மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.10

சிந்தனைக்கு விருந்து!


----------------------------------------------------------------------------------
சிந்தனைக்கு விருந்து!

வயிற்றிற்கு மட்டும்தான் விருந்தா? சிந்தனைக்கும் விருந்து படைக்கலாம்.
உங்களுக்குப் விருந்தைப் படைத்திருக்கிறேன். உண்டு மகிழுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
Napoleon said..
"The world suffers a lot. Not because of the violence of bad people, but because
of the silence of good people!"

2
Michael Paul said..
I wrote on the door of heart, "Please do not enter"
Love came smiling and said: "Sorry I am an illiterate"

3
Einstein said..
"I am thankful to all those who said NO to me
It’s Because of them I did it myself.

4
Abraham Lincoln said..
"If friendship is your weakest point then you are the strongest person in the
world."

5
Shakespeare said..
"Laughing Faces Do Not Mean That There Is Absence Of Sorrow!
But It Means That They Have The Ability To Deal With It"

6
Shakespeare said..
"In The Times Of Crisis I Was Not Hurt By The Harsh Words Of  My Enemies,
But By The Silence Of My Friends".

7
Shakespeare said..
"Never Play With The Feelings Of Others Because You May  Win The Game
But You Will Surely Lose The Person For Life Time"

8                          
Shakespeare said..
"Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent.
So When Your Value Increases Keep Yourself Calm Silent"

9
William Arthur said..
"Opportunities Are Like Sunrises, If You Wait Too Long You Can Miss Them"

10
Hitler said..
"When You Are In The Light, Everything Follows You,
But When You Enter Into The Dark, Even Your Own Shadow Doesn’t Follow You"

11  
Shiv Khera..
"If We Are Not Part Of The Solutions, We Are The Big Problems"
"Winners Never Do The Different Things, They Do The Things Differently".

12
John Keats said..
"It Is Very Easy To Defeat Someone,
But It Is Very Hard To Win Someone"
+++++++++++++++++++++++++++++++++
எல்லாமே நன்றாக இருந்தாலும், இந்தப் பன்னிரெண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போகவும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

29.9.10

வாத்தியாரின் வேண்டுகோள்!

====================================================
வாத்தியாரின் வேண்டுகோள்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஜோதிட நூல்கள் முழு வீச்சில் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

படிப்பதற்கு வசதியாகப் பாடங்கள் பிரிக்கப்பெற்று, அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்பெற்று, பொருள் அடக்கம், குறிசொற்களை வைத்துத்
தேடும் வசதியுடன் நூல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
முதலில் இரண்டு பகுதிகள் வெளிவரும். மூன்று மாத இடைவெளிக்குப்
பிறகு மேலும் இரண்டு தொகுதிகள் வெளிவரும்.

“தலைப்பை நன்றாகப் போடு
தானே வருவார்கள்
எழுதுவதை நன்றாக எழுது
எல்லோரும் படிப்பார்கள்”
என்று அடிக்கடி சொல்வேன்!

நமது ஜோதிட நூல்களுக்கு நல்ல தலைப்பு வேண்டும்

தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன். நான் நினைத்துள்ள தலைப்புக்களையும், அதற்கான விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன். அதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்து அனுப்பலாம்.

அத்துடன் உங்களுக்குத் தோன்றும் தலைப்பை அதற்கான காரணத்துடன் நீங்கள் எழுதலாம். அது நன்றாக  இருந்தால் அந்தத் தலைப்பில் நூல்கள் வெளியாகும். முன்னுரையில் உங்கள் பெயரும் வரும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புத்தான் ஜோதிடப் புத்தகங்களுக்கு
உரிய தலைப்பாகும். பகுதி ஒன்று, பகுதி  இரண்டு, பகுதி மூன்று,
பகுதி நான்கு என்ற சொல் மட்டும் புத்தகங்களை வகைப் படுத்திக்
காட்டும்.

உற்சாகத்துடன் உங்கள் பதிலை உடனே எழுதியனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

உங்கள் பரிந்துரையைப் பின்னூட்டத்தில் எழுத வேண்டாம். தனி மின்னஞ்சலில் மட்டுமே எழுதுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் நினைத்துள்ள தலைப்புக்களும், அதற்கான விளக்கங்களும்

1. பாதையும் பயணமும்

(விதி விதித்துள்ள பாதையும், நமது வாழ்க்கைப் பயணமும் என்று பொருள் கொள்ளலாம்)

2. கிரகங்களின் கிரிக்கெட் ஆட்டம்

(கிரகங்கள் அனைத்துமே பெளலர்கள். சனி, ராகு & கேது ஆகிய கிரகங்கள் ஃபாஸ்ட் பெளலர்கள். சமயத்தில்  பெளன்சராகப் பந்துகள் வரும். சந்திரன், சுக்கிரன், ஆகிய மூன்று கிரகங்களும் ஸ்பின் பெளலர்கள். சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் மீடியம் ஃபாஸ்ட் பெளலர்கள். குரு பகவான் விக்கெட் கீப்பர்.

காலதேவனும், அவனுடைய உதவியாளர் சித்திரகுப்தனும்
அம்ப்பயர்கள். Third Umpire கிடையாது. ஆட்டத்தை நடத்துபவர்
இறைவன்.(Match organizer)

மட்டையுடன் ஆடுவது நாம்தான். பவுண்டரி, சிக்ஸர் என்று
விளாசுவதும் நாம்தான். சில சமயம் வேகப் பந்தின் வீச்சிற்குப்
பயந்து ஒவ்வொரு ரன்னாக எடுக்க வேண்டியதும் நாம்தான்.
ஒவர்கள் கணக்கு எல்லாம் கிடையாது. ஆட்டம் முடியும் வரை
பந்துவீச்சு இருக்கும்)

3. விதிவழிக் கல்வி

(அஞ்சல் வழிக் கல்வியைப்போல இதுவும் ஒரு கல்வி என்று பொருள் கொள்க!)

4. வகுப்பறை ஜோதிடம்

(வகுப்பறையில் நடத்தப்பெற்ற ஜோதிடப் பாடங்கள்)

5. சமச்சீர் வாழ்க்கை

(எல்லோருக்குமே 337 பரல்கள்தானே. அதனால் சமச்சீர் வாழ்க்கை என்று பொருள் கொள்ளுங்கள்)

6. எளிய நடையில் இனிய ஜோதிடம்

(எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படியாக எழுதப்பெற்ற இனிய ஜோதிடப் பாடங்கள் என்று பொருள் கொள்க)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

28.9.10

சீதைக்கு ராமன் சித்தப்பன்!

...................................................................................................................
சீதைக்கு ராமன் சித்தப்பன்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.23
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.78
மோகன்ராஜ்!
     
Dear  Mr SP.VR. SUBBAIYA,
       I am Mohan. I am a follower of your blog ( not continuously).I have a some doubts.
Doubt No:1
There are 12 rasis as per hindu mythology. As per that on average Indian population 0f 120 crore people in our country. Just average is around 10 crore people having a one of the rasis.My doubt is that. Will 10 crore of the people will have the same type of life or not.
Doubt No:2 
Assume if two people of same sex is born at the same place (or hospital) on the same day Will they have a similar rasi, natchatram, and jathakam - is this right? if right will  these two people will have all of their happenings in their life in common. I don't think it will happen like that Then what is the use of jathakam. Pls let me know .
Mohan.

அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அந்தக் காலத்தில், கிராமங்களில் இரவு நேரத்தில், கூத்து அல்லது கதாகாலட்சேபம் துவங்கி, விடிய விடிய நடக்கும். அதாவது இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி, அதிகாலை ஐந்து மணிவரை நடக்கும்.

அப்படி, ஒரு கிராமத்தில் ராமாயண காலட்சேபம் விடிய விடிய நடந்தது. அப்பா அம்மாவின் கட்டாயத்திற்காக, அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற ஒரு இளைஞன், கோவில் மண்டபத்தில் நடந்த காலட்சேபத்தை உட்கார்ந்து கேட்காமல், கோவிலின் எதிரில் இருந்த ஊருணிக்கரையில் படுத்து ஆனந்தமாகத் தூங்கிவிட்டான். காலையில் கூட்டம் கலைந்து ஊர்மக்களெல்லாம், பலத்த பேச்சுச் சத்தத்துடன் தத்தம் வீடுகளுக்குத் திரும்பியபோது, சத்தத்தில் எழுந்த அவனும், வீட்டிற்குத் திரும்பி விட்டான்.

வீட்டிற்கு வந்தவுடன், அவன் முகத்தில் இருந்த தெளிர்ச்சியைப் பார்த்த, அவனுடைய தந்தை, என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டு, மெல்லப் பேச்சுக் கொடுத்தார்.

“ஏன்டா, சொற்பொழிவைக் கேட்டாயா?”

பதில் வந்தது.  “ஆகா, கேட்டேன்”

“சீதைக்கு, ராமர் என்ன உறவு?” அவர் மீண்டும் கேட்க, இவன் சொன்னான் “அது தெரியாதா என்ன? சீதைக்கு ராமர் சித்தப்பா” என்றான்.

அதுபோலத்தான் இருக்கிறது உங்கள் கேள்விகள் இரண்டும். சுமார் 400 பாடங்கள் நடத்தியுள்ளேன். நீங்கள் அவற்றையெல்லாம் படித்திருந்தால், இப்படிக் கேட்பீர்களா? முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படியுங்கள்.
--------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.79
வேத நாராயணன்
பெங்களூர்
   
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
பாலரிஷ்டம் பற்றி விரிவாக தெரிவிக்கவும்
நன்றிகளுடன்

13.7.2010 அன்று பாலரிஷ்ட தோஷத்தைப் பற்றி விவரமாக எழுதியுள்ளேன். Link URL   http://classroom2007.blogspot.com/2010/07/blog-post_13.html  பாடங்களை ஒழுங்காகப் படிக்காமல், பழைய பாடங்களிளேயே - நடத்திய பாடங்களிலேயே  சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்வது?

பழைய பாடத்தில் உள்ளது என்று சொன்னால், உடனே அதன் சுட்டியைத் தாருங்கள் என்ற கேள்வி வரும். சுட்டியைக் கொடுத்தாலும், லிங்க் யு.ஆர்.எல் வேலை செய்யவில்லை. நீங்கள் எனக்கு அதை, அப்படியே தர முடியுமா என்று கேட்டு அடுத்த மின்னஞ்சல் வரும். புதிதாக வருபவர்களில் பலர் பழைய பாடங்களை என்ன காரணத்தினாலோ படித்து அறிந்துகொள்வதில்லை.

அதனால், அதுபோன்ற உங்களுடைய அடுத்தடுத்த கேள்வியைத் தவிர்ப்பதற்காக, அந்தப் பாடத்தையே மீண்டும் ஒருமுறை (கீழே) கொடுத்துள்ளேன். இப்போதாவது படித்துத் தெளிவு பெறுங்கள்!
--------------------------------------------
முதலில் குழந்தைப் பருவத்தில் தவறிப்போகும் ஜாதகர்களைப் பற்றிப் பார்ப்போம்:

அதற்கு பாலரிஷ்ட தோஷம் என்று பெயர்:

பிறந்த நாளில் இருந்து எட்டு வயதிற்குள் இறந்துவிடும் அமைப்பு அது! பாலரிஷ்ட தோஷம்!

ஜாதகத்தில் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் (malefic planets) பார்வை விழுந்தால், அது இந்த தோஷத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்டுள்ள மூன்று  வீடுகளில் உள்ள சந்திரனின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், பாலரிஷ்ட தோஷம்
நிவர்த்தியாகிவிடும். உங்கள் மொழியில் சொன்னால் காணாமல் போய்விடும்.

ரிஷப லக்கினக் குழந்தைக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது பாலரிஷ்டம் போன்று தோற்றமளிக்கும். ஆனால் சந்திரன் இருக்கும் அந்த வீடு, சுபக்கிரகமான சுக்கிரன் வீடு, லக்கினாதிபதியும் அவரே! அதனால்
குழந்தை தப்பித்துவிடும். பாலரிஷ்டம் ஒன்றும் செய்யாது.

சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கு, ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது பாபக் கிரகமான சனியின் வீடு. அந்த வீட்டின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை எதுவும் இல்லை என்றால், பாலரிஷ்ட தோஷம் தன் வேலையைக் காட்டிவிடும்.
---------------------------------------------------------------------------
குழந்தைகள், நீரில் தவறி விழுந்து அதாவது ஆறு, குளம் அல்லது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தவறி விழுந்து, இறந்து விடுவதுதான் இந்த வயதுச் சாவுகளில் அதிகமான சாவுகளாக இருக்கும். அல்லது கடுமையான
நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடும் குழந்தைகளும் இருக்கும்.

எது எப்படியானும், அது விதிக்கப்பட்டது. பெற்றோர்களால் ஒன்றும் செய்ய முடியாது - பரிதவிப்பதைத் தவிர.

அதற்கான நிலைப்பாடுகள் (அனைத்தும் பொது விதிகள்):

கண்டம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது அதற்குப் பொருள்:

1. சந்திரன் 8ஆம் வீடு, அல்லது 12ஆம் வீடு, அல்லது 6ஆம் வீடுகளில் இருந்து ராகுவின் பார்வையைப்  பெற்றிருந்தால், சின்ன வயதில் கண்டம்.

2. லக்கினத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்க, கேந்திரங்களில் அல்லது எட்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்.

3. 6ஆம் வீட்டில் அல்லது 8ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், மற்றும் சனி கூட்டாக இருக்க, சுபக்கிரகங்களின்  பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்.

4. சூரியன், செவ்வாய், மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 5ஆம் வீட்டில் கூட்டாக இருந்தால்,குழந்தைக்குக் கண்டம்

5. லக்கினத்தில் சந்திரன் இருக்க, அதன் இருபுறமும், தீய கிரகங்கள் இருக்க (பாபகர்த்தாரி யோக அமைப்பு) சுபகிரகங்களின் பார்வை எதுவும் லக்கினத்தின் மேல் இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்

6. ஜாதகத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, ஜாதகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில்  சுபக்கிரகங்களான குரு  அல்லது  சுக்கிரன் பாபகர்த்தாரி  யோகத்தில்  மாட்டிக் கொண்டிருந்தால்  குழந்தைக்குக் கண்டம்

7. லக்கினத்தில் சந்திரனும், சனியும் இருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்

8. லக்கினம் மற்றும் லக்கினத்தில் இருந்து 6, 7 , 8 ஆகிய நான்கு வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்.

9. ஜாதகத்தில் சந்திரனும், சனியும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க, 12ல் சூரியனும், 4ல் செவ்வாயும் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்

10. ஏழாம் வீட்டில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்து, சுபக்கிரகங்களின் பார்வையை அவர்கள் பெறவில்லை  என்றால், குழந்தைக்குக் கண்டம்
--------------------------------------------------------------------
முக்கியமானவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஜோதிட நூல்களில்  சொல்லப்பட்டுள்ளன. அத்தனையையும் எடுத்து எழுதினால் ஓவர் டோசாகிவிடும். ஒரு தூக்க மாத்திரைக்குப் பதிலாக  ஐம்பது  தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும். ஆகவே பாலரிஷ்ட  தோஷத்திற்கான அமைப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நானும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப் போவதில்லை. இதைப் படிக்கும் நீங்களும் ஜோதிடர் வேலைக்குச்  செல்லப்போவதில்லை. ஆகவே இது போதும்.

இல்லை நாங்கள் முழு விதிகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் என்பவர்கள், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புராண ஜோதிட நூல்களை வாங்கிப் படிக்கலாம்.
------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.80
நந்தினி நடராஜன்
கோயம்புத்தூர்
   
வணக்கம் ஐயா,
ஆண் ஜாதகம் தான் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சில ஜோதிடர்கள்  கூறுகிறார்கள் இது உண்மையா அய்யா?

உதாரணத்திற்கு ஒரு ஆணின் ஜாதகத்தில் இரண்டு குழந்தையும்  பெண் என்று உள்ளது .ஆனால்  அவனுடய மனைவின் ஜாதகத்தில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று உள்ளது. ஒரு ஜோதிடர் கூறிஉள்ளார்  இரண்டும் பெண் தான் பிறக்கும் என்று ஏன் என்றால் ஆண் ஜாதகம் தான் வலிமையானது என்று சொன்னார். இதில் எனக்கு உடன்பாடு  இல்லை அய்யா. தாங்கள் ஜாதகத்திற்கு பெண் ஆண் என்று பேதமில்லை என்று கூறி உள்ளீர்கள் .
குழந்தை பிறப்பு என்பது கூட்டு முயற்சி என்று கூறி உள்ளீர்கள் . பிறகு எப்படி ஆண் ஜாதகம் தான்  வலிமையானது என்று சொல்ல முடியும் ?

அப்படி வைத்து கொண்டாலும் எதை வைத்து ஆண் ஜாதகம் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சொல்ல முடியும் ? உதாரணத்திற்கு 10 ஆண்களுடைய ஜாதகத்தில் பெண் குழந்தை என்று உள்ளது என்றால் அவர்களுக்கு ஆண் குழந்தை  பிறக்காது என்று சொல்ல  முடியுமா? அப்போது பெண்ணின் ஜாதகமே தேவை இல்லை  என்று ஆகிவிடும் இல்லையா ?நான்  ஜோதிடதைக் கேலி செய்வதாக நினைக்க வேண்டம் அய்யா ...    எனக்கு இந்த 5  வீட்டை பற்றி  நிறைய சந்தேகம் உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள் ...எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும் ..
நந்தினி நடராஜன்
கோயம்புத்தூர்

சில ஜோதிடர்கள் கூறுவதற்கு நான் எப்படி விளக்கம் சொல்ல முடியும்? சொன்னவர்களையே நீங்கள் கேட்பதுதான் முறை!. ஐந்தாம் வீட்டைப் பற்றியும், குழந்தைப் பேறுக்கான அமைப்பைப் பற்றியும் நான் நிறைய எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் படிக்க வேண்டுகிறேன்  
--------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.81
விசு ஐயர்

வணக்கம் அய்யா . .
3 கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்தால் . .அது கிரக யுத்தம். அதுவும் 12ம் இடத்தில் என்றால்  பலன் கிட்டாது என பதில் கண்டேன்  அப்படியானால் சூரியன் சுக்கிரன் புதன் என எல்லோரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து இருந்தால்  அது அப்படித்தான் இருக்குமா?

 “அது அப்படித்தான் இருக்குமா?” என்று நீங்கள் கேட்க, வடிவேல் பாணியில் “அது அப்படித்தான் இருக்குமா?” என்று நானும் திருப்பிக் கேட்க வேண்டியதுதான்.

லக்கினம் என்ன என்பது முக்கியமில்லையா? என்ன லக்கினம் என்பதை நீங்கள் ஏன் சொல்லவில்லை? கேள்வியை
கேள்வியாகக் கேட்க வேண்டாமா?

அது அப்படித்தான் இருக்குமா? என்றால் என்னத்தைச் சொல்வது? பலன் கிட்டாது என்று நீங்களே குறிப்பை எழுதியுள்ளதால், அது அப்படித்தான் இருக்கும் என்று நானும் பதில் சொல்லி விடலாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.9.10

வகுப்பறையில் விளையாட்டிற்கு இடமில்லை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறையில்  விளையாட்டிற்கு  இடமில்லை!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.22
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.75
ஜோதிடர்.S.அரிச்சந்திரன்
நாகர்கோவில்
   
அன்பு ஐயா அவர்களுக்கு,
உங்கள் வகுப்பறை பதிவுகளை படித்தேன் மிகவும் நன்று,,,,,உங்கள் உதாரண விளக்கம் அருமை. உங்களிடம் ஓரு  கேள்வி மட்டும்.லக்கணம் என்பதன் விளக்கம் மட்டும் என்ன வென்று சொல்லுங்கள் ஐயா. குணமோ, பலனோ, தேவையில்லை.லக்கணம் என்பதன் பொருள் மட்டும் போதும். நன்றி ஐயா

லக்கினம் என்பதன் பொருள்தானே? சொன்னால் போயிற்று. கீழே கொடுத்துள்ளேன்.

அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்களே உங்களை ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளர் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். லக்கினத்தின் பொருள் உங்களுக்குத் தெரியாதா? எதற்கு இந்த விளையாட்டு? விளையாடுவதற்கு
நீங்கள் மைதானத்திற்குப் போவது நல்லது. இங்கே வகுப்பறைக்கு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.

அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை.

I am a businessman, writing in blogs out of mere interest to share my knowledge and thoughts with the next generation  சம்ஜே க்யா? அர்த்தமாயிந்தாண்டி? மனசிலாயோ?

லக்(கி)னம் என்பது பெயர்ச் சொல். சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events at any given time of the day with reference to the time of  sun rise

சொல்லகராதியில் இருந்து அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கறந்த பால் சுவாமி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.76
வேதநாராயனன்,
பெங்களூர்
   
குருவுக்கு எனது பணிவான வணக்கங்கள்
கிரகண காலத்தில் குழந்தை பிறக்கக்கூடாதா? அப்படிப் பிறந்த குழந்தையின் வாழ்க்கை குறையுடைய சந்திரன்  மற்றும் சூரியன் போல குறையாகவே இருக்குமா தயவு செய்து தெளிவாக விளக்கவும். சாதரணமாக கிரகண
காலத்தில் குழந்தை பிறக்க இருந்தால் அறுவை சிகிச்சை செய்து முன்னதாகவே பிரசவம் செய்கின்றனர்  மேலும் அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு எதாவது சக்தி இருக்குமா? தயவு செய்து தெளிவாக விளக்கவும்
வேத நாராயணன்
பெங்களூர்   
       
பிறக்கக்கூடாது என்று யார் சொல்ல முடியும்? எப்படிச் சொல்ல முடியும்?

பிறந்தால் ஏழு விதமான தோஷங்கள் ஏற்படும் என்று புராதன ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவைகள்  முறையே Ghora, Dhwanshi, Mahodari, Manda, Mandakini, Mishra and Rakshashi என்று சொல்லப்படும்.  பார்ப்பதற்கு இந்தச் சொற்கள் ஏதோ ஆயுர்வேத மருந்துகள்போல உள்ளன.

சூரிய கிரகணத்தால் ஏற்படுவது: The eclipse happens Sun is in conjunction with one of the lunar nodes (Rahu or  Ketu) on a new moon or full moon day. சூரியன் உடலுக்குக் காரகன் என்பதாலும், அத்துடன் தந்தைக்குக்  காரகன் என்பதாலும், ஜாதகன் வறுமையான சூழலில் பிறக்க நேரிடலாம். அத்துடன் உடற் குறைபாடுகளும்
ஏற்படலாம் ( என்னகுறைபாடு என்று அடுத்த கேள்வியை அனுப்பி என்னைப் பிறாண்ட வேண்டாம்) ஜாதகத்தில்  மற்ற கிரகங்களைவைத்து அது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அதை எல்லாம் துவைத்துப் பார்க்க வேண்டும்.
துவைப்பதற்கெல்லாம் என்னிடம் வாஷிங்மிஷின் (நேரம்) இல்லை. சந்திர கிரகணத்தில் பிறந்தாலும் இதே  நிலைப்பாடுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.77   
கண்ணன் சீதாராமன்
பிரந்த ஊர்: வாசுதேவநல்லூர்
வசிக்கும் ஊர்: Doha Qatar.

1.தாய், தந்தை, குரு இவர்களுக்கு பின்னர் தான் இறைவன், இது தான் உலகம் முழுவது உள்ள மற்றவர்களால்  இந்து என பெயர் இடப்பட்ட இந்துகளின் அடிப்படை முதல் மற்றும்   அனைத்து மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை  எல்லோரும் அறிந்து இருந்தும் நடைமுறை படுத்தாமல் அல்லது முடியாமல் போகக் காரணம்  என்ன?

