மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.4.12

அனைவருக்கும் பொதுவானது எது?

 மாணவர் மலர்

இன்றைய மாணவர் மலரை 7 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.

இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணத்தில் இருந்து திரும்பியவுடன், முதல் வேலையாக மாணவர் மலரை வலைஎற்றியுள்ளேன். சற்றுத் தாமதமாகிவிட்டது. பொறுத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
 ++++++++++++++++++++++++++++++++++++++



வழிபடும் முறை எத்தனை வகைப்படும்?
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு.

முற்காலத்தில் நமது இந்து தர்மத்தில் ஏராளமான வழிபாட்டு முறைகள் இருந்தன. ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்,  அவை எல்லாவற்றையும் முறைப்படுத்தி, ஆறு விதமான வழிபாட்டு முறைகளாகத் (ஷண்மத ஸ்தாபனம்) தொகுத்தார். அவை,
 1.விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் காணபத்யம்.
 2.சிவபெருமானை பிரதான தெய்வமாக வழிபடும் சைவம்.
 3. திருமாலை முக்கியக் கடவுளாக வழிபடும் வைணவம்.
 4. முருகப் பெருமானை முதல்வனாக வழிபடும் கௌமாரம்.
 5.அம்பிகையைப் போற்றி வழிபடும் சாக்தம்.
 6. சூரிய பகவானை  முக்கிய தெய்வமாக‌ வழிபடும் சௌரம்.
என்பன.
அன்பே சிவம். எல்லாம் சிவமயம் என்னும்  உன்ன‌தக் கொள்கையை உள்ளடக்கியது சைவம்.  சைவ சமயம் அநாதியானது (ஆதி= தொடக்கம், தொடங்கிய காலம் அறிய இயலாதது)  சைவ சமயத்தினர், சிவபெருமானை, முக்கியக் கடவுளாக வழிபடுகிறார்கள்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
(திருமந்திரம் : -270)

அனத்துயிரினிடத்தும் ஈசன் உறைவதால், ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும் என்பது, சைவம் காட்டும் உயரிய நெறி.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே (திருமந்திரம் : -1857) என்று திருமூலர், மன்னுயிர்க்குச் செய்தல் மகேசனைச் சென்று சேரும் என வலியுறுத்துகிறார்.
 
சைவசித்தாந்தம் என்னும்  அற்புத நெறி, சைவ சமயத்தின்உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.

இறைவன், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறான். என்பதே சைவசித்தாந்தக் கொள்கையாகும்.
இது, பசு ( ஆன்மா), 

பதி (இறைவன்), 

பாசம் (ஆணவம், கன்மம்,மாயை எனப்படுகிற‌ மும்மலங்கள் அதாவது குறைபாடுகள்) என்கின்ற முப்பெரும்  உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது.
இதில், நான், எனது எனும் கருத்தே ஆணவம். 

கன்மம் என்பது செயல்கள்(வினை) மற்றும் அவற்றின் விளைவுகள்,(வினைப்பயன்கள்).வினைகளில் மூவகை உண்டு. அவை.

1.சஞ்சிதம் (பழ வினை), 2. ஆகாமியம் (வினைப்பயனை அனுபவிக்கும் பொழுதுஏற்படும் வினைப்பயன்கள்) 3.பிராரத்தம் (இப்பிறவியில் செய்யும் செயல்களின் வினைப்
பதிவுகள் )ஆகும்.

மாயை ‍மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற‌ சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது. சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என  மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்ற‌ன.


ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.  (திருமந்திரம்-எட்டாம் ந்திரம்)


 அரிசியைதவிடுஉமிமுளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல்  மனித ஆன்மாவைஆணவம்

கன்மம்மாயையாகிய முக்குற்றங்களும்சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.
சிவனார் ,ஆன்மாக்களின் முக்குற்றங்களை நீக்கி, சிவ சாயுஜ்ய நிலையை அடையச் செய்வதற்காகச் செய்யும்,தொழில்கள், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் ,அருளல் என்று ஐவகைப்படும்

படைத்தல்: முழு முதல் பிரம்ம நிலையில் இருந்து, தனு, கரண, புவன, போகங்களைப் படைத்தல். (தனு ‍= உடல் ,கரணம் ‍= மனம் முதலிய கருவி, புவனம்= நாம் காணும் இந்த உலகம்,  போகம் அனுபவிக்கப்படும் பொருள்).
காத்தல்: படைத்தவற்றைக் காத்தல்.
அழித்தல்: படைத்தவற்றை,முழு முதல் பிரம்ம நிலையில் ஒடுக்குதல்,
மறைத்தல்: ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல்.
அருளல்: ஆன்மாக்களின் பாசத்தினை நீக்கி, சிவதத்துவத்தை உணர்த்துதல்.

சித்தம் சிவமாகி செய்வதெல்லம் தவமாகிய சிவனடியார்கள் எண்ணற்றோர். சிவனடியார்கள் சிலரைப் பற்றி இங்கு நாம் காணலாம்.

மெய்கண்டார்.:

சைவ சித்தாந்த நூல்களுள் முதன்மையாகக் கருதப்படுவது சிவஞான போதம். இந்த ஒப்பற்ற நூலை உலகுக்குத் தந்தவர் மெய்கண்ட தேவர். புறச்சந்தானக் குரவர்கள் நால்வருள் (மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார்)  முதன்மையானவர் இவர். சைவ சமயத்துக்கான குரு மரபையும், சைவ சித்தாந்த சாத்திரத்தையும் உருவாக்கியவர் இவரே. இவரது காலம் கி.பி. 13ம் நூற்றாண்டின் முற்பகுதி.

(சந்தானக் குரவர்கள், ஒருவருக்கொருவர், குரு சீட உறவு கொண்டோர். மடங்களை ஸ்தாபித்து, அதன் மூலம் சைவ சமயம் தழைக்கச் செய்த பெருமையுடையவர்கள்)

திருவெண்ணெய் நல்லூரில், அச்சுதக் களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். குழந்தைப் பேறின்மையால் வருந்திய அவர், அவர்தம் குருவாகிய சகலாகமப் பண்டிதரை சென்று பணிந்தார். பண்டிதர், திருமுறைப்பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார். அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய 'கண்காட்டும் நுதலானும்' என்று தொடங்கும் திருவெண்காட்டுப் பதிகத்தில், இரண்டாம் பாடலான, "பேயடையா பிரிவெய்தும்;" எனத் தொடங்கும் பாடல் வந்தது. ஆகவே, அவர், அச்சுதக் களப்பாளரையும், அவர் மனைவியையும், திருவெண்காட்டுக்குச் சென்று, அங்குள்ள மூன்று குளங்களில் நீராடி, இறைவனாரைப் பூசித்து வரச் சொன்னார்.

'இப்பிறவியில் உங்களுக்குக் குழந்தைப் பேறு இல்லையாயினும், சம்பந்தனின், பதிகத்தின் மேல் கொண்ட நம்பிக்கைக்காக, ஞானக்குழந்தை ஒன்றை அருளுவோம்' என்று கனவில் சிவனார் உரைக்க, அதன்படி, இறையருளால், ஒரு ஞானக் குழந்தையைப் பெற்றார் அச்சுதக் களப்பாளர். இறைவன் திருநாமத்தையே, சுவேதவனப் பெருமாள் என்று குழந்தைக்குச் சூட்டினார். ஒருநாள், தன் தாய் மாமனின் இல்லத்தின் வெளியே, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த சுவேதவனப் பெருமாளை, ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்த, அகச் சந்தானக் குரவர்கள் நால்வருள் (திருநந்திதேவர், சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி முனிவர்) ஒருவரான‌ பரஞ்சோதி முனிவர் கண்டு, கீழிறங்கி வந்து, அவருக்குச் சிவஞான சூத்திரங்களையும் மெய்ஞ்ஞானத்தையும் அருளிச் செய்தார். அவருக்குத் தம் குருவின் பெயரான சத்திய ஞான தரிசினி (''மெய்கண்டார்' ) என்ற திருநாமத்தையும் சூட்டினார்.

மெய்கண்டார், தம் குரு அருளிய சிவஞானசூத்திரங்களைத் தமிழில் 'சிவஞான போதம்' என்ற பெயரில் அருளினார். 

தன்னை அறிவித்துத் தான் தானாய்ச் செய்தானைப்'
பின்னை மறத்தல் பிழையல் அது -------முன்னவனே
தானே தானாச் செய்தும் தைவமென்றும் தைவமே 
மானே தொழுகை வலி. (மெய்கண்டார், சிவஞான போதம்)

இந்தப் பாடலில், ' தன்னுள் இருந்து, தன் அம்சமாகவே அனைத்தையும் படைத்த சிவனாரை, மறவாது ஏத்துதல் பிறவிக் கடன்' என்பதைத் தெள்ளென உணர்த்துகிறார் மெய்கண்டார்.

ஒரு நாள், மக்களுக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார் மெய்கண்டார். அவரது குல குருவாகிய சகலாகமப் பண்டிதர் அதைக் கண்டு, மனம் பொறாது, அவரிடம் சென்று, 'ஆணவமாவது யாது?' என்று கேட்க, அதற்கு அவர், எதுவும் பேசாமல், விரல்களால் பண்டிதரைச் சுட்டிக் காட்டினார்.

உண்மை உணர்ந்த பண்டிதர், மெய்கண்டாரின் கால்களில், வீழ்ந்து பணிந்தார். மெய்கண்டார்,அவருக்கு 'அருணந்தி சிவம்' எனும் தீக்ஷா நாமம் தந்து சீடராக ஏற்றுக் கொண்டார்.  அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான போதத்தை முதல் நூலாகக் கொண்டு, சிவஞான சித்தியார் எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார்.


வாழ்வியல் நெறிகளில் ஒழுகுவதோடு, இறைவனைப் பூசை செய்யும் அவசியத்தை, சிவஞான சித்தியாரில் அவர் தெளிவுபடக் கூறியுள்ளார்.



காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,
 மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்
 வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;
 பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே" (சிவஞான சித்தியார்)

அதிபத்த நாயனார்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் அதிபத்த நாயனார். இவர், நாகையின் கடலோரப் பகுதியான, நுளைப்பாடியில் பரதவர் குலத்தில் உதித்தவர். சிவபெருமானிடத்தில் மாறாத பக்தி கொண்ட சிறந்த சிவனடியாரான இவர் அக்குலத்துத் தலைவரும் ஆவார். 

அனைய தாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து
மனைவ ளம்பொலி நுளையர்தங் குலத்தினில் வந்தார்
புனையி ளம்பிறை முடியவர் அடித்தொண்டு புரியும்
வினைவி ளங்கிய அதிபத்தர் எனநிகழ் மேலோர்.  (சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர் புராணம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், அதிபத்த நாயனார் புராணம்)

அவர், தினந்தோறும் பிடிக்கப்பட்டு வரும் மீன்களில் சிறந்த மீனொன்றை, "இது தில்லைக் கூத்தாடும் இறைவனுக்காக" என்று மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார். இதைப் பலகாலம் செய்து வந்தார். ஒரு நாள் ஒரு மீன் மட்டுமே அகப்படினும், அதையும் இறைவனுக்கே என்று கடலில் விட்டுவிடுவார்.

இவ்வாறிருக்க, இறைவன், அடியவர் பெருமையை உணர்த்தத் திருவுளம் கொண்டு, பலநாட்கள் ஒரு மீன் மட்டுமே கிடைக்கச் செய்தார். அதையும் அதிபத்தர், கொள்கை மாறாது, மீண்டும் கடலிலேயே விட்டு வந்தார். தன் பெருஞ்செல்வம் சுருங்கி வறியவர் ஆன போதும் அவர் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. 

மீன்வி லைப்பெரு குணவினில் மிகுபெருஞ் செல்வம்
தான்ம றுத்தலின் உணவின்றி அருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர் பட்டமீன் ஒன்று
மான்ம றிக்கரத் தவர்கழற் கெனவிட்டு மகிழ்ந்தார். (திருத்தொண்டர் புராணம்)

ஒரு நாள், இறைவன், பொன்னும் மணியும் பதித்த, விலை மிகுந்த அற்புதத்தன்மையுள்ள ஒரு மீன் மட்டும், அதிபத்தருக்குக் கிடைக்கச் செய்தார். ஆயினும் , அதிபத்தர், கொண்ட உறுதி தவறாது, அதனையும் கடலிலேயே விட்டு விட்டார். அவ்வாறு அவர் செய்ததும், பொன்னாசை இல்லா, கொண்ட கொள்கையிலே தளராத உறுதிப்பாட்டுடைய அதிபத்தர் முன், இறைவன், நந்திதேவர் மேல் எழுந்தருளினார்.

அப்போது,  ஐந்து விதமான தேவ‌ வாத்தியங்கள் ஒலித்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். எம்பெருமானார்,பக்தியிற்ச் சிறந்த‌ அடியவருக்கு, சிவ சாயுஜ்ய பதவி அருளினார்.

பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
அஞ்ச லிக்கரம் சிரமிசை யணைத்துநின் றவரை
நஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோகம் நண்ணித்
தஞ்சி றப்புடை அடியர்பாங் குறத்தலை யளித்தார். (திருத்தொண்டர் புராணம்)

சிவனாரின் மற்றொரு திருவிளையாடலைப் பார்க்கலாம்.

குசேல வழுதிப் பாண்டியன, இலக்கண இலக்கியங்களில் கைதேர்ந்த பாண்டிய மன்னன். அதன் காரணமாக ஆணவம் மிகக் கொண்டிருந்தான். அச்சமயம், இடைக்காடர் எனும் புலவர், தான் இயற்றிய பிரபந்த நூலை, மன்னன் முன் படித்துக் காட்ட வந்தர். மன்னன், நூலை வாசிக்கச் சொன்னாலும் அவன் மனம் அதில் இல்லை. தேவையற்ற இடங்களில் 'மிக நன்றாக இருக்கிறது' என்று ஒப்புக்குச் சொன்னான். இடைக்காடர், மனம் நொந்தார். அவையிலிருந்து, நேரே, சோமசுந்தரக்கடவுள் உறையும் ஆலயத்திற்குச் சென்று,அவரிடம் மனம் பொறாது, தன் வேதனைகளைக் கொட்டினார். 

சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே  தன்னைச் சார்ந்தோர் 
நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார்   வேம்பன் 
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன்  என்று புகலக் கேட்டுச் 
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி  
(பரஞ்சோதி முனிவர், திருவிளையாடற்புராணம், இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்)

பக்தரை மதிக்காத மன்னனைத் திருத்த, மறைகாணா திருவடிகளுடையோன் திருவுளம் கொண்டான். மறுநாள், திருச்சன்னதி திறந்தபோது அனைவரும் அதிர்ந்தனர். இறையனார், மீனாட்சி அம்மை இருவரது விக்கிரகங்களையும் காணவில்லை. மன்னனுக்குச் செய்தி போயிற்று. அவன் பதறி, அழுது, தொழுதான். அப்போது, வைகையின் தென்கரையில் புதிதாக ஒரு மண்டபம் தோன்றி அதில் சிவலிங்கம் இருக்கும் செய்தி மன்னனிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அசரீரி மூலமாக, சிவனார்."குசேலவழுதி, என் பக்தனை அவமதித்துப் பெரும்பிழை செய்தாய். பக்தர்களுக்கு மதிப்பில்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். இந்த மதுரையில் உள்ள பல சுயம்புலிங்கங்களுள், வட திசை அதிபனான குபேரன் பூஜித்த இந்த லிங்கத்தைத் தேர்ந்தெடுத்து நான் ஐக்கியமாகியுள்ளேன்." என்றார்.
ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போ தேனும் 
நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு 
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே 
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் 
                              வந்தேம் என்னா. (திருவிளையாடற்புராணம்)

 உண்மை உணர்ந்த பாண்டியன், இடைக்காடருக்கு விழா எடுப்பதாக வாக்களித்து, மன்னிப்பு வேண்டினான். இறைவன் மீண்டும் திருக்கோவிலில் எழுந்தருளுவதாகவும், குபேரலிங்கம் உள்ள இடம் வடதிருவாலவாயாக விளங்கும் எனவும் வரமளித்தார். 

ஈசன் அனைத்துயிர்க்கும் நேசன். புராணங்கள் இயற்றப்பட்டதன் நோக்கம், மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தி, நல்வழி நடக்கச் செய்வதே. நிஜமென்று போற்றினாலும், கதையென்று கருதினாலும் அவை கூறும் உட்பொருள் உணர்தல் உலக வாழ்வுக்கு நலம் பயக்கும்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்,
பெங்களூரு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 






அனைவருக்கும் பொதுவானது எது?
ஆக்கம்: கே முத்துராமகிருஷ்ணன், லால்குடி
கலியுகம் வந்துவிட்டதற்கு அடையாளம் சொல்லும் போது பல அடையாளங்களில் ஒன்றாக 'கலியுகத்தில் உணவு காசுக்கு விற்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளதாம்.

உணவை விற்பது என்பது நமது நாட்டு வழக்கம் அல்ல.உணவு என்பது பசியுள்ள அனைவருக்கும், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பாராமல், கொடுக்கப்பட வேண்டும் என்பதே நம் நாட்டு மரபு.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
என்பது நமது அடிநாதம்.

'அற்றார் அழிபசி தீர்த்தல்', 'வறியார்க்கு ஈதல்', 'விருந்து எதிர் கோடல்' என்பவையெல்லாம்  நமது பண்பாடு.

இவை மதம் நமக்கு இட்டுள்ள கடமையோ அல்லது கட்டுப்பாடோ அல்ல.
'இவற்றை செய்யாதவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை' என்பது போன்ற
பயம் காட்டுதல் எதுவும் இல்லாமலேயே நமது மக்கள் இயல்பாக, இவற்றைச் செய்கிறார்கள்.அவர்களுக்கு இப்படிச் செய்வதால் தங்களுக்குப் புண்ணிய்ம் கிடைக்கும் என்ற 'குறிஎதிர்ப்பு',எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.

மற்றவர்கள் காணத் தான் மட்டும் சாப்பிட்டால் வயிற்றை வலிக்கும் என்று குழந்தையில் இருந்து கற்பிப்பது நமது வழக்கம்.

காக்காக்கடி கடித்து கம்மர் கட்டைப் பங்கு போடுவது நமது விளையாட்டு.

நமது நாட்டில் பேச்சு துவங்கும் முறையே 'சாப்பிட்டாச்சா?' 'என்ன சாப்பாடு?''என்ன சமையல்?'என்பதாகவே இருக்கும்.

இதுவே வெளிநாட்டுக்காரரகள் தட்ப வெப்ப நிலை பற்றிப் பேசி பேச்சைத் துவக்குவார்கள்.

ஐந்து பிள்ளைகளை வளர்க்கும் விதவை ஏழை அன்னை, ஆறாவதாக குப்பைத் தொட்டிக் குழந்தையையும் தன் குடிசையில் சேர்த்துக் கொள்வது இங்கேதான் நடக்கும்.

'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்பது தான் நமது லட்சியம்.

"தனி மனிதனுக்கு உணவு இல்லயெனில்...." என்று சிந்திப்பதும் நாம் தான்.

"வெறும் சோற்றுக்கோ வந்தது இந்தப் பஞ்சம்?" என்று சொல்லக் கொதிப்பதும் நாம் தான்.

மாதுளங் காய்களை அணில் கடிக்காமல் இருக்கத் துணி கட்டப்பட்டது.எல்லாக் காய்களிலும் கட்டியாச்சா என்று இளம் பண்ணையார் வந்து மேற்பார்வை பார்த்தார்.அந்த வாலிபப் பண்ணையாரின் கொள்ளுப் பாட்டியார் அங்கே வந்தார்.

"என்னடா!எல்லாக் காயிலும் துணி சுத்திப் போட்டீங்க?!  பத்து காய சும்மா உடுங்கடா" என்றார்.

"ஏன்? எதுக்கு?"

"எதுக்கு? அணில் கடிக்க‌த்தான்" என்றார்.

பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்பரிந்து அன்னமிடுதலே நமது  இயல்பு.

இதனை அன்ன 'தானம்' என்பதோ, 'தர்மம்' என்பதோ வெறும் கூச்சல்.

உங்களுக்குப் பசி வந்திட்டால் எப்படி இயல்பாக உணவை நாடுவீர்களோ
அதுபோலவே பிறருக்கும் பசிவரும் என்று உணர்ந்து அவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வது 'தன்ன்னுயிர் போல் மன்னுயிரையும்' கருதுதல் ஆகும்.

'எல்லோரும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும், அன்னத்தை இலவசமாகக் கொடுக்கக் கூடாது' என்பது வியாபாரக் கண்ணோட்டம்.

மேற்கத்திய நாகரீகம் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது நாகரீகம் மானுட அறத்தை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கத்திய நாகரீகம் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டதால்தான்
மத மாற்றத்திற்காக உணவும்,உடையும், பண்டமாற்றாக அளிக்கப்படுகின்றன‌.

இங்கே செய்யப்படும் எந்த நற்செயலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படுகின்றன.

ஹோட்டல், ரெஸ்டாரென்ட் என்பவை மேற்கத்திய வடிவம்.நமது நாட்டில் உணவளிக்க சத்திரங்கள் உண்டு. சத்திரத்தில் எல்லாம் இலவச உணவுதான்.

"சத்திரத்து சாப்பாட்டுக்கு அப்பண்ண ஐயாங்கார் உத்தரவா?" என்பது ஒரு சொல்லடை.அதாவது அங்கே நிர்வாகம் ஒன்றும் தேவையற்றது என்பது கிடைக்கும் பொருள்.அப்பண்ண ஐயங்காரின் சொந்தச் சொத்துக்களை வேண்டுமானால் அவர் நிர்வகித்துக்கொள்ளலாம். பொது விஷயத்தில் தனி மனிதருக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் இருத்தல் என்பது நமது நாட்டு நடப்பு.

ஒரு பாரதவாசி தன் வாழ்நாளில் சஹஸ்ர போஜனம்(ஆயிரம் உணவு) செய்விக்க வேண்டும் என்பது  எழுதப் படாத எதிர்பார்ப்பு. அதனால்தான் திருமணம் போன்ற நிகழ்வுகளில் பலருக்கும் உணவு அளிக்கப்படுகிறது.

"படமாடக் கோவில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு இங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக்கோயில்  பகவர்க்கு அது ஆமே" என்பது திருமந்திரம்.

ஆண்டவனுக்கு அளிக்கும் நெய்வேத்தியத்தைக் காட்டிலும், அடியவர்க்கு அளித்தல் உகந்தது என்பது பெறப்படுகிறது.

அதாவது ஆண்டவனும் அடியவரும் ஒருவரே என்பதான பாவம் நமக்கு வர வேண்டும்.

"யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே."

இதுவும் திருமூல நாயனார் அருளியதுதான். ஒரு விலவதளம் ஆண்டவனுக்கு, பசுவுக்கு ஒரு பிடி அகத்திக்கீரை,தான் உண்ணும் போது ஒரு கைப்பிடி அன்னமோ, அரிசியோ தானம் செய்வது எல்லோருக்கும் எளிதானது.இம்மூன்றையும் செய்யமுடியாதவர்கள் பிறருக்கு இனிமையான சொற்களையாவது சொல்லலாம். குறைந்த அளவாக நமது மரபுகளின் உட்பொருளை அறிந்து கொள்ளாமலே அவற்றை விமர்சிப்பதையாவது தவிர்க்கலாம்.

"ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின்..."

பசி அனைவருக்கும் பொது. இதில் ஏழை பணக்காரன், உடல் ஊன முற்றவன் என்ற பாகுபாடு இல்லாமல் உணவு இடுவோம்.

நாம் உணவளிப்பதால் எல்லோரும் சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்பதெல்லாம் அதீத கற்பனை. அந்த நேரத்தில் பசிக்கு உணவு அளிப்பது ஒரு கடவுள் சேவை. அதனை செய்ய முற்படுவோம்.

(சென்ற மலரின் தஞ்சாவூராரின் இடுகையின் தாக்க‌த்தல எழுந்த எண்ணங்கள்)

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே முத்துராமகிருஷ்ணன்(லாலகுடி)

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

நாட்டுப்பாடல்
எடுத்துக்கொடுப்பவர்: தேமொழி

[புலிகட் தனுசு அவர்கள் சென்றவார மாணவர் மலரில் கொல்லிமலை அழகி ஒருத்தி தன் வில்லாளன் வருகைக்கு காத்திருப்பதை "காத்திருப்பில் கலங்காதே" என்று கவிதையாக வடித்திருந்தார்.  அதைப் படித்த எனக்கு ஒரு நாட்டுப்புற பாடல் நினைவில் வந்தது.  இந்தப் பாடல் அந்தப் பெண் வில்லாளனுக்கு பாடும் 'எசப்பாட்டு' போன்று அமைந்த பாடல்.  நீங்களும் அதன் பொருத்தத்தை உணர்ந்து வியப்பீர்கள் என்ற எண்ணத்தில் உங்களுக்கு அறியத் தருகிறேன்.]

விளக்கம்:
அவள் மலையடிவாரக் கிராமத்தில் வசிப்பவள். வடக்கேயிருந்து வந்த பாண்டியனைக் காதலித்தாள். அவன் திருமணத்திற்கு நாள் கடத்தினான்.  அவள் அவனைக் கண்டித்தாள். அவன் தேனும், தினைமாவும், மாம்பழமும் கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்துக் கோபத்தைப் போக்கினான். அவன் மலைக்கு வேட்டைக்குச் செல்லும் போது போலீசுக்காரன் மாதிரி அரைக்கால் சட்டையணிந்து துப்பாக்கி கொண்டு செல்லுவான். அவள் அவனுடைய கால் சட்டையில் தனது விலாசத்தை எழுதி விட்டாள். அதுதான் திருமணம் உறுதியாகும் என்ற அவளுடைய நம்பிக்கைக்கு அடையாளம்.

பெண் :    
நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவே போறவரே
குறுக்குச் சவளுறது
கூப்பிட்டது கேட்கலையோ?

சந்தனவாழ் மரமே
சாதிப்பிலா மரமே
கொழுந்தில்லா வாழ் மரமே
கூட இருக்கத் தேடுதனே

உருகுதனே உருகுதனே
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
கண்டிட்டு உருகுதனே
நின்னு சொல்ல மாட்டாம
நில்லுங்க ராஜாவே
நிறுத்துங்க கால் நடய
சொல்லுங்க ராஜாவே
சோலைக்கிளி வாய்திறந்து

வடக்கிருந்து வந்தவரே
வருச நாட்டுப் பாண்டியரே
தொட்டிட்டு விட்டியானா
துன்பங்களும் நேர்ந்திடுமே
தேனும் தினைமாவும்
தெக்குத் தோப்பு மாம்பழமும்
திரட்டிக் கொடுத்திட்டில்ல
தேத்துதாரே எம் மனசை

போலீசு வேட்டி கட்டி
புதுமலைக்குப் போறவரு
போலீசு வேட்டியில
போட்டு விட்டேன் மேவிலாசம்
கோடாலிக் கொண்டைக்காரா
குளத்தூருக் காவல்காரா
வில்லு முறுவல் காரா
நில்லு நானும் கூடவாரேன்

துத்தி இலை புடுங்கி
துட்டுப் போல் பொட்டுமிட்டு
ஆயிலிக் கம் பெடுத்து
ஆளெழுப்ப வாரதெப்போ?


வட்டார வழக்கு:
வருசநாடு-மதுரையில் மலைச்சரிவில் உள்ள ஒரு ஊர்;
கொடுத்திட்டில்ல-கொடுத்துவிட்டு அல்லவா?;
மேவிலாசம்-மேல்விலாசம்.

சேகரித்தவர்: S.M. கார்க்கி
சேகரித்த இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
பக்கம் 113

பேராசிரியர் நா. வானமாமலை,எம் ஏ.,எல்.டி. யின்
"தமிழர் நாட்டுப்பாடல்கள்"
(மூன்றாம் பதிப்பு, 1976)
இது ஒரு நாட்டுடமையாகப்பட்ட நூல் 
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 4
வரைபடம்: கிராமத்துப்பெண்
ஆக்கம்: தேமொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5

படத்திற்கான கவிதை
ஆக்கம்: தனுசு


 படம்: நன்றி-தினமலர்-27-04-2012

கண்ணாபுரம் காளி
ஆக்கம்: தனுசு
---------------------
சூரக்கோட்டை
சிங்கம் வாராடா
சிதறி ஓடு
சிறுத்தை வாராடா
விலகி நில்லு
வேங்கை வாராடா-இவள்
வரிப்புலி வம்சம் தானடா.

