மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.2.13

மனக் குழப்பத்திற்கும் அதுதான்டா தீர்வு!

மனக் குழப்பத்திற்கும் அதுதான்டா தீர்வு!

மனவளக் கதை

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர்கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டு வரச் சொன்னார்.

சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏறி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி, பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

”இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது?” என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார்

நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது. சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான்.

புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிற்கு மெல்லிய குரலில் சொல்லலானார்.

“தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்?”

“நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!”

“நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?”

“ஆமாம் சுவாமி!”

“நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். *It will happen. It is effortless." மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! *it is an effortless process!”
--------------------------
இது இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. தமிழ் மொழியாக்கம் மட்டும் அடியவனுடையது

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

  1. குரு வணக்கம்.
    பொதுவாக ஜென், புத்த பகவான் கதைகள் என்றாலே எனக்கு ஆர்வம் ஜாஸ்தி..கடந்த இரண்டு நாட்களாகவே மனதில் சில குழப்பங்கள்.இந்தக்கதை மருந்தாகிறது...மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  2. அய்யா வணக்கம் . மனக்குழப்பத்திற்கு அருமையான தீர்வு . நன்றி

    ReplyDelete
  3. மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். *It will happen. It is effortless." மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! *it is an effortless process!”/

    தெளிவான பகிர்வுகள் .. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. மனக் குழப்பம் இருக்கும் போது செய்கின்ற காரியங்கள் சரியாக அமையாது.

    ReplyDelete
  5. "செம்மான் மகளைத் திருடும் திருடன்,
    பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
    "சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
    அம்மா பொருளன்றும் அறிந்திலனே!"
    -அருணகியார்.
    "சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
    அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!"
    - பட்டினத்தார்


    "சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை; மெளனியாய்ச்
    சும்மா இருக்க அருளாய்!
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமே பரம்
    ஜோதியே சுகவாரியே!"



    "கந்து உக மதக்கரியை வசமா நடத்தலாம்;
    கரடி,வெம்புலி வாயையும்
    கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
    கட்செவி எடுத்து ஆட்டலாம்;
    வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
    வேதித்து விற்று உண்ணலாம்;
    வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
    விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
    சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
    சரீர‌த்திலும் புகுதலாம்;
    ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
    தன்னிரில் சித்தி பெறலாம்;
    சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
    திறம் அரிது! சத்து ஆகி என்
    சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
    தேஜோ மய ஆனந்தமே!
    - தாயுமானவர்

    ReplyDelete
  6. மொட்டை அடித்து முப்புரிநூலுடன் ஒன்றுபோல் உள்ளவர்கள் சாதுக்கள்,அதாவது சன்னியாசிகள் அல்ல என்று தோன்றுகிறது.ஏதோ ஆந்திரா போன்ற தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குழு அடையாளம் கொண்ட பொது மக்கள் என்று நான் நினைக்கிறேன்.வீர சைவர்கள் போன்றோர் ஆக இருக்கலாம்.மொட்டை போட்ட சிகை அலங்காரக் கலைஞர்களுக்கு நல்ல வருமானம் போல!! :‍):)

    ReplyDelete
  7. கதை அருமை அதன்
    சதையை எடுத்துச் சொன்ன விதம் பேஷ்

    வழக்கம் போல்
    வலமாக சுழல விட இந்த பாடல் இன்று

    மயக்கமா? கலக்கமா?
    மனதிலே குழப்பமா?
    வாழ்க்கையில் நடுக்கமா?...

    வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல்தோறும் வேதனையிருக்கும்

    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி நிலவும்

    ReplyDelete
  8. மொட்டையுடன்
    முப்புரியுடன் உள்ள படத்தை பார்த்ததும்

    பகிர்ந்து கொள்கிறோம்
    பக்குவமாக இந்த குறளை

    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்த தொழித்து விடின்

    ReplyDelete
  9. எவ்வளவு எளிமையான எடுத்துகாட்டு.எத்தனையோ தடவை இந்த நீர்நிலைகளை பார்க்கிறோம்.நமக்கு புலப்படவில்லை.மகான் மகான் தான்.

