மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.12.08

சொன்னால் அழிந்து போகக்கூடியது எது?

சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

"குரு உபதேசம், மாதர்கூடிய இன்பம், தன்பால்
மருவிய நியாயம், கல்வி,வயதுறச் செய்த தர்மம்,

அரிய மந்திரம், விசாரம்,ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்,
ஒருவரும்
தெரிய ஒண்ணாது உரைத்திடின் அழிந்துபோமே."

- விவேக சிந்தாமணி

ஒருவனுக்கு மறைவாக ஆசிரியர் செய்த உபதேசம்,
மாதரிடத்து அனுபவித்த இன்பம்,
தன் மனதில் பொருந்திய நியாயம்,
தான் கற்ற கல்வி,
தன்னால் செய்யப்பட்ட தர்மம்,
அரியதான மந்திரம்,
தனது கவலை,
தனது வல்லமை
என்ற இவையெல்லாம் வேறு ஒருவருக்கும்
தெரியச்சொல்லுதல் கூடாது.
சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.

எழுதிய ஞானி என்னவொரு அழுத்ததுடன் எழுதியுள்ளார் பாருங்கள்!

Label: நெத்தியடியான பாடல் வரிகள் - 4

வாழ்க வளமுடன்!

16 comments:

  1. பகிர்ந்து கொண்டால் பெருகக் கூடியது மகிழ்ச்சி, பகிர்ந்து கொண்டால் குறையக் கூடியது துக்கம்!

    ReplyDelete
  2. தான் கற்ற கல்வி,தனது கவலை,தான் கற்ற அரிய மந்திரம் மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது.சொன்னால் அழிந்துபோகக்சுடியது. லாஜிக் இடிக்கிறதே அய்யா...தான் கற்ற கல்வியை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும்போது தான் கல்விஅறிவு வளரும். கவலையை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும்போதுதான் கவலை குறைய ஆராம்பிக்கும்.அதுபோல் தான் கற்ற மந்திரத்தை குரு சிஷ்யனுக்கு சொன்னால்தான் மந்திரம் அடுத்த தலைமுறைக்கும் தெரியவரும். நான் சொல்வது சரியா???

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. உண்மைதான் வாத்தியாரே..

    தான் கற்ற கல்வி என்பதில் அவரவர்க்குத் தனியே அமைந்திருக்கும் திறமையைக் குறிக்கிறது..

    அது ஒன்று இருப்பதினால்தான் பல்வேறு சாதனையாளர்களும் உருவெடுக்கிறார்கள். அந்தச் சாதனையை எட்டிப் பிடிக்க அடுத்த சாதனையாளர்கள் தங்களிடத்தில் அந்தத் திறமையை வேறு உருவகத்தில் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரே துறையில் வெற்றியை அணுகும்முறை மாறுபட்டு வெளிப்பட அது பல்வேறு கிளைகளாகப் பரவுகிறது.. இதுதான் வெற்றிக்கான மூலக்கூறு..

    ஜெயித்த சாதனையாளர்களின் பின்னணியில் இருக்கும் உழைப்பில் பல்வேறு வகைகள் இருப்பதே இதற்குச் சான்று..

    ReplyDelete
  4. //////கோவி.கண்ணன் said...
    பகிர்ந்து கொண்டால் பெருகக் கூடியது மகிழ்ச்சி, பகிர்ந்து கொண்டால் குறையக் கூடியது துக்கம்!/////

    அதுவும் சரியான நபரிடம். இல்லை என்றால் அங்கேயும் வில்லங்கம்தான் கோவியாரே!

    ReplyDelete
  5. /////வேலன். said...
    தான் கற்ற கல்வி,தனது கவலை,தான் கற்ற அரிய மந்திரம் மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது.சொன்னால் அழிந்துபோகக்சுடியது. லாஜிக் இடிக்கிறதே அய்யா...தான் கற்ற கல்வியை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும்போது தான் கல்விஅறிவு வளரும். கவலையை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும்போதுதான் கவலை குறைய ஆராம்பிக்கும்.அதுபோல் தான் கற்ற மந்திரத்தை குரு சிஷ்யனுக்கு சொன்னால்தான் மந்திரம் அடுத்த தலைமுறைக்கும் தெரியவரும். நான் சொல்வது சரியா???
    வாழ்க வளமுடன்,
    வேலன்.///////

    நான் கற்ற ஜோதிடத்தை மற்றவர்களுக்காக பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன். எது அழியும். நானா? நான் கற்ற ஜோதிடமா? இல்லை. இல்லை. ஞானி சொல்வது உபதேசம். சிவமந்திரம் அடங்கிய உபதேசம். அதைத் தெருவில் வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. கல்வியைச் சொல்வது என்பது தான் பெற்ற கல்வியை பெருமையாக, அகந்தையாகச் சொல்லக்கூடாது என்று பொருள் கொள்ளவும்

