மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.4.13

Humour,நகைச்சுவை: படுக்கையின் கீழே என்னடா பார்த்தாள் அவள்?



Humour,நகைச்சுவை: படுக்கையின் கீழே என்னடா பார்த்தாள் அவள்?

பதிவை, நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பாருங்கள். வேறு வில்லங்கம் எதுவும் வேண்டாம்!
--------------------------------------------------------
1
அறிவிப்புப் பலகைகள்:

A
பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகை

போவதும் இலவசம். வருவதும் இலவசம்
மாட்டிக் கொண்டால் உணவும் இலவசம்!

(பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்காக எழுதப்பெற்றது)

B
மும்பையில் பிரபலமாக உள்ள beauty parlorல் உள்ள வாசகம்
இங்கேயிருந்து வெளியே செல்லும் பெண்ணைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள். அது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்!

C
மும்பை ஜூஹு பகுதியில் உள்ள சிகை அலங்காரக் கடையில் உள்ள வாசகம்
தலைவா, உங்கள் தலையை நம்பித்தான் எங்கள் வியாபாரம் உள்ளது!.
------------------------------------------------------
2
கடைசி வேண்டுகோள்

ஒரு தம்பதியருக்கு 4 பையன்கள். அவர்களில் முதலில் பிறந்த மூன்று பேர்களும், முகத்தோற்றம், நிறம், தலை முடி, உயரம் என்று ஏறக்குறைய ஒன்றாக இருப்பார்கள்.

கடைசிப்பையன் மட்டும் வித்தியாசமாக இருப்பான். வேறுபட்டு இருப்பான்.

அவன் பிறப்பில் அவனுடைய தந்தைக்கு சிறு சந்தேகம் இருந்தது. அத்துடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அது மனதை அரித்துக்கொண்டிருந்தது.

ஒரு நாள் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சீரியசாகி மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள். ஒரு மாதம் சிகிச்சை அளித்தும் பயனில்லை.

மருத்துவர்கள் கையை விரித்துவிட்டார்கள். இன்னும் இரண்டு தினங்களுக்கு மேல் தாங்காது என்றும் சொல்லிவிட்டார்கள். அது அவருக்கும் தெரிந்து விட்டது.

மனைவியை அருகே அழைத்து மெல்லிய குரலில் பேசியவர், கடைசியாகத் தன் வேண்டுகோளை முன்வைத்தார்!:

“அன்பே, நான் ஒன்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நீயும் பெரிய மனது பண்ணி, மறைக்காமல் என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும், சரியா?”

“கேளுங்கள்”

“நம்முடைய கடைசிப் பையன் நமக்குப் பிறந்தவன்தானா?”

“நான் இறைவன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். சத்தியமாக அவன் நமக்குப் பிறந்தவன்தான்! அவன் உங்களுடைய குழந்தைதான். நம்புங்கள்!”

அந்த ஷணமே நிம்மதியோடு கணவனின் உயிர் பிரிந்துவிட்டது

பத்தாம் நாள், காரியங்கள் செய்தபோது, மனைவி இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டாள் “மற்ற மூவரைப் பற்றியும், அவர் கேட்காமல் விட்டதற்கு
நன்றி உனக்குக் கடவுளே, கேட்டிருந்தால், நான் பொய்ச் சத்தியம் பண்ணும்படி ஆகியிருக்கும்!”
------------------------------------------------------------------------------------------------
3
அடுத்து வருவது அசைவப் பதிவு. அதாவது அசைவமான நகைச்சுவை. அசைவம் பிடிக்காதவர்கள் பதிவை விட்டு விலகிவிடலாம்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

படுக்கையின் கீழே என்னடா பார்த்தாள் அவள்?

ஆரோக்கியசாமியும், அனுராதாவும் ஆதர்சனமான தம்பதியர். முப்பது ஆண்டு மணவாழ்க்கை ரம்மியமாகக் கழிந்து விட்டது.

ஒரே ஒரு குறை. ஆரோக்கியசாமி, தினமும் இரண்டு அல்லது மூன்று லார்ஜ் அடிக்காமல் இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டான். அனுராதாவும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. போனால் போகிறான் பகல் முழுவதும் கடுமையாக உழைக்கிறான். நிறையச் சம்பாதிக்கிறான் என்று விட்டு விடுவாள். ஆனால் தண்ணி அடித்தபின்தான் படுக்கையில் அவனுடைய வேகம் அதிகரிக்கும். அதனாலும், அவள் கண்டு கொள்ள மாட்டாள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் திருமணத்தன்று ஆரோக்கியசாமி, தன் மனைவிடம் சொன்னான். “நம் படுக்கையின் கீழே ஒரு மரப்பெட்டி உள்ளது.
அதை மட்டும் நீ எக்காரணத்தைக் கொண்டும் திறந்து பார்க்கக்கூடாது. பிராமிஸ் பண்ணு” என்று சொல்லி உறுதிமொழி வாங்கிக் கொண்டான்.