 “மதா, பிதா, குரு தெய்வம்” எனும் மந்திரத்தைத்தானே சொல்கிறீர்கள்? அன்னையையும், தந்தையையும், குருவையும் மதித்து நட, தெய்வம் தானாக வரும் என்பார்கள். அதனால்தான் தெய்வத்திற்கு 4வது இடம்  கொடுக்கப் பட்டது. ஆனால் இன்று பலருக்கும் காசுதான் தெய்வமாகிவிட்டது. பணத் தேடலில் மற்றதை ஓரங்கட்டி விட்டார்கள். டாஸ்மாக் சரக்குதான் தீர்த்தமாகிவிட்டது. தெருவோரக்கடை புரோட்டாதான் பிரசாதமாகி விட்டது. பாட்டியாலா சுடிதார் போட்டுக்கொண்டு செல்லும் பெண்தான் அம்பாளாகத் தெரிகிறாள். என்ன செய்வது? காலக்  கோளாறு!
“காசேதான் கடவுளடா - அந்தக்
கடவுளுக்கும் அது தெரியுமடா
கைக்குக்கை மாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே”


என்று ஒரு கவிஞர் 40 ஆண்டுகளுக்கு முன்பே - அதாவது நீங்கள் பிறக்கும் முன்பாகவே எழுதிவைத்துவிட்டுப்  போயிருக்கிறார். அந்தப் பாடலைத் தினமும் 108 முறைகள் பாராயணம் செய்யுங்கள். உங்கள் மனதில் இந்த
மாதிரிக் கேள்விகள் எழாது!

2. பழனியில் போகர் @ புலிபாணி சித்தர், மதுரையில் சித்தர், சங்கரன்கோவிலில் பாம்பாட்டி சித்தர், திருப்பதியில்  கொங்கணர் சிதம்பரம், இராமேஸ்வரம் ,  வாரணாசி (காசி), மும்பை  சித்திவிநாயகர் மந்திர், மகாலட்சுமி ,   என்பன  போன்ற  ஆலயங்கள் அங்குள்ள " தவ யோகிகளின்"  தவ வலிமையால் தான் சிறந்து விளங்குகின்றது  என்று கேட்டது உண்டு உண்மையா?  {பூனாவில் அருகில் உள்ள ஷிர்டி  சாய்பாபா! . மந்திராலயம்
எடுத்துகாட்டு }

நீங்களும், நானும் இதை ஒப்புக்கொண்டு, மனம் மகிழலாம். மூன்றாம் மனிதன் ஒப்புக்கொள்ள மாட்டான். மும்பை, தில்லி, கொல்கத்தா, சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற ஊர்களின் மேன்மைக்கு எந்த சித்தர் காரணம்
என்று கேட்பான். என்ன பதில் சொல்வது?

3. எத்தனையோ தவ புருஷர்கள், யோகிகள் என இன்றுவரை  கொண்ட நமது நாட்டில்,  அன்னியர்களின் படை  எடுப்பை முன்னரே அறிதந்த புருஷர்கள் { காலத்தால் உண்டாக்க முடியாத அழிந்து போன ஆலயம்,  கலாச்சாரம்,  கலைகள் ) எதனால் படையடுப்பைத் தடுக்க முடியவில்லை. ஒருவேளை தடுத்து இருந்தும் வெற்றி  பெறாமல் போகக் காரணம் என்ன?

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - ஆனால் தர்மமே வெல்லும் என்பது பகவத்கீதையின் சாரம். அதை அறிந்ததினால் அவர்கள் வாளாதிருந் திருக்கலாம். தவபுருஷர்கள் காலத்தில்  ஏ.கே.47 எல்லாம் இல்லை.
அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்!:-))))

4. சிறு தெய்வ வழிபாடு,  புத்தம், ஜைனம்,என தொடங்கி எண்ணிக்கையில்லாத மதங்கள்  உள்ள   உலகில்   அத்தகைய மதங்களை தோற்று வித்தவர்களின் உண்மையான குறிக்கோள் " மனிதனை பிறப்பு என்னும் கடலில்
இருந்து கரை சேர்ப்பது தானே".  "மோட்சம்" என்னும் வீட்டிற்கு வழி காட்டுகின்றேன் என்று கூறிகொண்டவர்கள்.  தனக்கு என்று கொள்கை , கட்டுப்பாடு, முதல தலைவன் என நாளைக்கு நடக்க போறதை கூட சரியாக
சொல்லும் அளவிற்குத்  தவவலிமை பெற்றவர்களால் அவர்கள் தோற்றுவித்தஅமைப்பிற்குள்ளே ஆயிரம் ஆயிரம் பிறவிகள் தோன்றி சீரழிவதை அறியாமல் போனது எப்படி 1  அன்பை போதித்தவர்களே! அநியாயமாக  அதர்மத்திற்கும் துணை போனது எப்படியோ? 2. அனைத்தும்  அறிந்தவர்கள் கூட, இறை  தூதர்கள் கூட தனது  கொள்கை தான் விளங்க வேண்டும் என இறைவனை வேண்டி உள்ளனர், இதுவும்  சுயநலம் தானே, உண்மையை  ஒத்து கொள்ள முடியாத சுயநலம்தானே?

அவர்கள் அறியாமல் போனதாக யார் சொன்னது? அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொன்னால்,  நீங்கள் சுட்டிக்காட்டும் அவர்களுடைய தவவலிமை பொய்யாக அல்லவா போய்விடும்?

கலியுகம். இப்படித்தான் நடக்கும். பகவான் மீண்டும் அவதாரம் எடுத்து எல்லாவற்றையும் சீராக்குவார் என்ற  நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவர்களுக்கு மட்டுமல்ல, ஆண்டவனை வணங்கும் அத்தனை நல்ல
உள்ளங்களுக்கும் இன்று இருக்கிறது. அன்றும் உண்டு. இன்றும் உண்டு. தவவலிமை பெற்ற மகான்களுக்கும்  இருந்திருக்கிறது. இன்று பொது விநியோகக் கடையில் (அதான் ரேசன் கடை) க்யூவில் நிற்பவனுக்கும் இருக்கிறது.

சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள். ஜடையில் தொங்கும் நான்கு முள மல்லிகைப்பூவில் கிறங்கிப்போய்  எல்லாவற்றையும் (இந்தக் கருமத்தை எல்லாம்) மறந்து விடுவீர்கள்!:-))))

“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா”


என்று கேட்டு அடுத்தவரை நச்சுப்பண்ண ஆரம்பித்துவிடுவீர்கள். ஆன்மிக்கத்தைக் கொண்டு போய் ஆற்றில்  போட்டுவிடுவீர்கள்!

இதழ் சிந்தும் சுவை என்றல் என்னவென்று தெரியுமல்லவா?:-))))

5. எம்குல தெய்வம் " திருசெந்தில் ஆண்டவரின்"  சேனைப் படைத் தலைவரான " வீரபாகு" வின்   பரம்பரைதான் எமது பரம்பரை என்பதனால் வீரபாகுவையே  மூலமாக (தெய்வமாக) வணங்கி வந்தால் மிக்க  சேமம் அடையலாம்  என்று கேட்டது உண்டு. இதனை விளக்க முடியுமா?

என்ன குழப்புகிறீர்கள்? "வீரபாகு"வின் பரம்பரைதான் உமது பரம்பரை என்றால் வாரிசு சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறீர்களா? வீரபாகுவின் பரம்பரை என்றால், உங்கள் பகுதி தாசில்தார் அதை ஒப்புக்கொள்வாரா?

இன்னும் கற்பனைக் குதிரையையே ஓட்டிக் கொண்டிருக்காமல், அரசு போக்குவரத்துப் பேருந்தில் பயணிக்கும் காலத்திற்கு வந்து சேருங்கள்.

“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ?
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு.” 


என்று கவியரசர் கண்ணதாசன் அசத்தலாக எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார். ஆகவே பழைய  பெருமைகளை எல்லாம் கடாசி விட்டு, யதார்த்தமாக இருங்கள். வாரம் ஒரு மலையாளப் படத்தைப் பாருங்கள்.
பிரியாமணியின் படத்தை சட்டை பையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்துப்பாருங்கள் இந்தப் பரம்பரை  நினைப்பு எல்லாம் வராது!

சேமம் என்று எதைச் சொல்கிறீர்கள்? சேமத்திற்கு எல்லாம் சரியான விளக்கம் கிடையாது. அளவுகோல்  கிடையாது.

கோவில் மடப்பள்ளியின் புளியோதரை சாதத்தை கட்டளைதாரர்கள் அள்ளிக் கொடுக்க வயிறுமுட்டச்  சாப்பிட்டுவிட்டு, ஊருணிக்கரையில் ஆனந்தமாகப் படுத்துக்கிடப்பவன், தான் சேமமாக இருப்பதாகச் சொல்வான்.

பென்ஸ் காரில் இரண்டு இளம் அம்மணிகளுடன் பயணிப்பவன் தான்தான் சேமமாக இருப்பதாகக் கூறுவான்.

எதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்?
+++++++++++++++++++++++++++++++++++++
தொடரும்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

25.9.10

அடடா, இப்படியொரு விளக்கமா?

-------------------------------------------------------------------------------------

 ........................................................................................................
அடடா, இப்படியொரு விளக்கமா?

இந்திய ரூபாய்க்குப் புதிதாகக் குறிப்படம் ஒன்றைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தியுளார்கள்.(A symbol which is in printed or written sign used to represent an operation, element, quantity, quality, or relation, as in mathematics or music) அனைவரும் அறிந்ததே! அதற்கு ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். படம் கிழே உள்ளது. பார்த்து அது சரிதானா? அல்லது இல்லையா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!
 -------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------
 வாத்தியார், இரண்டு நாள் வெளியூர்ப் பயணம். இன்றும் நாளையும் வகுப்பறைக்கு விடுமுறை. சுறுசுறுப்பான கண்மணிகள் பழைய படங்களைப் புரட்டிப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் வழக்கம் போல
Ipod அல்லது DVDஐ வைத்துத் தங்கள் பொழுதைப் பயனுள்ளதாக்கலாம்:-)))))
---------------------------------------------------------------------
 “வாத்தி (யார்), ஞாயிறு வாரமலர்?”

 “இந்தவாரம் ஞாயிறு மலர் இல்லை. ஏன் இல்லை என்றால், வாரமலருக்கு யாரும் எழுதியனுப்பவில்லை!”

 “ஏன் உங்களுடைய கதைகளில் ஒன்றைப் போட வேண்டியதுதானே?”

 “இல்லை, அது உங்களுக்கென்றே உள்ள பகுதி. அதில் வாத்தியாரின் ஆக்கங்கள் வராது! அது நியாயமுமல்ல!”
--------------------------------------------------------------------
  “அடுத்த வகுப்பு?”

  “வழக்கம்போல திங்கட்கிழமை காலையில்!”

  “சரி, வெளியூர்ப் பயணத்திலிருக்கும்போது இதை எப்படி வலையில் ஏற்றினீர்கள்?”

 “கூகுள் ஆண்டவரின் மகிமை! ப்ளாக்கில் போஸ்ட் ஆஃப்சன் உள்ளது. அதில் உள்ளிட்டுவிட்டால் போதும். அது தானாக ஆக்கங்களை, கடமை தவறாமல் குறித்த தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவில் ஏற்றிவிடும். கீழே விளக்கப்படம் உள்ளது. தெரியாதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!”

அன்புடன்
வாத்தியார்
 -------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

24.9.10

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

---------------------------------------------------------------------------------
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

மனவளப் பாடம்
---------------------------------------------------------------------------
படத்தைப் பாருங்கள். படத்தில் உள்ள குடும்பத்தாரின் நிலைமையைப் பாருங்கள். உறங்குவதற்குப் போதிய இடமில்லை. இருந்தாலும் தங்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளான, பூனை, மற்றும் நாய்க்கும் தங்கள் படுக்கையில் இடம் கொடுத்திருக்கிறார்கள்.

வருண பகவான் வீட்டிற்குள் மழை நீரை விட்டுக்கொண்டிருக்கிறான். கூறை பழுதானது. தரை ஜில்லிடும். இருந்தாலும் இருப்பதை சரிசெய்து கொண்டு மகிழ்ச்சியுடன் உறங்குகிறார்கள்.

அவர்கள் முகத்தில் பூத்திருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள்.

இதுதான் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிரச்சினைகள் இல்லாத நிலைமையல்ல. இருக்கும் பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் வாழ்வதுதான், மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியமாகும்
-------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

23.9.10

காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!!!!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!!!!

“காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளுங்களா? எதற்காக வாத்தியார்?

“வலிமையுள்ள தேசங்களின் வரிசையில் நாம் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம்! அதற்காகத்தான்!”

“யார் சொன்னது?”

“நம் ஊர்க்காரன் சொன்னால் நம்புவோமா? அமெரிக்கர்களே சொல்லியிருக்கிறார்கள். செய்தி கீழே உள்ளது. வாத்தியாரைப் பிறாண்டாமல் செய்தியை முழுமையாகப் படியுங்கள்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

........................................................................................................................................
India third most powerful nation: US report
Tue, Sep 21 11:57 AM


Washington, Sep 21 (IANS) India is listed as the third most powerful country in the world after the US and China and the fourth most powerful bloc after the US, China and the European Union in a new official US report.

The new global power lineup for 2010 also predicted that New Delhi's clout in the world will further rise by 2025, according to 'Global Governance 2025' jointly issued by the National Intelligence Council (NIC) of the US and the European Union's Institute for Security Studies (EUISS).

Using the insights of a host of experts from Brazil, Russia, India and China, among others, and fictionalised scenarios, the report illustrates what could happen over the next 25 years in terms of global governance.

In 2010, the US tops the list of powerful countries/regions, accounting for nearly 22 percent of the global power.

The US is followed by China with European Union at 16 percent and India at eight percent. India is followed by Japan, Russia and Brazil with less than five percent each.

According to this international futures model, by 2025 the power of the US, EU, Japan and Russia will decline while that of China, India and Brazil will increase, even though there will be no change in this listing.

By 2025, the US will still be the most powerful country of the world, but it will have a little over 18 percent of the global power.

The US will be closely followed by China with 16 percent, European Union with 14 percent and India with 10 per cent.

'The growing number of issues on the international agenda, and their complexity, is outpacing the ability of international organisations and national governments to cope,' the report warns.

This critical turning point includes issues of climate change, ethnic and regional conflicts, new technology, and the managing of natural resources.

The report also highlights the challenges proponents of effective global governance face.

On one hand, rapid globalistion, economic and otherwise, has led to an intertwining of domestic politics and international issues and fueled the need for more cooperation and more effective leadership.

But on the other hand, an increasingly multipolar world, often dominated by non-state actors, have put a snag in progress toward effectual global governance, it said.

(Arun Kumar can be contacted at arun.kumar@ians.in)

-------------------------------------------------------------------------
செய்தி இரண்டு! 

உலகக் கோடீஷ்வரகள் பட்டியலில் 
இன்னும் 4 ஆண்டுகளுக்குள் முகேஷ் அம்பானி பெயர் 
முதல் இடத்தில் இருக்குமாம். 
செய்தியை முழுமையாகப் படியுங்கள்


Mukesh Ambani to be richest man in world in 2014: Forbes  
Sun, Sep 12 08:09 PM

Yoshita Singh Boston, Sep 12 (PTI) Indian business tycoon Mukesh Ambani could be the richest man on earth in 2014 with a net worth of USD 62 billion, pipping Mexican billionaire businessman Carlos Slim, according to a forecast by the prestigious Forbes magazine. "One of the predictions is that Reliance Industries'' chief Ambani, who currently has a net worth of USD 29 billion, pips the world''s richest man Mexican businessman Carlos Slim to top Forbes'' rich list in 2014," it said.

Ambani''s net worth swells to USD 62 billion while Slim is "hit hard by Mexican political, financial chaos," according to the prediction by Forbes. 53-year-old Ambani currently ranks fourth on Forbes'' list of the world''s billionaires.

Forbes has listed a number of events that could happen over the next 10 years in the field of politics, energy, medicine, finance, society and technology. The publication asked its staff and contributors to forecast some of the "noteworthy events" till 2020.

"A vision of the coming decade sketched from real data, projections and facts whenever possible -- though we''ve injected a dose of rigorous science fiction to fill the gaps," Forbes said about its special 2020 report called ''What Happens Next -- Our Look Ahead''. Another forecast in the field of finance and economics is of fraudster Bernard Madoff''s death in his prison cell in 2011.

The convicted Ponzi-scheme perpetrator is found hanging in his cell and "prison officials will not rule out foul play," according to the Forbes forecast. "Futurism favours the bold.

Look more than 30 years ahead.and critics will forgive your inaccuracies.

We''ve attempted a thought experiment with far tougher standards: predicting the future that''s just around the corner," Forbes said. In 2012, social networking site Facebook debuts on NASDAQ. Its IPOs value USD 40 billion and founder Mark Zuckerberg becomes the first 20-something who is worth USD 10 billion-plus.

Then by 2020, Wal-mart employs five million people worldwide and its sales pass the one trillion dollar mark. The company "cites successful India and Brazil expansions" for the landmark.

In 2017, Harvard endowment doubles in seven years to USD 50 billion. It offers free tuition to lure top students from China.

The US job scene finally improves in 2018 as unemployment drops below seven per cent and worst of quadruple-dip recession is likely over, Forbes predicts. PTI YAS KIM AKJ.

Our sincere thanks to Yahoo News Service

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

22.9.10

நகைச்சுவை: “அது” எத்தனை வகைப்படும்?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: “அது” எத்தனை வகைப்படும்?

இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று என்று என்றைக்காவது கவலைப் பட்டிருக்கிறீர்களா? கவலையை  விட்டொழியுங்கள். உங்களுக்காகவே சிரித்து மகிழக்கூடிய சில விஷயங்களை இன்று பதிவிட்டுள்ளேன்.

சிரித்து மகிழுங்கள். நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத சீரியசான ஆசாமிகள் பதிவை விட்டு விலகலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. நேரமின்மை காரணமாக, மொழிமாற்றம்  செய்யவில்லை.  தனித்தமிழ்  ஆர்வலர்கள் மன்னிக்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.
A sad love story of an Engineering student

A guy was deeply in love with his classmate.

One day he proposed her by saying that he loved her a lot

But she was angry and refused and threatened him that she'd complain to the Principal if he ever bothers her  again.

One day the girl borrowed a text book from that boy and wrote a message “I love you too, I'm sorry to hurt you the other day. if u've forgiven me, please come and talk to me and never leave me.” in that book.

But the guy never talked to her.

4 yrs went away and nothing happened..
.
Moral of the story
.
Engineering boys never open their books!!!
+++++++++++++++++++++++++++++++++++++++++
2.

This is Women brain!!!!

One night President Obama and his wife Michelle decided to do something out of routine and go for a casual dinner at a restaurant that wasn't too luxurious.

When they were seated, the owner of the restaurant asked the president's secret service if he could please speak to the First Lady in private. They obliged and Michelle had a conversation with the owner.

Following this conversation President Obama asked Michelle, why was he so interested in talking to you. She  mentioned that in her teenage years, he had been madly in love with her.

President Obama then said, "so if you had married him, you would now be the owner of this lovely restaurant",  to which Michelle responded, "no, if I had married him, he would now be the President"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Read and Learn

Expecting the world to treat you fairly because you are a good person is like expecting the lion not to attack you  because you are a vegetarian.

Beauty isn't measured by outer appearance and what clothes we wear, but what we are inside. So, try going out naked tomorrow and see the admiration !

Don't walk as if you rule the world, walk as if you don't care who rules the world! That's called Attitude!

Every lady hopes that her daughter will marry a better man than she did and is convinced that her son will never find a wife as good as his father did !

Drinking is our biggest enemy- Jawaharlal Nehru
We should learn to love our enemies- Mahatma Gandhi
Now, whom to follow and which one to choose ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
A wonderful example of financial management indeed..!!!

A beggar to another beggar: “I had a grand dinner at Taj yesterday.”

“How?” The other beggar asked.

First begger : “Some one gave me a Rs 100/- note yesterday.I went to Taj and ordered dinner worth Rs 1,000/ -, and enjoyed the dinner. When the bill came, I said, I had no money. The Taj manager called the police man,  and handed me over to him. I gave the Rs 100/- note to the police fellow, and he set me free.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து உள்ளது இரண்டும் சுத்தமான அசைவ நகைச்சுவைகள்.. அசைவத்தை விரும்பாதவர்கள் பதிவை விட்டுக் கண்டிப்பாக விலகவும். படித்துவிட்டு முகத்தைத் தொங்கப்போடுவதில் பயனில்லை!

துபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் இப்போதே கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்டைப் பிரஸ் செய்து பதிவைவிட்டு
விலகி விடுவது நல்லது. உங்களுக்கும் நல்லது. பதிவை முழுதாகப் படிக்காமல் வெளியிட்ட வாத்தியாருக்கும்  நல்லது!:-)))))
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
எச்சரிக்கையை மீறியும் வருகிறீர்களா? ஒன்றும் கெட்டுவிடவில்லை. இப்போதுகூட விலகிவிடலாம். மீறிச் சென்று  படித்தால், அது உங்கள் விதி. அதாவது விதிக்கப்பட்டது. அதற்கு நான் பொறுப்பில்லை!
V
V
V
V
V
V
V
V
V
V
V
------------------------------------------------------------------------------
5
There was this college leaving questionnaire. They were required to fill in the blanks. One was: "If a girl faints,  we must first feel her pu_s_".

Those who wrote 'Pulse' became doctors;

The rest, it is rumoured, got into the Navy.....!!
+++++++++++++++++++++++++++++++++++=============
6
Different kinds of Sex

RETIREMENT SEX

Two men were talking. 'So, how's your sex life?'

'Oh, nothing special. I'm having Pension sex.'

'Pension sex?'

'Yeah, you know; I get a little each month, but not enough to live on!'
-----------------------------
LOUD SEX

A wife went in to see a therapist and said, 'I've got a big problem, doctor. Every time we're in bed and my  husband climaxes, He lets out this ear splitting yell.'

'My dear,' the shrink said, 'that's completely natural. I don't see what the problem is.'

'The problem is,' she complained, 'it wakes me up!'
----------------------------
QUIET SEX

Tired of a listless sex life, the man came right out and asked his wife "During a recent lovemaking session,  How come you never tell me when you have an orgasm?'

She glanced at him and replied, 'You're never home!'
--------------------------------
CONFOUNDED SEX

A man was in a terrible accident, and his 'manhood' was mangled and torn from his body. His doctor assured him that modern medicine could give him back his manhood, but that his insurance wouldn't cover the surgery since it was considered cosmetic. The doctor said the cost would be $3,500 for 'small, $6,500 for 'medium, and $14,000 for 'large.'

The man was sure he would want a medium or large, but the doctor urged him to talk it over with his wife  before he made any decision.

The man called his wife on the phone and explained their options. The doctor came back into the room, and  found the man looking dejected.

'Well, what have the two of you decided?' asked the doctor.

'She'd rather remodel the kitchen.'
--------------------------------------
WEDDING ANNIVERSARY SEX

A husband and his wife had a bitter quarrel on the day of their 40th wedding anniversary

The husband yelled, 'When you die, I'm getting You a headstone that reads: 'Here Lies My Wife - Cold As Ever'.'

'Yeah,' she replies, 'when you die, I'm getting you a headstone that reads: 'Here Lies My Husband - Stiff At  Last.' '
------------------------------------------
WOMEN'S HUMOROUS SEX

My husband came home with a tube of K Y jelly and said, 'This will make you happy tonight.' He was right. When he went out of the bedroom, I squirted it all over the doorknobs. He couldn't get back in.
-------------------------------------------
ELDERLY SEX

One night, an 87 year-old woman came home from Bingo and found her 92 year-old husband in bed with another woman.

She became violent and ended up pushing him off the balcony of their 20th floor, assisted living apartment,  killing him instantly.

Brought before the court on the charge of murder. The judge asked her if she had anything to say in her defense.

She began coolly, 'Yes, your honor. I figured that at 92, if he could have sex... He could also fly.'
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உள்ளவற்றில் எது நன்றாக உள்ளது? வெட்கப்படாமல் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.

நட்புடன்,
SP.VR. சுப்பையா


வாழ்க வளமுடன்!