ஆடிச்சி புடிச்சி
ஆட வராடா
அடங்காத காளையை
மடக்கி புட்டாடா
உறிச்சி மேய
கொண்டு போராடா
உறுமி அடிச்சி
அனுப்பி வையடா

திமிலை பெறுத்து
ஒன்னும் இல்லைடா-இவள்
திமிருக்கிட்ட
தோத்து போகுண்டா
கொம்பு சீவி
கொண்டு வந்தாண்டா-இவள்
தெம்பு முன்னே
மூட்டி போடும்டா.

சூடம் ஏற்றி
கொளுத்தி கொண்டாடா
திருஷ்டி சுற்றி
பொட்டு வையடா
குத்து விளக்கு
பரிசு கொண்டாடா
கொட்டமடிக்க
ஊரைக்கூட்டடா

காங்கேயம்
அடக்கி வாராடா
தில்லிருந்தா
துணிந்து நில்லடா
பல்லெகிரும்
பார்த்து நில்லுடா-நம்ம
கண்ணாபுரம் காளி இவடா
-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6

ஏன் உதிர்ந்தாய் பூவே
ஆக்கம்: தனுசு

நான் ரசித்த பூவே
விழியால் ருசித்த பூவே-என்
மனதில் வேர்விட்ட செம்பருத்திப் பூவே!
ஏன் உதிர்ந்தாய் இன்று.!

உன் ஜோடிப்பூவை யாரும் பறித்தாரா?-உன்
நாடிப்பிடித்து முகர்ந்தாரா?
கண்வைத்து பெண் பூக்கள்
திருஷ்டி போட்டாரா!

வாடை காற்று தொட்டதா?
கோடை வெயில் சுட்டதா?
மழைச்சாரல்  பட்டதா?
மிண்ணல் உன்னை கண்டதா?

பட்டாம் பூச்சி முறைத்ததா?
பச்சை இலை மறைத்ததா?
வண்டு உன்னை மொய்த்ததா?
தேன் குடித்து சென்றதா?

நிலவு கோபம் கொண்டதா?
இரவு துணை போனதா?
பனியும் விழ மறுத்ததா?
மழலை கைகள் கிள்ளியதா?

உன் மரக்கிளையில்
குடியிருந்த குருவி
குடிபெயர்ந்து சென்றதா?-நீ
மணம் உடைந்து விழுந்தாயா?

உன்னைவிட அழகாய்
என்னோடு வரும் என் காதலியின் அழகை பார்த்து
வெட்கப்பட்டாயா?-அதனால் நீ
உன்னையே சிதைத்துக் கொண்டாயா?

-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
 நகைச்சுவை
அலுவலகம் புதுப்பிக்கப்படுகிறது
ஜி.ஆனந்தமுருகன்



இன்றைய நிலையில் வழிபாடு
ஜி.ஆனந்தமுருகன் 


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

27.4.12

சண்முகப்பிரியா ராகம் யாருக்கான ராகம்?

சண்முகப்பிரியா ராகம் யாருக்கான ராகம்?

இளையராஜாவைக் கேட்டால் தெரியும்.

தம்தன தம்தன காதல் வரும் என்ற பாடலை சண்முகப்பிரியாவில் அமைத்து அனைவரையும் அந்தப் பாடலைக் கேட்க வைத்தவர்/ பாடவைத்தவர் ராஜா!
அதேராஜாதான் காதல் கசப்பதையும் (படம்: ஆண் பாவம்) சண்முகப்பிரியா ராகத்தில் சொன்னவர்!

சரி, சண்முகப்பிரியா யாருக்கு உகந்த ராகம்?

சண்முகனுக்கு, முருகப் பெருமானுக்கு உகந்த ராகம் அது!

Lord Muruga and Shanmukhapriya has a close association. There are a number of devotional songs on Lord Muruga that are based on Shanmukhapriya

அந்த ராகத்தில், முத்தைத் திரு என்னும் அருணகிரிநாதரின் முதற்பாடல அமைந்துள்ளது குறிப்பிடத் தகுந்த செய்தியாகும்!

அந்தப் பாடலை, முருகப்பெருமானின் பக்தரான குன்னக்குடி வைத்தியநாதன் த்ன்னுடைய வயலின் இசையால் சிறக்கச் செய்துள்ளார். அதை இன்றைய பக்தி மலரில் வலையேற்றியுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்

காணொளி:




அன்புடன்
வாத்தியார் 
வாழ்க வளமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

26.4.12

Doubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா?


++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா?

Doubts: கேள்வி பதில் பகுதி ஆறு

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஆறு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.23
சுனிதா நர்த்தகி

அன்புள்ள ஐயா,
உங்கள் கேள்வி பதில் பகுதி அருமை. இதோ என்னுடைய கேள்விகள்.........

கேள்வி 1 : மாந்தியின் சொந்த வீடு எது? மாந்தி சொந்த வீட்டில் இருந்தால் கெடுபலனா அல்லது நற்பலனா?

மாந்திக்கு சொந்த வீடு கிடையாது! மாந்தி தாதாக்களைப் போல இருக்கும் இடத்தை சொந்தமாக்கிக் கொள்வார் (அதாவது ராகு & கேதுவைப்போல)

கேள்வி 2 : அஸ்தமனம் ஆகி இருக்கும் கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் கிடைக்கும்?

பரிவர்த்தனை ஆன நிலையில்தானே அஸ்தமனமும் ஆகியிருக்க முடியும்? அஸ்தமனம் என்பது வீட்டிலேயே சிறைப்படுவதற்குச் (House arrest) சமம். சிறைப்பட்டுக் கிடப்பவர், நமக்கு சிறப்பாக என்ன செய்துவிடுவார் சொல்லுங்கள்? ஆனாலும் அவருடைய ஸ்டேட்டஸை வைத்து (உதாரணம் குரு) குறைவான காரகத்துவப் பலன்கள் குறையில்லாமல் கிடைக்கும்

கேள்வி 3 : லக்னத்திலும், அம்சத்திலும் லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லதா?

ராசிச் சக்கரத்தில் ( In Rasi Chart) லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லது. நவாம்சச் சக்கரத்திலும் (In Navamsa Chart) அதே அமைப்பு இருந்தால் மிகவும் நல்லது. Double century அடிக்கலாம்!

கேள்வி 4 : ஆறாம் வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தால் நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகமா?

ஆறாம் வீடு, நோய், கடன், எதிரி என்று மூன்று அமைப்புக்களுக்கு உரியது. அதைப் பற்றி விரிவாகப் பத்துப் பக்கங்களுக்கு மேல் எழுதிய பாடம் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது: படித்துப் பாருங்கள்

பதில் அளிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பேன் ..............
இப்படிக்கு
உங்கள் மாணவி

அளித்துவிட்டேன் சகோதரி!
-------------------------------------------
email No.24
கோபி கார்த்திகேயன், எஸ்ஸார்

Please clarify my doubt:

Sun & Venus sitting in Thulam house which is own house for Venus. Venus is very near to Sun (Less than 10°). Sun gets Neecham in Thulam.Please clarify whether Venus will loose its power, even The Sun is in neecham condition?

சூரியன் நீசமானதால் அஸ்தமனம் உண்டா அல்லது இல்லையா? என்ற சந்தேகத்திற்கெல்லாம் இடமில்லை. சூரியன் துலாமில் நீசம் பெறுவான். ஆனால் அவனுக்குள்ள எரிக்கும் தன்மை இல்லாமல் போகுமா என்ன? சுக்கிரனை யார் 10 டிகிரிக்குள் போகச் சொன்னது? போனதால் அஸ்தமன விதிகளுக்கு உட்பட்டாக வேண்டியதுதான்! அஸ்தமனம் பெற்ற சுக்கிரன் வலிமை இழந்து விடும். சுக்கிரன் அஸ்தமனம் ஆனாதால் கவலைப்பட்டுப் படுத்து விடாமல் இருக்க, ஜாதகனுக்கு 337 டானிக்கைப் பரிந்துரையுங்கள்
---------------------------------------------
email No.25
லெட்சுமணன் தியாகராஜன்

ஐயா வணக்கம்,

எனக்குச் சில சந்தேகங்கள்

1) ஒரு கிரகம் நீசமடைந்துவிட்டால் பலன் எதுவுமில்லை (கோமா நிலை) என்று சொன்னீர்கள். அதே நீசமடைந்த கிரகத்திற்கு சுய வர்க்கத்தில் 5 அல்லது மேற்பட்ட பரல்கள் இருந்தால் பலன் எப்படி?

சுய பரல்கள் அதிகமாக இருப்பதால் கோமாவில் இருந்து எழுந்து நடை உடையோடு இருப்பார். நீசமடைந்ததால் மெதுவாகவே தன் வேலைகளைச் செய்வார்!.பலன்கள் கொஞ்சம் குறையவே செய்யும்

2) சனி மூன்றாம் இடத்தில் இருந்து மூன்றாம் பார்வையால் ஐந்தாம் இடத்தைப் பார்த்தால் ஞாபக மறதி அதிகம் இருக்கும் என்று ஒரு நூலில் படித்தேன். அது உண்மையா?

புத்தி, மற்றும் நினைவாற்றலுக்கு உரிய கிரகம் புதன். ஜாதகத்தில் அவர் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது தீய கிரகங்களின், சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் அல்லது அவரே 6, 8 & 12ல் போய் உட்கார்ந்து சீட்டு ஆடிக்கொண்டிருந்தால், நினைவாற்றல் குறையும். அதாவது ஞாபக மறதி இருக்கும்.

இப்படிக்கு
தி. லெட்சுமணன்
----------------------------------------------------------
email No.26
ஆதிராஜ் (ஆஷ்ட்ரோஆதி)

அய்யா வணக்கம்,

சந்தேகங்களை கேட்க வாய்ப்பு அளித்தமைக்கு முதற்கண் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்..

என் சந்தேகம் உள்ளூர் நேரம் கணிப்பது தொடர்பானது ......சென்னை இல் இருந்து நான் இருக்கும் ஊர்(ஆரணி ,திருவண்ணாமலை மாவட்டம்) 130 கி.மீ இருக்கும் சென்னை நேரத்துக்கும் எங்கள் ஊர் நேரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது ,,,,,,நீங்கள் பழைய பாடத்திள் உள்ளூர் நேரத்தை பற்றி கவலை பட வேண்டாம் அதை ஜாதகம் கணிப்பவர் பார்த்து கொள்வார் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் .....அய்யா நான் கேட்பது என் ஊர் நேரத்தை அல்ல ....நீங்கள் பெருநகரங்களுக்கு இடைப்ட்ட நேரத்தை கணிப்பதை ஏற்கனவே தெளிவாக விளக்கி உள்ளீர்கள் என் சந்தேகம் 100 கீ.மீ அல்லது 150 கி.மி உட்பட்ட இடங்களில் நேரம் வித்தியாசம் இருக்குமா?அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்படி கண்டுபிடிப்பது ..?
நன்றி வணக்கம்...

எந்த இடமாக இருந்தாலும், 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள சிறு நகரத்தின் இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் நாட்டிலுள்ள எல்லாச் சிறு நகரங்களின் அட்ச ரேகையும், தீர்க்க ரேகையும் இணையத்தில் கிடைக்கும். அங்கே இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கான சுட்டி (link)

சென்னை: 80.17 கிழக்கு
ஆரணி 79.19 கிழக்கு

திருவண்ணாமலை 79.07 கிழக்கு


ஒரு டிகிரி குறைந்தால் 4 நிமிடங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆரணிக்கு 4 நிமிடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். IST காலை 6:00 மணி என்றால் ஆரணியின் நேரம் 5:56 ஒரு டிகிரி அதிகமானால் 4 நிமிடங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கல்கத்தா (88.22 பாகைகள்) IST காலை 6:00 மணி என்றால் கல்கத்தாவின் நேரம் 6:34

கணினி மென்பொருட்களில் நீங்கள் ஊர்ப் பெயரை அல்லது அட்ச ரேகை தீர்க்க ரேகைகளை மட்டும் கொடுத்துவிட்டு ஐ.எஸ்.டி நேரத்தை மட்டும் கொடுத்தால் போதும். உள்ளூர் நேரத்தை அது பார்த்துக் கொள்ளும்

------------------------------------------------------------
email No.27
அருள் பிரகாஷ் முத்து

ஆசிரியர் அவர்களுக்கு,

தசா, புத்தி மாற்றங்களை மாற்றங்கள் மூலம் தெரிந்து கொள்வது போல அந்தரங்களின் மாற்றங்களை அன்றாட வாழ்கையில் நாம் உணர முடியுமா ? அவற்றின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் ?
மு அருள்

ஒருவனின் திருமணத்தை சுக்கிரன் அல்லது ஏழாம் இடத்து அதிபதி நடத்திவைப்பான் என்பது பொது விதி. ஒருவனுக்கு ஏழாம் அதிபனும் சுக்கிரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆவனுடைய நட்சத்திரம் கார்த்திகை என்றும் தற்சமயம் வயது 22 என்றும் வைத்துக்கொள்ளுங்கள். ராகு திசையும் அவனுக்குத் துவங்கி விட்டது. அவனுடைய திருமணம் எப்போது நடக்கும்? ராகு திசை முடிந்த பிறகா? அதற்கு 18 ஆண்டுகள் ஆகுமே? அது முடியும்போது ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானே? அதற்குக் கை கொடுக்கத்தான் மகா திசையில் உள்ள புத்திகள் உள்ளன. சரி அப்படியும் பார்த்தால், ராகு திசையில் சுக்கிர புத்தி வருவதற்கு சுமார் 12 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டுமே? அந்த நிலையில் கை கொடுக்க இருப்பதுதான் கிரகங்களின் அந்தரங்கள். ஒவ்வொரு புத்தியிலும், வேறு கிரகத்தின் அந்தரங்கள் வரும். ராகு திசையில், ராகு புத்தி (சுய புத்தி), குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி , கேது புத்தி என்று வரிசையாக ஒவ்வொரு புத்தியிலும் சுக்கிரனின் அந்தரம் ஒன்று முதல் ஐந்து மாத காலம் வரை வந்து போகும்! ஆகவே 23 வயது முதல் 34 வயதிற்குள் ஜாதகனின் மற்ற அமைப்பை வைத்து இடைப்பட்ட காலத்தில் திருமணத்தை சுக்கிரன் முடித்துவிடுவான். இடைப்பட்ட காலம் என்பது கோள்சாரத்தையும் உள்ளடக்கியது. அதை நினைவில் கொள்க!