அவளும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட பெண் ஆதலால், கடந்த 30 ஆண்டுகளாகப் பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை.

தங்களின் முப்பதாம் ஆண்டு திருமண நாளன்று,  தன் கணவன் அன்பாக வாங்கிக் கொடுத்திருந்த பட்டுப் புடைவையைக் கட்டிக் கொண்டவள், குறுகுறுப்புத் தாங்காமல் இன்று அந்தப் பெட்டி ரகசியத்தைத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தாள்.

அன்று மாலை, தன் கணவன் வெளியே சென்றிருந்த சமயம், பெட்டியைத் திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதில் குறிப்பிடும்படி பெரிதாக ஒன்றும் இல்லை. மூன்று காலி பீர் கேன்களும், கொஞ்சம் பணமும் இருந்தது. பணத்தை எண்ணிப்பார்த்தாள். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாய்கள் இருந்தன

பெட்டியை மூடியவள். அது இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள்..

இப்போது அவளுடைய குறுகுறுப்பு அதிகமாகிவிட்டது. யோசித்துப் பார்த்தாள். ஒன்றும் பிடிபடவில்லை.

அன்று இரவு, ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில் டின்னருக்குச் சென்று அமர்ந்தபோது, அவள் மெல்லிய குரலில், தன்னுடைய கணவனிடம் சொன்னாள்:

“அன்பே, என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியின் காரணமாக மனதைக் கட்டுப்படுத்துக்கொண்டிருந்தவள், அதீத மன உந்துதலின் காரணமாக இன்று அதை மீறும்படி ஆகிவிட்டது.”

“என்ன சொல்கிறாய்?”

“கட்டிலுக்குக் கீழே உள்ள பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டேன். பெட்டிக்குள் 3 காலி பீர் கேன்களும், கொஞ்சம் பணமும் இருந்தது. எத்றகாக அதை
வைத்திருக்கிறீர்கள்?”

"உன்னிடம் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நானும் உன்னிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை. விசுவாசமில்லாமல், உனக்குத் துரோகமாக ஒரு பெண்ணுடன் படுத்து விட்டு வரும்போது, அதுபோல மீண்டும் ஒருமுறை செய்யக்கூடாது என்று எனக்கு நானே அறிவுறுத்துக் கொள்ளும் விதமாக ஒரு காலி பீர் கேனைப் போட்டுவைப்பது வழக்கம்!”

பெட்டியில் 3 பீர் கேன்கள்தான் உள்ளன. மூன்று முறைகள்தான் தவறு இழைத்துள்ளான். ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, அது ஒன்றும் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆகவே இப்படிச் சொன்னாள்

“எனக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. ஆண்கள் சலன புத்தி உள்ளவர்கள் என்பதை நான் அறிவேன். இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். உங்களை நான்
மன்னித்து விடுகிறேன்.”

அவள் அவ்வாறு சொல்லவும், அவன் உற்சாகமாகி, உற்சாக பானத்தை வரவழைத்து ஆனந்தமாகக் குடிக்க ஆரம்பித்தான். மனைவிக்குக் கோக் வாங்கிக் கொடுத்தான்.

சற்று நேரம் சென்றவுடன், மனதில் மின்னலாகத் தோன்றிய சந்தேகத்தால், அவனிடம் அவள் கேட்டாள்

“இறைவன் மீது ஆணையாகச் சொல்லுங்கள். பெட்டியில் இருக்கும் பணத்திற்கு என்ன கணக்கு?”

அவனும் மறைக்காமல் உண்மையைச் சொன்னான்.

பெரும் அதிர்ச்சிக்கு ஆளான அவள், தலை கிறுகிறுக்கத் தடால் என்று மயங்கிக் கீழே விழுந்து விட்டாள்

ஆரோக்கியசாமி என்ன சொன்னான் அப்படி?
---------------------------------------------------
அதை இங்கே சொல்ல முடியாது.  உங்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள ஆவல் என்றால், வகுப்பறையை விட்டு வெளியே வாருங்கள். அதாவது என்
மின்னஞ்சல் முகவரிக்கு வாருங்கள். அங்கே உபரியாக இன்னொரு ப்ளேட் அசைவமும் கிடைக்கும் இதற்கான மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும் Subject boxல் மறக்காமல் Post dated 11.4.2013 என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23 comments:

  1. அய்யா காலை வணக்கம் . கடை நகைச்சுவை என்ன என்று தெரிந்து விட்டது . நன்றி

    ReplyDelete
  2. உண்மைதான் எல்லாமே நகைசுவையாய் உள்ளது.காலையில் சிரிப்பு கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வில்லங்கம் வேண்டாம் சரி
    வில்... அங்கம் கொண்டு வரலாமா?