21.9.10

மலர்மாலைக்கும் மலர்வளையத்திற்கும் என்ன வித்தியாசம்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மலர்மாலைக்கும் மலர்வளையத்திற்கும் என்ன  வித்தியாசம்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.21
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.71
லோகபாண்டியன்
பஹ்ரெய்ன், சவூதி அரேபியா
   
Dear Sir,

1. Most my friends are in the age to get marry (26 and above) they are asking about their partners or marriage life (for example in one of my friend horoscope in seventh place Sani and Chandran) which i find very difficult to reveal. How to come out from this issue Sir, I am under bid stress

நீங்களே ’எல்’ போர்டு. நீங்கள் எதற்காக இன்னொருவருக்கு டிரைவிங் சொல்லித்தருகிறீர்கள்? ஜோதிடம் பெரிய கடல். ஆழம் தெரியாமலும், அலையின் வேகம் தெரியாமலும், நீசசல் தெரியாமலும் கடலுக்குள் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா? யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்

2. For Viruchiga Lagna in 12th Place Sani and Sevvai, I know it is Vibareetha rajayogam however in 12th Place Sani and Sevvai is Sayana Dosham. My question is Yogam supersedes Dosham or Dosham supersedes Yogam. Please advise if both Yogam and Dosham exists, what kind of effect and favor. (Whilst keeping in mind Lagnathipathi in 12th Place)

மோட்டார் பந்தயமா நடக்கிறது? யோகம் & தோஷம் இரண்டும் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டுபோய் கோப்பையைத் தட்டிக்கொண்டு வருவதற்கு? இரண்டிற்கான பலன்களும் இருக்கும். சம்பளம் தினாரில் கை நிறையக் கிடைக்கும். அதே நேரத்தில் சூடு பறக்கின்ற பாலைவனத்தில் வேலை பார்க்க வேண்டியதாகவும் இருக்கும். மனைவி அழகாகவும் இருப்பாள். தினமும் ஒரு மணி நேரம் கால்களைப் பிடித்துவிடவும் சொல்வாள்.

யோகத்தினால் கையில் காசு புரளும். சயன தோஷத்தினால் மனைவி கையில் புரள மாட்டாள். அவளை விட்டுப் பிரிந்து தூர தேசங்களில் வேலை பார்க்க நேரிடும். இப்படிப் பலன்கள் கலவையாக இருக்கும். இட்லி மாவையும், அடை மாவையும் சேர்த்ததுபோல இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.72
நித்தியானந்தம்
வயது. 49
கரையாம்பாளையம்
பல்லடம்

குருவிற்கு வணக்கம்.

1.குரு சந்திரன் செவ்வாய் மூன்று கிரகங்களும் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் குருச்சந்திர யோகம்  சந்திரமங்கள யோகம் குருமங்கள யோகம் ஆகியவை வருமா?

உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு இருக்கும் அமைப்பை வைத்தே வாரம் 3 கேள்விகள் கேட்டு உங்கள் ஜாதகத்தை அலசிக்கொண்டிருக்கிறீர்கள். நடத்துங்கள் நாடகத்தை!

மூன்று கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்தால், அது கிரக யுத்தக் கணக்கில் வரும். இரண்டு கிரகங்களுக்கு இடையே இடைவெளி 5 பாகைகள் இருக்க வேண்டும். இருக்கிறதா பாருங்கள்.

யோகங்கள் எல்லாம் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் முழுப்பலன் கிடைக்காது. பலன்கள் விரையமாகிவிடும். இருபதுவயதுப் பெண் கிடைத்தாலும், அறுபது வயதில் திருமணம் செய்துகொள்வதற்குச் சமம் அது. மாலை ஆறு மணிக்கு, தலையில் 4 முளம் மல்லிகைப்பூவை வைத்துக்கொண்டு, கணவனுடன் வெளியே போவதற்கு அவள் தயாராகிவிடுவாள். சம்பந்தப்பட்ட ஆசாமி, மூட்டு வலி என்று படுத்துக்கிடப்பான். தாமபத்யம் எப்படி இனிக்கும்?

2. இந்த மூன்றும் பன்னிரெண்டில் மிதுனத்தில் கடகலக்கினமாக இருந்து லக்கினத்தில் சுக்கிரன் மாந்தி இரண்டாமிடம் சிம்மத்தில் சூரியன் சனி புதன் மூன்றில் ராகு பத்தில் கேது இருக்க இந்த அமைப்பு மாலையோகம் என்று சொல்லி இருக்கிறீகள் இந்த கிரகங்களின் நிலைப்பாடு குறித்து விளக்கிச்  சொல்ல முடியுமா?

அடுத்தடுத்த கட்டத்தில் கிரகங்கள் வரிசையாக இருப்பதுதான்
மாலை யோகம். நீங்கள் சொல்வது போல கொத்துக் கொத்தாக
இருந்தால், அது மலர்வளையமாகிவிடும். மலர் வளையம் எதற்குப்
பயன்படும் தெரியுமா? பல்லடத்துக்காரருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.73
Bottle mani
பாட்டில் மணி
   
ஐயா, வணக்கம்,
சூரியன், ராசியிலும் நவாம்சத்திலும்  கும்பத்தில் இருந்தால் (ராசியில் பத்தாம் வீட்டிலும்,நவாம்சத்தில் ஒன்பதாம் வீட்டிலும்) வர்கோத்தம பலன்கள் நன்மை  தரக்கூடியதா?அல்லது தீமை செய்யக்கூடியதா?
நன்றி

கும்பம் சூரியனுக்குப் பகை வீடு. அங்கே சூரியன் வர்கோத்தமம், பெற்றால், முழுப்பலன் கிடைக்காது! ஐயா என்று நீங்கள் அன்பொழுக அழைத்தாலும், உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.74
இரா.புரட்சிமணி    

ஐயா எனக்கு கேள்வி கேட்க மேலும் ஒரு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

1. ஒருவனின் நல்ல ஒழுக்க நிலைக்கு குருவைப்போல், சனிக்கும் சம்பந்தம் உள்ளதா? ஒரு வீட்டிற்கு  மூன்று துறைகள், மொத்தம் முப்பத்து ஆறு துறைகள். பரல்களைப்பார்த்து ஒரு வீட்டின் வலிமையை சுலபமாக அறிவது போல். ஒவ்வொரு துறையின் வலிமையை எப்படி அறிவது? ஒரு வீட்டில் குறைவான பரல்கள் இருப்பதால் அந்த மூன்று துறைகளுமே கெட்டுவிடும் என்று சொல்ல முடியாது அல்லவா?

ஒவ்வொருதுறைக்கும் காரகர்கள் இருக்கிறார்களே சுவாமி. அவர்கள் எதற்கு இருக்கிறார்கள் என்று பழைய பாடங்களைப் படித்துப்பாருங்கள்.

2. நண்பர்களைப்போல்தான் வாழ்க்கைத் துணையும் அமையுமா?

நண்பர்களை எதற்கு வாழ்க்கைத் துணையோடு ஒப்பிடுகிறீர்கள். நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடிக்கலாம். தம் அடிக்கலாம். வாழ்க்கைத்துணையோடு சேர்ந்து அதைச் செய்ய முடியுமா? நண்பர்களோடு கருத்து வேறுபாடு என்றால் கழற்றி விட்டு விடலாம். வாழ்க்கைத் துணையைக் கழற்றிவிட முடியுமா?

3. வள்ளலார், பாபாஜி அல்லது ஓளி உடம்பு பெற்ற மற்றவர்களின் சாதகம் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?

ஒளி உடம்பா? குழப்புகிறீர்களே சாமி! குழப்புவதில் மட்டும் நன்றாகப் புரட்சி செய்கிறீர்கள்.

4. நீங்கள் ஏன் ஜோதிடம் எனும் ஒளியியலில் ஆராய்ச்சி செய்யக் கூடாது?இலட்ச கணக்கான மாணவர்கள் தங்களுக்கு துணை இருப்பார்கள்.
என்றும் அன்புடன்
இரா. புரட்சிமணி 

ஆகா புரட்சி, லட்சக்கணக்கானவர்கள் கொடிப்பிடிப்பீர்கள். தலைவர் சொந்தத் தொழிலை விட்டுவிட்டு ஆராய்ச்சியில் இறங்கினால், புவாவிற்கு என்ன செய்வார்? அரசியல் கட்சிகளைப் போல உண்டியல் குலுக்க முடியுமா? அல்லது செல்வந்தர்களைத் தட்டிக்கொடுத்து வசூல் பண்ண முடியுமா? அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. ஆயிரம், லட்சம் என்று
சொல்லிச் சூடு ஏற்றாதீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

20.9.10

எது உங்களுக்கும் நல்லது? எனக்கும் நல்லது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எது உங்களுக்கும் நல்லது? எனக்கும் நல்லது?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.20
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.67
ஸ்ரீஸ்கந்தவரோதயன்
SRISKANTHAVAROTHAYAN
   
Dear Sir,
meenam 8 am kaddathil rakuvum viyalanum irunthal palan nanmija / theemija?
மீன லக்கினம். எட்டாம் இடத்தில் ராகுவும், குருவும் இருந்தால் பலன் நன்மையா? அல்லது தீமையா? இதுதானே உங்கள் கேள்வி!

சூர்யாவின் தம்பி கார்த்திக்கையும், தமன்னாவையும் வைத்துப் படம் எடுத்தால் படம் ஓடுமா? அல்லது ஓடாதா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர், பாடலாசிரியர் இசையமைப்பாளர், குத்துப்பாட்டு, அயிட்டம் சாங்,  போன்ற மற்ற விஷயங்கள் எல்லாம் முக்கியமில்லையா? அவற்றை வைத்துத்தானே படம் ஓடுமா? அல்லது ஓடாதா? என்று சொல்லமுடியும்

லக்கினாதிபதி எட்டில்போய் அமர்ந்தாலும், லக்கினத்தில் எத்தனை பரல்கள், லக்கினத்தில் வேறு யார் உள்ளார்கள், லக்கினத்தின் மேல் விழும் பார்வைகள். மீன லக்கினத்திற்குப் பாக்கியநாதன் செவ்வாய் (9th lord) எங்கே இருக்கிறார் என்பதுபோன்ற மற்ற விஷயங்கள் எல்லாம் வேண்டாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.68
கார்த்திக் கண்ணன்
   
Hello Sir, 
What is meant by moolathirikonam...? and its house numbers also what is meant by kendiram and what are its house numbers
Karthik kannan

இடைவேளைக்குப் பிறகு திரையரங்கிற்குள் நுழைந்து, ஓடிக்
கொண்டிருக்கும் படத்தின் முன்கதையைக் கேட்டுப் பக்கத்து
இருக்கையில் அமர்ந்திருப்ப வனைத் துயரப்படுத்தினால்
என்ன நியாயம்? மூலத்திரிகோணம், கேந்திர வீடுகள் என்பதெல்லாம் அடிப்படைப் பாடங்கள். நீங்கள் முதலில் இருந்து படம் பார்ப்பது நல்லது. அதாவது துவக்கத்தில் இருந்து எல்லாப் பாடங்களையும் படிப்பது
நல்லது. (உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.69
M.நித்தியானந்தம்
வயது 49
கரையாம்பாளையம், பல்லடம்

குருவுக்கு வணக்கம்,
1 குரு ஆறு பரல்களுடன் லக்கினத்தில் இருந்தாலும் அது பகை வீடாக (மிதுனம்) இருக்க ஆறு பரல்களுக்கு உரிய பலன்களைத் தருமா?
2 புதன் ஆறு பரல்களுடன்ஆட்சி வீட்டில் (மிதுனத்தில்) இருக்க அஸ்தமனம் ஆகி இருந்தால்  ஆறு பரல்களுக்கு உரிய பலன்களைத் தருமா?
நன்றி குருவே!

