மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.4.13

Humour,நகைச்சுவை: செக்ஸைப் பற்றி என்னடா சொன்னாள் செண்பகவல்லி?




Humour,நகைச்சுவை: செக்ஸைப் பற்றி என்னடா சொன்னாள் செண்பகவல்லி?

தலைப்பில் வரும் ‘டா’ வைப்பற்றிக் கவலைப் படாதீர்கள். அதை எனக்காக நானே எழுதிக்கொள்வது. அப்போதுதான் எழுத்தில் ஒரு விறுவிறுப்பும், சுவாரசியமும் உண்டாகிறது!

இன்றையப் பதிவு நகைச்சுவைக்காகப் பதிவிடப்பெற்றுள்ளது. சீரியசான, உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்!!!!.

ஜோதிடம், ஆன்மீகம் என்று தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தால், வாழ்க்கை வறண்டு போய் விடாதா? ஒரு மாறுதலுக்காகத்தான் இந்தப் பதிவு.

அத்துடன் இந்தப் பதிவு நமது கணக்காய்வாளர் மலேசியா ஆனந்த் அவர்களுக்குச் சமர்ப்பணம்! அவர்தான் அடிக்கடி நகைச்சுவை மிஸ்ஸாவதைச் சுட்டிக் காட்டிக்கொண்டிருப்பார்.

என்னுடைய பல்சுவை வலைப்பூவில் நிறைய நகைச்சுவைக் கட்டுரைகளையும் கதைகளையும் எழுதியுள்ளேன். வகுப்பறைப் பதிவு துவங்கியதில் இருந்து அது குறைந்துவிட்டதை நானும் உணர்கிறேன். அதற்காக பல்சுவைப் பதிவை தொடரமுடியாது. அதை முடக்கி வைத்திருக்கிறேன். நேரமின்மைதான் காரணம்.

சரி வாருங்கள், பதிவைப் பார்ப்போம்!
--------------------------------------------------------
1
கணவனும் மனைவியும் காரில் பயணித்துக்கொண்டிருந்தார்கள். தங்கள் இருப்பிடத்தை விட்டு 100 கிலோ மீட்டர் தூரம் தாண்டிவிட்டார்கள். ஆறுவழி நெடுஞ்சாலையில் கார் பறந்து கொண்டிருந்தது.

தீவிர சிந்தனையில் இருந்த மனைவி, கவலை மேம்படச் சொன்னாள்:

“நாம் திரும்புவதற்குள் வீட்டிற்கு என்ன நேருமோ தெரியவில்லை!”

“ஏன் என்ன ஆயிற்று?” இது கணவன்.

மனைவி தொடர்ந்து சொன்னாள். “காலையில் உங்கள் சட்டையை அயர்ன் பண்ணியவள், மற்ந்து போய் அயர்ன் பாக்ஸை off  செய்யாமல், அப்படியே மேஜை மேல் வைத்துவிட்டு வந்துள்ளேன்”

“ஒன்றும் ஆகாது கவலையை விடு!”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“குளியலறையில் பாத் ட்ப்பிற்கு வரும் தண்ணீர்க் குழாயை நானும் மூடாமல் வந்திருக்கிறேன் I forgot to turn off the water in the bathtub!"
---------------------------------------------------------------------
2
அடுத்து வருவது சுத்தமான அசைவப் பதிவு. அதாவது அசைவமான நகைச்சுவை. அசைவம் பிடிக்காதவர்கள் நிச்சயமாக இந்த இடத்துடன் பதிவை விட்டு விலகிவிடலாம்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

விதி யாரை விட்டது...தொடருங்கள்!

செண்பகவல்லி ஒரு வித்தியாசமான பெண்மணி (எச்சரிக்கைக்காக இதைத் துவக்கத்திலேயே சொல்லி விட்டேன்) பொறியியற் படிப்பு, நுனி நாக்கு ஆங்கிலம், ஷில்பா செட்டி போன்ற தோற்றம். மொத்தத்தில் அசத்தலான பெண்! அவள் கணவன் செண்பகராமனும் (என்ன ஒரு பெயர்ப் பொருத்தம் பாருங்கள்) அசத்தலான ஆசாமிதான்.