புத்திகளில் ஒரு கிரகத்திற்கு என்ன சக்தி (Power) உள்ளதோ அதே சக்தி (Power) அந்தரங்களிலும் இருக்கும்

-----------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25.4.12

Doubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்?


......................................................................................................
Doubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்?
Doubts: கேள்வி பதில் பகுதி ஐந்து!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஐந்து!

Question &  answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.19
சஞ்சனா

Ayya,
Nantri intha kelvi pathil sessionku.Ithu varai nadantha padangal
thavira matravatril irunthu doubts ketkalama?

வந்துள்ள நோய்களுக்கு (சந்தேகங்களுக்கு) மட்டும் இப்போது மருந்து கேளுங்கள். வரப்போகும் நோய்களைப் பின்னால் (அவைகள் வரும்போது) பார்த்துக் கொள்வோம்!

En Kelvikal

1. Lagna Suya Paral -in artham enna?

லக்கினம், மற்றும் ஏழு கிரகங்களுக்கு உரிய சுயபரல் அட்டவணைகளைத் (மொத்தம் 56) தயார் செய்து, கூட்டினால்தான் மொத்த அஷ்டகவர்க்கப்பரல்கள் கிடைக்கும். அதற்காகத் தயாரிக்கப்படும் அட்டவணைகளில் லக்கின சுய வர்க்கப்பரல் அட்டவணையும் ஒன்று. அதற்குத் தனியாகப் (லக்கின சுய வர்க்கப்பரல்களுக்கு) பலன் எதுவும் கிடையாது!

2.Sani(saturn) suya Paral kammiyaga irunthal enna palan?
Thangal athai padathil kura villai.Athu "0" aga irunthal ayul balam kuraiva?
En ketkiren enral Gandhiyin sani suya paral "0".Obama vin Jathagathilum
athu "0"...Neengal athu patri elai marai kaiyaga kuriyathu pol ennaku
patathu...

சனி தன்னுடைய சுயவர்க்கத்தில் 0 பரல்களுடன் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்லமாட்டான்.அல்லது அவன் விரும்பும் வேலை கிடைக்காது. அத்துடன் கோள்சாரச் சனி சுற்றிவரும்போது, அதன் பலனைத் துல்லியமாகப் பார்க்க இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை உதவும். அத்துடன் சனி ஆயுள் காரகன் என்பதால் எட்டாம் வீட்டிற்கு இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை பெரிதும் உதவியாக இருக்கும். அது பற்றி எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது தெரிந்துகொள்ளுங்கள்.

3.Suriyanal Asthamanam(combust) ana grahamgal weak agi vidum endru
padithen..Avai "Ucham" , Moola Trikonam" allathu Varkotham adainthu
irunthalum weaka thaan consider seiya venduma?

நீங்கள் நினைக்கும் கிரகம் அம்சத்தில் அஸ்தமனம் ஆகாமல் இருந்தால் பலன் உண்டு. அங்கேயும் ஆகியிருந்தால், பலன் இல்லை. அல்லது வேறு அமைப்புக்களை வைத்து, அடி வாங்கியும் (அதாவது அஸ்தமனம் ஆகியும்) எழுந்து உட்கார்ந்திருந்தால், (குறைவான) பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
-----------------------------------------------------
email No.20
பாலகுமாரன்.ஏ.ஜி

Dear Sir,

Can you clarify my doubt please. If a padagathipathi or a normal planet is conjuncted with lagnathipathi or Yogakaraka then the particular planet will also act as yogakaraka or not?
Thanks in advance.
Regards,
Balakumaran A G

பெருங்காய டப்பாவிற்குள் போட்டு வைக்கும் பொருள் எப்படிப் பெருங்காயமாகும்? பெருங்காயத்தின் வாசம் மட்டும்தானே அதனுடன் சேரும். அது பெருங்காயம் ஆகாதல்லவா? அதுபோல யோககாரனுடன் சேர்ந்ததற்காக, சேரும் கிரகம் யோககாரகனுடைய வேலைகளைச் செய்யாது.
----------------------------------------------------
email No.21
எஸ்பி.கருப்பையா
அய்யா வணக்கம்

இராசிக்கு 12ல் அல்லது லக்கினத்திற்கு 12ல் கேது இருந்தால் மோட்சம் என்கிறார்களே இதைபற்றி கூறவும்
இப்படிக்கு
SPK KKDI

எல்லாம் மாயை (illusion). சொத்து, சுகம், மனைவி, மக்கள், ஐ.டி கார்டு, ரேசன் கார்டு, வோட்டர்ஸ் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி வைப்பு நிதிகள், சொத்துப் பத்திரங்கள், வாங்கிய விருதுகள் என்று அனைத்தும் ஒரு நாள் மாயமாகப் போகிறது. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு (including pending civil/property cases in the court) மனிதன் ஒரு நாள் மாயமாகப் போகிறான்.
அதைத்தான் கவியரசர் இப்படிச் சொன்னார்:

”ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன?

திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன…?


வீடுவரை உறவு

வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?”


சிலர் இந்த உலக அவலங்கள் வேண்டாம். அடுத்த பிறவி வேண்டாம் என்பார்கள். அடுத்த பிறவி வேண்டாம் என்றால், இறைவன் திருவடிகளைச் சென்றடைய வேண்டும். அந்த நிலையைத்தான் மோட்சமடைவது என்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் பிறவியில் இருந்து விடுதலை அடைவதுதான் மோட்ச நிலை
Liberation from the cycle of reincarnation and from the illusion of maya

ஜாதகத்தில் ஐந்தாம் வீடு முற்பிறவியைக் குறிக்கும். பன்னிரெண்டாம் வீடு அடுத்த பிறவியைக் குறிக்கும். அந்த வீட்டில் (அதாவது 12ல்) கேது இருந்தால் அடுத்த பிறவி இல்லையென்பார்கள். படித்திருக்கிறேன்.


ஆனால் அனுபவம் இல்லை; அனுபவித்ததில்லை.உறுதியாகச் சொல்ல முடியவில்லை:-))))
----------------------------------
email No.22
அரியப்பன் சாத்தப்பன்
வணக்கம் அய்யா,

1. வக்கிரக கிரகம் பலன் மாறுவதற்குக் காரணம் என்ன?

பாகற்காய் ஏன் கசக்கிறது? என்பதைப்போல் இருக்கிறது உங்கள் கேள்வி! ஒரு மனிதன் வக்கிரபுத்தி வந்தால் என்ன செய்கிறான். அண்ணன் தம்பி சொத்துக்களைத் தனதாக்க முயற்சிக்கிறான். அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுகிறான். அதிக வக்கிரம் பிடித்தால் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். அதைப்போய் ஏனென்று கேட்க முடியுமா? வக்கிரத்தின் தன்மையே அதுதான்.

அதுபோல வக்கிரம் பெற்ற கிரகங்கள், அதிகமாகத் தீமைகளைச் செய்யா
விட்டாலும், நன்மை செய்வதை நிறுத்திவிடும். தீய கிரகங்கள் வக்கிரம் பெற்றால், அதிகத் தீமைகளைச் செய்யும். சும்மா சுமப்பதை, ஜாதகன் நனைத்துச் சுமக்க வேண்டும். அறுந்த செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு கொதிக்கும் வெய்யிலில் நடக்க நேரிடும்!


2. இரண்டு வீட்டிற்குச் சொந்தமான கிரகம் இரண்டும் பரிவர்த்தனை பெறும்போது,தான் இல்லாத வீட்டு பலனைத் தருமா?(இதில் நல்ல வீடும், கெட்ட வீடும் இருக்கின்றபோது)

அவர் இல்லாத வீட்டின் பலனை, அங்கே வந்து அமர்கிறவன் தருவான். கெட்டது எதுவும் மிஸ்ஸாகாது. கவலைப் படாதீர்கள்

3, இரு நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெற்றால் நல்ல பலன் உண்டா? அருள்கூர்ந்து எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

இரண்டு நீச கிரகங்கள் எப்படி பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்? ஒரு நீச கிரகத்தின் எதிர்வீடு அதன் உச்ச வீடு. நீச சந்திரனுக்கு மட்டும்தான் மற்றொரு நீசனுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியே பரிவர்த்தனை செய்து கொண்டால் இருவரின் நீசத்தன்மையும் காணாமல் போய்விடாதா?



எடுத்துக்காட்டுடன் நீங்கள் விளக்குங்கள். முடியாவிட்டால், இந்தக் கேள்வி பதில் வகுப்பு முடியும்வரை பெஞ்சு மேல் ஏறி நில்லுங்கள்

நல்ல வாய்ப்புத் தந்தற்கு நன்றி,
அரிபாய்.
வாழ்க வளமுடன்.

இன்னும் வாய்ப்பு முடியவில்லை. பெஞ்சு மேல் ஏறி நிற்கும் வாய்ப்பு பாக்கி உள்ளது!:-)))
----------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!


24.4.12

Doubt: தேவதையா? பிசாசா? எது கிடைக்கும்?


-----------------------------------------------------------------
Doubt: தேவதையா? பிசாசா? எது கிடைக்கும்?

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் நான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.15
சுபஸ்ரீ கண்ணன்

Sir,
My doubt is,
Will our natalchart/horoscope reflect out previous jenma karma? i mean based on our previous jenma karma only our natal birth chart will appear?
Thanking you sir,
Sincerely yours,
K.Subhashree

எல்லாக் குழந்தைகளுமே தாயின் வயிற்றில் 280 நாட்கள்தான் இருக்கின்றன. அதில் வித்தியாசமில்லை. ஆனால் பிறப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகள். ஒரு குழந்தை செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை குடிசைவாசியின் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை ரஜினி வீட்டில் அல்லது அம்பானி வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை கூலிவேலை செய்யும் தொழிலாளி வீட்டில் பிறக்கிறது.ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எல்லாம் இருக்கிறது. ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எதுவும் இல்லை.(பெற்றவள் குப்பைத் தொட்டியில்வீசிவிட்டுப் போய் விடுகிறாள்) ஒரு குழந்தை அழகோடு பிறக்கிறது. ஒரு குழந்தை அழகில்லாமல் பிறக்கிறது. ஒரு குழந்தை புஷ்டியான தோற்றத்துடன், பார்ப்பவர்களை மயக்கும் விதமாகப் பிறக்கிறது. ஒரு குழந்தை சற்று ஊனத்துடன் பிறந்து பெற்றவர்களைத் துயரப்பட வைக்கிறது. இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? முன் வினைப்பயன்தான் காரணம்!

முன் வினைப்பயனைத்தான் பூர்வ புண்ணியம் என்று ஜாதகத்தில் உள்ள ஐந்தாம் வீட்டைக் காட்டுவார்கள். அதில் ஒன் லைன் ஸ்டோரிதான் தெரியும். முழுப்படமும் தெரியாது. அதாவது ஜாதகனின் சென்ற பிறவி வரலாறு
22 ரீல்களில் படமாகத் தெரியாது.

ஏன் தெரியாது? தெரிந்தால் ஜாதகன் தன் போன ஜென்மத்து உறவுகளைத் தேடிப்போய்விடுவான். பழைய சேட்டைகளை மீண்டும் தொடர்வான்:-))))

ஒரு பிறவித் தொடர்புகளே தாங்க முடியவைல்லை. இரண்டு பிறவித் தொடர்புகளும் மனிதனுக்கு இருந்தால் என்ன ஆகும்? கடவுள் கருணை மிக்கவர். அதனால் தான் அதைக் காட்டாமல் மனிதனுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்துள்ளார்.

இப்போது சொல்லுங்கள். பிறவியே முன் வினைப் பயனை வைத்துத்தான் எனும்போது, ஜாதகமும் அதைவைத்துத்தானே அமையும்?
--------------------------------------------------------
email No.16
பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்

1. Can you please let me know what is Vargothama Yogam? Am I right in this question. Is there any such yog. If so , what are the effects of the same please. Is it something related to moon in seventh house from lagna or viceversa. I have already studied your lesson on Vargotham which has something to do with Navamsam..

குழப்புகிறீர்களே? வர்கோத்தமம் என்ன என்பதைப் பற்றிச் சொல்லச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் கடைசிவரியில் வர்கோத்தமம் பாடத்தைப் படித்தேன் என்கிறீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? ஏன் இந்தக் குழப்பம்? பாடத்தை மீண்டும் படியுங்கள்.

2. I note the lessons on House 10 etc are reproduction from Lessons in 111 to 120. Is that right?

அதில் புதிதாக எழுதப்பட்ட பகுதிகளும் உண்டு. இரண்டையும் பிரின்ட் அவுட் எடுத்து ஒத்துப் பாருங்கள். தெளிவாகும்!

3. My wife is just house wife, but has 35 parals in tenth house (Rishaba). and her 10th house lord (venus) has 7 parals. But she is just housewife and of average I Q. Saturn has 5 parals. Does that mean will she shine in profession, if she goes for job or if she does any business or if she does share trade by herself. (DOB 14.08.1973 at 7.15 am chennai.)

உங்கள் மனைவி சிம்ம லக்கினம். பத்தாம் வீட்டின் இருபுறமும் செவ்வாய், சனி, கேது ஆகிய கிரகங்கள் அமர்ந்து பாப கர்த்தாரி யோகத்தைக் கொடுத்துள்ளன. அதனால்தான் 36 வயதாகியும், ஜாதகத்தில் பத்தாம் வீடு வேறு மேட்டர்களில் நன்றாக இருந்தும் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை! அதோடு பத்தாம் அதிபதி சுக்கிரன் நீசமடைந்துள்ளார். அதிபதியும் முக்கியம்.

இது பொதுக்கேள்விக் கணக்கில் வராது. இருந்தாலும் பதில் அளித்துள்ளேன்

4. I have written this query in my earlier email also, but not received any reply and is reproduced below.You had described benefits or results of Sun being in various houses. You have also described benefits of lord of each house from lagna, placed in various houses.

To quote an example, when sun in 5th house, you have listed some items.

For a person with Midhuna Lagna, Sun being Lord of 3rd house, positionined in 5th house(alone), you have described certain items.

They go in contradiction. In former, it says the person will have small family. In the latter, it is mentioned that the person will have big family. I find the former one was matching in all items with the sample jathakam(It is mine with Guru in Lagna and also in Navamsa) I have chosen. If I adopt the former, can I reject it latter completely or will the latter also become true at some other point of time. Please explain which narration is predominant.