    ReplyDelete
  6. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    உண்மைதான் வாத்தியாரே..
    தான் கற்ற கல்வி என்பதில் அவரவர்க்குத் தனியே அமைந்திருக்கும் திறமையைக் குறிக்கிறது..
    அது ஒன்று இருப்பதினால்தான் பல்வேறு சாதனையாளர்களும் உருவெடுக்கிறார்கள். அந்தச் சாதனையை எட்டிப் பிடிக்க அடுத்த சாதனையாளர்கள் தங்களிடத்தில் அந்தத் திறமையை வேறு உருவகத்தில் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரே துறையில் வெற்றியை அணுகும்முறை மாறுபட்டு வெளிப்பட அது பல்வேறு கிளைகளாகப் பரவுகிறது.. இதுதான் வெற்றிக்கான மூலக்கூறு..
    ஜெயித்த சாதனையாளர்களின் பின்னணியில் இருக்கும் உழைப்பில் பல்வேறு வகைகள் இருப்பதே இதற்குச் சான்று..////

    நன்று உண்மைத்தமிழரே!. உமது ஓயாத பணிகளுக்கிடையே பின்னூட்டம் இடநேரம் கிடைத்ததை நினத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது!

    ReplyDelete
  7. //ஒருவனுக்கு மறைவாக ஆசிரியர் செய்த உபதேசம்,
    மாதரிடத்து அனுபவித்த இன்பம்,
    தன் மனதில் பொருந்திய நியாயம்,
    தான் கற்ற கல்வி,
    தன்னால் செய்யப்பட்ட தர்மம்,
    அரியதான மந்திரம்,
    தனது கவலை,
    தனது வல்லமை
    என்ற இவையெல்லாம் வேறு ஒருவருக்கும்
    தெரியச்சொல்லுதல் கூடாது.
    சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்//

    வணக்கம் அய்யா !
    ...வேறு ஒருவருக்கும்
    தெரியச்சொல்லுதல் கூடாது.
    சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.

    நூற்றுக்கு நூறு உண்மை அய்யா .

    GK, BLR.

    ReplyDelete
  8. /////Geekay said...
    வணக்கம் அய்யா !
    ...வேறு ஒருவருக்கும்
    தெரியச்சொல்லுதல் கூடாது.
    சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.
    நூற்றுக்கு நூறு உண்மை அய்யா //////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  9. When we tell our good things to others, sometimes negative energy will be generated and it will spoil the outcome ...Is it right sir?

    ReplyDelete
  10. Present sir, I agree with to some of the things metioned in the poem, but not all...

    -Shankar

    ReplyDelete
  11. //////Ragu Sivanmalai said..
    When we tell our good things to others, sometimes negative energy will be generated and it will spoil the outcome ...Is it right sir?/////

    அவ்வாறான உற்செயல்பாட்டை வைத்தெல்லாம் பாட்டு எழுதப்படவில்லை. It is only a simple poem

    ReplyDelete
  12. //////hotcat said...
    Present sir, I agree with to some of the things metioned in the poem, but not all...
    -Shankar/////

    அதெல்லாம் உங்கள் புரிதல், விருப்பம் மற்றும் ஏற்புடைமை சம்பந்தப்பட்டது. அவ்வளவுதான்!

    ReplyDelete
  13. உள்ளேன் அய்யா. நல்ல பதிவு.

    ReplyDelete
  14. அய்யா,
    விவேக சிந்தாமணி தொகுப்பில் உள்ள கருத்து மிகவும் அருமை. உங்கள் மூலமாகத்தான் எனக்கு இப்படி ஒரு தொகுப்பு உள்ளது என்று அறிந்தேன்.

    மிக்க நன்றி!

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  15. அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா. நல்ல பதிவு.////

    நன்றி அமர பாரதி!

    ReplyDelete
  16. Sridhar said...
    அய்யா,
    விவேக சிந்தாமணி தொகுப்பில் உள்ள கருத்து மிகவும் அருமை. உங்கள் மூலமாகத்தான் எனக்கு இப்படி ஒரு தொகுப்பு உள்ளது என்று அறிந்தேன்.
    மிக்க நன்றி!
    ஸ்ரீதர் S/////

    விவேக சிந்தாமணி புத்தகம் பாடல் மற்றும் பதவுரைகளுடன் உள்ளது விலை ரூ.10/- மட்டுமே. புத்தகக் கடைகளில் கிடைக்கும் வாங்கிப் பாடியுங்கள். எல்லாப் பாடல்களுமே அசத்தலாக இருக்கும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com