இருவரும் பெங்களூரில் வாசம் செய்கிரார்கள். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, இருவருக்கும் ஆறு இலக்கத்தில் சம்பளம். மடிவாலாவில் ஒரு சொகுசான அடுக்கு மாடிக்குடியிருப்பில் வீடு. எலக்ரானிக் சிட்டியில் வேலை. ஆளுக்கொரு செவர்லே ஸ்பார்க் வண்டி. வாழ்க்கை ரம்மியமாக ஓடிக்கொண்டிருந்தது.

வாரக் கடைசி. தினம். வழக்கம்போல கணவனும் மனைவியும் சேர்ந்து அன்றைய விடுமுறையை ‘தண்ணி’ அடித்து மகிழ்ச்சிகரகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் செண்பகராமனுடைய சாய்ஸ் எப்போதும் கவியரசர் சொன்னது போல விஸ்கி வித் வாட்டர்.  செண்பகவல்லிக்கு ஜின் வித் லெமனேடு.கணவனுக்கு இரண்டு பெக் அதிகமாகிவிட்டது. மனைவி ஸ்டெடியாக இருந்தாள்.

அவர்களுடைய பேச்சு செக்ஸைப் பற்றித் திரும்பியது. முதலில் சாதாரணமாகத் துவங்கியது, பிறகு வாக்குவாதமாக மாறியது.

கணவன் ஆணித்தரமாக அடித்துச் சொன்னான் “செக்ஸில் அதிகமாக மகிழ்வதும், அனுபவிப்பதும் (enjoyment) ஆண்கள்தான். பெண்கள் சும்மா டம்மி. What is the use in getting laid?

மனைவி மறுத்துச் சொன்னாள்: “பெண்களைப் பற்றிய உங்கள் கருத்துத் தவறானது. பெண்கள்தான் அதிகமாக ஆனந்தமடைவார்கள். யோசித்துப் பாருங்கள்”

கணவன் மீண்டும் மறுத்து வாக்குவாதம் செய்ய, மனைவி அதிரடியாக ஒரு பதிலைச் சொல்லி, அவனுடைய வாயை அடைத்ததுடன். பெண்கள்தான் செக்ஸில் அதிகம் இன்பம் அடைவார்கள் என்பதை ஒரு அற்புதமான உதாரணத்துடன் விளக்கி நிரூபணம் செய்தாள்.

என்ன சொலியிருப்பாள் செண்பகவ்ல்லி?

அதை இங்கே சொல்ல முடியாது. சைவ மாணவர்கள் போர்க் கொடி தூக்கிவிடுவார்கள். உங்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள ஆவல் என்றால், வகுப்பறையை விட்டு வெளியே வாருங்கள். அதாவது என் மின்னஞ்சல் முகவரிக்கு வாருங்கள். பதில் கிடைக்கும். அத்துடன் உபரியாக இன்னொரு ப்ளேட் அசைவ நகைச்சுவையும் கிடைக்கும்

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com -  Subject boxல் மறக்காமல் Post dated 4.4.2013 என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++==

12 comments:

  1. வருகிறோம் நாளைய வகுப்பிற்கு
    வணக்கங்களுடன்..

    ReplyDelete
  2. Is your account hacked or something?

    By the way...... Senbagavalli, Sembagaraman..... 6 digit salary.... drinks party...... a little mismatch.

    Then......

    Madiwala area has multi storeyed apartments? I have not seen any. And I live in Bangalore. :)

    :P :P

    chumma :)

    ReplyDelete
  3. செண்பகவல்லித் தாயார் உடனுறை பூவனேஸ்வர் திருக்கோயில் கோவில்பட்டியில் உள்ளது.