நீங்கள் படித்த அந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கான பாட எண் அல்லது சுட்டியைக் (Link) கொடுங்கள். படித்துப்பார்த்துவிட்டுப் பதில் சொல்கிறேன்

I find this may be the case with other planets also. I will be glad if you can teach me how to interpret, when we find or come across contradictions. Kindly excuse me if it is primitive or if I have missed your explanations if any in other parts of the lessons.

ஜாதகத்தை அலசுவது எப்படி (how to interpret) என்பது மேல் நிலைப் பாடம். பின்னால் அது வரும். பொறுத்திருந்து படியுங்கள்

5. I am going through the lessons only and do not read the comments posted for each lesson. Is there any way to give summary of important points given by you in the comment of portion of each lesson. Otherwise I have to go through comments portion separately.

பின்னூட்டங்களைப் படிப்பதில்லை என்கிறீர்கள். அதை (முக்கியமான பகுதிகளாக) தொகுத்துத்தர வழி உண்டா என்று கேட்கிறீர்கள். உங்களைப் போல எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனதில் வையுங்கள்!

6. Would also appreciate if you can give the date on which your books will be released.

புத்தகத் தொகுப்பு தயாரிப்பில் உள்ளது. பாடங்களை ஒழுங்கு படுத்தும் வேலை நடந்து கொண்டு உள்ளது. அது முடிந்தவுடன், அச்சாகி வரும். அச்சான பிறகு முறையான அறிவிப்பு வரும். பொறுத்திருங்கள்

Hope I will have answers to the above questions. I am still going through the lessons on second round. It may require few more rounds to understand.

தெளிவதற்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் படியுங்கள். ஒன்றும் குறையாது!

With best regards.
BALASUBRAMANIAN PULICAT
RIYADH.
---------------------------------------
email No.17
மா. திருவேல் முருகன், புது தில்லி.
ஐயா வணக்கம்!

1. ஒரு ஜாதகத்தில் 5ஆமிடத்தில், மாந்தியும் 6ஆமிடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் மன நோய் வரும் என்று நமது வகுப்பறை பதிவில் படித்தேன். அதேபோல், ஒரு ஜாதகனுக்கு வலிப்பு நோய் (Epilepsy) வருவதற்கு என்ன காரணம்? அது எந்த கிரகத்தின் தசாபுத்தியில் தீரும்? அல்லது தீரவே தீரதா? (தயவு செய்து இந்த கேள்விக்கும் பதில் தரவேண்டுகிறேன், குருதேவா...Please...)

Epilepsy can be cured. Since Epilepsy is a disoreder related with head & according to Vedic Astrology Moon governs head.A chronic functonal disease of the nervous system or impairment of consciousness with foaming in the mouth.This problem generally happens to many people in India. According to medical astrology this can be judged when moon, venus, rahu is badly placed conjuncted or delibilated or saturn & ketu aspected.(one of the reasons). நல்ல வைத்தியரிடம் காட்டச்சொல்லுங்கள். அதோடு முழுமனதுடன், நம்பிக்கையுடன் வைத்தீஸ்வரன் கோவிலில் உறையும் வைத்தியநாதனைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள். குணமாகும்!

2. மாந்திக்கும் பார்வைகள் உண்டா? உண்டென்றால், எந்தெந்த இடங்கள்?

மாந்திக்குப் பார்வை கிடையாது. வேறு கிரகங்களின் பார்வைகளையும் அது ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தில் உள்ள சில ஜோதிடர்கள் மாந்தியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது ஏன் என்று தெரியவில்லை! கேரள ஜொதிடர்கள் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மாந்தி தான் இருக்கும் வீட்டின் பலன்களைக் கெடுத்துவிடும். Mandhi is supposed to cause flop results in the house it is residing in


3. ஒரு ஜாதகத்தின் நவாம்சத்தில், 7ஆமிடம், சுக்கிரன் இரண்டுமே கெட்டிருந்தால் எந்த மாதிரியான மனைவி அமைவாள்?

உங்களின் மனமும், குணமும் நன்றாக இருந்தால், எந்த மனைவி வந்தாலும் அது ஒன்றுதான். வருகிறவள் தேவதையாக (angel) இருந்தாலும் சரி, அல்லது பிசாசாக (devil) இருந்தாலும் சரி நீங்கள் அவளை வித்தியாசமில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள்.

ஏழாம் இடமும், சுக்கிரனும் கெட்டிருந்தால், திருமணம் தாமதமாகும் அல்லது திருமணமே ஆகாமல் போகலாம்.

ஏழாம் இடத்து அதிபதி, அவருடன் சேர்ந்திருப்பவர்கள், அவர் பெறும் பார்வையை வைத்துத்தான் மனைவி அமைவாள். ஆகவே அவற்றைப் பாருங்கள்.

ஒரு ஞானி சொன்னான்:

எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.

4. லக்கினத்திலிருந்து 7ஆமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெரும்போது "ருச்சக யோகம்" உண்டாகிறது. இந்த ஜாதகன்/ஜாதகிக்கு செவ்வாய் தோஷத்தில் இருந்து விலக்கு உண்டா? இல்லையா?

ஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய்க்கு, செவ்வாய் தோஷம் கிடையாது. சில ஜோதிடர்கள் 7 & 8ல் செவ்வாய் இருந்தால், அது எவ்வளவு உயர்வான அமைப்பில் இருந்தாலும் தோஷம் உண்டு என்பார்கள். அவர்கள் அனுபவத்தை வைத்துச் சொல்வார்கள். ஆகவே ரிஸ்க் எடுக்காமல் இருக்க நினைப்பவர்கள், அதற்குத்
தகுந்தாற்போல செவ்வாயைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்!

தங்களின் மேலான பதில்கள் மற்றும் விளக்கங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன், புது தில்லி.

விளக்கங்கள் போதுமா திருவேல் முருகன்?
---------------------------------------------------------
email No.18
மதி

இது என் கேள்விகள்,

1. லக்கினத்தில் குரு இருந்தால் மிக நன்மை என்று கூறி உள்ளீர்கள் ஆனால் அதே குரு(சுயபரல் 5 )வக்கிரமாக இருந்தால் குரு (4,7க்கு உடையவன்) ,உடன்
வக்கிர பெற்ற சனி( சுயபரல் 2), வீட்டின் பரல் 29, சனி (5,6க்கு உடையவன்).
குருவால் நன்மை அதிகமா அல்லது சனியால் தீமைதான் மிஞ்சுமா...?

பாதாம் அல்வாவையும், மிளகாய் பஜ்ஜியையும் கையில் வைத்துக்கொண்டு, இரண்டையும் சாப்பிட்டால் எதன் சுவை மிஞ்சும் என்று கேட்பதுபோல் உள்ளது உங்கள் கேள்வி. குருவின் தசா/புத்தியில் அதன் காரகத்துவம் என்னவோ அதன்படி பலன் நடக்கும். சனிக்கும் அப்படித்தான். ஒரு சமயத்தில் ஒரு சானல்தான் ஓடும். ஆகவே பொறுமையாக உட்கார்ந்து படத்தைப் பாருங்கள். படம் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி எழுந்து போக முடியாது. ஆகவே பொறுமையாகப் பாருங்கள் (எதிர்கொள்ளுங்கள்). மிளகாய் பஜ்ஜி சாப்பிடும் போது விக்கல் வந்தால், மினரல் வாட்டர் 337ல் ஒரு தம்ளர் குடியுங்கள்! எல்லாம் சரியாகிவிடும்!

2 திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம் திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் வாழ்கையில் தாக்கத்தை எற்படுத்துமா? (உதாரணம் 5 ராகு: புத்திரபாக்கிய தடை) காரணம் மணப்பத்திரிக்கையில் லக்கினம் (முக்கியத்துவம் கொடுக்கபட்டு) உள்ளதே.

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்றுதானே நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் பார்த்துத் திருமணத்தை நடத்துகிறார்கள். பிறகு அதையும் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்டால் என்ன செய்வது? அப்புறம் உங்களுடைய பிறப்பு ஜாதகத்திற்கு என்ன மதிப்பு?

திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம்
பள்ளியில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
மாமியார் வீட்டில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
மனைவியைத் தொட்ட நேரத்து ஜாதகம்
வேலையில் சேர்ந்த நேரத்து ஜாதகம்.
டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வண்டி ஓட்டப் பழகிய நேரத்து ஜாதகம்
என்று 100 கணக்கான ஜாதகங்களைத் தயார் செய்யலாம். கடைசியில் முடியைப் பிய்த்துக் கொண்டு படுக்கையில் கிடக்க வேண்டியதாகிவிடும்.

ஆகவே குழம்பாதீர்கள். உங்கள் Birth Chart ஒன்று போதும். மற்றதை எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்காதீர்கள்.

Okayயா?
-------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

23.4.12

Astrology: ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்!


Astrology: ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்!

நோய் யாருக்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.

வரட்டும்.

ஆனால் அதிகம் தொந்தரவு இன்றி,  அதிகம் செலவின்றித் தீர்ந்துவிட்டால் பரவாயில்லை. அதற்கு மாறாக அதிகம் செலவாகி, அதிகமான உபத்திரவத்தைக் கொடுத்து, இறுதியில் ஆளையே அள்ளிக்கொண்டு போனால் என்ன செய்வது?

நம் கையில் ஒன்றும் இல்லை.

நோயிலேயே புற்று (cancer) நோய்தான் அதிகம் கொடூரமானது.

எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட அனுபவம் வடுவாக மனதில் பதிந்து விட்டது.

என் தங்கையின் கணவருக்கு புற்றுநோய் வந்து 4 ஆண்டுகள் போராட்ட்டத்திற்குப் பிறகும், தீவிர சிகிச்சையளித்தும், பலனில்லாமல் 2010 ஆம் ஆண்டு  பிப்ரவரித் திங்கள் 17ஆம் தேதியன்று அவர் உயிர் நீத்துவிட்டார். அந்த 4 ஆண்டுகளில் புற்று நோயின் தீவிரத்தை அருகில் இருந்து பார்க்கும்படியாகிவிட்டது. இறக்கும் போது அவரின் வயது 52

என் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம். இது அவருடைய ஜாதகம் அல்ல! வேறு ஒருவருடைய ஜாதகம்!
----------------------------------------------------- ---------------------------

---------------------------------------------------------------------------------
 மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும் என்பார்கள்.

மிதுன லக்கின ஜாதகம். ஆறாம் வீடு செவ்வாய்க்கு உரியது. அந்த வீட்டை செவ்வாய் அதற்கு ஏழில் இருந்து நேராகப் பார்க்கிறார். ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம். உடல்காரகன் சூரியனுடன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்கள் கிரக யுத்தத்தில். அத்துடன் அங்கே உள்ள சுக்கிரன் 12ஆம் வீட்டிற்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவின் ஆதிக்கம்.

12ல் உள்ள (விரையத்தில் உள்ள) செவ்வாய் தசையில் புற்று நோய் ஏற்பட்டது. செவ்வாயை 6ல் இருந்து நேரடியாகப் பார்க்கும் சனி நோயைத் தீவிரப்
படுத்தினார். அதே தசையில் வந்த சனி புத்தியில் ஜாதகருக்கு மரணம் ஏற்பட்டது.

ஆறாம் வீடு, மற்றும் 12ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் தங்கள் தசா புத்திகளில் நோயை உண்டாக்கும். அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்றால் ஜாதகன் பிழைத்துவிடுவான். இல்லை என்றால் கஷ்டம்தான்!

அன்புடன்
வாத்தியார்


அடிக்குறிப்பு: கேள்வி - பதில் பகுதி நாளை வெளிவரும். நடுவில் மாறுதலுக்காக ஒரு அலசல் பாடம். இது மேல் நிலைப் பாடத்திற்காக - மேல் நிலை வகுப்பிற்காக (தனி இணைய தளத்திற்காக) எழுதப்பெற்ற பாடம். வகுப்பறை மாணவர்களுக்கும் பயன் படட்டும் என்று இன்று வலையில் ஏற்றியுள்ளேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

22.4.12

வெஞ்சினமும் பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செயல்கள்!


மாணவர் மலர்

இன்றைய மாணவர மலரை 6 பேர்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
 ------------------------------------------------------------------------------
1

அன்னதானத்தின் சிறப்பு
அன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை  
தெரியப் படுத்தியவர்:  வெ.கோபாலன், தஞ்சாவூர்

(தன்னுடைய நண்பர் சி.ஆர்.சங்கரன் என்பவர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்த கதையை நமக்குச் சுவைபடக் கொடுத்திருக்கிறார் தஞ்சைப் பெரியவர். படித்து மகிழுங்கள்)

    பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் கொண்டே வினவினார்.

    உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா !  வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்.

    அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா ?" என்று கவலையுடன் விசாரித்தார்.

    உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்.

    இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!

    ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.

    அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.

    ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"

    உடனே ஸ்வாமிகள், "ஆமாமா! மோட்ஷத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் அது ! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு ! இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.

    ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா...நாங்கெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும் !" என்றார்.

    அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:

    "ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:

    கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரச் சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.

    குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் ! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ..."

    - சொல்லி விட்டு சஸ்பென்சாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்.

    சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ? அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் ஒக்காத்துவா.

    அவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா! அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா ! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா? "

    சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மஹா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: " ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. ஒரு அதிதியக் கூடக் காணோம்! கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் ? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்' என்று கேட்டார்.

    சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொள்ளையிலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார். அந்த அம்மாவைக் கூப்பிட்டு, தனக்கு 'வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்' னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.

    இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே' னு கொழம்பினார்.

    சித்த நாழி கழிச்சு, கீர வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?' நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்' ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா' னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்."

    - இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: "போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த அந்த ஆச்சிகிட்டே கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா 'சிவ..சிவ' னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.

    திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்' னு சொன்னா. இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா..."

    நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா ? சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா ? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன். அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..."

    முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ" எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.

    பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. நாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல், சர்வசதா காலம் அவனிடம் போய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாது ஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத் தான் பக்தி என்று பெயர்.