இரண்டு கேள்விகளும் பரல்களைப் பற்றி இருப்பதால் இரண்டிற்கும் ஒரே பதில்தான். பகை வீட்டில் இருக்கும் கிரகத்திற்கும், அஸ்தமனமாகி
இருக்கும் கிரகத்திற்கும் ஆறு பரல்கள் எப்படி வந்தன என்று
யோசித்தீர்களா? உங்களுக்காக அவைகள் பெட்டி கொடுத்து
அதிகமான பரல்களை வாங்கியிருக்க வழியில்லை. பெட்டி கொடுத்து
மார்க் வாங்குவது என்பது என்னவென்று தெரியுமல்லவா? அவைகள் ஜாதகத்தில் இருக்கும் அமைப்பை வைத்து அந்தப் பரல்கள் வந்திருக்க வேண்டும். பரல்கள் அதிகமாக இருப்பதால் அவைகள் ஜாதகத்தில்
சிறப்பாக உள்ளன என்று பொருள். சிறப்பாக இருப்பதால், அவைகள் தங்களுடைய தசாபுத்தியில் நன்மைகளைச் செய்யும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.70
சரவணகுமார்,
கோயம்புத்தூர்
   
Dear vathiyar sir,
Thanks for your Service. 
1. Plase tell us Guru will do good things for all lagnas? ex. for thula, he is athipathi
for 3 & 6, if he gets utcham in 10th house, Katagam, means, what will be the effect?

அண்ணே, வாங்க, வாங்க! அண்ணே என்பது ஒரு மரியாதைக்காகத்தான். நீங்க நம்ம ஊருக்காரர், அதற்காகத்தான் இந்த உபரி மரியாதை. குரு எங்கே இருந்தாலும் உங்களை மாதிரி நல்லவர்தான்!  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னு சொல்லுவாங்க இல்லையா? அதை மனசுல
வச்சுக்குங்க சாமி!

அதோட அவரு உங்க ஜாதகத்தில் கேந்திரத்தில உச்சமாக உக்காந்திருக்காரு. அவருடைய தசா புத்திகள்ல உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்து, பார்க்கும் வேலையில் உயர்வடையச் செய்வாரு!

நீங்க கேட்ட கேள்விய ஜூம் பண்ணிப் பார்த்தா, அவரு 10ஆம் வீட்டில உக்காந்துகிட்ட இரண்டாம் வீட்டைப் பார்க்கிறாரு (5ஆம் பார்வையா) அதனால இரண்டாம் வீட்டுக்குரிய பலனை சிறப்பாகத்தருவாரு! ஆறாம் வீட்டுக்கு, அந்த வீட்டில இருந்து கணக்குப்போட்டா, அவரு அந்த வீட்டுக்கு (அந்த வீட்டுக்கு அதிபதிவேற) கேந்திரத்தில் உக்காந்திருக்காரு. அதனால் அந்த வீட்டுக்கும் பல நன்மைகளைச் செய்வாரு. எல்லாமே நல்லா இருக்கு!!! ஜமாயுங்க!

மூனாம் வீடு ரெம்ப முக்கியமா என்ன? கவியரசரே பாடி வச்சிட்டுப்போயிருக்காரு “அண்ணன் என்னடா, தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே!”

கண்ணாலத்துக்குப் பொண்ணு பாத்துக்கிட்டிருந்தீங்களே, ஏதாவது அம்மணி வந்து மாட்டீயிருச்சா .... ஸாரி...கிடைச்சிருச்சா?

2. ones character and behaviour will be good if one has guru in lagnam. right? I saw
a horoscope (which is with me), it has moon & guru in Kataga lagnam, which has 
gejakesari yogam as well, but personal character is not good. why and what should 
I check in her/his horoscope?

இதான வேண்டாம்ங்கிறது. படிச்ச பாடத்தை மறந்துட்டீங்களே! குருவும் சந்திரனும் ஒன்னா டூயட் பாடிக்கிட்டிருந்தா அதாவது சேர்ந்திருந்தா அதற்கு குருச்சந்திரயோகம்னு பேரு. குருச்சந்திர யோகத்திற்கான பலன் பழைய பாடத்தில் உள்ளது. வண்டியை அங்க திருப்பி பாடத்தை எட்டிப் பார்த்து, படிச்சிட்டு வாங்க!

ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்குப்பிறகு கேரக்டர் 100% ஃபர்பெக்ட்டா இருந்த
/இருக்கிற மனுசனே கிடையாது. அப்பிடி இப்பிடி இருக்கத்தான்
செய்வாங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகவேண்டியதுதான்!

3. For thula lagnam, 11th house occupied by Sani(Simmam) and it has 44parals and 6 is suya vargam.how the sani dhisai will be for the native?

கேள்வியிலேயே பதில் இருக்கிறது சாமியோவ்! பதினொன்னாம் வீட்டில பரல்கள் அதிகம் இருக்கிறதுனால வாழ்க்கையே லாபம் மிகுந்ததா இருக்கும்.வர்ற அம்மணி 100 பவுன் நகையோட வரலாம். எதுக்கும்
இப்பவே வங்கிப் பெட்டகம் (Bank Locker) ஒன்னைப் பிடிச்சு வச்சுக்குங்க. இன்னிக்கு பவுன் என்ன விலை விக்கிதுன்னு தெரியும்ல?!!!!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

19.9.10

மைனரை மயக்கிய குரல்!

மைனரின் படம்.

பின்னணியில் தெரிவது, ஜப்பானில் உள்ள ஒரு சுற்றுலாத்தளம். 
நம்மூர் கொடைக்கானலைப்போல சுற்றிலும் மலைகள், நீர் நிறைந்த பெரிய ஏரி என்று எப்படி அசத்தலாக இருக்கிறது பாருங்கள்.

மைனரின் முதுகில் இருப்பது அவரது உடைமைகள் (Ipod, digital camera, நீச்சல் உடைகள், துண்டுகள், வாசனைத் திரவியங்கள் அடங்கிய பை.)

நம்மூர் என்றால் - இதற்கென்றே - அதாவது இதைப் போன்றவற்றை சுமந்து வருவதற்கென்றே மைனரின் பண்ணை ஆட்கள் உடன் வருவார்கள். ஜப்பானில் அதற்கெல்லாம் வழியில்லை.
----------------------------------------------------------------------------------------



மைனரின் எழில்மிகு க்ளோஸப் தோற்றம்!
-------------------------------------------------------------------------------------------------
இன்றைய வாரமலரை மைனரின் ஆக்கம் ஒன்று நிறைக்கிறது. 
படித்து மகிழுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------
Over to his  post
____________________________________________________________
மைனரை மயக்கிய குரல்!

ஸ்டாப்பிங் வந்துவிட்டது என அறிவிப்பு வர சுதாரித்து எழுந்தேன். ஒரு 1000 yen நோட்டைத் டிக்கெட்டிங் மெஷினுக்குள் திணித்து 240 yen போக மெஷின் துப்பிய மீதிச் சில்லறையை  எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினேன்..நம்மூர் பஸ்களில் நாள்தோறும் கண்டக்டரிடம் சில்லறைக்கு சண்டைபோடும் பலரும் ஒரு கணம் மனதிற்குள் நிழலாக வந்துபோனார்கள்!

முன்னிரவின் இதமான சூடு கலந்த காற்று நடைபாதையோர மரங்களில் இருந்து  மெல்லிய சத்தத்துடன் என்னுடலைத் தழுவியவண்ணம் உடன்வர நானும் சுகமாக நடக்க ஆரம்பித்தேன்.

இத்தகைய இதமான தருணங்களில் அவசரம் எதுமின்றி மெதுவாய் நடப்பது ஓர் அலாதி சுகம்தான்..iPod இல் இருந்து 'எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ'  என்று பாடலும் சூழலுக்கு சுருதி சேர்த்தது.என்ன ராகம் என்றெல்லாம் எனக்கு சுத்தமாகத் தெரியாவிட்டாலும் என் மனதுக்கு இனியவை என்று தோன்றுகிறவற்றை சேகரிப்பது ஒரு அலாதியான விஷயம்தான்!

'லல்ல..லலல்லா..லலா ..லல்ல...லல்ல..லலல்லா' என்று உற்சாகத் சத்தத்துடன் பாடல் இனிமையாக ஒலிக்கிறது..இந்த வகை சத்தமிடலுடன் கூடிய பாடல்கள் இப்போது வெளி வருவதில்லை. அதனால்தானோ என்னவோ மனதில் அதிகம் நிற்பதுமில்லை..கேட்டாலும் ஓரிரு மாதங்களில் சலிப்புதட்டி விடுகிறது..என்று எண்ணமிட்டவாறே நடந்து சிக்னலை அடைந்தேன்.

இரு மருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வண்டியுமே இல்லாவிட்டாலும் சிக்னல் விழுவதற்காகக்  காத்திருப்பது ஒருவகையில் நேரத்தை விரயமாக்கும் முட்டாள்தனமாகத் தோன்றினாலும் பக்கத்திலே சிக்னலையே அண்ணாந்து பார்த்தவண்ணம் நின்றிருக்கும் ஜப்பானியர்கள் இருவரைப் பார்த்ததும் வேறு வழியில்லாமல் நானும் நின்றேன்.

ஒரு வழியாக ஸ்டேஷன் பக்கத்திற்கு நெருங்கி எலக்ட்ரானிக் ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தேன்.

“வாங்க..வாங்க” ன்னு ஆசை ஆசையாய் அழைப்பதற்கென்றே இரண்டு சின்னப் பெண்ங்களைக் குட்டைப் பாவாடையுடன் நிறுத்தி வைத்திருந்தார்கள். ‘ஹாய்’ என்றபடியே..நுழைந்து ரிசெப்ஷனிஸ்ட்டைக் கேட்க 'தேர்ட்  ப்ளோர்' என்று இங்கிலிஷில் சொன்னாள்.

எஸ்கலேட்டரில் பயணித்து இரண்டாம் தளத்துக்கு வந்துசேர்ந்தேன்..நான் நினைத்தது சரியாகவே இருந்தது. அவளுக்கு தெரிந்தது 'தேர்ட் ப்ளோர்' என்ற இங்கிலீஷ் சொல் மட்டுமே. நம்ம ஊரிலே 'தேர்ட்  ப்ளோர்' என்றால் கிரௌண்ட் ப்ளோர் தவிர்த்து எண்ணணும்..அதாவது கிரௌண்ட் ப்ளோர் கணக்கிலே வராது..அது நம்ம ஊர் ஸ்டைல்..

இங்கே ஜப்பானில் கிரௌண்ட் ப்ளோர் பர்ஸ்ட் ப்ளோர் ஆகிடும். .ரிசெப்ஷனிஸ்ட் சொன்னது ஜப்பானிஸ் வழக்கில்தான். வார்த்தை மட்டுமே நமக்குத் தெரிந்த இங்கிலீஷ்..அதனைக் கணக்கில் கொண்டுதான் நான் செகண்ட் ப்ளோர்க்கு சரியாக வந்திருந்தேன். என்ன? தலையை சுத்துதா? மாடி ஏறி வந்த எனக்கே தலை சுத்தலை..  உங்களுக்குச் சுத்தினா எப்படி?

இன்னும் எவ்வளவோ இருக்கே. இது தனி உலகம். காரணம் இருக்கு. நம்ம ஊரு மாதிரி இங்கிலீஷ்காரன் கிட்டேருந்து சுதந்திரம் வாங்கின நாடு இல்லையே ஜப்பான்? அதனால இங்க இந்த மாதிரி விஷயங்களிலே ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும்..இங்கிலீஷ் மேல கொஞ்சம் மோகம் இந்த தலைமுறைக்கு இருந்தாலும் படிக்கிறது தலைவலி.  நம்ம ஊர் போலே வேலைக்கு  சேர இங்கிலீஷ் அவசியம் என்று தாய்மொழி மட்டுமே தெரிஞ்சவுங்க வேலை கிடைக்காமல் அவதிப்படுவதில்லை.. கத்துக் கொடுக்குற இடத்தில் அவுங்க இருக்காங்க. இங்கிலீஷ் ஒரு எக்ஸ்ட்ரா - பிட்டிங் தான். இங்கிலீஷ் நுனிநாக்கில் பேசும் எந்த ஜப்பானியரும் தெரியாத விஷயத்தை தோளைக் குலுக்கி 'I dont know' என்று சொல்வதில்லை. வீண் குலுக்கல்கள் இல்லை. ரொம்பப் பணிவாக சாதாரணமாகப் பேசும் ஆட்கள்தான் அதிகம்..

சொல்லப்போனால் இங்கிலீஷ் உடன் சேர்ந்து வளர்ந்துவிடும் இத்தகைய குணாதிசயங்களைக் கிண்டலடிப் பவர்களே இங்கே அதிகம்..