    (ஜெய்ஹிந்த்) செண்பகராமன் பிள்ளை காந்திஜி, சுபாஷ் போஸ் காலத்திற்கு முன்னரே ஆயுதப்போர் மூலம் நம் நாட்டு விடுதலையை அடைய முயற்சி செய்தவர். அதற்காக ஜெர்மனி சென்றார்.முதல் உலகப்போர் சமயம், இரண்டாவது உலகப்போரின் போது சுபாஷ் போஸ் முயற்சி செய்தததை, செண்பகராமன் பிள்ளை செய்தார்.

    இங்கே அவரைப்பற்றி வாசிக்கவும்:
    http://en.wikipedia.org/wiki/Chempakaraman_Pillai
    ===================================

    ஆண்களுக்கு 'பவர்' கொடுக்க ஆயிரம் வகையான லேகியங்களும், மாத்திரைகளும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை ஆகின்றன.
    தன்னால் தன் துணையைத் திருப்திபடுத்த முடியவில்லை என்ற தாழ்வுணர்ச்சியை அதிகமான ஆண்கள் வெளிப்படுத்துவதால் தான் பழனியில் இருந்து 'பரம்பரை' சித்த மருத்துவர்கள் புற்றீசல் போலக் கிளம்பி சாதா, ஸ்பெஷல், சூப்பெர் ஸ்பெஷல் மருந்துகளை வியாபாரம் ஆக்கியுள்ளனர்.
    சில குழுக்களில் ஒரு ஆணே பல பெண்களுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அங்கெல்லாம் இந்த மருந்துகள் சக்கை போடு போடுகின்ற‌ன.
    உதாரணமாக தஞ்சை‍=குடந்தை சாலையில் உள்ள பல ஊர்கள்.





    ReplyDelete
  4. நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/

    ReplyDelete
  5. நன்றி வாத்தியார் (நகைச்சுவைக்காகவும் சமர்ப்பணம் என்று சொன்னதற்காகவும்). எனக்கிருக்கும் வேலை பளு காரணமாக பாடம் படிப்பதோடு நின்று விடுகிறேன். பின்னூட்டம் இடுவதில்லை. அடுத்த வாரம் நிலைமை சரியாகி விடும்.

    முதல் நகைச்சுவை. நல்ல கணவன். நல்ல மனைவி. ஜாடிக்கேத்த மூடி என்று சொல்லலாமோ.

    இரண்டாவது? மின்னஞ்சல் அனுப்பி முழுதுமாகத் தெரிந்துக் கொண்டு மின்னஞ்சலிலேயே என் கருத்தை சொல்லிவிடுகிறேன்.

    அது சரி, உங்களுக்கு 5ல் அல்லது 8ல் சுக்கிரன் இருக்கிறாரோ.

    ReplyDelete
  6. /////Blogger அய்யர் said...
    வருகிறோம் நாளைய வகுப்பிற்கு
    வணக்கங்களுடன்../////

    யாரங்கே? நம விசுவநாத அய்யரை, வகுப்பறை வண்டியில் அழைத்துக்கொண்டுப்போய், அவருடைய வீட்டில் பத்திரமாக சேர்த்துவிட்டு வாருங்க்ள!!

    ReplyDelete
  7. /////Blogger Bhuvaneshwar said...
    Is your account hacked or something?
    By the way...... Senbagavalli, Sembagaraman..... 6 digit salary.... drinks party...... a little mismatch.
    Then.....
    Madiwala area has multi storeyed apartments? I have not seen any. And I live in Bangalore. :)
    :P :P
    chumma :)//////

    கல்யாண வீட்டிலேயே கலாட்டா செய்கிறவர். ‘அந்த’ வீடு கிடைத்தால் விடவா போகிறீர்கள்? சும்மா என்பது எனக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள்?