    ஜெய ஜெய சங்கர...  ஹர ஹர சங்கர..    ஓம் ஸ்ரீ சாயிராம்.   
    தொகுப்பு - ஸ்ரீ எஸ். ரமணி அண்ணா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
    
வெஞ்சினமும்  பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செயல்கள்!
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு

இந்தியத் திருநாட்டின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள், எல்லாவிதமான மனிதமனங்களின் சித்தரிப்புகள், உணர்ச்சிக் குமுறல்கள், அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் வாழ்வியல் தர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுத ஆரம்பித்தால் முடிவேது?. இந்தக் கட்டுரையில் மகாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் கொண்ட வெஞ்சினத்தையும், (தவறிழைக்காமல் புண்படுத்தப்பட்ட மனம் கொண்ட சினம் ) அதன் காரணமாக விளைந்த பழி தீர்த்தலையும் காணலாம்.

குரு வம்சத்துத் தலைமகன் பீஷ்மர். தன் தம்பியான விசித்திரவீர்யனுக்கு மணம் முடிப்பதற்காக, காசி நகரத்து ராஜகுமாரிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை சுயம்வரத்தில் வென்று, ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். எதிரே, மாபெரும் படை ஒன்று வழிமறித்தது. சௌபல நாட்டு அரசன் சால்வன், மிகப் பெரும் படையோடு நின்றிருந்தான்.பீஷ்மரின் வில், அம்புகளை மழையெனப் பொழிந்து, சால்வனின் படைகளைச்சிதற அடித்தது. சால்வன் தோற்றோடினான்.

ஹஸ்தினாபுரம் வந்த பீஷ்மர், ராஜகுமாரிகளை அழைத்துக் கொண்டு, தன் தம்பியைக் காணச் செல்லும் வேளையில், ராஜகுமாரிகளுள் ஒருத்தியான அம்பை, பயத்துடன், பீஷ்மரை அணுகி, தன் மனதை சால்வனுக்குக் கொடுத்ததைக் கூறினாள். முதலில் சினம் கொண்டாலும், பின், தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு உண்டென்பதை மதித்த பீஷ்மர், முன்பே நீ இதை என்னிடம் தெரிவித்திருந்தால், சால்வன் படைகளுடன் வந்த பொழுதே, அவனிடம் உன்னை ஒப்படைத்திருப்பேனே!!! என்று கூறி, அவளை சௌபல (சாளுவ) தேசத்துக்கு, சகல மரியாதைகளுடன் அனுப்பிவைத்தார்.

சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான். (வில்லி பாரதம்).

மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க, சால்வனை நாடிச் சென்றாள் அம்பை. ஆனால் சால்வனோ, மாற்றான் கவர்ந்து சென்ற மங்கையை மணத்தல் முறையன்று என்று கூறி அவளை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.

சென்ற அம்பையைத் தீ மதிச் சாலுவன்,
'வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்'
என்று இகப்ப, இவனுழை மீளவும்,
மன்றல் வேண்டினள், மன்றல் அம் கோதையாள். (வில்லி பாரதம்).

திரும்பவும் பீஷ்மரிடம் வந்தாள் அம்பை. விசித்திரவீர்யன், மற்றொரு ஆணிடம் காதல் கொண்ட பெண்ணை தான் மணப்பது இயலாது என்று கூறிவிட்டான்.

சினம் கொண்டாள் அம்பை. தான் விதியின் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக உருட்டி விளையாடப்படுவதை உணர்ந்தாள். தன்னைக் கவர்ந்து வந்த காரணத்தால், பீஷ்மரே தன்னை மணக்க வேண்டும் என்றாள். தான், திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதமெடுத்திருப்பதைக் கூறி, மறுத்தார் பீஷ்மர்.

மீண்டும் சால்வனிடமே சென்று, மணந்து கொள்ளுமாறு கேட்கச் சொன்னார் பீஷ்மர். சால்வன் உறுதியாக மறுத்துவிட்டான். அம்பையின் தந்தை,தன் தூதுவரை அனுப்பி, பீஷ்மரிடம் முறையிட்டதும் பயனற்றதாயிற்று.

ஒரு நாள், இரு நாள் அல்ல. ஆறு ஆண்டுகள் சால்வனிடமும், பீஷ்மரிடமும் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் மாறி மாறி ஓடினாள் அம்பை.

இறுதியாக, பீஷ்மரின் குரு, பரசுராமரைச் சரணடைந்தாள். அவர், அம்பையை மணந்துகொள்ளும்படி, பீஷ்மரை வேண்டினார். பீஷ்மர் மறுக்க, சினம் கொண்ட பரசுராமர், பீஷ்மருடன் போருக்குத் தயாரானார்.

இருவரின் அஸ்திரப் பிரயோகங்களால், பூமி நடுங்கியது. திக்குகள் அதிர்ந்தன. மலைகள் வெடித்தன. வானுலகம் நிலைகுலைந்தது. உயிர்கள் பதறின.முடிவில்லாமல் பத்து நாள் இரவு பகல் பாராமல் நீண்டது போர். இறுதியில், பீஷ்மரின் கை ஓங்கவே, பரசுராமர், பின்வாங்கினார்.

துடித்தெழுந்தாள் அம்பை. பீஷ்மரை மணக்க இயலாது என்பது முடிவான முடிவு என்பதை அவள் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. அவள் மனம் மிக வருந்தி, தவம் புரிதலே இனி தன் வாழ்க்கை என முடிவெடுத்தாள்

ஆனால் தவறேதும் செய்யா அவள் மனம், பீஷ்மரைப் பழிவாங்கத் துடித்தது.

பீஷ்மரின் இறப்புக்குத் தான் காரணமாவேன் என்று வெஞ்சினம் கொண்டுசபதம் செய்த அவள், அந்த நோக்கத்துடன், இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்; ஒரு காலின் கட்டை விரலை ஊன்றி நின்று, மறு காலை மடக்கி,பன்னிரண்டு ஆண்டுகள் கடுந் தவம் செய்தாள் .

வெம்பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என, வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான்' எனா,
வம்பை மோது முலை, வம்பை வீசு குழல்,
வம்பை மன்னும் எழில், வரி கொள் கூர்
அம்பை மானும் விழி, அம்பை என்பவளும்
அரிய மா தவம் இயற்றினாள். (வில்லி பாரதம்)

ஆறுமுகக் கடவுள் அம்பை முன் தோன்றி ஒரு தாமரை மாலையை அளித்தார். அந்த மாலையை அணிந்து கொள்பவர், பீஷ்மரின் இறப்புக்குக் காரணமாவார் என வரமளித்தார். அந்த மாலையை எடுத்துக் கொண்டு, இகலோகத்து அரசர்களிடமெல்லாம் சென்று, அணிந்து கொள்ள வேண்டினாள் அம்பை. ஒருவரும் உடன்படவில்லை. இறுதியாக, பாஞ்சால தேசத்து அரசன் துருபதனிடம் சென்று, முறையிட்டாள். துருபதனும், பீஷ்மரின் பகைக்கு அஞ்சி மறுக்கவே, மாலையை அவன் கோட்டை வாயிலிலேயே மாட்டி விட்டு, தீப்பாய்ந்தாள் அம்பை.

மனித ஆன்மா ஒரு தொகுப்பு நூல் போன்றது. அது, பல ஜென்ம வாசனைகளை ( நினைவுகளை)த் தன்னுள் தொகுத்து வைத்திருக்கும்.ஒரு ஜென்மத்து விருப்போ, வெறுப்போ, ஜென்மங்கள் கடந்தும் தொடரும். சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போவதற்கும், வெறுப்பு வருவதற்கும் இதுவே காரணம். இந்த ஜென்மாந்திர வாசனைகள் இருக்கும் வரை, ஜென்மம் எடுப்பதும் நிற்காது.

அம்பை வெஞ்சினம் கொண்ட மனத்தோடு, அடுத்த பிறவியில், துருபதனின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சிகண்டி என்று பெயர் சூட்டினான் துருபதன். ஒரு நாள், அவளே அந்த மாலையை எடுத்து, அணிந்து கொண்டாள்.

அம்பை (சிகண்டி) யின் நோக்கத்துக்கு உதவிய காரணத்தால், ஸ்ரீ சுப்பிரமணியரின் அஷ்டோத்திர சத நாமாவளியில்,
"சிகண்டி க்ருதகேதனாய நம: " என்னும் ஒரு நாமம் இருக்கிறது

செய்தி அறிந்து துருபதன், அவளை நாடு கடத்தி விட்டான். கானகம் சென்ற சிகண்டி, 'இஷிகர்' என்ற முனிவரின் யோசனைப்படி நடந்து, ஒரு கந்தர்வனிடம் தன் பெண் வடிவைக் கொடுத்து, அவன் ஆண் வடிவைத் தான் பெற்றுக் கொண்டு, மீண்டும் துருபதனை வந்தடைந்தாள் (அடைந்தான்?). சிகண்டியை ஏற்றுக் கொண்ட துருபதன், அவனுக்கு சகல வித்தைகளிலும் பயிற்சி அளித்தான்.

இந்த சிகண்டியை முன்னிறுத்தியே, பாரதப்போரில் அர்ஜூனன் பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டான். பெண்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதால், பெண்ணாக இருந்து, ஆணாக மாறிய சிகண்டியை எதிர்த்து, பீஷ்மர் ஆயுதம் எடுக்கவில்லை. அர்ஜூனனின் காண்டீபம் சரமழை பொழிந்து, பீஷ்மரை அம்புப் படுக்கையில் தள்ளியது. இவ்வாறாக அம்பை தன் பகை முடித்தாள்.

பாண்டவர்களும் கௌரவர்களும் கைகட்டி, பணிந்து நின்றனர்.

எதிரே அவர்கள் குரு துரோணாச்சாரியார். குருகுலப் பயிற்சி முடிந்து, குருதட்சணை வழங்க வேண்டிய தருணம்.

மூத்தவனான தருமன், " குருவே, தாங்கள் குருதட்சணையாக எதைக் கேட்டாலும், அதை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம் " என்றான்.

மறுநாள் சொல்வதாகச் சொல்லிவிட்டு, தனிமையை நாடிச் சென்றார் துரோணர். நெஞ்சினுள் சீறிப் பாய்ந்த நினைவலைகளால் தாக்குண்டு செய்வதறியாது நின்றார் அவர்.

பாரத்வாஜ முனிவரின் மகன் துரோணர். தன் தந்தையிடமே கல்வி கற்று வரும்போது, உடன் படித்த, பாஞ்சால தேசத்து இளவரசன், துருபதனிடம் மாறாத நட்புக் கொண்டார். குருகுல வாசம் முடியும் தருவாயில் ஒருநாள், பேச்சு வாக்கில், "நீ நாடாளும் மன்னனாகி விட்டால் என்னை எங்கே நினைவில் வைத்திருக்கப் போகிறாய்!!!" என்று கேட்டு விட்டார். உடனே, துருபதன் (யாகசேனன் என்பது இவனது மற்றொரு பெயர்) கங்கை நீரை துரோணர் கையில் வார்த்து, " நான் மன்னனானால், உனக்குப் பாதி நாட்டைத் தருவேன்"என்று சத்தியம் செய்தான்.

பின்னை, இரவும் பகலும், பிரியேம் ஆகித் திரிய,
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா,
'என் ஐ வானம் எய்தி, யானே இறைவன்ஆனால்,
உன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி' என்றான். (வில்லி பாரதம்)

பின், துரோணர், குரு வம்சத்து குலகுருவான, கிருபாச்சாரியாரின் தங்கை கிருபியைத் திருமணம் செய்து கொண்டார். தன் நண்பன் ,துருபதன்
பாஞ்சால தேசத்து மன்னனான செய்தி அறிந்து மகிழ்வு கொண்டார்.

காலப் போக்கில், துரோணர், கொடிதினும் கொடிய நோயான வறுமைக்கு ஆளானார். தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளைக்குப் பாலூட்ட இயலாமல் உடல் நலிவுற்றாள் கிருபி.மனம் சோர்ந்தார் துரோணர். இறுதியில், தன் நண்பனான துருபதனிடம், ஒரு பசுமாட்டைத் தானம் பெற்று வரலாம் என்று முடிவெடுத்துப் புறப்பட்டார். பாதி ராஜ்யத்தையே தருவதாக வாக்களித்தவன், ஒரு பசு மாட்டைத் தர மாட்டானா? என்பது அவர் எண்ணம்.

அரண்மனையில் தான் யார் என்று விசாரித்தவர்களிடம், பழைய நட்புரிமையில், "உங்கள் மன்னனின் நண்பன்" என்று சொல்லிவிட்டார்.

வெகுண்டான் துருபதன். "அரசனாகிய நான் எங்கே, ஆண்டியாகிய நீ எங்கே" , என்று பலர் முன்னிலையில் இழித்தும் பழித்தும் பேசி விட்டான். மனம் நொந்தார் துரோணர். நம்பி வந்த தன்னை, அவமானப்படுத்திய துருபதன் மேல் சினம் பொங்கியது அவருக்கு. " நான் தவ முனிவர் வழிவந்தவன், ஆகவே, எனக்குச் சக்தி இருந்தாலும் உன் மேல் போர் தொடுக்க மாட்டேன். என் மாணவன் உன்னை வென்று, தன் தேர்க்காலில் கட்டி இழுத்து என் முன் நிறுத்துவான்!!! " என சூளுரைத்து விட்டுப் புறப்பட்டார்.

'புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்;
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்;
அகன்ற மெய்ம்மை உடையாய்! அறிதி' என்றேன்' என்று,
சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்லக் கேட்டான். (வில்லிபாரதம்)

துருபதனை வெல்லுமாறு, மறுநாள் தன் சிஷ்யர்களுக்குக் கட்டளையிட்டார். அர்ஜூனன் அந்தக் கட்டளையைச் செவ்வனே நிறைவேற்றினான். தன்முன் தலை கவிழ்ந்து நின்ற துருபதனை நோக்கி, " நீ என் நண்பன் என்பதால் உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். மேலும், நீ எனக்கு முன்பே வாக்களித்தது போல் உன் பாதி நாட்டை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். சென்று வா" என்று கூறி துருபதனை விடுதலை செய்தார். துரோணர் இவ்வாறு தன் சபதத்தில் வெற்றி அடைந்தார்.

'அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும்; மற்று
இன்று, உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்;
குன்று எனக் குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே!
உன்தனக்கு வேண்டும்' என்ன, உயிரும் வாழ்வும் உதவினான்.(வில்லிபாரதம்).

பாண்டவர்களில் ஐந்தாமவன் சகாதேவன். பாண்டுவின் இளைய மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி தேவர்களின் அருளாசியால் பிறந்தவன். நுண்ணறிவில் சிறந்தவன், ஜோதிடக்கலையில் வல்லவன். அமைதியும் ஆழ்ந்த யோசனைத் திறமும் மிகுந்த கிருஷ்ண பக்தன்.