    உதட்டை "வில்" போல் வளைப்பது
    உண்மையிலேயே நகைப்பதால்

    'அங்கம்' என்பது உடலை தானே குறிக்கும்
    அய்யர் இங்குமா என கேட்காதீர்..

    இனிப்பு..
    இனி ... ப்பூ...!!

    ReplyDelete
  4. ரயில் நிலைய அறிவிப்பு பலகை அருமை.,
    அந்த கடைசி நகைச்சுவை பீர்கேன்களை எடைக்கு போட்ட பணம் என்று சொல்வீர்கள்.

    ReplyDelete
  5. வகுப்பறையில் இப்படி வாய் விட்டு சிரித்து பல நாளாகிவிட்டது,

    எனக்கு முன்பு படித்த கதை ஒன்று நினைவு வந்தது.

    பையனின் ஜாதகம் எடுத்துக்கொண்டு ஜோசியரை பார்க்க போனார்கள் அம்மாவும் அப்பாவும். ஜோசியர் ஜாதகத்தை வாங்கி பார்த்து பையனுக்கு அப்பா இருக்க மாட்டாரே
    என்றார். இல்லை இருக்கிறார் இவர் தான் என அப்பாவை காட்டினார் அம்மா. ஜோசியர் குழம்பி போய் பலன் சொல்லி அனுப்பினார், ஜோசியருக்கு நன்றி சொல்லிவிட்டு கேட்ட தொகையைவிட அதிகமாக அம்மா கொடுத்து விட்டு கிளம்பினார்.

    வரும் வழியில் "ஜோசியம் எல்லாம் சரியில்லை நம்பாதே" என்றார் அப்பா

    பதில் எதுவும் சொல்லாமல் நடந்தாள் அம்மா.

    ஆனால் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் மகன் பிறந்த மறு நாள் பக்கத்து வீட்டுக்காரன் விபத்தில் செத்தது உண்மைதானே பிறகு எப்படி ஜோசியத்தை நம்பாமல் இருப்பது
    என்று.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,
    குரு என்றும் குருதான்,
    நன்றி.

    ReplyDelete
  7. வாத்தியார் அண்ணாவிற்கு வணக்கங்கள்.
    இன்று தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை ருசிக்கும் விதமாக நகைச்சுவை விருந்து படைத்தமைக்கு நன்றிகள்.அனைத்தும் அற்புதம்.
    அசைவத்தில் 30 ஆண்டுகளுக்கு ஃபைன் ரூபாய் பதினைந்தாயிரம் விசுவாசத்தோடுிணைந்தமைக்கா?.
    கடைசியாக வந்த ஜோதிட ஜோக் அருமை.
    அன்புடன்,
    -Peeyes

    ReplyDelete
  8. If many beer cans are recycled you get cash :P

    ReplyDelete
  9. ஒருவர் தன் ஜாதகப்படி என்ன கல் (gem) அனியலாம்...

    1. ஜாதகத்தில் பலமான கிரகதின் கல்லா..
    2. ஜாதகத்தில் பலவீனமான‌ கிரகதின் கல்லா..
    3. ஜாதகத்தில் சுப கிரகமாக இருக்கும் கிரகதின் கல்லா..
    4. ஜாதகத்தில் அசுப‌ கிரகமாக இருக்கும் கிரகதின் கல்லா..
    5. அல்லது தசா நாதனின் கல்லா..

    எந்தெந்த கல் எந்தெந்த விரல்களில் அனியலாம்..

    தயவு செய்து இது பற்றி விவரமாக ஒரு கட்டுரை எழுதவும்...

    ReplyDelete
  10. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  11. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம் . கடைசி நகைச்சுவை என்ன என்று தெரிந்து விட்டது . நன்றி////

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. /////Blogger கவியாழி கண்ணதாசன் said...
    உண்மைதான் எல்லாமே நகைசுவையாய் உள்ளது.காலையில் சிரிப்பு கொடுத்தமைக்கு நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger அய்யர் said...
    வில்லங்கம் வேண்டாம் சரி
    வில்... அங்கம் கொண்டு வரலாமா?
    உதட்டை "வில்" போல் வளைப்பது
    உண்மையிலேயே நகைப்பதால்
    'அங்கம்' என்பது உடலை தானே குறிக்கும்
    அய்யர் இங்குமா என கேட்காதீர்..
    இனிப்பு..
    இனி ... ப்பூ...!!/////

    கேட்கவில்லை! நீங்கள் சொல்லவிரும்புவதைத் தாராளமாகச் சொல்லுங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  14. ////Blogger புரட்சி தமிழன் said...
    ரயில் நிலைய அறிவிப்பு பலகை அருமை.,
    அந்த கடைசி நகைச்சுவை பீர்கேன்களை எடைக்கு போட்ட பணம் என்று சொல்வீர்கள்.////

    இப்படி ஒற்றை வரியில் க்ளைமாக்ஸைச் சொல்லவில்லை! அப்படிச் சொன்னால், கதை எப்படி ரசிக்கும்?