    ReplyDelete
  8. ////Blogger thiratti meenakam said...
    வணக்கம் உறவே
    மீனகம் திரட்டியில் உங்கள் இணையத்தை பதியவும். உங்களின் இடுகைகள் செய்தியோடை (RSS Feed) வாயிலாக எளிதாக திரட்டப்படும்...
    http://www.thiratti.meenakam.com//////

    நல்லது. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    செண்பகவல்லித் தாயார் உடனுறை பூவனேஸ்வர் திருக்கோயில் கோவில்பட்டியில் உள்ளது.
    (ஜெய்ஹிந்த்) செண்பகராமன் பிள்ளை காந்திஜி, சுபாஷ் போஸ் காலத்திற்கு முன்னரே ஆயுதப்போர் மூலம் நம் நாட்டு விடுதலையை அடைய முயற்சி செய்தவர். அதற்காக ஜெர்மனி சென்றார்.முதல் உலகப்போர் சமயம், இரண்டாவது உலகப்போரின் போது சுபாஷ் போஸ் முயற்சி செய்தததை, செண்பகராமன் பிள்ளை செய்தார்.
    இங்கே அவரைப்பற்றி வாசிக்கவும்:
    http://en.wikipedia.org/wiki/Chempakaraman_Pillai
    ஆண்களுக்கு 'பவர்' கொடுக்க ஆயிரம் வகையான லேகியங்களும், மாத்திரைகளும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை ஆகின்றன.
    தன்னால் தன் துணையைத் திருப்திபடுத்த முடியவில்லை என்ற தாழ்வுணர்ச்சியை அதிகமான ஆண்கள் வெளிப்படுத்துவதால் தான் பழனியில் இருந்து 'பரம்பரை' சித்த மருத்துவர்கள் புற்றீசல் போலக் கிளம்பி சாதா, ஸ்பெஷல், சூப்பெர் ஸ்பெஷல் மருந்துகளை வியாபாரம் ஆக்கியுள்ளனர்.
    சில குழுக்களில் ஒரு ஆணே பல பெண்களுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அங்கெல்லாம் இந்த மருந்துகள் சக்கை போடு போடுகின்ற‌ன.
    உதாரணமாக தஞ்சை‍=குடந்தை சாலையில் உள்ள பல ஊர்கள்.//////

    அறிவு ஜீவி சார் நீங்கள்! எல்லாவற்றிற்கும் தகவல் வைத்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  10. ////Blogger Jobs said...
    நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/////

    நல்லது. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger Ak Ananth said...
    நன்றி வாத்தியார் (நகைச்சுவைக்காகவும் சமர்ப்பணம் என்று சொன்னதற்காகவும்). எனக்கிருக்கும் வேலை பளு காரணமாக பாடம் படிப்பதோடு நின்று விடுகிறேன். பின்னூட்டம் இடுவதில்லை. அடுத்த வாரம் நிலைமை சரியாகி விடும்.
    முதல் நகைச்சுவை. நல்ல கணவன். நல்ல மனைவி. ஜாடிக்கேத்த மூடி என்று சொல்லலாமோ.
    இரண்டாவது? மின்னஞ்சல் அனுப்பி முழுதுமாகத் தெரிந்துக் கொண்டு மின்னஞ்சலிலேயே என் கருத்தை சொல்லிவிடுகிறேன்.
    அது சரி, உங்களுக்கு 5ல் அல்லது 8ல் சுக்கிரன் இருக்கிறாரோ.////

    எட்டில் சுக்கிரன். சரியாகச் சொன்னீர்கள். அவர் அங்கிருந்து இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார். அதனால்தான் எழுத்தின் மேல் இத்தனை ஆர்வம். எட்டில் குருதான் இருக்கக்கூடாது. சுக்கிரன் இருந்தால் நல்லதுதான்!

    ReplyDelete
  12. நன்றி. அருமையான பதிவு.

    // சுக்கிரன் இருந்தால் நல்லதுதான்!// - சில மாதம் முன் என் தயார் - என்னுடைய ஜாதகத்தை திருமண பொருத்தம் பார்க்க கொண்டுபோய் ஒரு ஜோதிடரிடம் கட்டியுள்ளார் . ஜோதிடர் 8இல் சுக்ரன் இருக்கிறார் அதனால் எது களத்திர தோஷம் இருக்கிறது என்று சொல்லிறுக்கிறார்!!!.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com