நம்ம நாட்டுலேதான் இதே மைனஸ் பாயிண்ட்டை பிளஸ் பாயிண்ட்டாக்கி BPO indusrty , software industry என்று GDP எகிறுகிற வளர்ச்சி.  இவர்களின் டெக்னாலஜியை உலகளவுக்கு கொண்டு சேர்க்க வியாபாரத்துக்கு என்று பல நாடுகளுக்கும் பரவ என்று அவசியத்தினால் இப்போதான் அதுவும் இந்த 2008 -2009 recession க்கு பிறகுதான் அதிகமாக இங்கிலீஷ் தாக்கம் தெரிகிறது. yen என்கிற இவர்களின் பண மதிப்பு ஏறியே இருப்பதால் (கடந்த 14 வருடங்களில் 85yen = 1 US டாலர் என்ற அளவுக்கு இறங்கியதில்லை..)எனவே உலக அரங்கில் வர்த்தகம் செய்ய ஜப்பானியப் பொருட்களை வாங்க முடியாமல் (பண மதிப்பு ஏறியே இருப்பதால்) உலக நாடுகள் திணறும் நிலை..இதனால் ஜப்பானிய ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்..பண மதிப்பை குறைக்க வழி செய்யலாமா? என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்..ஏறி விட்டிருக்கும் பண மதிப்பைக் குறைக்க ஆராய்ச்சி..கேட்பதற்கே கொஞ்சம் காமெடியாக இல்லை.

சரி..வந்த வேலையைக் கவனிப்போம்..என்று காமெரா செக்சனுக்குள் நுழைந்தேன்..அள்ளிக் குவிக்கப்பட்டிருந்த வகை வகையான டிஜிடல் காமெராக்கள்..ஒரு காமெராவை மீன் தொட்டிக்குள் தண்ணீருக்குள் வைத்து விளம்பரம் செய்திருந்தார்கள்..வாட்டர் ப்ரூப் என்று.  பிரமிப்பாக இருந்தது. அதே சமயம் என் ஸ்டைலுக்கு 'damper proof, shock proof எல்லாம் எப்படி? தூக்கித் தரையில் வீசிக் காண்பிப்பார்களோ?' என்ற எண்ணமும் தோன்றியது..

எல்லாம் மின்னிணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில். எடுத்து உபயோகித்துப் பார்த்தபின் அந்த மாடல் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சற்று நேரம் லயித்து வெவ்வேறு காமிராக்களை பார்த்து சுற்றிக் கொண்டிருந்துவிட்டு வீடியோ கேமரா எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தேடி அந்த செக்சனுக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தேன்..

எல்லா கம்பெனி மாடல்களையும் நோட்டம் விட்டு விட்டு, ஒரு வழியாகக் கடைசியில் சோனி கம்பெனி மாடலுக்கு அருகில் வந்து நின்ற வண்ணம் அங்கு தூரத்தில் நின்றிருந்த சேல்ஸ்மேனை அழைக்கத் திரும்பினேன்.

என்னைக் கண்டு அவர் கொஞ்சம் பயந்து பக்கத்து தூணில் ஒளிவதுபோல் தெரிந்தது. ஒருவேளை புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவராயிருக்கும்..இல்லை foreigner என்றால் கொஞ்சம் allergy. இங்கிலீஷ் பிரச்சினை ஆக இருக்கும்..சரி..மேனுவல்களைப் புரட்டிப் பார்க்கலாம் என்றால், ஒன்று கூட இங்கிலிஷில் இல்லை.

சுற்றுமுற்றும் பார்த்தால் அடுத்த வரிசையில்  ஒரு பெண்மணி என்னை விட மோசமாக திருதிருவென்று முழித்துக்கொண்டு நின்றிருந்தாள். வெளிநாட்டுக்காரி என்பது நல்லாவே புரிந்தது.

யுரோப்பியனா? யுறேசியனா?என்று கொஞ்சம் தெளிவாகப் புரியவில்லை..இங்கே வசிக்கும் வெளிநாட்டுக்காரர்கள் பெரும்பாலும் பிரேசில், பெரு, ஸ்பெயின் என்று போர்சுக்கீசே அல்லது ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களே அதிகம்..இருந்தபோதிலும் புருவத்தை உயர்த்திப் பார்த்தவண்ணம் 'may I help you?'  என்று சிநேகப்புன்முறுவலை உதிர்த்து வைத்தேன்...

என் கதையே இன்னும் தெரியலை..சேல்ஸ்மேனைத்தேடி இன்னும் ஒண்ணுமே ஆரம்பிக்கலை..இதுக்குள்ளே இந்த  'may I help you?'  ரொம்ப அவசியம்தானா? என்று கொஞ்சம் எனக்குள் கேள்வி எழுந்தாலும். நம்மைப் போலவே திணறும் வெளிநாட்டுக்காரர்களுக்கு சற்று உதவி செய்தால் என்ன குறைந்து விடுவோம் என்றும் ஒரு பதிலும் ஒலிக்கவே..அதற்குள் இந்த வினாடி இடைவெளியை சைலஜாவின் குரல் கலைத்தது..' ya ..I m looking  for  this digicam , I want  to get a brochure . but I cant speek japaneese ' என்று தயங்கிய குரலில் சைலஜா.

'that and all no issue ' இது நான்..கொஞ்சம் தோளைக் குலுக்கியபடி.

'I will help you ..I can speek japanese well ' என்றேன்..அந்த காமிராவை கையில் எடுத்து சுழற்றியபடியே..அவளுக்கு நான் ஒரு ஆபத்பாந்தவனாகத் தெரிந்தது அப்பட்டமாக அவள் கண்ணில் தெரிந்தது..

'how long have you been living here in Japan?' எனது ஜப்பானியப் புலமையை உறுதி செய்ய அவளுக்கு இந்தக் கேள்வி தேவைப்பட்டிருக்கலாம்.

'jz  reacent three years'  இந்தக் குறுகிய காலத்தில் நான் ஜப்பானீஸ் மொழியில் பேசுவது பேசுவது பற்றி கேட்பவர் பெரும்பாலும் வியந்து பாராட்டுவதால் அதே பாராட்டை இவளிடமும் பெற ' jz reacent ' என்ற வார்த்தைகள் எனக்குத் தேவைப்பட்டது..

' oh, really ?....great... brilliant ..!' என்றாள்..இப்படியாக காமெரா வாங்க வந்த எங்களுக்கு சொந்தக் கதைப் பரிமாறல் ரொம்ப முக்கியமாய்ப் போனது..

ஒரு சேல்ஸ்மேனைக் கூப்பிட்டு அதன் டெக்னிகல் features பற்றி விலாவாரியாக விசாரித்து அவளுக்கு இங்கிலிஷில் விளக்க சேல்ஸ்மென் என் இங்கிலீஷ் புலமையைப் பார்த்து வியப்பிலாழ்ந்து போனான். அந்த சேல்ஸ்மனுக்கு  இங்கிலிஷும் சைலஜாவுக்கு ஜப்பானிசும் தெரியாதது எவ்வளவு வசதியாகப் போய்விட்டது?

ஒரு வழியாக அவளுக்கு விளக்கி ஒரு canon காமெராவை வாங்கிக் கொடுத்தபோது (பணம் அவள்தான் கொடுத்தாள்) ரொம்பத்தான் நெகிழ்ந்து  போனாள்..

'can we have some coffee together ' என்ற போது என்னால் மறுக்க முடியவில்லை..பக்கத்து மக்.டொனால்ட்லே Snacks cum coffee சாப்பிட்டவண்ணம் இன்னும் கொஞ்சம் கதைகளைப்பேசி விசிடிங் கார்ட்களை பரிமாறிக்கொண்டு  'call me at ur free time yaar '  என்று சைலஜா குழைந்தபோது எனக்குப் பிரிய மனசே இல்லை..

கனத்த இதயத்தோடு விடைபெற்ற அந்தக் கணங்களில்தான் அவள் சொன்ன அந்த கடைசி வார்த்தை எனக்கு உறைத்தது..free time ...!!!!!

வாட்சைப் பார்த்தேன்..மணி..9.37 ஆஹா.. லாஸ்ட் பஸ் 9:30 க்குன்னு பஸ் கண்டக்டர் சொன்னாரே..சிலீர்னு உறைத்தாலும்..ச்சே..எப்படி இப்படி மறந்து போனோம்?

ஏதோ ஒரு குற்றஉணர்வு..டாக்ஸி பிடித்தால் கிட்டத்தட்ட நம்மூரு ரூபாயிலே சொன்னால் 5000ரூபாய். பொட்டில் அறைந்தாற்ப் போலே போய்விடும்.

வீடியோ காமிராவும் வாங்கலை..ஏன்..விசாரிக்கக் கூட இல்லை. ச்சே..இப்படி ஆளுங்க யாராவுது இருப்பாங்களா? ஏதோ ஏமாந்தது போல ஒரு உணர்வு. சைலஜா விவரமாய் ஏதோ என்னை ஏமாற்றி நஷ்டப்படுத்தி விட்டது போலே..நானாத்தானே பேச்சு கொடுத்தேன்..வேண்டாம்..

தூரத்தில் ஏதோ drum சவுண்டும் flute சவுண்டும் கலந்த  ஜப்பானியப் பழைய பாடலும் கேட்கிறது..

சோகப் பாட்டு மாதிரித் தெரியலை..ஆனாலும் எனக்கு என்னமோ சோகப் பாட்டாத்தான் கேட்கிறது..

அப்படி என்னதான் பண்ணிடப் போறோம்..வீட்டுக்குப் போயி.. பெரிசா..சரி..சரி.. லூஸ்லே விடு..

ஏன்னால் நாளைக்கும் லீவுதான்..(எனக்கு லீவு..சரி..உங்களுக்கு? இப்பிடியே நடந்துட்டே போயி  நடந்த கதையை சொல்லி முடிக்குறதுக்குள்ளே ஒரு வாரம் ஆயிடும் போலருக்கே.. சரி.. இன்னைக்கு இத்தோட முடிச்சுக்குவோமா?

- ஆக்கம்:  நெப்போலியன் ஞானப்பிரகாசம்,  டோக்கியோ, ஜப்பான்.
---------------------------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

18.9.10

ஆவியுடன் பேசிய பெண்மணி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்று ஒரு புதிய பகுதி.

இளைஞர்கள்  மலர்.

வகுப்பறைக்கு வரும் இளைஞர்களும், இளைஞிகளும் தொடர்ந்து எழுதினால், இந்தப் பகுதி தொடர்ந்து வரும். வாத்தியார் இதில் எழுத முடியாது. ஏனென்றால் அவர் இளைஞரல்ல. கேட்டால் மனதிற்கு ஏது வயதென்பார்? அதெல்லாம் கதை. ஆகவே அவர் எழுத முடியாது!

இதில் இளைஞர் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் யார் வேண்டுமெண்றாலும் பங்கு கொள்ளலாம். பிறப்புச் சான்றிதழும் அனுப்பப்போவதில்லை, புகைப்படத்தையும் அனுப்பப் போவதில்லை. ஆகவே மின்னஞ்சலை மட்டும் வைத்து வாத்தியாருக்கு எங்கே உங்களுடைய வயது தெரியப்போகிறது?

ஜாமாயுங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------
இன்றைய இளைஞர்மலரை அலங்கரிப்பவர் நமது வகுப்பறை மாணவி (நன்றாகக் கவனிக்கவும் மாணவி) Ms.உமா அவர்கள். வயது: இருபதிலிருந்து நாற்பதுக்குள். பிறந்த ஊர்: தமிழ் நாடு. வசிக்கும் ஊர்: ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.

புகைப்படம்?

அது இல்லாமலா?

பதிவின் கடைசியில் இருக்கிறது!
-----------------------------------------------------------------------------------------------------
Over to her post
____________________________________________________________
ஆவியுடன் பேசிய பெண்மணி!