    -அருள், தான்சானியா

    ReplyDelete
  10. ////Blogger Thava Kumaran said...
    குரு வணக்கம்.
    பொதுவாக ஜென், புத்த பகவான் கதைகள் என்றாலே எனக்கு ஆர்வம் ஜாஸ்தி..கடந்த இரண்டு நாட்களாகவே மனதில் சில குழப்பங்கள்.இந்தக்கதை மருந்தாகிறது...மிக்க
    நன்றி ஐயா.////

    உங்களின் மனமுவந்த பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

  11. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா வணக்கம் . மனக்குழப்பத்திற்கு அருமையான தீர்வு . நன்றி////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ////Blogger eswari sekar said...
    vanakam sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது

    தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது

    அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். *It will happen. It is effortless." மன அமைதி என்பது

    இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! *it is an effortless process!”/
    தெளிவான பகிர்வுகள் .. பாராட்டுக்கள்.////

    எழுதுபவர்களுக்குப் பாராட்டுக்கள்தான் ஊக்க மருந்து. மேலும் மேலும் எழுதவைக்கும். உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. ////Blogger Advocate P.R.Jayarajan said...
    மனக் குழப்பம் இருக்கும் போது செய்கின்ற காரியங்கள் சரியாக அமையாது.////

    உண்மைதான்!!!!!
    நன்றி வழக்குரைஞர் சார்!

    ReplyDelete
  15. /////Blogger kmr.krishnan said...
    "செம்மான் மகளைத் திருடும் திருடன்,
    பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
    "சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
    அம்மா பொருளன்றும் அறிந்திலனே!"
    -அருணகியார்.
    "சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
    அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!"
    - பட்டினத்தார்
    "சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை; மெளனியாய்ச்
    சும்மா இருக்க அருளாய்!
    சுத்தநிர்க்குணமான பரதெய்வமே பரம்
    ஜோதியே சுகவாரியே!"
    "கந்து உக மதக்கரியை வசமா நடத்தலாம்;
    கரடி,வெம்புலி வாயையும்
    கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
    கட்செவி எடுத்து ஆட்டலாம்;
    வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
    வேதித்து விற்று உண்ணலாம்;
    வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
    விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
    சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
    சரீர‌த்திலும் புகுதலாம்;
    ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
    தன்னிரில் சித்தி பெறலாம்;
    சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
    திறம் அரிது! சத்து ஆகி என்
    சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
    தேஜோ மய ஆனந்தமே!
    - தாயுமானவர்/////

    அருணகியார், பட்டினத்தடிகள், தாய்மானவர் என்று கலக்கிவிட்டீர்கள் சுவாமி, நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  16. ////Blogger kmr.krishnan said...
    மொட்டை அடித்து முப்புரிநூலுடன் ஒன்றுபோல் உள்ளவர்கள் சாதுக்கள்,அதாவது சன்னியாசிகள் அல்ல என்று தோன்றுகிறது.ஏதோ ஆந்திரா போன்ற தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குழு அடையாளம் கொண்ட பொது மக்கள் என்று நான் நினைக்கிறேன்.வீர சைவர்கள் போன்றோர் ஆக இருக்கலாம்.மொட்டை போட்ட சிகை
    அலங்காரக் கலைஞர்களுக்கு நல்ல வருமானம் போல!! :‍):)////

    நாகாலாந்திலிருந்து குழுவாக வந்திருந்த சாதுக்கள் அவர்கள். யாஹூ தளத்தில் செய்தியுடன் புகைப்படமும் வந்திருந்தது சுவாமி!

    ReplyDelete
  17. ////Blogger அய்யர் said...
    கதை அருமை அதன்
    சதையை எடுத்துச் சொன்ன விதம் பேஷ்
    வழக்கம் போல்
    வலமாக சுழல விட இந்த பாடல் இன்று
    மயக்கமா? கலக்கமா?
    மனதிலே குழப்பமா?
    வாழ்க்கையில் நடுக்கமா?...
    வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல்தோறும் வேதனையிருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி நிலவும்/////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  18. ////Blogger அய்யர் said...
    மொட்டையுடன்
    முப்புரியுடன் உள்ள படத்தை பார்த்ததும்
    பகிர்ந்து கொள்கிறோம்
    பக்குவமாக இந்த குறளை
    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்த தொழித்து விடின்/////

    திரையிசைப்பாடல்கள்தானே உங்கள் டிரேட் மார்க! சரி குறளையும் சேர்த்துக்கொள்கிறோம் விசுவநாதன்!

    ReplyDelete
  19. //Blogger Arul said...
    எவ்வளவு எளிமையான எடுத்துகாட்டு.எத்தனையோ தடவை இந்த நீர்நிலைகளை பார்க்கிறோம்.நமக்கு புலப்படவில்லை.மகான் மகான் தான்.
    -அருள், தான்சானியா/////

    ஆமாம், அதில் சந்தேகமில்லை. அதனால்தான் அவர்கள் மக்களின் மனதில் இடம் பிடித்திருக் கிறார்கள்.

    ReplyDelete
  20. நன்றாகத்தான்(டா) எழுதுகின்றீர்கள்! மரியாதை நன்று எனப்படுகிறது ! :-)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com