ஸ்ரீ கிருஷ்ணரையே, தன் பக்தியால் கட்டி வைத்த பெருமையுடையவன்.சூதாட்டத்தில். செல்வங்கள் அனைத்தையும் இழந்த தருமர், பிறகு, தன் தம்பியரில்,முதலில் சகாதேவனைத் தான் பணயமாக வைத்துத் தோற்றார்.

எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை
ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை
தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -அங்குச்
செப்பினன் காயை உருட்டினார்-அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான். (மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம்)

முடிவில், பீமனும், அர்ஜூனனும், துரியோதனன், துச்சாதனன், கர்ணன் ஆகியோரைக் கொல்வதாகச் சபதம் செய்தபோது, சகாதேவன், 'எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?' எனும் சொல்லுக்கேற்ப, இதற்கெல்லாம் யார் காரணம் எனச் சிந்தித்து, சூதாட்ட யோசனையைச் சொன்ன சகுனியே இதன் மூல காரணம் எனத் தேர்ந்தான். போரில் சகுனியைக் கொல்வேன் எனச் சபதம் செய்தான்.

'சகுனிதனை இமைப்பொழுதில்,' சாதேவன், 'துணித்திடுவேன்
சமரில்' என்றான்; (வில்லி பாரதம்).

பாரதப் போரில், சகுனியை எதிர்த்துப் போரிட்டான் சகாதேவன். சகுனியைக் காக்கவென, துரியோதனன் சகாதேவன் மேல் எறிந்த வேல், பயனற்றுப் போய் விட்டது. அவ்வாறில்லாமல், சகாதேவன், தன் குறியைச் சரியாக நிர்ணயித்து, சகுனி மேல் வேல் எறிந்து தன் சபதத்தை முடித்தான்.

சகுனி ஆவி போமாறு, சபத வாய்மை கோடாமல்,
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட,
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை
இகலொடு ஏவினான், வீமன் இளவலான போர் மீளி. (வில்லி பாரதம்)

இந்தப் பாடலில், 'சபத வாய்மை' என்ற சொல், சகாதேவன் சகுனியைக் கொல்வதாக இருந்த சபதத்தை நினைவுபடுத்துகிறது.

வெஞ்சினம் கொள்ளுதலும் பழிதீர்த்தலும் தர்மத்தின்படி சரியான செயலாகக் கருதப்படவில்லை என்றாலும், சில தருணங்கள் அப்படி அமைந்தும் விடுகிறது என்பதே மகாபாரதம் சொல்லும் செய்தி. ஆயினும் இனி வரும் காலத்தில், அமைதி நிலவவும், அன்பு தழைக்கவும் எங்கும் நிம்மதி நிறைந்திருக்கவும், இறைவனை வேண்டுவோம்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
பெங்களூரு.

www.aalosanai.blogspot.in   

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3



தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகளே அந்தக் காலத்தில் காதல் பூங்காக்கள்!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

"சேவாலயா என்னும் தொண்டு நிறுவனம்" என்ற என் ஆக்கத்தில் (11 ஏப்ரல்  2011) ஒரு 'டைடானிக்' பாட்டியின் கதையைச் சொல்லி இருந்தேன். புதிதாக வந்தவர்கள் அதனைப் படிக்க வேண்டுகிறேன்.

என் அந்த ஆக்கத்திலேயே வேறொரு பாட்டியின் கதை கிடைத்ததையும், அதனைப் பின்னர் சொல்வதாகவும் கூறியிருந்தேன். அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுகிறேன்.

அந்த முதியோர் இல்ல‌த்தில் இருந்த பாட்டிமார்களிலேயே மிகவும் உற்சாகமான பாட்டி அவர். இத்தனைக்கும் அந்த முதியவர்களிலேயே அவர்தான் வயதில் மூத்தவர் என்றார்கள்.நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவரைச் சந்தித்த போதே அவருக்கு 90 வயது கடந்து இருக்கும்.

அந்தக் குழுவுக்கு அந்தப் பாட்டிதான் தலைவர். தலைவர் என்றால் ஏதோ தான் மற்றவர்களுக்கு ஆணை பிறப்பித்து விட்டு, சொகுசாக அமர்ந்திருக்கும் தலைவர் அல்ல அவர். மற்றவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கான எல்லாச்  சேவைகளையும் செய்பவராக விளங்கினார்.

வாரந்தோறும் ஓரிரு மருத்துவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்து பாட்டிகளுக்கு மருத்துவ சோதனை செய்வர். நமது கதாநாயகிப் பாட்டி எல்லோருடைய மருத்துவ சோதனை பதிவு அட்டைகளையும் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு அந்தந்த பாட்டிகளின் முறை வந்தவுடன் அட்டையை எடுத்துக் கொடுத்து மருத்துவ சோதனைக்கு அனுப்புவார். தானும் அருகில் இருந்து டாகடர் கூறும் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டு, மருந்து சாப்பிடும் முறைகளையெல்லாம் விசாரித்து அறிந்து அந்தப் பாட்டிகளை நேரத்திற்கு மருந்து உண்ண வைப்பார்.  ஒரு பாசம் நிறைந்த தாயாகவும், கண்டிப்பான செவிலியாகவும் அந்தப் பாட்டி நடந்து கொள்வார்.

"ஒரு தொழில்முறை நர்ஸ் கூட இப்படி பணிவிடை செய்ய மாட்டார்கள்" என்று அங்கு நான் சந்தித்த மருத்துவர்கள் வாயாற‌ நம் பாட்டியின் புகழ் பாடினார்கள்.

மற்ற முதியவர்களின் துவைத்த துணிமணிகளை மடித்துக் கொடுப்பார்.

யாரும் படுக்கையிலேயே அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று எழுதப்படாத சட்டத்தைக் கடைப் பிடிப்பார்.முடியாத பாட்டிமார்களைக் கையைப் பிடித்து உணவுக் கூடத்திற்கு அழைத்து வந்துவிடுவார்.

"இதற்காகக் கூட நடக்காவிடில் எப்படி? இப்படியே படுத்துக் கிடந்தால் படுக்கைப் புண் வந்துவிடும்" என்று உரிமையோடு கண்டிப்பார்.

காலை மாலை இரண்டு வேளைகளிலும் நடக்க முடிந்தவர்களோடு தானும் அருகில் உள்ள கடற்கரை வரை சென்று வருவார்.

"நடந்தால் தான் கைகால் விளக்கமாக இருக்கும்"என்று அறிவுரை கூறுவார்.

நமது பாட்டிக்கு ஒரு பெயர் சூட்டி விடுவோமா?.'ஆண்டாள்' என்று வைத்துக் கொள்வோம்.ஆம்! பாட்டி ஒரு ஸ்ரீவைஷ்ணவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.ஆதியில் அவர் ஐயங்கார் மாது. 9 குழந்தைகளைப் பெற்ற அன்னை. சீரும் சிறப்புமாக மடி ஆச்சாரத்துடன் ஸ்ரீஉடையவர் அவதரித்த திருத்தலத்தில் பிறந்து வளர்ந்து திருமணமாகி நல்ல கிரஹஸ்தியாக வாழ்ந்தவர்.

40 வயதுவரை வீடும், அடுப்படியும், கோவிலும் தவிர வேறு ஓர் இடமும் அறியாதவர் நம் ஆண்டாள். கணவனே கண் கண்ட தெய்வம், இல்ல‌றமே நல்லறம் என்ற கொள்கையுடன் எந்த மன சஞ்சலங்களுக்கும் இடமளிக்காமல் மன திருப்தியுடன் வாழ்ந்து வந்தவர் அவ்ர்.

கண‌வர் நல்ல வேத விற்பன்னர். வேதத்தை சடங்குகளுக்குப் பயன் படுத்தக்கூடாது என்ற கொள்கையுடையவர் ஆதலால்,வருமானம் மிகக் குறைவு. வந்த வருமானத்தில் வறுமையில் செம்மையாக வாழ்ந்தது அந்தக் குடும்பம்.

நிம்மதியாகவே வாழ்க்கை முழுதும் செல்வதற்குக் கொடுப்பினை வேண்டும்.ஏற்ற இறக்கங்கள்,நல்லது கெட்டது, நன்மை தீமை அனைத்தும் கலந்தததுதானே வாழ்க்கை!? அமைதியான பூங்காவனத்தில் திடீரெனப் புயல் வீசியது.அனைத்தையும் புரட்டிப் போட்டது.

அப்போதுதான் பெண்களும் பள்ளி செல்ல‌லாம் என்ற மனோபாவம் நடுத்தர வர்க்கத்தில் வேரூன்ற ஆரம்பித்த நேரம். தட்டச்சுக் கற்றுக்கொண்டால் அரசாங்க வேலை கிடைக்காவிட்டாலும், வீட்டில் இருந்தவாறே 'ஜாப் ஒர்க்' செய்தாவது அன்றாடச் செலவுகளுக்கு சில்லறைக் காசுகளைப் பார்க்கலாம் என்ற‌ எண்ணம் பரவத் துவங்கியிருந்தத்து.

இப்போது கை பேசி காதலுக்கு உதவுவது போல,(வெறும் காதலுக்கு மட்டுமா?)அந்தக் காலத்தில் காதல் மலர்வது  தட்டச்சுப் பயிற்றும் பள்ளிகளில்தான்.

தட்டச்சுப் பயில வரும் யுவன்,யுவதிகள் பெரும்பாலும் பதின்வயதினர். புருத் தெரியும் வயது. நெருப்பையும் பஞ்சையும் பக்கதில் வைத்தால்..?

"ஐயோ பத்திக்கிச்சி பத்திக்கிச்சி......" என்று பாட வேண்டியதுதான்.

அப்படித்தான் ஆயிற்று ஆண்டாளின் மூத்த பெண்ணுக்கு.

"படித்தது போதும் யார் கையிலாவது பிடித்துக் கொடுத்து விடுகிறேன்" என்று பெண் வயதுக்கு வந்தது முதல் புலம்பத் துவங்கிவிட்டார் ஆண்டாளின் கண்வர்.ஆண்டாள்தான் புதுமைப் பெண்ணாக பெண் விடுதலை பேசினாள்:

" 18 வயது முடிந்துதான் பெண்ணுக்குத் திருமணம் செய்தல் வேண்டும். அதுவரை பெண் படிக்க வேண்டும். முன்பு போல படிப்பு இல்லாத விதவையான பெண்களைத்  தலையை மழித்து மூலையில் உட்கார வைக்க முடியாது. தேவைப்பட்டால் பெண் தன் கையால் உழைத்து,அல்லது அறிவால் பணிசெய்து சம்பாதித்துப் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும்.எனவே என் பெண் கனகவல்லி பள்ளி இறுதி வகுப்பு முடித்து தட்டச்சும் பயில வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்யத் தயார்"

"எப்படியோ போங்கள்.. நாளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பும் தண்டனையும் உனக்குத்தான்.." என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் குடும்பத் தலைவர்.

அவர் சொன்னது பலித்தது. அவருக்கும் இரண்டாமிடத்தில், வாக்கில் சனி போல..

அதனால்தான் எதிர்மறை எண்ணம் பலிக்கிறது.

கனகவல்லி தட்டச்சுக் கூடத்தில் காதல் வயப்பட்டாள்.

ஆச்சாரக் குடும்பத்தில் வந்த கனகவல்லியின் உள்ளத்தைக் கவர்ந்தவன்

முகம்மது இப்ராஹிம்!

இப்ராஹிம் பேரழகன். அவன் வெளித் தோற்றத்திலும், அவனுடைய மென்மையான பேச்சிலும் மயங்கிவிட்டாள் கனகா.

தினமும் ஒரு ரோஜாவுடன் தட்டச்சுப் பள்ளியின் வாசலில் நின்று இருப்பான் இப்ராஹிம். லைலா மஜ்னுவாக கனகாவும், இப்ராஹிமும் சிற‌கடித்துப் பறந்தார்கள்.

சிறிய ஊர்தான் அது. முணுக்கென்றாலும் அனைவருக்கும் தெரிந்தவிடும்.

ஊர் வம்பளந்தது. கனகாவின் தந்தையின் காதுக்கு செய்தி வந்தபோது காதல் மிகவும் முதிர்ந்த நிலை.

பெண்ணை வீட்டுச் சிறையில் வைத்தார். கனகா சாப்பிட மறுத்து உண்ணா நோன்பு இருந்தாள்.

ஆண்டாளுக்கு பெண்ணின் நிலையைக் கண்டு துக்கம் மேலிட்டது.கண‌வர் குளியல் அறையில் இருந்த போது கதவைத் திறந்து கனகாவை விடுவித்தாள் ஆண்டாள்.

அந்தச் சிட்டு பறந்து சென்று தன் ஜோடியுடன் இணைந்தே விட்டது.

ஆண்டாளின் கணவர் ஆகாயத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தார். ஆண்டாளுக்கு அவர் அன்று செய்த கொடுமைகள் சொல்லும் தரமன்று.

பெண்ணைத் தலை முழுகி, அவள் இறந்ததாகக் கருதி அவளுக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தார் அந்த வேத பிராமணர்.

ஆண்டாளுடன்  பேசுவதை நிறுத்தி கொண்டார்.ஒரே வீட்டிற்குள் இரண்டு தீவுகள்!

காலம் உருண்டு ஓடியது.

சுமார் 15 மாதங்களுக்குப் பின்னர் ஆண்டாளுக்கு ஒரு செய்தி வந்தது.

அதாவது,கனகா ஒரு ஆண்மகவைப் பெற்று எடுத்து அரசு மருத்துவ மனையில் இருக்கிறாள்.தன் தாய் வந்து காண வேண்டும் என்று  கனகா ஆசைப்படுகிறாள்.பெண்ணின் உள்ளம் பெண்ணே அறிவாள்.

ஆண்டாள் புழக்கடை வழியாக வீட்டை விட்டு வெளியேறி கனகாவையும் அவள் குழந்தையையும் மருத்துவமனையில் வைத்துப் பார்த்தாள்.

இர‌ண்டு கலகக் கண்களும் ஆண்டாளை மருத்துவமனையில் அவள் அறியாமல் பார்த்தன. கனகா வீட்டை அடையும் முன்னர் கணவருக்குச் செய்தி போயிற்று.

புழக்கடைக் கதவை பூட்டி விட்டு வாசல் திணையில் வந்து அமர்ந்து கொண்டார்.