எனக்கு சின்ன வயசிலேர்ந்தே பேய் கதைகள் / திகில் கதைகள்னா ரொம்பப் பிடிக்கும்.  எங்கள் வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் வாங்குவார்கள், ஆனால் என்னைப் படிக்க விடமாட்டார்கள்.  அப்போது குமுதத்தில், ஒரு தொடர்கதை (பேய்க்கதை) வந்துகொண்டிருந்தது.  என் சித்தியிடம் அதை மட்டும் படிப்பதாகச் சொல்லிவிட்டுப் படிப்பேன் (அப்படியே எல்லாத்தையும் படிச்சுடுவேன்).

அப்போது கொங்கணேஸ்வரா வித்யாசாலாவில் 4 ஆவது படித்துக்கொண்டிருந்தேன்.  கொங்கணேஸ்வரர் கோயிலின் பிரகாரம்தான் எங்கள் பள்ளிக்கூடம்.  எல்லோரும் மதியம் உச்சிகால பூஜை முடிந்தவுடன் (கோயில் பூட்டியவுடன்), பைரவர் அங்கு சுற்றிக்கொண்டிருப்பார் என்றும், யாராவது அந்த நேரத்தில் போனால், அவ்வளவுதான் என்றும் புரளியைக் கிளப்பிவிட (அது புரளி என்று அப்போது தெரியாது), ஒரு நாள் அது உண்மையா என்று பார்த்துவிடவேண்டும் என்ற குறுகுறுப்பு தோன்றியது (அந்த கோயில் பிரகாரத்தில் வாதாங்காய் மரமோ, கொடுக்காப்புளி மரமோ, சரியாக ஞாபகமில்லை, இருந்தது.  உண்மையான காரணம், அதைப்போய் சாப்பிடுவதுதான்).

ஒரு நாளைக்கு நானும் இன்னும் 2 பேரும் சேர்ந்து உணவு இடைவேளையில் கோயிலின் பின்வழியாகப் (முன்கதவு மதியம் பூட்டியிருக்கும்)  போலாம்னு முடிவு பண்ணோம்.  ரொம்ப தைரியசாலிகள் போல் காண்பித்துக்கொண்டு (உள்ளூர செம பயம்), அப்பப்ப‌ பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டு (பைரவர் வருகிறாரான்னு பார்க்கத்தான்) போனோம்.  போய் மரத்தடிலேர்ந்து பொறுக்கிக்கொண்டிருந்தோம் (பின்னாலே நிக்கற மாதிரியே ஒரு பிரமை வேற).  ஒரு 5 நிமிஷம் தாக்குப் பிடிச்சிருப்போம்.  'தடால்'னு ஒரு சத்தம் (ஏதோ மட்டை விழுந்திருக்கும்). 3 பேரும் அங்கேர்ந்து ஓட ஆரம்பிச்சவங்க, வகுப்புக்கு வந்ததும்தான் நின்னோம்.

அப்புறம் 7/8 ஆவது படிக்கும்போதெல்லாம் ((விடுமுறைக்குப் போகும்போதெல்லாம்), எத வேணா படிச்சுத் தொலையட்டும்னு வீட்டில தண்ணி தெளிச்சு விட்டுட்டதாலே சகட்டு மேனிக்கு பாக்கெட் நாவல்லாம் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சாச்சு.  அதுலயும் இந்த ஆவி/பேய்க் கதையையெல்லாம் ராத்திரி 10 மணிக்குத்தான் படிக்க ஆரம்பிப்போம்.  அப்போது இருந்த வீட்டின் மாடியில் (கீழ்ப்பகுதியில் எல்லோரும் தூங்கும்போது விளக்குப் போட்டுட்டு படிச்சா திட்டு விழும்) முனீஸ்வரர் நடமாட்டம் இருக்கும், அதைத் தான் ஒருமுறை பார்த்துள்ளேன் என்றும் என் தாத்தா வேறு பயமுறுத்திக்கொண்டிருப்பார்.  அப்படியும் நாங்கள் படித்துக்கொண்டிருப்போம்.  10.30 / 11 மணிக்கு பாக்கி எல்லோரும் தூக்கம் வருவதாகக் கூறிச் சென்று விடுவார்கள்.  நான் மட்டும் ரொம்ப தைரியசாலி போல இன்னும் ஒரு 5 நிமிஷம் தாக்குப்பிடித்துவிட்டு கீழே போய்ப் படுத்துவிடுவேன்.

இப்பதான் காமெடி ஆரம்பிக்கும்.  படிச்ச ஆவிக்கதை இப்போதான் வேலையைக்காட்ட ஆரம்பிக்கும். ஏதோ சத்தம் கேட்கறா மாதிரியே / நடமாட்டம் இருக்கிற மாதிரியே இருக்கும்.  சரி நமக்குத்தான் இந்த பிரச்சனை போலிருக்குன்னு நினைச்சுட்டு திரும்பிப்பார்த்தா, என் சித்தி பெண்ணும், தூக்கம் வராம முழிச்சிட்டிருப்பா.  சரின்னு பாட்டியை எழுப்பினா, உங்கள யாரும் கண்டதையும் படிக்கச்சொன்னான்னு அர்த்தஜாமத்துல பாட்டு விழும்.  ஆனாலும் அடுத்த நாளும் படிக்காம இருக்க மாட்டோம்.

இப்படியே ஆவி மேல இருக்கிற ஆர்வம் வளர்ந்துட்டே இருந்தது.  அப்புறம் 10‍வது படிக்கும்போது, நானும், எனது 4 தோழிகளும், ஆவியப் பத்தி ஒரு நாள் பேசிட்டிருக்கும்போது, 'ஒய்ஜா போர்டு' மூலமா ஆவிகளோட தொடர்பு கொள்ளலாம்னு ஒரு தோழி சொன்னா.  உடனே ஆர்வம் அதிகமாகி, எல்லோரும் விவரம் சேகரிக்க ஆரம்பித்தோம்.  அதுல 0 லேர்ந்து 9 வரையும், A-Z வரையும், ஆமாம் / இல்லைன்னு நடுவிலும் எழுதிட்டு, ஒரு மெழுகுவர்த்தியை ஏத்திண்டு, அதன்மேல் ஒரு டம்ளரைக் கவிழ்க்கணும்.  அதன்பின் கொஞ்ச நேரம் கழித்து, ஏதாவது ஓர் ஆவியை நினைத்துக்கொண்டு டம்ளரின்மேல் விரலை வைத்துக்கொண்டால் அது நகர ஆரம்பிக்கும், அப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகளைக் கேட்கலாம் அப்படின்னு தெரிஞ்சது.  உடனே எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டோம்.  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பொருள் வீட்டிலேர்ந்து எடுத்துட்டு வரலாம்னு.  அப்போ வீட்டுக்கு பள்ளிப் பேருந்தில்தான் போவேன்.  அதுல ஒரு நாளைக்கு முதல்ல எங்களை அழைச்சுட்டுப்போவார்கள், இன்னொரு நாள் இன்னொரு பகுதில இருக்கிறவங்களை.  அதுனாலே, 2வது தடவை அழைச்சுட்டுப்போற அன்னிக்கு 45 நிமிஷம் நேரம் கிடைக்கும், அப்போது இந்த ஆராய்ச்சி பண்ணலாம்னு முடிவாச்சு.  அதுலயும் எங்கள் வகுப்பு முன்புறம் இருந்ததால அங்க ஆசிரியைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும், அதனால் பின்புறம் இருக்கும் 8ஆம் வகுப்பில் செய்யலாம்னு யோசிச்சோம்.

ஒரு வாரத்துக்கு கையில எல்லாத்தையும் எடுத்துட்டுச் சுத்திண்டிருந்தோம்.  ஒரு நாளைக்கு அதற்கான நேரமும் வந்தது.  எல்லாம் முறைப்படி செஞ்சுட்டு, காந்தியின் ஆவியைக் கூப்பிட்டோம் (இன்னும் நிறைய பேரக் கூப்பிட்டிருக்கோம், யார் யார்னு யாரும் கேட்டுடாதீங்கோ).  நீங்க இப்ப சொர்க்கத்துல இருக்கீங்களா, நரகத்துலயான்னு (இதவிட பயங்கரமான (அபத்தமான) கேள்விகள்லாம் கேட்டதை இப்போ நினைச்சாலும் சிரிப்புதான்) ஆரம்பிச்சு ஒவ்வொண்ணாக் கேட்டுட்டிருந்தப்பதான் 'டமால்'னு ஒரு சத்தம் எங்கேர்ந்தோ கேட்டுது.

அப்புறமென்ன?  தடதடன்னு மாடிப்படில இறங்கி ஓடி (பின்னாடி யாருமே திரும்பிப் பார்க்கலை) எங்களோட பைகள்லாம் வச்சிருந்த இடத்துல வந்துதான் நின்னோம்.

அப்போவே எவ்வளவு ஆராய்ச்சி மனப்பான்மை பாருங்கோ.  அதன்பிறகும் நான் நிறுத்தலையே?

திரும்ப லீவில், வீட்டுல யாருக்கும் தெரியாம மொட்டை மாடியில ஆராய்ச்சி. ஆனா இப்போ கொஞ்சம் முன்னேறி, யாராவது ஒருத்தர் மீடியமா இருக்கலாம்னு முடிவாச்சு (எல்லாம் ஏதோ கதைல படிச்சதோட விளைவு).  என்னோட மாமா பையன் நான் இருக்கேன்னு சொல்லிட்டுக் கண்ணை மூடிண்டு உக்கார்ந்திருந்தவன் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டான்.  எங்களுக்கெல்லாம் ஒரே பயம், மாமாட்ட போய் என்னன்னு சொல்றதுன்னு.  உடனே என் சித்தி பையன் 'ஏய் போறுண்டா நடிச்சது' அப்படின்னு சொல்லவும், அவனே சிரிச்சு மாட்டிக்கிட்டான்.  அன்னிக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து அவனைச் சாத்து சாத்துன்னு சாத்தியதை, இன்னும் மறந்திருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.

அதன்பின்னும் ஒரு ரூபாய் காச வெச்சு, நிறைய தடவை செஞ்சு பார்த்துட்டு விட்டாச்சு.  (அப்படியே தொடர்ந்திருந்தா 2/3 டாக்டரேட் வாங்கிருக்கலாம்).

சரி நிறைய எழுதி வெறுப்பேத்திட்டேன்னு நினைக்கிறேன்.  மீண்டும் சந்திப்போம்.

பி.கு.:
மேலே எழுதினது மூலமா நான் என்ன கருத்து சொல்றென்னு யாரும் தயவுசெஞ்சு கேட்டுடாதீங்கோ.  ஏன்னா நான் ஜாலியான விஷயம் மட்டும் எழுதலாம்னு யோசிச்சித்தான் இதை எழுதினேன்.  வேற ஏதாவது எழுதி எல்லோரையும் சோகப்படுத்த வேண்டாம்னுதான்.

இன்னோரு விஷயம், இதெல்லாத்தையும் படிச்சிட்டு, ரொம்ப மூளையைக் கசக்கி, உனக்கு அப்படின்னா பேய் / ஆவி மேல நம்பிக்கை இருக்கான்னு கேட்காதீங்கோ.  இந்த ஆவியோட பேசறது எல்லாம் பொய்னுதான் நினைக்கிறேன்.  அதுக்காக, நான் ஆவி/பேய்ங்கறது இல்லவே இல்லன்னு சொல்லலை. (என்ன ரொம்பக் குழப்பறேனா?  சரி உட்கார்ந்து நீங்களே தெளிவா யோசிச்சிக்குங்க!)

ஆவியுடன் பேச விரும்பும் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!

-ஆக்கம் உமா

உமா அவர்கள் அனுப்பிய படம்!

.........................................................................................................................

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரமலர் வழக்கம்போல நாளை வெளியாகும்!

நாளை வெளியாகவிருக்கும் ஆக்கம் யாருடையது?

அது சஸ்பென்ஸ்!

ஒரு நாள் காத்திருந்து தெரிந்துகொள்ளுங்கள்! காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கும். காதலில் மூழ்கிக் கிடப்பவர்களைக் கேளுங்கள். அந்த சுகத்தை            “ ஜில்லென்று காற்று வந்தது. நில்லென்று கேட்டுக் கோண்டது. குடைபோல இமை விரிய, மலர்போல் முகம் மலர, உன்னோடு பேசச் சொன்னது” என்று கவிதை வரிகளுடன் அதை விவரித்துச் சொல்வார்கள்

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!