உச்சம்
    4. மீனத்தில் சுக்கிரன் உச்சம்
    5. சனி செவ்வாய் பரிவர்த்தனை.

    அரசாலக் கூடிய ஜாதகம்

    இவை எல்லாம் இவரை வசதிகள், சொத்து, பணம், புகழ், இவற்றில் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கும் சந்தேகம் இல்லை.

    லக்கினத்திற்கு 6 ல் குரு மறைவதாலும்,
    கல்வி ஸ்தானத்தை எந்த சுப கிரக பார்வையும் இல்லாததாலும்,
    கல்வி ஸ்தானாதிபதியும், வித்தியகரகனும், லக்க்னதிபதியும் ஆன புதன் தன் கல்வி ஸ்தானத்திற்கு 8 ல் மறைவதலும்,
    கல்வி ஸ்தானத்திற்கு கல்வி ஸ்தானமான தனுசு ராசியை எந்த சுப கிரக பார்வை இல்லாததாலும்
    இவர் ஆரம்ப பாடசாலையுடன் படிப்பு முடிந்து இருக்கும்.


    நன்றியுடன் ராஜமுருகன்

    ReplyDelete
  33. Quiz No: 33
    வணக்கம்.
    ஜாதகர் படிக்காதவர்.
    பள்ளிக்கூட படிப்புடன் நிறுத்தியவர்.
    ஜாதகர் புத்திசாலியானவர்.
    மிதுன லக்கினத்திற்க்கு யோக காரன் சுக்கிரன். உச்சமான சுக்கிரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது இருந்தும், 4ம் வீட்டு அதிபதி புதன் 11ம் வீட்டில் சனியுடன் அமர்ந்த்ள்ளார். லக்னாதிபதி புதனும், 4ம் வீட்டு அதிபதி புதனும், 11ம் வீட்டில் சனியுடன் கூட்டு சேர்ந்து புதன் அசுப கிரகமாக மாறியது. அதனால், படிப்பில் தடங்கல்.
    11ம் வீடு 4ம் வீட்டிலிருந்து 8வது வீடு. அதனால், புத்தி அமைதியில்லாமல் இருக்கும். புத்தி எப்பொழுதும் தடுமாற்றத்துடன் இருக்கும்.
    வித்தியாகாரகன் குரு 6ம் வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளார். அவருடைய பார்வை லக்கினத்தையோ, 4ம் வீட்டையோ, 4ம் வீட்டு அதிபதியையோ பார்க்கவில்லை. துரதிருஷ்ட்டம். படிக்கமுடியாமல் போனதர்க்கு இது ஒரு முக்கியமான காரணம். மேலும், 6ம் வீட்டில், நீச மான சந்திரனுடன் வக்கிரமான குரு சேர்ந்ததால் ஒரு பயனும் இல்லை.
    2ம் வீட்டில் கேது இருப்பதால், படிப்பை பாதியில் விட்டு விடும் நிலைமை, விரும்பிய வண்ணம் படிப்பை அடையமுடியாது. மேலும், நாவன்மை பங்கு எற்படும். சனியின் 4ம் பார்வை (அர்த்தாஷ்ஷடம சனி) கேதுவை பார்ப்பதால் மேலும் படிப்பிற்க்கு தடங்கல். 16 வயதில் கேது மகா தசை ஆரம்பித்ததால், பள்ளி படிப்பிற்க்கு மேல் கல்வி தடங்கல்.
    குருவின் 9ம் பார்வை 2ம் வீட்டினில் உள்ள கேதுவை பார்ப்பதால் குரு சண்டால யோகம் எற்பட்டது. மேலும் குரு வக்கிரமாக இருப்பதால் படிப்பிற்க்கு ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.

    11ம் வீட்டிலுள்ள புதனுடன் சூரியன் சேர்ந்து புத-ஆதித்திய யோகம் உண்டாக்கி ஜாதகருக்கு நல்ல புத்தியை வழங்கினார். (Sun-Mercury combination favours proficiency in mathematics)
    மேலும், 11ம் வீட்டிலுள்ள சூரியனுடன் சனி சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி இரண்டு பங்கு செல்வத்தை வழங்கினார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.

    ReplyDelete
  34. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    quiz 33 க்குரிய விடை.

    1. பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

    * மிதுனலக்னம், விருச்சிகராசி.லக்னாதிபதி 10ம் இடமான‌ கேந்திரத்தில் அமர்ந்த்துடன் கேதுவுடன் நட்ச்சத்திர பரிவர்தனையில் அமர்ந்து உள்ளார்.
    *சுக்கிரன் உச்சம் பெற்று கல்வி ஸ்தானத்தை புதனின் நட்சத்திரத்தில் அமர்ந்து
    பார்வை செய்கிறார்.
    *லக்னாதிபதியான புதன் அமர்அம்சம் பெற்று ஜாதகரை அரசவாழ்க்கை வாழவைத்திருப்பார்.அல்லது வாழவைப்பார்.
    *லக்கினாதிபதி லக்கினம் மற்றும் சுக்கிரன் வர்கோத்தமம் அடைந்ததுடன்
    சுயவர்கத்தில் சனியை தவிர மற்ற கிரகங்கள் நல்ல (சூரி 5,சந் 7,செவ் 5,புத 6
    வியா 5, சுக்கி 6) பரல்களை பெற்றுள்ளனர்.
    *மூன்று கிரகங்கள் உச்சம்(செவ்,சுக் மற்றும் சூரியன்) போன்ற சிறப்பான யோகங்களில் உள்ள ஜாதகம்.
    *சரியான விடையை புரிந்து கொள்ள சற்று சவாலாகதோன்றுகிறது.
    ஏனெனில் 4க்குரியவன் அந்த ஸ்தானத்திற்க்கு 8ல் மறைந்து உள்ளார்.

    சரியான விடையை தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா.
    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  35. happy new year to everyone.
    L Rgupathi

    ReplyDelete
  36. இன்றையப் புதிருக்கான விடை:

    ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்!

    மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில்.அதுவும் சனியுடன் கூட்டணி. கூட்டணி சேர்ந்துள்ள சனி
    ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன். ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.

    நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை மிகவும் தீங்கானது. எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்!

    மொத்தம் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 35 பேர்கள். அவர்களில் 13 பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். சரியான விடையை எழுதிய
    அத்தனை பேர்களுக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அத்துடன் போட்டில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

    சிறப்பான பதிலை எழுதியவர்களின் பெயர்களை, அவர்கள் எழுதிய கணிப்புடன் தொகுத்து அடுத்த நாள் பதிவில் (அதாவது.1.1.2014 பதிவில்) கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்.

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com