எரிமலை வெடிக்கத் தயாராக இருந்தது.

பின் கதவு பூட்டப்படதை அறிந்து ஆண்டாள் அதிர்ந்தாள்.வேறு வழியில்லாமல் வாயில் பக்கம் வந்து வீட்டுக்குள் நுழைய முயன்றாள்.

அவ்வளவுதான்! அந்த எரிமலை வெடித்தே விட்டது.

நடு வீதியில் காலால் உதை வாங்கிக் கொண்டு ஆண்டாள் கிடந்தாள். காலைக் கட்டிக்கொண்டு அழுதும் பயனில்லை. அந்த அசுரனின் ஆவேசம் தணியவில்லை.

அரிவாள் மணையைக் கொண்டு வந்து ஆண்டாளின் கூந்தலைக் களைந்தார் அந்த மகானுபாவன். அடி வாங்கிக் கொண்டே பின் நகர்ந்தாள்.

கட்டிய புடவையுடன் அந்த கிராமத்தைவிட்டு சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு வெளியேற்றப்படாள் பரிதாபத்திற்குரிய ஆண்டாள்.

அதன் பின்னார் அவ‌ள் அந்த கிராமத்தையோ, உறவினர்களையோ, குழந்தைகளையோ மீண்டும் பார்க்கவேயில்லை.அதற்கான வைராக்கியத்தையும், சோதனைகளை அளித்த‌ அதே ஆண்டவனே அளித்தான்.

பல இல்லங்களில் சமையல் வேலை பார்த்தாள். பல முதியவர்களுக்கு தாதி, செவிலியர் பணி செய்தாள். 80 வயதுவரை ஓய்வின்றி உழைத்த ஆண்டாளின் மீது பரிதாபம் கொண்ட ஒரு கோட்டு வாத்தியப் பிரபல வித்வான் தன் இல்லத்திலிருந்து அவளுக்கு ஓய்வு கொடுத்து முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.

இந்த இல்லத்திலேயும் தன் சேவைப்பணிகளை ஆண்டாள் தொடர்ந்தார்.

இப்போது இருந்தால் ஆண்டாளுக்கு 125 வயது இருக்கும். அவர் எங்கிருந்தாலும் வாழ்க.

ஆண்டாள் மறைந்த செய்தி எனக்குக் கிடைகாததால் அவரை வாழ்த்துகிறேன். ஒரு வேளை அவர் பூதவுடல் மறைந்து இருந்தாலும் அவர் புகழ் உடம்புடன் என் மனதில் என்றும் வாழ்கிறார்.

இவர்களைப் போன்றவர்களால் அல்லவோ "உண்டாலம்ம இவ்வுலகம்!"

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

ராபர்ட் கிளைவ் யாருக்கு முத்தம் கொடுத்தார்?
ஆக்கம்: தேமொழி

ருட்யார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling) என்ற ஆங்கில எழுத்தாளரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கமுடியாது.  அதுவும் இந்த தலைமுறையினருக்கும் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தியது வால்ட் டிஸ்னியின் படமான "தி ஜங்கில்  புக்" என்பதாகும்.  விக்கிபீடியா களஞ்சியத்தின் மூலம் அவர் பற்றிய செய்திகள் பலவற்றை அறிந்து கொள்ளமுடியும்.  அவரது வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாக சொன்னால், அந்தக்கால ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த மும்பையில் 1865 ஆம் ஆண்டு பிறந்தவர்.  தன்னை ஆங்கிலோ இந்தியர்கள் எனக் கருதிக்கொண்ட இங்கிலாந்தின் குடிமக்களான பெற்றோர்களுக்குப்  பிறந்தவர்.  அவர் பிறந்தபொழுது அவர் தந்தை "Sir J. J. College of Architecture" என்னும் மும்பை கல்லூரியில் பணிபுரிந்தார்.  அவர் பிறந்த வீடு சிதிலமடைந்ததால் அதை இடித்து மற்றொரு கட்டிடம் அங்கே எழுப்பப்பட்டு, அது இப்பொழுது அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுவிட்டது.  கிப்லிங் பிறந்த இடம் எனக் குறிப்பிடும் பட்டயம் மட்டுமே அங்கே ஒரு இடத்தில் பொறிக்கப்படுள்ளதாம், அதைத்தவிர முக்கியத்துவம் தர நம் இந்தியர்களுக்கு அவர் பெயரில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.

அதற்கு குறிப்பாக மற்றொரு காரணம், கிப்லிங் ஆங்கில ஏகாதிபத்தியத்தில் பெருமை கொண்டவர், அவர் காலத்தில் பிரட்டிஷ் அதிகாரம் உலகம் முழுவதும் பரந்து கிடந்தது.  எனவே அது அவரது நாட்டுப் பற்று, அதில் எந்த ஒரு குறையும் சொல்வது தவறு.  ஆனால் அவர் கூறிய மற்றொருகூற்று "தி வைட் மேன்ஸ் பர்டன்" (The White Man's Burden) என்றது பலருக்கு எரிச்சல் மூட்டியது.  ஐரோப்பிய கிறிஸ்துவ வெள்ளைக்காரர்களின் கடமை பின்தங்கிய நாடுகளுக்கு சென்று அந்த மக்களை கலாச்சாரப்படி மேம்படுத்துவது என்பதைத்தான் அவர் அவ்வாறுக் குறிபிட்டார்.  இது பொதுவாக மற்றக் கலாச்சாரங்களைக் கீழ்த்தரமாகக் கருதும் ஐரோப்பியர்கள் அல்லது வெள்ளைக்காரர்களின் கருத்து.

நமது கடிகாரம் சரி என (நாமே நினைத்து) நாம் அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய முயன்றால்....??
(அய்யர் ஐயாவின் பின்னூட்டக் கருத்துக்களில் மனதை தொட்ட வரிகள்)

இது போன்ற ஆணவ, அகங்கார எண்ணமுடைவர்களை நம் மண்ணில் பிறந்த ஒரே காரணத்திற்காக நாமும் கொண்டாட விருப்பமில்லாமல் இருப்பதில் தவறில்லைதான்.  தன் பிறப்பின் பின்னணியினால் தன்னை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு சகமனிதர்களை இளக்காரமாகப் பார்பவர்களையே  இளக்காரமாக நினைக்க இன்னொருவர் உலகத்தில் இருக்க மாட்டார்களா என்ன?

நோபல் பரிசுகள்  வழங்க ஆரம்பித்த பின்பு ஆங்கில இலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் (42 ஆம் வயதில், 1907 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்)  என்ற பெருமைகள் இவரைச் சாரும்.  மும்பையில் பிறந்து ஆறு வயது வரை அங்கு வளர்ந்து, பின்பு பள்ளிப் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டு, மீண்டும் இந்தியா வந்து கொஞ்ச நாள் வேலைப் பார்த்தார்.  பின் உலகம் முழுவதும் சுற்றினாலும், பல நாடுகளில் வாழ்ந்தாலும், அவரால் இந்தியாவில் வாழ்ந்த நாட்களை மறக்க முடியவில்லை.  அதிலும் அவர் பிறந்த பம்பாய் நகர் மேல் தனி அன்பும் அவருக்கு இருந்தது.  இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதினார்.  ஜங்கிள் புக் கதையில் இந்தியாவை அடிப்படையாக வைத்து எழுதியது போல் அவரது பிற படைப்புகளிலும்  இந்தியாவைப் பற்றிப் பலமுறைக் குறிபிட்டுள்ளார்.

சென்ற வார மலரில் ஏழு கடல்களைப் பற்றிப் படித்த பின்பு, இணையத்தில் தேடியதில் கிப்லிங்கின்  "The Seven Seas" என்ற புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது (http://www.gutenberg.org/files/27870/27870-h/27870-h.htm).  பொதுவாக இலக்கியங்களில் (தமிழோ அல்லது ஆங்கிலமோ, இதில் மொழி பேதம் இருந்ததில்லை) எனக்கு ஆர்வம் குறைவென்பதால் அவைகளைப் பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்வதே என் வழக்கம், படிக்க முயலுவதில்லை.  இந்த புத்தகத்தை கிப்லிங் பம்பாய் நகரத்திற்கு சமர்ப்பணம் செய்து, பம்பாய் நகரத்தின் மீது ஒரு கவிதையே எழுதியுள்ளார்.  இந்தப் படைப்பில் ஒரு இடத்தில் ஆங்கில ஆட்சியின் கீழிருந்த நகரங்கள் கூறுவதாக "The song of the Cities" என்ற தலைப்பில் பல சிறிய செய்யுள்களும் இடம் பெற்றுள்ளன.  அதில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன (இடம் பெற்ற மற்ற நகரங்கள், Rangoon, Singapore, Hon-Kong, Halifax, Quebec and Montreal, Victoria, Capetown, Melbourne, Sydney, Brisbane, Hobart, and Auckland).  அவற்றில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

The song of the Cities
(by Rudyard Kipling, 1896)

          Bombay
Royal and Dower-royal, I the Queen
     Fronting thy richest sea with richer hands --
A thousand mills roar through me where I
     glean
     All races from all lands.

          Calcutta
Me the Sea-captain loved, the River built,
     Wealth sought and Kings adventured life to hold.
Hail, England!  I am Asia-Power on silt,
     Death in my hands, but Gold!

          Madras
Clive kissed me on the mouth and eyes and brow,
     Wonderful kisses, so that I became
Crowned above Queens --a withered beldame now,
     Brooding on ancient fame.

(* beldame என்றால் அழகற்ற கிழவி என்று பொருள்)

இவரது "If___" (http://www.everypoet.com/archive/poetry/Rudyard_Kipling/kipling_if.htm) என்ற கவிதையைப் படித்துப் பாருங்கள், இந்தக் கவிதையின் சாரம் கீதாஉபதேசத்தின் கருத்துக்களைக் கொண்டது என்று பத்திரிக்கையாளர் திரு. குஷ்வந்த்சிங் அவர்கள் கருதியதாகத் தெரிகிறது.  இது ஒரு நல்ல கவிதைதான்.  பார்வதி படித்தால் எந்த சுலோகங்களின் சாயல் இந்தக் கவிதையில் உள்ளது என்று சொல்லிவிடுவார்கள்.  சிறிது காலம் கிப்லிங் ஒரு யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவினை வைத்திருப்பதையும், இந்துக்கள் சூரியனின் குறியாகக் கருதும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகிற சுவஸ்திகாவையும் தன் புத்தகங்களில் இலச்சினையாகப் பயன்படுத்தியுள்ளார்.  ஆனால் ஜெர்மனின் நாசிப் படைகளின் குறியாக  சுவஸ்திகா உயோகப்பட ஆரம்பித்தவுடன் அவர் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
 இந்த ஆக்கத்திற்கு ஓவியம் வரைந்து கொடுத்த தேமொழி அவர்களுக்கு நன்றி - தனுசு
 
காத்திருப்பில் கலங்காதே
-தனுசு-

கொல்லிமலை காட்டுக்குள்ள
மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
மூணு நாளா தவிச்சிருக்கு -என்
முகம் காண துடிச்சிருக்கு.

பச்சரிசி சோறோடு
கருவாட்டு குழம்பாக்கி
தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
ஒத்தையிலே காத்திருக்கு.

உச்சந்தலை கூந்தலிலே
கட்டிவச்ச கருப்பு!
நெற்றியெனும் முற்றத்திலே
பொட்டு வச்ச வனப்பு !

கண்ணுக்குள் குடிவந்த
கடல்மீனின் துடிப்பு!
கன்னக் கதுப்பினில்
உப்பியிருக்கும் செழிப்பு!

வெளஞ்ச சோளக்கொல்லை
போல உந்தன் உடம்பு!
மெலிந்த உதட்டோரம்
மின்னுமடி சிவப்பு!

நிமிர்ந்து நடந்தாலே -சுவைக்கும்
மாங்கனி நினைப்பு!
இத்தனையும் பார்த்தாலே -மனசில்
வைக்குமடி நெருப்பு!

மலரும் நினைவினில் -உன்முகம்
உலர வேண்டாமடி
புலரும் பொழுதிதில் -விலகும்
உன் வருத்தமடி!

கொஞ்சிப்பேச வாரேனடி
கொஞ்சம் பொறு மயிலே!
கூட்டிக் கொண்டு வாரேன்
குளிர்காயும் நிலவை!

கொக்கரொக்கோ கூவும்வரை
நித்திரைக்கு தடை சொல்ல
வில்லாளன் வாரேனடி 
வன வேட்டை முடித்து.
-தனுசு-

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.

இந்த வயதிலும் ஓடிக்கொண்டிருக்கும் வாகனம்!
By S. Sabari Narayanan, Chennai

(இந்த வாகனம் ஏலத்தில் 3 கோடி 65 லட்ச ரூபாய்களுக்கு விலை போனதாம்)

This is the oldest motor vehicle car in the world that still runs.
It was built one year before Karl Benz and Gottlieb Daimler invented the internal combustion engine.

The world's oldest running motor vehicle has been sold at auction for an astonishing $4.62 million (R36.5-million), more than double the pre-sale estimate, as two bidders chased the price up in a three-minute bidding war.

The 1884 De Dion Bouton et Trepardoux Dos-a-Dos Steam Runabout drew a standing ovation as it was driven up onto the stage at Friday's RM Auction in Hershey , Pennsylvania - to prove that this 127-year-old car really does run! - and attracted a starting bid of $500 000, which was immediately doubled to $1 million.
Encouraged by the applauding crowd, the bidding went swiftly up to $4.2 million (R33 million) - 4.62 million (R36.5 million) including the 10 percent commission - before the car was knocked down to a unnamed buyer.

The Dos-a-Dos (Back-to-Back) Steam Runabout was built in 1884 by George Bouton and Charles-Armand Trepardoux for French entrepreneur Count de Dion, who named it 'La Marquise' after his mother.

In 1887, with De Dion at the tiller, it won the world's first ever motor race (it was the only entrant to make the start line!) covering the 32km from the Pont de Neuilly in Paris to Versailles and back in one hour and 14 minutes (an average of 25.9km/h) and, according to contemporary reports, hitting a breathtaking 60km/h on the straights!

La Marquise has only had four owners, remaining in one family for 81 years, and has been restored twice, once by the Doriol family and again by British collector Tom Moore in the early 1990's.  Since then, it has taken part in four London-to-Brighton runs and collected a double gold at the 1997 Pebble Beach
d'Elegance in California . 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!