மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

இரங்கல் செய்தி

இரங்கல் செய்தி
மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலிதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய நம் வகுப்பறையின் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன்!

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

9.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!

பிரச்சினை இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கை என்பது சீட்டாடத்தைப் போன்றது. கையில் 13 கார்டுகளுடன் நீங்கள் ஆடித்தான் ஆகவேண்டும். ஒரு கார்டை நீங்கள் கீழே இறக்கினால், பதிலுக்குக் கீழே இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொள்ள வேண்டும். சீட்டாடுபவர்களுக்கு அல்லது முன்பு ஆடியவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

அத்துடன் சிலருக்கு ஒரு பிரச்சினைதான் இருக்கும். அதைத் தீர்த்தவுடன் அடுத்த பிரச்சினை வரும். ஆனால் சிலருக்குக் ஒரே நேரத்தில் நான்கைந்து பிரச்சினைகள் இருக்கும். அதாவது ரம்மி சேராமல, கையில் சில ஜோக்கர்க்ளும் பல பெரிய கார்டுகளும் கையில் இருப்பது போன்ற நிலைமை!

அதுபோல ஒரு அன்பருக்கு ஒரே நேரத்தில் பல பிரச்சினைகள். செய்யும் தொழில் சீராக இல்லை. அதில் நஷ்டம். திருமண வாழ்க்கையில் பிரச்சினை. மனைவியுடன் சுமூகமான உறவு இல்லை. கடும் பணப் பிரச்சினை. உடல் நலமின்மை. இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து படுத்தி எடுத்தன!

ஆளை விட்டால் போதும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்னும் நிலைமை!

அது எப்படி ஓடிப்போக முடியும்? விதி விடுமா?

என்ன ஆயிற்று அவருக்கு?

வாருங்கள் அவருடைய ஜாதகத்தை அலசுவோம்? அவருக்கு நாம் என்ன உதவியா செய்யப் போகிறோம்? இல்லை! நமது பயிற்சிக்காக அதை இன்று அலசுவோம்
--------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


1. ஜாதகத்தில் உள்ள பெரிய குறை கேமதுருமா யோகத்தின் பிடியில் ஜாத்கம் உள்ளது.  கேமதுருமா யோகம் என்பது மோசமான அவ யோகம். உங்கள் மொழியில் சொன்னால் தரித்திர யோகம். அந்த அவயோகம் உள்ள ஜாதகன் வறுமையில் வாடும்படியாகிவிடும். Kema Druma Yoga is said to occur when there is no planet positioned in either second house or in the twelfth house from Moon; சந்திரனுக்கு இரண்டு பக்கமும் எந்த கிரகமும் இல்லாமலும், உடன் எந்த கிரகமும் இல்லாமலும், சந்திரன் தனித்து இருக்கும் நிலைமை!

2. யோககாரகனான செவ்வாய் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். அவனால் பயனில்லாமல் போய்விட்டது.

3. அதே போல 2ஆம் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய புதனும் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். இரண்டாம் வீடு பணத்திற்கான வீடு. பதினொன்றாம் வீடு லாபத்திற்கான வீடு.

4. லக்கினத்திற்கு எட்டாம் வீட்டுக்காரன் (அஷ்டமாதிபதி) குரு அந்த வீட்டிற்கு 12ல், அதாவது லக்கினத்திற்கு ஏழில் அமர்ந்து திருமண வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்தான். எட்டாம் அதிபதி என்றாலே கஷ்டங்களைக் கொடுப்பவன். அதை மனதில் வையுங்கள்.

5. அத்துடன் ஜாதகனுக்குக் குரு திசை நடந்த போது, எட்டாம் அதிபதி லக்கினத்தையும் சூரியனையும் பார்த்ததால் ஜாதகனுக்கு உடல் நலம் இல்லாமலும் போய் விட்டது.

ஜாதகன் கடைசிவரை எந்த நன்மையையும் அடையவில்லை. சிம்ம லக்கின ஜாதகன் என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினான்.

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.12.16

குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?


குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?

ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார். *செல்வம்* இல்லாவிட்டாலும் *சந்தோசமும் மன அமைதியுடனும்* இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து *”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”* என்றார்.

*விஷ்ணுவும்* அதற்குச் சம்மதித்துவிட்டு *நாரதரை* பூலோகத்துக்கு அனுப்பினார்.

போகும்போது நாரதரைப் பார்த்து, *“நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்"* என்று செல்வந்தரரிடம்
சொல்லுங்கள்.

அவர் *‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’* என்று கேட்பார்.

அதற்கு நீங்கள் *‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’* என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

*”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்”* என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், *“நீங்கள் யார்?”* என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் *“தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”* என்று கேட்க, நாரதரும், *நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.* அதற்கு அந்த செல்வந்தர் *“அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?”* என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, *“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?”* என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை *நாராயணனிடம்* வந்து சொன்னார்

கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று
பற்றுவதே *”உண்மையான பக்தி”* இப்பொழுது தெரிகிறதா? *ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.*

காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ… அது போல், கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். *அதற்கு காரணமே இருக்கக் கூடாது.* காரணம் என்று வந்தால் அது *வியாபாராமாகிவிடும்.*

*இறைவனிடம் எதைக்கேட்டாலும் அது வியாபாரம் தான்!*

ஏதோ ஒன்றுக் கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று *இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும்.*

அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி
இருக்கிறதே, அதற்கு தான் *பக்தி* என்று பெயர். 🙏
====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.12.16

நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!


நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!

1) மிகமிக நல்ல தொரு நாள் எது ?
பதில் - இன்று

2) மிகப் பெரிய வெகுமதி எது?
பதில் – மன்னிப்பு

3) நம்மிடம் இருக்க வேண்டியது எது?
பதில் – பணிவு

4) நம்மிடம் இருக்கக் கூடாதது எது ?
அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு

5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது?
பதில் – சமயோஜித புத்தி

6) நமக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது?
பதில் – பேராசை

7)நமக்கு எளிதாக வரக்கூடியது எது
அதுக்கு இதுதான் பதில் – குற்றம் காணல்

8) நம்மிடம் இருக்க கூடாத கீழ்த்தரமான செயல் எது?
பதில் - பொறாமை

9) நாம் எதை நம்பக்கூடாது?
பதில் – வதந்தி

10) எதுன்னு கேட்டது - நமக்கு அதீத ஆபத்தை உண்டாக்குவது எது?
பதில் – அதீத பேச்சு

11) நாம் செய்யவேண்டியது எது?
பதில் – உதவி

12) நம்மிடம் இருந்து விட்டொழிக்க வேண்டியது எது?
பதில் – விவாதம்

13) நமது உயர்வுக்கு வழி எது?
பதில் – உழைப்பு

14) நாம் எதை நழுவ விடக்கூடாது?
பதில் – வாய்ப்பு

15) பிரி(ய)க்கக் கூடாதது எது?
பதில் – நட்பு

16) நாம் எதை மறக்கக் கூடாது ?
பதில் – நன்றி
 —
இந்த  (16) செல்வங்களை பின் பற்றி  வாழ்கையில் முன்னேற்றம் அடையுங்கள்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!