    ReplyDelete
  15. /////Blogger thanusu said...
    வகுப்பறையில் இப்படி வாய் விட்டு சிரித்து பல நாளாகிவிட்டது,
    எனக்கு முன்பு படித்த கதை ஒன்று நினைவு வந்தது.
    பையனின் ஜாதகம் எடுத்துக்கொண்டு ஜோசியரை பார்க்க போனார்கள் அம்மாவும் அப்பாவும். ஜோசியர் ஜாதகத்தை வாங்கி பார்த்து பையனுக்கு அப்பா இருக்க மாட்டாரே
    என்றார். இல்லை இருக்கிறார் இவர் தான் என அப்பாவை காட்டினார் அம்மா. ஜோசியர் குழம்பி போய் பலன் சொல்லி அனுப்பினார், ஜோசியருக்கு நன்றி சொல்லிவிட்டு கேட்ட தொகையைவிட அதிகமாக அம்மா கொடுத்து விட்டு கிளம்பினார்.
    வரும் வழியில் "ஜோசியம் எல்லாம் சரியில்லை நம்பாதே" என்றார் அப்பா
    பதில் எதுவும் சொல்லாமல் நடந்தாள் அம்மா.
    ஆனால் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் மகன் பிறந்த மறு நாள் பக்கத்து வீட்டுக்காரன் விபத்தில் செத்தது உண்மைதானே பிறகு எப்படி ஜோசியத்தை நம்பாமல் இருப்பது என்று////.

    நல்லது. உங்களுடைய உபரிக் கதைக்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  16. ////Blogger சர்மா said...
    வணக்கம் ஐயா,
    குரு என்றும் குருதான்,
    நன்றி./////

    அப்படியா? நல்லது! நன்றி!

    ReplyDelete
  17. /////Blogger GOWDA PONNUSAMY said...
    வாத்தியார் அண்ணாவிற்கு வணக்கங்கள்.
    இன்று தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை ருசிக்கும் விதமாக நகைச்சுவை விருந்து படைத்தமைக்கு நன்றிகள்.அனைத்தும் அற்புதம்.
    அசைவத்தில் 30 ஆண்டுகளுக்கு ஃபைன் ரூபாய் பதினைந்தாயிரம் விசுவாசத்தோடுிணைந்தமைக்கா?.
    கடைசியாக வந்த ஜோதிட ஜோக் அருமை.
    அன்புடன்,
    -Peeyes/////

    இல்லை. அந்தக் கதையின் க்ளைமாக்ஸ் வேறு விதமாக இருக்கும்!

    ReplyDelete
  18. //Blogger Bhuvaneshwar said...
    If many beer cans are recycled you get cash :P////

    கரெக்ட். இதுதான் ஆராய்ச்சி மூளை என்பது! நன்றி காலகாலதாசன்!

    ReplyDelete
  19. ///Blogger Unknown said...
    ஒருவர் தன் ஜாதகப்படி என்ன கல் (gem) அனியலாம்...
    1. ஜாதகத்தில் பலமான கிரகதின் கல்லா..
    2. ஜாதகத்தில் பலவீனமான‌ கிரகதின் கல்லா..
    3. ஜாதகத்தில் சுப கிரகமாக இருக்கும் கிரகதின் கல்லா..
    4. ஜாதகத்தில் அசுப‌ கிரகமாக இருக்கும் கிரகதின் கல்லா..
    5. அல்லது தசா நாதனின் கல்லா..
    எந்தெந்த கல் எந்தெந்த விரல்களில் அனியலாம்..
    தயவு செய்து இது பற்றி விவரமாக ஒரு கட்டுரை எழுதவும்.../////

    முன்பே எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது. தேடிப் பிடித்துப் படியுங்கள் Unknown நண்பரே!

    ReplyDelete
  20. ////Blogger kmr.krishnan said...
    OKAY SIR, HAD A LAUGH.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  21. கடைசியாக பிறந்தவன் (மட்டும்)தான் நமக்கு பிறந்தவனா என்று கேட்டிருக்க வேண்டும். உண்மை வெளிப்பட்டிருக்கும்.

    ReplyDelete
  22. ////Blogger Ak Ananth said...
    கடைசியாக பிறந்தவன் (மட்டும்)தான் நமக்கு பிறந்தவனா என்று கேட்டிருக்க வேண்டும். உண்மை வெளிப்பட்டிருக்கும்./////

    அப்போதும் உண்மை வெளிப் பட்டிருக்காது. பொய்ச் சத்தியம் பண்ணியிருப்பாள் அந்தப் பாதகி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com